எம்மவர்களிடையே மாதவிடாய் தொடர்பாக, கருத்தடை மாத்திரைகள் தொடர்பாக நிறையக் கட்டுக்கதைகள் உண்டு. இக்கதைகளில் ஏதாவது உண்மை இருக்கிறதா எனப் பெரிதாக யாரும் யோசிப்பதில்லை. எவனோ சொன்னான் என எல்லோரும் அவற்றையே பின்வற்றுவதே அநேகம் நடந்து வருகிறது. அண்மையில் கருத்தடை மாத்திரைகள் பற்றி கேள்விப்பட்ட கருத்துகளே என்னை பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியைப் பற்றிய இந்த அடிப்படை அறிவியல் தொடரை எழுதத் தூண்டியது. எம்மிளையவர்கள் பலருக்குக் கருத்தடை மாத்திரைகளைப் பற்றிய தகவல்கள் தெரியாது. ஊரிலிருந்து பெரியவர்கள் பலருக்குச் சொல்வது "அந்த மாத்திரைகள் நஞ்சு மாதிரி. கருப்பையை எரிச்சுப் போடும். பிறகு ஒரு பூச்சி, புழுவும் உருவாகாது' என்பதே. இந்த மாதிரிக் கட்டுக்கதைகளுடன், மாதவிடாய் இரத்தத்திற்குக் கூட மாயாஜாலத் தீய சக்திகள் உண்டு என அர்த்தப்படும் கட்டுக்கதைகளுக்கு உதாரணமாக அண்மையில் என் கண்ணில் பட்ட இந்தப் பயங்கரமும் கூட நான் இதை எழுதுவதற்குக் காரணங்கள்.
Although எவர்களின் சிந்தனையைத் தூண்ட வேண்டுமென நினைக்கிறேனோ, அவர்களில் சிலராவது இப்பதிவை வாசிப்பார்களா என்பது சந்தேகமே. எனினும் யாராவது இருசிலருக்காவது உதவலாம் எனும் நம்பிக்கையிலும், எனது சிந்தனைகளை ஒருமைப்படுத்தும் முகமாகவும் இத்தொடரை எழுதுகின்றேன். நேரில் என்னிடம் இதைப்பற்றிக் கதைப்பவர்களிடம் என்னால் இயன்றளவு விளக்கிக்கொண்டு வருகின்றேன்.
சரி. முதலில் பெண்களின் இனப் பெருக்கத் தொகுதியின் உட்கூறுகளின் அமைப்பியலைப் (anatomy) பார்ப்போமா?
படத்தில் காட்டப்பட்டவாறு கருப்பையின் இரு பக்கங்களிலும் எமக்கு ஒவ்வொரு சூலகங்கள் இருக்கின்றன எனப் பலருக்குத் தெரிந்திருக்கும். இச்சூலகங்களிலேயே முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. பெண்களின் சூலகங்களை ஆண்களின் testes க்கு ஒப்பிடலாம். ஆனால் testes தொடர்ந்து விந்துகளை உருவாக்கிக்கொண்டிருப்பதைப் போல் சூலகங்கள் செய்வதில்லை. பெண்களால் உருவாக்கக் கூடிய மொத்த முட்டைகளும் விருத்தியடையாத நிலையில் அவர்களின் சூலகங்களில் அவர்கள் பிறக்குமுன்னேயே உருவாக்கப்பட்டுவிடும். பூப்பெய்தும் காலம் வரை சூலகங்களில் இம்முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். பூப்படைந்த பின் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை படிப்படியாக சூலகத்தில் விருத்தியடைந்து வெளியேற்றப்படும் (குறிப்பிட்ட சிலருக்கு ஒன்றிற்கும் மேலான முட்டைகளும் விருத்தியடைந்து வெளியேறலாம்). இதைப் பற்றித் தொடரின் அடுத்த பகுதியான மாதவிடாய்ச் சுழற்சியில் பார்க்கலாம். சூலகத்தால் வேளியேற்றப்படும் முட்டை பலோப்பியன் குழாயினூடு பயணிக்கும் போது பொருத்தமான ஒரு விந்தைச் சந்திக்குமாயின் கருக்கட்டல் இடம் பெறும்.
பின் கரு, கருப்பையை அடைந்து கருப்பையின் அக உறையான endometrium ஜ ஊடுறுவி அடுத்த 40 கிழமைகளுக்கான தனது வீட்டை மெருக்கூட்டும் வேலைகளில் ஈடுபடும். இக்கருப்பை படத்தில் காட்டப்பட்டவாறு இரு முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது. மிகவும் தடித்த தசைகளால் ஆன அடுக்கு கருப்பத் திசுச்சுவர்/myometrium எனப்படும். இது கருப்பைக்குத் தேவையான இரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு, பிள்ளை பிறக்கும் போது தசைச் சுருக்கங்களை (contractions) ஏற்படுத்தி குழந்திஅயை வெளியேற்றவும் உதவுகிறது.
உள்ளிருக்கும் மெல்லிய பஞ்சு போன்ற, சுரப்பிகளாலான அடுக்கு கருப்பையின் அக உறை/endometrium எனப்படும். முதற் சொன்னது போல் இந்த அடுக்கே கரு ஊன்றும் இடம். இதுவே பனிக்குடத்தின் (placenta) தாயின் பகுதியை உருவாக்குகிறது. ஒவ்வொரு மாதமும் கருவை எதிர்பார்த்து, வளர்ந்து பின் கருக்கட்டல் நடைபெறாவிடில் உதிரும் அடுக்கும் இதுவே.
இனப் பெருக்கத் தொகுதியில் அடுத்து கருப்பை ஒடுக்கமாக வந்து பெண்ணுறுப்புடன் சேரும் இடம் தான் கர்ப்பவாய்/cervix. பெண்ணுறுப்பினூடகப் பார்க்கும் போது படத்தில் பெரிதாகக் காட்டியவாறு தெரியும். நடுவிலிருக்கும் அந்த வெட்டே கருப்பையின் கதவு. அதனூடாகவே குழந்தை வெளியில் வர வேண்டும். பிள்ளைப் பேற்றின் போது midwife ஓ மருத்துவரோ cervix 10 cm விரிவடைய வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்குவர். இந்தக் கதவு 10 cm விரிவடைந்த பின்னே குழந்தையின் தலை வேளியே வரமுடியும். Cervix இன் கீழிருப்பது பெண்ணுறுப்பு/vagina.
4 comments:
அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
**** மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள்.
**** மகளுடைய மாதவிடாயை அருந்து????..
****
மாதவிடாய் பாவங்களின் பலனா? – *****
**** பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே? அதற்கான காரணத்தை பார்ப்போம். *****
**** உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா? *****
.
நல்ல முயற்சி அனா!! தொடர்கிறேன்.... அறிவியலுக்கும் அறியாமைக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்தால் கொஞ்சம் இது போன்ற விடயத்தில் பிரச்சனைகளும் குறையும் நம் சமூகத்தில்.
நல்ல பதிவு.வாழ்த்துகள்..பல விஷயங்கள் அறிய முடிந்தது.நன்றி
வருகைக்கும் கருத்துகளுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி உண்மைகள், ரதி, சார்வாகன்.
Post a Comment