Saturday, December 15, 2012

அண்மையில் நடந்த சில நிகழ்வுகளும் என் எண்ணங்களும்

எத்தனையோ விடயங்களைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தும் நேரமே இல்லாத காரணத்தினால் எதுவும் எழுத முடியவில்லை. தொடங்கிய பரிணாமத்தொடரை முடிக்க வேண்டும். அதற்கு முதல் நான் எழுத நினைத்த வேறு சில விடயங்களை சுருக்கமாக இப்பதிவில் சொல்லலாம் என நினைக்கிறேன்.


இரு வாரங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கிற்கு நியூசிலாந்திலேயே parmeston north எனும் இடத்திற்குச் சென்றிருந்தேன். கருத்தரங்கு மூன்று நாட்கள் தான். முதன் முறையாக எனது 9 மாதக் குழந்தையை விட்டுச் செல்ல மிகக் கடினமாக இருந்தது. என் துணைவன் வேலையிலிருந்து விடுப்பெடுத்து குழந்தைகளுடன் இருந்தார். ஒருநாள் முழுதும் என்னைப் பார்க்காமல் கஸ்டப்படுவானோ என்று நினைவு வீட்டைச் சுற்றியே இருந்தது. ஒரு கருத்தரங்கு இரவுச் சாப்பாடு நேரம் நான் இருந்த மேசையில் என்னுடன் இரு பெண் பேராசிரியர்களும் இருந்தனர். அவர்களை நான் முதலில் இந்தக் கருத்தரங்கிலேயே சந்தித்தேன். ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்ற அறிமுகங்களுக்குப் பின், நான் எனது குழந்தைகளைப் பற்றியும், எப்படி சின்னவனைப் பிரிந்து வருவது இதுவே முதல் தடவை என்றும் அதனால் கவலையாக இருக்கிறதென்றும் சொன்னேன். அதற்கு அவ்விருவரில் ஒருவர் சொன்னது, 'கவலைப் படாதே. அவர்களின் அப்பா தானே பார்த்துக் கொள்கிறார். எல்லாம் நன்றாகவே நடக்கும். தொலைபேசி எல்லாம் ok ஆ எனக் கேள் ஆனால் நுண்ணிய விளக்கமெல்லாம் கேட்காதே. That will make you and him crazy. :) இப்படித்தான் நான் அமெரிக்காவில் post-doctoral fellowship செய்யும் போது ஒரு வருடங்கள் எனது துணைவனும் வீட்டிலிருந்து எமது இரு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டவர்." என்றார். :)I just wanted to salute all the men out there who have rightly given up their privileges and share parenting responsibilities. இவர்களைத் தாயுமானவர்கள் என்று சொல்லப்போவதில்லை. ஏனெனில் that would just reinforce the stereotype that ஒரு தாயால் மட்டுமே பிள்ளைகளை நன்றாகக் கவனிக்க முடியும் என்று. தந்தையாலும் அதே பொறுமையோடும் அன்போடும் கவனிக்க நிச்சயம் முடியும். அறிவியலில் நான் சந்திக்கும் உயர் நிலையை அடைந்த பெண்களிலும் எனது level இல் இருக்கும் பெண்களிலும் அநேகமானோரிற்குக் குழந்தைகள் இல்லை. நிச்சயமாகக் குழந்தைகள் பெறாமை ஒரு பிழையான விடயமல்ல. அது அவர்களின் விருப்பமெனில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களால் தமது ஆய்விற்குக் கொடுக்கக் கூடியளவு நேரம் என்னால் கொடுக்க முடியாது என எப்போதும் யோசிப்பதுண்டு. அதனால் குழந்தைகளுடன் உயர்நிலையை அடைந்த சில பெண்களைப் பார்த்தது நன்றாக இருந்தது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போன மாதம் நியூசிலாந்து அரசாங்கத்தால் The Great NZ Science Project ஆரம்பிக்கப்பட்டது. இது நியூசிலாந்து மக்களும் விஞ்ஞானிகளும் இணைந்து அடுத்த 5-10 வருடங்களுக்கு இந்நாட்டிற்கு முக்கியமான அறிவியல் சவால்கள் என்ன? எவற்றிற்கு நாம் கூடியளவில் பணம் ஒதுக்க வேண்டுமென‌ யோசிக்க வைக்க எடுக்கப்பட்ட திட்டம். விஞ்ஞானிகள் தாம் முக்கியமானவை எனக் கருதும் சவால்களை மிகக் குறுகிய நேரத்தில் சிறுவர்களுக்கு விளக்கி அந்த காணொளிகளை இத்தளத்தில் இணைத்த பின் மக்கள் அதற்கு வாக்களிப்பார்கள். It's a pretty neat idea.
இப்போது இருக்கும் சில காணொளிகளில் எனக்குப் பிடித்ததில் ஒன்று கீழுள்ளது. இவருடன் நான் நேரடியாக வேலை செய்யாவிடினும் எமது பல்கலைக்கழகத்திலேயே வேலை செய்கிறார். இவர் ஒரு நுண்ணுயிரியலாளர். மற்றவற்றையும் சென்று பாருங்கள். எல்லாம் நன்றாக உள்ளன. The children are amazing.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போன இரு மாதங்களில் சின்னவனுக்கு ஒரிரு தடவை சரியான சளி, காய்ச்சல் வந்து பின் அது மாற வயிற்றுப்போக்கும் வந்தது. வயிற்றுப்போக்கு கிட்டத்தட்ட 10-12 நாட்கள் இருந்தது. முதலில் வந்த போது முதலில் சாப்பாட்டை விட்டுப் பார்த்து பின் பாலை விட்டுப் பார்த்து தனிய Pedialyte மட்டுமே கொடுத்துக் கொண்டு வந்தேன். மருத்துவர்களும் அநேகமாக viral infection ஆகத்தான் இருக்கும் நீ செய்வதையே தொடர்ந்து செய்து கொண்டிரு. ஒரு மருந்தும் தேவையில்லை. தன் பாட்டிற்கு நிற்கும் என்றார்கள். It seemed like to go on forever. இதைத் தெரிந்த பலர் ஓமம் கொடு, எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். ஓமம் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்யும்? என்று கேட்டதற்கு யாரும் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை. ஊரிலிருந்து அண்மையில் வந்த ஒரு மருத்துவரிடம் கேட்ட போது, அவர் ஊரில் எல்லோரும் குடுக்கிறவை, ஆனால் நாம் அதை கொடுக்கச் சொல்லி ஒரு போதும் சொல்வதில்லை. அது வேலை செய்யும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்றார். I wanted to give him something that would trully make him feel better. I did not want to give something just for the sake of giving something so that I would feel better thinking I have done something. Does it make sense? இது வரைக்கும் நான் கண்டறிந்தது. ஓமத்தின் அறிவியல் பெயர் Trachyspermum copticum. இந்த மூலிகையில் இருக்கும் Thymol எனும் இரசாயனக் கூறிற்கு antimicrobial இயல்புகள் உள்ளது. ஆனால் இது ஒரு viral infection க்கு உதவும் என நான் நினைக்கவில்லை. ஒரு வயதான அம்மா நிச்சயமாகச் சொன்னது: வயிற்றால் போக வேண்டுமெனில் ஓமத்தை சும்மா அவித்து, அவித்த தண்ணியைக் கொடுக்க வேண்டும். வயிற்றுப் போக்கு நிற்க வேண்டுமெனில் ஓமத்தை வறுத்துப் பின் அவித்து, அவித்த நீரைக் கொடுக்க வேண்டுமாம். ஏன்? ஆருக்குத் தெரியும்??? ஏனென்று அவருக்கும் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். யாரேனும் ஆய்வுகள் செய்துள்ளனரா?

ஓமத்தைப் பற்றிய எனது கேள்விகளையெல்லாம் என் துணைவன் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்து விட்டு, அதன் பின் வேறொருவர் வெறெதையோ கொடுக்கலாம் என்று சொல்ல தொடங்க முதல் என் துணைவன் சொன்னது. "நீங்கள் சொல்லப் போறதை நன்றாக யோசிச்சு உண்மையில் உங்களுக்கு வேலை செய்யும் என்று தெரிஞ்சா மட்டும் சொல்லுங்கோ. இல்லையென்றால் இவளிட்டச் சொல்லி விட்டு, பின் ஏன்டா சொன்னம் எனச் சரியாகக் கவலைப்படுவியள், சொல்லிப் போட்டன்." :) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Skeptic என்றால் யார்? யாரோ பெரியவர் சொல்கிறார்கள் என்பதற்காகவோ பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் பின்பற்றிக் கொண்டு வருகிறோம் என்பதற்காகவோ புனிதம் என்றூ சமூகம் நம்புவதனாலேயோ மட்டும் ஒன்றை நம்பாமல் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதை ஏற்றுக்கொள்பவரை skeptic என்று கூறலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக தமிழ் அகராதி சொல்வது போல் skeptic என்றால் சந்தேகப் பேர்வழி இல்லை. Seriously. Anyway, நியூசிலாந்து skeptic society அங்கத்தவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒன்றுகூடுவர். இவ்வொன்று கூடல்களிற்குச் செல்ல வேண்டும் என பல தடவை நினைத்திருந்தேன். ஆனால் போனதில்லை. இம்மாதத்திற்கான ஒன்று கூடல் போன கிழமை நடந்தது. அதற்கு Skepchick இணையத்தளாத்தை நடத்தும் Rebecca Watson பேச வந்திருந்தார். நான் இந்த இணையத்தளத்தை எப்போதும் வாசிப்பவள் என்பதாலும் Rebecca Watson ஜப் பற்றியும் ஓரளவு தெரியும் என்பதாலும் பொகவே வேண்டும் என முடிவு செய்து எனது ஒரு தங்கையுடன் சென்றேன். கூட்டத்திற்குச் சென்றதும் முதலில் அவதானித்தது. நாம் இருவர் மட்டுமே brown people (or any coloured people for that matter) ஆக இருந்தோம். யாரும் அதைபெரிதாக நினைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஒருசிலராவது நிறத்தவராக‌ இருந்திருப்பின் நன்றாக இருந்திருக்கும் எனத்தோன்றியது. சிறிது நேரத்தின் பின் ஒருவர் வந்திருந்தார். It oddly made me feel better. Rebecca வின் பேச்சின் தலைப்பு "How Girls Evolved to Shop, and Other Ways to Insult Women with "Science"".பரிணாம உளவியல் என்ற துறையில் எவ்வாறு சில பிழையாகச் செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலம் அல்லது ஆய்வுகளின் முடிவுகளைப் பிழையாக விளங்கிக் கொண்டதன் மூலமும் போலியான அறிவியல் மூலம் சமூகத்திலிருக்கும் பெண்களுக்கெதிரான stereotypes ஜ இன்னும் வலுவாக்க முயலும் ஊடகங்களில் சொல்லப்பட்ட செய்திகளைப் பற்றியிருந்தது அவரின் பேச்சு. இந்தப் பேச்சை அவர் அண்மையில் அமெரிக்காவில் நடந்த ஒரு கருத்தரங்கிலும் கொடுத்திருந்தார். இதோ அந்தக் காணொளி.
முதலே தெரியுமென்றாலும் அந்தப் பேச்சில் திரும்பக் கேட்டதால் இங்கும் இதைப் பகிர்கிறேன். அநேகமாக எல்லா சமூகங்களிலும் இந்த ஆண்களின் நிறம் நீலம், பெண்களின் நிறம் இளஞ்சிவப்பெனும் எண்ணம் பரவி விட்டது. உங்களுக்குத் தெரியுமா போன நூற்றாண்டில் இந்த எண்ணம் எதிர்மாறாக ஆண்களுக்கு வலுவான சிவப்பு நிறத்திலிருந்து வந்த இளஞ்சிவப்பும் மென்மையான நீலம் பெண்களுக்கும் இருந்ததென்று. அதற்கு முன் காலங்களின் இவ்வாறு எந்த நிற விருப்பும் இருக்கவில்லையாம். Think about it.

பதிவு இவ்வளவு நீளமானதிற்கு மன்னிக்கவும். மற்றைய விடயங்களைப் பிறகு பார்ப்போம்.

5 comments:

தருமி said...

குழந்தை அழுதா ஓமத்தண்ணீர் கொடுக்கணும்னு பரம்பரையா சொல்லிட்டு இருக்காங்களே ...கிரைப் வாட்டர் விளம்பரம் பார்த்தது இல்லையா ...?!

Anonymous said...

skeptic - உங்களுடைய விளக்கம் அருமை.

Anna said...
This comment has been removed by the author.
Anna said...

Alien,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

Anna said...

தருமி sir,

gripe water ad பார்த்ததில்லை. ஆனால் எனது மூத்த மகன் பிறந்ததிலிருந்து சில மாதங்கள் colic ஆல் அழுத போது பலர் gripe water கொடுக்கச் சொன்னார்கள். Gripe water ஆபத்தானதாகத் தெரியவில்லை. ஆனால் அது colic பிரச்சனைகளையோ வேறு எந்தப் பிரச்சனைகளையோ தீர்க்கவல்லது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இங்கு அநேகமான plankets உம் மருத்துவர்களும் ஒன்றும் கொடுக்க வேண்டும், எல்லாம் தன் பாட்டிற்குச் சரியாகும் என்றே கூறுவர்.