காசநோய் (Tuberculosis (TB)) ஒரு தொற்று நோய்.Mycobacterium tuberculosis எனும் பாக்டீரியாவே இந்நோய்க்குக் காரணம். இந்த பாக்டீரியா உள்ள எவரும் இருமும் போதோ தும்மும் போதோ வெளியேறும் காற்றுத் துளிகளைச் சுவாசிப்பதன் மூலம் இது மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்த பாக்டீரியாவால் நுரையிரல் பாதிப்புற்றோரே மற்றவர்களுக்கு இதைப் பரப்பக்கூடியவர்கள். இந்த பாக்டீரியா உள்ள ஒருவர் சராசரியாக 10-15 பேருக்கு இந்நுண்ணுயிரியைப் பரப்பலாம்.வயோதிபர், குழந்தைகள், உடலின் immune system வலிமையற்றவர்கள், போதிய போசாக்குள்ள உணவு கிடைக்கப்பறாதவர்கள், மிகச் சனத்தொகை கூடிய பகுதியில் வாழ்வோர் ஆகியோரை இந்நோய் கூடுதலாகப் பாதிக்கின்றது. உலகில் தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் உள்ள மக்களை இந்நோய் மிகக்கூடுதலாகப் பாதிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் மட்டும் 1.7 மில்லியன் மக்கள் இந்நோய்க்குப் பலியாகி உள்ளனர்.
இந்நோய்க்குக் காரணமான பாக்டீரியா சிலரில் இருந்தாலும், அவர்களுக்கு காசநோய் வரப் பல மாதங்களோ, சில சமயம் வருடங்களோ ஆகலாம். அவருக்குத் தெரியாமலே அவர் பலருக்கு இந்த பாக்டீரியாவைப் பரப்பும் சாத்தியமும் உண்டு.உலகில் தற்சமயம் மூன்றில் ஒருவரில் இந்த பாக்டீரியா உள்ளது.