Monday, January 30, 2012

முதற் பிரசவக் கதை - இறுதிப்ப‌குதி

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

19 ஆம் திகதி ஆவணி 2008 காலை 11.17 க்கு ஒரு மாதிரி குழந்தையைப் பாதுகாப்பாக வேளியேற்றியாயிற்று.
அதன் பின் பனிக்குடத்தையும் வேளியேற்றி, பிரிஞ்சதெல்லாம் தைச்சு, இரத்தம் ஏற்றி என்று என்னையும் ஒரு வழி பண்ணி maternity ward இல் கொண்டு போய் விட பின்னேரம் ஆகிவிட்டது.இரவில் யாரும் என்னுடன் நிற்க இயலாது. அதனால் அம்மா, துணைவன், தங்கைகள் என ஒவ்வொருவரும் கிளம்பி விட்டனர். ஒரு பிரச்சனையுமற்ற பிரசவமாயின் பிறந்த சில மணித்தியாலத்திலேயே தாயையும் குழந்தையையும் கூட Birth care க்கோ வீட்டுக்கோ அனுப்பி விடுவர்.
Birth Care என்பது ஒரு தாயார் மருத்துவமனை மாதிரி. உங்கள் பிரசவத்தில் ஒரு பிரச்சனைகளும் வரும் என எதிர்பார்க்காவிடில் அங்கே பிரசவத்தை வைத்துக்கொள்ளலாம். அவர்கள் பிரசவத்திற்குப் பின் பெற்றோருக்குத் தேவையான சேவைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதில் சிறந்தவர்கள். அங்கு பல midwives 24 மணிநேரமும் உதவி செய்ய இருப்பர். குழந்தை பிறந்து முதல் மூன்று நாட்களும் இலவசமாக அங்கு நிற்கலாம். I think it is the best place to be for a new mother.

நான் இரத்தம் நன்றாக இழந்துவிட்டேன் என்பதால் என்னை மருத்துவனையிலேயே ஓரிரு நாட்கள் வைத்திருந்து பின் birth care க்கு அனுப்ப முடிவு செய்தார்கள். பிரசவத்தில் வந்த தடையைத் தாண்டியாயிற்று, இனி எல்லாம் சரியாகிவிடுமென நினைத்தது பிழையாகிவிட்டது. இரத்தம் கூட இழந்ததால், என் உடல் தன்னைப் பழுது பார்ப்பதில் கவனம் செலுத்தியதே தவிர பால் சுரக்கும் வேலையைப் பின் தள்ளிவிட்டது. It's priority was to repair itself first. இப்படி ஒரு பிரச்சனை வருமென நான் எதிர்பார்க்கவே இல்லை. நின்றவர்கள் எல்லாம் போய்விட, பிரசவத்தின் போதிருந்த aderenaline rush, கருக்காலத்திலிருந்த உயிர்ப்பு நீர்கள் எல்லாம் குழந்தை பிறந்தவுடன் கை விட்டு விட‌, மிகுந்த நோவும், பால் சுரக்காத பிரச்சனையும் சேர்ந்து இரவில் தனியக் குழந்தையுடன் படுத்திருந்த போது, அந்த இரு நாட்களில் முதன் முதலில் அழுகை அழுகையாக வந்தது. முற்றாகத் தோற்றுவிட்டது போன்ற ஒரு உணர்வு. ஏன் இப்படி ஒரு பிரச்சனை வரலாமென நான் யோசிக்கவே இல்லை என என்னில் எனக்கே கடுங்கோபம் வந்தது.கருக்கால வகுப்புகளில் birhting educator, உலகில் கிட்டத்தட்ட 4% ஆன பெண்களுக்கு பால் கொடுப்பதில் பிரச்சனைகள் வருமெனச் சொன்ன போது, ஒரு யோசனையுமற்று எகத்தாளமாக‌ "நிச்சயமாக நான் மற்ற 96% க்குள் தான் இருப்பேன்" என மனதிற்குள் நினைத்தது ஞாபகம் வந்தது.

இருந்த தாதியர் இதனால் ஒரு பிரச்சனையுமில்லை இயலுமானவரை முயற்சிப்போம் அதன் பின் குழந்தை dehydrated ஆக விடாது புட்டிப்பாலைக் கொடுப்போம் என்றனர். புட்டிப்பாலைக் கொடுத்துக்கொண்டு பால் சுரப்பதற்கு முலைகளையும் தூண்டிக்கொண்டிருப்பின் பால் சுரக்கத் தொடங்கச் சந்தர்ப்பம் இருக்கு என்றனர். தாய்ப்பால் தேவை இருந்தால் மட்டுமே சுரக்கும். Supply on demand என்று சொல்வார்கள். எந்தளவிற்குக் குழந்தை தூண்டுகிறதோ அந்தளவிற்கே பால் உற்பத்தி செய்யப்படும். தூண்டவில்லை ஆயின் உற்பத்தி படிபடியாக நின்றுவிடும். அதனால் ஒவ்வொருமுறையும் குழந்தையைத் தூண்டச் செய்து, பின் குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுக்க வேண்டுமெனச் சொன்னார்கள். பிரச்சனைக்குத் தீர்வு இருக்கலாமென்பதே கொஞ்சம் நம்பிக்கை கொடுக்க சரியென்று அவ்வாறே செய்தேன்.

மூன்றாம் நாள் நான் birthcare போய்விட்டேன். அங்கு பாலை நாமாகவே எடுப்பதற்குரிய kit உம் இருந்தது. அங்கிருந்த midwives சொன்னார்கள், ஒவ்வொரு நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை குழந்தை நித்தரை என்றாலும் எழுப்பி, முதலில் குழந்தையைத் தூண்டச் செய்து, பின் குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுத்து, பின் குழந்தையைத் திரும்ப நித்திரை ஆக்கிக் கிடத்திவிட்டு expressor kit மூலம் ஒரு 10 -15 நிமிடங்கள் பால் எடுக்க முயற்சி செய்து பார் என்றனர். விடாமல் தொடர்ந்து செய்த முயற்சி அங்கு சென்று மூன்றாம் நாளில் வெற்றி அளித்தது. அப்பாடா என்றிருந்தது. குழந்தை பிறந்து ஜந்தாம் நாள் வீட்டை கொண்டு வந்தோம்.

Seriously the birthcare was amazing. 24 மணித்தியாலங்களும் midwives இருப்பார்கள்
என்பதால், அவர்களுடம் எந்நேரமும் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அவர்கள் குழந்தைப் பேறிலும் அதன் பின் நடக்கும் விடயங்களைப் பற்றியும் மிகுந்த அனுபவமும் அறிவும் கொண்டவர்கள். எனக்கும் என் துணைவனுக்கும் பல விடயங்கள் அறிய முடிந்தது.  அதன் பின் இங்கு கர்ப்பமாக இருக்கும் எனக்குத் தெரிந்த எம்மவர்காளி எல்லோரிடமும் இந்தச் சேவைப் பற்றிச் சொல்லிப் போகச் சொல்வோம். ஆனால் நாம் சொன்னவர்களில் இதுவரைக்கும் யாரும் போனதில்லை. Anyway let's talk about that another time.

இப்போ அவனுக்கு மூன்று வயது. நம்பமுடியாமல் உள்ளது. மிகவும் வளர்ந்து விட்டான். அவனுக்கே உரிய விருப்பு, வெறுப்புகள், அதை எம்மிடம் சொல்லும் விதம், அவனாகவே பல விடயங்களுக்கு யோசித்து விளக்கம் கொடுக்கும் தன்மை, நாம் சொல்லும் ஒவ்வொரு வசனத்திற்குப் பிறகும் தவறாமல் வரும் "ஏன்?" என He is a little person in his own right with very cool personality. :)
5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

great..கன்னத்தில் குழி விழ..

அனுபவத்தொடர் நல்லா இருந்துச்சுப்பா..

Anna said...

:) மூன்றையும் வாசித்து ஊக்கம் அளித்ததற்கும் உங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கயல்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

வணக்கம் தோழி. நலமா?

எனக்கு பிடித்தமான உங்கள் எழுத்துக்கு என்னாலான
ஒரு சிறு அங்கீகாரமாக, liebster விருதை உங்களுக்கு
அளிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தொடர்ந்து நிறைய
எழுதுங்கள்.

விருது வழங்கிய சுட்டி கீழே:
http://minminipoochchigal.blogspot.in/2012/02/liebster.html

Unknown said...

'ஈன்ற பொழுதினும் பெரிது வக்கும் தம் மகனை சான்றோன் எனக் கேட்டத் தாய்'
அனுபவப் பகிர்வு நன்று...
தங்களின் செல்வம் சிறந்த அறிவாளியாக வளர்ந்து பெரும், பெரும், புகழும் பெற அவருக்கு எமது வாழ்த்துக்கள் சகோதிரியாரே!

Anna said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தமிழ் விரும்பி.