முதன் முதலாக இந்தியாவில் இம்மாதம் 13ஆம் திகதி வரை கடந்த ஒரு வருடத்தில் புதிதாகப் போலியோ வைரஸ் எவரையும் தாக்கவில்லை. கடந்த 13ஆம் திகதியிலிருந்து இந்தியாவில் போலியோ ஒரு endemic (திணையின முறைநோய்? இந்தச் சொல் சரியா எனத் தெரியவில்லை) நோய் அல்ல. கடந்த சில காலங்களாக இந்தியா, பாக்கிஸ்தான். ஆவ்கானிஸ்தான், நையீரியா ஆகிய நான்கு நாடுகளிலும் இந்நோய் மிகக் கூடுதலாகப் பரவிக்கொண்டிருந்தது. இவ்வருடத்திலிருந்து இந்தியா இந்த list இல் இல்லை. It's an amazing achievement. இந்நோயை முற்றாக அழிப்பதற்கான பாதையில் பல படிகள் முன்னேறியுள்ளோம்.
மிக அண்மையில் 2009 இல் கூட இந்தியா உலகில் மிக அதிகமாகப் புதிதாகப் போலியோவால் பாதிக்கப்பட்டவரைப் பதிவு செய்திருந்தது. இதுவரைக்கும் எத்தனையோ மில்லியன் மக்களை ஊனமுறச்செய்துள்ளது இந்தப் போலியோ. பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் போலியோ தடுப்பூசி போடப்படவே வேண்டுமென்ற திட்டங்களாலும் எத்தனையோ அமைப்பகங்களின் உதவியினூடும், மிக முக்கியமாகத் தடுப்பூசிகளின் வல்லமையினாலும் இந்த இலக்கு அடையப்பட்டுள்ளது. ஆனால் இந்நோய் முற்றாக அழிக்கப்படும் வரை இன்னும் மிகக் கவனமாகவே இருக்கவேண்டும்.
சின்னம்மைக்கு (small pox) அடுத்ததாக உலகில் முற்றாக அழிக்கப்படும் தடுக்கப்படக்கூடிய நோயாக போலியோ மிக விரைவில் பதிவு செய்யப்படுமென நம்பிக்கை கொஞ்சம் பிறந்துள்ளது.
The end of polio- இந்நோயை உலகிலில் முற்றாக ஒழிக்கப் பாடுபடும் Global Polio Eradication Initiative இன் வேலைகளுக்கும் தடுப்பூசிகளுக்கும் ஆன செலவிற்கு ஆவன செய்யுமாறு உலகத் தலைவர்களைக் கோரும் விண்ணப்பத்தில் இங்கு கையெழுத்திடலாம்.
0 comments:
Post a Comment