Tuesday, January 17, 2012

சின்னஞ் சிறிய வயதில் பெரிய பெரிய சிந்தனைகள்


Arfa Karim Randhawa, 9 வயதில் உலகின் மிக இளமையான Microsoft Certified Professional ஆனவள். பாக்கிஸ்தானைச் சேர்ந்தவள். அவளின் 16 வயதில் சில தினங்களுக்கு முன் காலமாகிவிட்டாள்.:(

Todd Bishop என்பவர் இவளின் பத்து வயதில், Bill Gates ஜச் சந்தித்ததைப்பற்றி தான் எடுத்த நேர்காணல்களைத் தொகுத்து இங்கு கொடுத்துள்ளார். நான்கே நிமிடங்கள் தான், கேட்டுப்பாருங்கள்.



Todd: Bill Gates உங்களிடம் என்ன கேட்டார்? நீங்கள் என்ன விதமான programming செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டாரா?

Arfa: இல்லை. நான் என்ன programming செய்திருக்கிறேன் என அவர் கேட்கவில்லை. என் உறவினர்களைப் பற்றிக் கேட்டார். பாகிஸ்தானைப் பற்றிக் கேட்டார்.பின் நானும் அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். ஏன் ஒரு சிறுவர்களும் இங்கு இல்லை எனக் கேட்டேன். ஏன் சிறுவர்கள் உங்கள் கம்பனியில் சேர முடியாது எனக் கேட்டேன். உங்கள் கம்பனியில் சேர ஏன் நாம் பல காலம் காத்திருக்கவேண்டும் எனக் கேட்டேன். சிறுவர்கள் அவர்கள் படிப்பில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டுமென அவர் கூறினார்.

Todd: அவர் உங்களுக்கு வேலை வழங்கவில்லை?

Arfa: இல்லை. கோடை கால‌த்த்தில் மேல்நிலைப் ப‌ள்ளியில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ளுக்கு சில‌ ப‌யிற்சித்திட்ட‌ங்கள் உண்டு என‌க் கூறினார்.அவ‌ர்களில் இள‌மையான‌வ‌ர்க‌ளுக்கு 14 வ‌ய‌து இருக்கும்.
நான் அடுத்த‌ கேள்வியாக‌ ஏன் இங்கு பெண்க‌ளைக் காண‌வில்லை என‌க் கேட்டேன்.

Todd: அத‌ற்கு அவ‌ர் என்ன‌ சொன்னார்?

Arfa: அவ‌ர் சொன்னார், பெண்க‌ளுக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வ‌ம் உண்டாக்குவது க‌டின‌ம் என்றார். பெண்க‌ளில் தொழில்நுட்பத்தில் ஆர்வ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் குறைவு என்றார்.

Todd: நான் நினைக்கிறேன் Microsoft இல் வேலை செய்ப‌வ‌ர்க‌ளில் 75% ஆனோர் ஆண்க‌ளே.

Arfa: ஆம்.

Todd: ஆனால் ஒப்பிடும் போது இந்த‌த் துறையில் அது மிக‌வும் பொதுவான‌ விட‌ய‌ம். பெண்கள் மிகக் குறைவாக இருப்பது உங்களை ஆச்சரியப்படுத்தியதா?

Arfa: ஆம். ஏனெனில் உண்மையில் ச‌ம‌மாக‌ இருக்க‌ வேண்டும். ஆண்க‌ளும் பெண்க‌ளும் ச‌ம‌ எண்ணிக்கையில் இருக்க‌ வேண்டும்.

Todd: ஆம்.

Todd: நீங்க‌ளும் Windows applications உருவாக்கி இருக்கிறீர்க‌ளா?

Arfa: ஆம். சில‌ சிறிய‌ சிறிய‌ programmes உருவாக்கி உள்ளேன். ..............

Todd: நீங்க‌ள் வ‌ள‌ர்ந்து என்ன‌ செய்ய‌ப்போகிறீர்க‌ள்?

Arfa: Satellite Engineering

Todd: ச‌ரி. அது ஏன் உங்க‌ளுக்குப் பிடித்திருக்கிற‌து?

Arfa: உல‌க‌ம் இப்போ wireless ஆக‌ப் போய்க்கொண்டிருப்ப‌தாலும் ப‌ல‌ satellites ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டுவ‌தாலும் உலகிற்கு Satellite Engineers தேவை.

Todd: Microsoft இல் வ‌ந்து நீங்க‌ள் வேலை செய்வீர்க‌ளா?

Arfa: ஆம்.

Todd: ச‌ரி. Microsoft இல் வேலை செய்ப‌வ‌ர்க‌ளிட‌ம் - உங்க‌ளிட‌ம் satellite Engineering division உண்டா?

இல்லை.

Arfa: அந்த‌ division ஜ‌ நானே விருத்தி செய்து உருவாக்குவேன்.

Arfa: “If you want to do something big in your life, you must remember that shyness is only the mind,” she said. “If you think shy, you act shy. If you think confident you act confident. Therefore never let shyness conquer your mind.”

"உங்கள் வாழ்வில் ஏதாவ‌து பெரிதாக‌ச் செய்ய‌ விருப்ப‌ம் இருந்தால், நாண‌ம்/ப‌ய‌ம் ம‌ன‌தில் ம‌ட்டுமே உண்டு என‌ நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நாண‌மாக‌ ம‌ன‌த்தில் நினைத்தால் நாண‌மாக‌வே (வாழ்விலும்) நடப்‌பீர்க‌ள். ம‌னதில் ந‌ம்பிக்கை கொண்டால் ந‌ம்பிக்கையுட‌ன் ந‌ட‌ப்பீர்க‌ள். ஒருபோதும் நாண‌த்தை ம‌ன‌தை ஆழ‌ அனும‌திக்காதீர்க‌ள்.


அடுத்து Riley என்னும் நான்கே வ‌ய‌துடைய‌ அமெரிக்க‌ச் சிறுமி, சிறுவ‌ர் விளையாட்டுச்சாமான்க‌ள் வேண்ட‌ச் சென்ற‌ இட‌த்தில், விளையாட்டுச் சாமான்கள் சிறுமிகளுக்கானது/சிறுவன்களுக்கானதெனப் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து த‌ன் த‌ந்தையுட‌ன் ந‌ட‌த்தும் உறையாட‌ல். இதுவும் ஒரே நிமிட‌ம் தான்.



Riley: எல்லாச் சிறுமியரையும் இளவரசிகளையும் எல்லாச் சிறுவன்களையும் superheroes உம் வாங்கப் பண்ணுவது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.

அப்பா: ஏன்?

Riley: ஏனென்றால், சிறுமிகளுக்கும் superheroes விருப்பம். சிறுவன்களுக்கும் superheroes விருப்பம். சிறுமிக‌ளுக்கும் இள‌ஞ்சிவ‌ப்பு நிற‌முடைய‌ பொருட்க‌ள் பிடிக்கும். சிறுவன்களுக்கும் இள‌ஞ்சிவ‌ப்பு நிற‌முடைய‌ பொருட்க‌ள் பிடிக்கும்.

அப்பா: ச‌ரி. எல்லொருக்கும் இரண்டு வ‌கைக‌ளும் பிடிக்கும். ஆனால் ஏன் இப்ப‌டி வைத்துள்ளார்க‌ளென‌ நினைக்கிறாய்?

Riley: ஏனென்றால், இந்த‌ப் பொருட்க‌ளைச் செய்யும் க‌ம்ப‌னிகள், சிறுவன்கள் பக்கத்தில் இருக்கும் பொருட்களை வாங்கிவதற்குப் பதில் சிறுமிக‌ளை இள‌ஞ்சிவ‌ப்பு நிற‌முடைய‌ பொருட்க‌ளை மட்டுமே வாங்குவ‌த‌ற்குத் தூண்டுகிறார்க‌ள்.

அப்பா:ச‌ரி. ஆனால் உங்க‌ளுக்கு வேண்டுமானால் நீங்க‌ள் இரண்டில் எதுவும் வாங்க‌லாம். ச‌ரி? சிறுவன்களும் எது வேண்டுமானாலும் வாங்க‌லாம். ச‌ரி. அவ‌ர்க‌ளுக்கு  இள‌ஞ்சிவ‌ப்பு நிற‌முடைய‌ பொருட்கள் விருப்ப‌மென்றால் அவ‌ர்க‌ள் வாங்க‌லாம் தானே? ச‌ரியா?

Riley: ச‌ரி. அப்ப‌ ஏன் எல்லாச் சிறுமிக‌ள் ம‌ட்டுமே இள‌வ‌ர‌சிக‌ள் வாங்க‌ வேண்டும்? சில‌ சிறுமிக‌ளுக்கு superheroes விருப்பம், சில‌ சிறுமிக‌ளுக்கு இள‌வ‌ர‌சிக‌ள் விருப்ப‌ம். சில‌ சிறுவ‌ன்க‌ளுக்கு superheroes விருப்பம், சில‌ சிறுவ‌ன்க‌ளுக்கு இள‌வ‌ர‌சிக‌ள் விருப்ப‌ம்.

அப்பா: நிச்ச‌ய‌மாக‌.

Riley: அப்ப‌ ஏன் எல்லா சிறுமிக‌ளும் இள‌ஞ்சிவ‌ப்பு நிற‌முடைய‌ பொருட்க‌ளும் எல்லா சிறுவ‌ன்க‌ளும் வேறு வேறு நிற‌முடைய‌ பொருட்க‌ளும் வாங்க‌ வேண்டும்?

அப்பா: அது ஒரு ந‌ல்ல‌ கேள்வி Riley.

2 comments:

சார்வாகன் said...

அருமையான பதிவு,
சிறுமி அர்ஃபாவின் மறைவு உலகிற்கே பெரும் இழப்புதான்.இப்பதிவில் குழந்தைகளின் கேள்விகள்,பதில்கள் மிக தெளிவாக ,நிகழ்வுகளை சார்ந்தே அவதானிக்கும் அறிவியல் பார்வையாக இருப்பது கண்கூடு.நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்..கேள்விகள் கேக்கக்கேக்க மாற்றங்கள் வந்துட்டே இருக்கும்..