காசநோய் (Tuberculosis (TB)) ஒரு தொற்று நோய்.Mycobacterium tuberculosis எனும் பாக்டீரியாவே இந்நோய்க்குக் காரணம். இந்த பாக்டீரியா உள்ள எவரும் இருமும் போதோ தும்மும் போதோ வெளியேறும் காற்றுத் துளிகளைச் சுவாசிப்பதன் மூலம் இது மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்த பாக்டீரியாவால் நுரையிரல் பாதிப்புற்றோரே மற்றவர்களுக்கு இதைப் பரப்பக்கூடியவர்கள். இந்த பாக்டீரியா உள்ள ஒருவர் சராசரியாக 10-15 பேருக்கு இந்நுண்ணுயிரியைப் பரப்பலாம்.வயோதிபர், குழந்தைகள், உடலின் immune system வலிமையற்றவர்கள், போதிய போசாக்குள்ள உணவு கிடைக்கப்பறாதவர்கள், மிகச் சனத்தொகை கூடிய பகுதியில் வாழ்வோர் ஆகியோரை இந்நோய் கூடுதலாகப் பாதிக்கின்றது. உலகில் தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் உள்ள மக்களை இந்நோய் மிகக்கூடுதலாகப் பாதிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் மட்டும் 1.7 மில்லியன் மக்கள் இந்நோய்க்குப் பலியாகி உள்ளனர்.
இந்நோய்க்குக் காரணமான பாக்டீரியா சிலரில் இருந்தாலும், அவர்களுக்கு காசநோய் வரப் பல மாதங்களோ, சில சமயம் வருடங்களோ ஆகலாம். அவருக்குத் தெரியாமலே அவர் பலருக்கு இந்த பாக்டீரியாவைப் பரப்பும் சாத்தியமும் உண்டு.உலகில் தற்சமயம் மூன்றில் ஒருவரில் இந்த பாக்டீரியா உள்ளது.
இந்நோய்க்கு மருந்து பல்வேறுவகையான கிருமியொடுக்கிகளே (antibiotics). பாக்டீரியாவை அழிப்பதற்கு, இந்த கிருமியொடுக்கிகளை பல சமயம் நீண்ட காலம் எடுக்க வேண்டும் (சில சமயம் இரண்டு வருடங்களுக்கு). ஒழுங்காக இந்த மருந்தை, எடுக்க வேண்டிய காலத்திற்கு எடுக்காததே இந்த பாக்டீரியாக்களில் எதிர்ப்பாற்றல் மிக்க strains உருவாக மிக முக்கிய காரணம் (நமது சாதாரண தடிமனுக்கே கிருமியொடுக்கிகள் கொடுக்கும் போது முக்கியமாகச் சொல்லப்படும் அறிவுரை - தரும் மருந்தை சொல்லப்பட்ட நாட்களுக்குக் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றே. அல்லாவிடில் உங்கள் உடம்பில், நீங்கள் எடுத்த கிருமியொடுக்கிக்கு எதிர்ப்பாற்றல் மிக்க நுண்ணுயிரிகளின் strains உருவாவதைத் தவிர்க்க முடியாது.) இரண்டாவது முக்கிய காரணம் எந்த கிருமியொடுக்கிகளைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற சரியான அறிவு மருத்துவர்களுக்கு இல்லாமை.
இதனால் ஏற்கனவே பல கிருமியொடுக்கிகளுக்கு எதிர்ப்பாற்றல் மிக்க பல பாக்டீரியா strains உருவாகிவிட்டன (MDR (multi drug resistant and XDR (extensively drug resistant). MDR/XDR strains ஆல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2012 இல் இரண்டு மில்லியன் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பகம் (WHO) சொல்கிறது. இலங்கை/இந்தியாவில் இந்நோய் சாதாரணம் ஆதலால், குழந்தைகள் பிறந்த உடன் இந்நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டுவிடும். ஆனால் இதனால் 50% பாதுகாப்பே கிடைக்கும். இப்ப பல கிருமியொடுக்கிக்கு எதிர்ப்பாற்றல் மிக்க நுண்ணுயிரிகளின் தோன்றலால் இந்த சதவீதம் இன்னும் குறிப்பிட்டளவு குறைவாக இருக்கலாம்.
நிலமை ஏற்கனவே இவ்வளவு மோசமாக இருக்க அண்மையில் மும்பையிலுள்ள மருத்துவர்கள் எம்மிடம் இருக்கும் அனைத்து கிருமியொடுக்கிகளுக்கும் எதிர்ப்பாற்றல் மிக்க புதிய காசநோய் பாக்டீரியா strain ஜ 12 பேரில் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் இந்த strain ஜ TDR (totally drug resistant) எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு மூன்று வருடங்களுக்கு முன் ஈரானில் கூட இந்த மாதிரி அறிவிக்கப்பட்டதாம். ஆனால் அதை யாரும் பெரிதாகக் கணக்கெடுக்கவில்லை எனத் தோன்றுகிறது. இந்த strain ஆல் உருவாகும் நோயைக் குணமாக்க எம்முடம் எந்த மருந்தும் இல்லை.
இந்தச் செய்தியை Clinical Infectious Diseases என்ற இதழுக்கு மும்பை Hinduja National Hospital and Medical Research Centre மருத்துவர்கள் கடிதமாக எழுதியுள்ளனர். அதையும் விட இந்தியாவில் எப்படியோ தெரியாது இலங்கையில் மக்கள் தனியார் மருத்துவமனையென்றால் சிகிச்சையெல்லாம் அரச மருத்துவமனைகளைவிட மிக நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பணத்தைக் கொட்டுவதால் customer service நன்றாக இருக்கலாம், ஆனால் சிகிச்சை குறிப்பிட்டளவு better ஆ எனத் தெரியவில்லை. ஆனால் பணத்திஅப் பிடுங்குவதற்காக தேவையில்லாத treatments/sugeries நடந்த கதைகள் கேள்விப்பட்டுள்ளேன். எனக்கு சொந்தமாக அனுபவமில்லை. ஆனால் இந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளது கவலைக்கிடமானது.
"இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர் எப்படியாவது குணமாக வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள். உலகில் மிக அதிகமாக தனியார் துறையில் வேலை செய்யும் மருத்துவர்கள் இந்தியாவிலேயே உள்ளனர். இவர்களின் அறிவையோ தகுதிகளையோ முறையாகக் கண்காணிப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. நாம் மும்பையில் சனத்தொகை மிக்க டரவி (Dharavi) எனும் இடத்தில் நடத்திய ஒரு ஆய்வின் படி அங்கிருந்த 106 மருத்துவர்களில் 5 பேருக்கே ஒரு கற்பனை MDR காசநோயால் பாதிக்கப்பட்டவருக்கு எந்தச் சரியான கிருமியொடுக்கிகளைக் கொடுக்க வேண்டுமென்ற தகவல் தெரிந்திருந்தது. அநேகமான மருத்துவர்கள் கொடுத்தது பிழையான combinaitons of antibiotics. அவற்றால் எதிர்ப்பாற்றல் மிக்க நுண்ணியிரிகள் தோன்றுவதற்கான வாய்ப்பே அதிகமாகும் அன்றி நோய் குணமாகாது."
அதே நேரம் எந்த மருத்துவமனைக்கும் செல்ல வசதியற்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலையும் மிகவும் கவலைக்கிடமானது. இப்போதைக்கு TDR ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே தீர்வு ஆய்வின் மூலம் வேறு பலமான கிருமியொடுக்கிகளைக் கண்டறிவதே. அதற்கிடையில் இந்தப் புதிய strain ஆல் எந்தளவு கொடூரம் விளையுமோ தெரியவில்லை. மற்றைய strains பரவும் வேகத்தைத் தடுக்க மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வு மிக மிக அவசியம்.
0 comments:
Post a Comment