Thursday, January 26, 2012

முதற் பிரசவக் கதை - 2


வலி கொஞ்சம் கொஞ்சமாகக் கூட ஆரம்பித்தது. இன்னும் சவ்வு உடையவில்லை. இன்னொரு தடவை சோதனை செய்து பார்த்து கருப்பை வாய் கிட்டத்தட்ட 4 cm விரிவடைந்து விட்டதென midwife சொன்னார். அதன் பின் assessment unit இலிருந்து delivery unit க்குச் செல்லம் என்றனர். சரியென நடந்து அங்கு சென்றோம். சிலருக்கு தண்ணீரில் இருந்து பிள்ளை பெறுவது சில வேளைகளில் இலகுவாக இருப்பதால் Delivery unit இல் சில அறைகளில் bath tub இருக்கும். அவ்வாறு bath tub இருக்கும் அறை ஏதாவது யாரும் பயன்படுத்தாமல் இருந்தால் அங்கே விடும் படி முதலே கேட்டிருந்தேன். அதுவும் சுடுநீரில் இருந்தால் கொஞ்சம் வலியின் உணர்வு குறையும் என்பதாலேயே. அப்படி ஒரு அறை இருந்ததால் அங்கேயே என்னை விட்டனர்.

சிறிது நேரம் சுடுநீரில் இருந்து பின், திரும்பவும் நடப்பம் என்று delivery unit க்குள்ளேயே கொஞ்ச நேரம் நடந்தேன். கருப்பைச் சுருங்கும் தன்மை முன்பை விடக் கூடியிருப்பினும், அது காணாதென்பதால் இன்னொரு இயக்கநீர் Syntocinon ஊசி மூலம் ஏற்ற வேண்டும் என்றனர் (Syntocinon, oxytocin இயற்கையாக பிரசவத்தின் போது மூளையிலிருந்து சுரக்கப்படும் இயக்க நீரின் செயற்கை version; Australia, New Zealand இல் உருவாக்கப்படும் இந்த version க்கு Syntocinon என்று பெயர்). என் கருப்பையும் சண்டையில்லாமல் குழந்தையை வெளியே விட மாட்டேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்ததால் வேறு வழியில்லை. It was putting on a hell of a fight. :) அது தொடர்ந்து ட்ரிப் இன் மூலம் ஏற்றிவிட்டனர். சிறிது நேரத்திற்கு வலி கூடவில்லை என்பதால், பின் அளவைக் கொஞ்சம் கூட்டி, கருப்பை சுருங்கும் வேகத்தையும் விசையையும் கூட்டும் முயற்சி சிறிது நேரத்திற்குப் பின் பயன் அளித்தது.

வலி மிகக் கூடத் தொடங்க சிரிக்கும் வாயு (N2O, laughing gas) எடுத்துப் பார்க்கப் போகிறாயா என்ற midwife இடம், சரி முயற்சிக்கிறேன் என்றேன். ஆனால் அதை எடுக்க எனக்கு குமட்டிக் கொண்டு தான் வருவது மாதிரி இருந்ததே தவிர வலியில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை. அதனால் வேண்டாம் என்று விட்டேன். வலியின் அவதியால் என்னும் உடல் இறுக்கமாக, mid wife " try not to get tensed up, relax your shoulders; the tenser you become, the harder it'll be". என்றார். Believe me, that was infinitely easier said than done. :)

இப்போ இரவு ஒரு 11 மணியளவில் ஆகியிருக்குமென நினைக்கிறேன். அதன் பின் செய்த கர்ப்ப வாய் சோதனைஇன் மூலம் அது 4-5 cm விரிவடைந்துள்ளதெனத் தெரிந்தது. ஆனால் சவ்வுகள் கூட இன்னும் தானாக உடையவில்லை. அதனால் அதை அப்போது தானே உடைப்பது நல்லதென்று midwife உடைத்துவிட்டார். இது இயற்கையாக நடப்பின் இதைத்தான் rupture of membranes, water breaking என்று சொல்வர். தமிழில் என்னென்று சொல்வார்கள் என்று தெரியாது. ஆனால் நண்பன் படத்தில் சத்தியராஜ் பனிக்குடம் உடைந்துவிட்டதென்று இதைத் தான் கூறினார் என்று நினைக்கிறேன். Placenta வின் தமிழ்ப்பதம் தான் பனிக்குடமாயின், 'பனிக்குடம் உடைவது' என்பது சரியான பதம் அல்ல என்று நினைக்கிறேன். யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

மிகுந்த‌ வ‌லியால் நான் உட‌லை இன்னும் இறுக்க‌மாக‌ வைத்திருந்தேனே த‌விர‌, relax ஆக்க‌வில்லை. ஒரு கொஞ்ச‌ நேர‌ம் midwife உம் முய‌ற்சி செய்துவிட்டு, pain killers என்ன‌வாவது எடுக்கிறாயா என‌க் கேட்க‌, முத‌லில் இன்னும் சிறிது நேர‌ம் முய‌ற்சி செய்து விட்டுப் பின் பார்க்க‌லாம் என்றேன். என‌து birth plan இல், நான் முதலில் ஒன்றுமில்லாம‌ல் இய‌லுமான‌வ‌ரை முய‌ற்சி செய்து, பின் இய‌லாவிடில் epidural எடுக்கிறேன் என‌க் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்ச‌ நேர‌ம் சென்ற‌பின், midwife திரும்ப‌வும் கேட்க‌, ச‌ரி போடுங்கள் என்று விட்டேன். Epidural, midwife  செலுத்த‌ முடியாது. Anaesthetist ம‌ட்டுமே கொடுக்க‌லாம். அது போட‌ப்ப‌ட்ட‌பின் ஓர‌ள‌விற்கு relax ஆனேன். பின் சிறிது நேர‌த்தில் விடிந்து விட்ட‌து. முத‌லில் க‌ருப்பை தூண்ட‌ப்ப‌ட்டு கிட்ட‌த்த‌ட்ட‌ 15 ம‌ணித்தியால‌ங்க‌ள் ஆகி விட்ட‌து. அத‌ன் பின் க‌ர்ப்ப‌ வாய் விரிவ‌டைவ‌த‌ற்காக‌வே காத்திருக்க‌ வேண்டியிருந்த‌து. பின் ஒரு 8-9 ம‌ணிய‌ள‌வில் சோத‌னை செய்த‌ போது 10 cm விரிவ‌டைந்திருந்த‌து தெரிந்த‌து. அத‌ன் பின் சிறிது நேர‌த்தில் பிர‌ச‌வத்தின் இறுதிக்க‌ட்ட‌ம், பிள்ளையைத் த‌ள்ளி வேளியேற்றுவ‌து. ஒவ்வொரு முறை க‌ருப்பைச் சுருக்க‌ம் தொட‌ங்கும் போதும் த‌யாராகி, க‌ருப்பை உச்ச‌க் க‌ட்ட‌த்தில் சுருங்கும் போது அத‌னுடன்‌ சேர்ந்து நாமும் இய‌லுமான‌வ‌ரை ப‌ல‌மாக‌த் த‌ள்ள‌ வேண்டும். முதல் கொஞ்ச‌ நேர‌ம் த‌ள்ளிய‌தில் ஒன்றுமே ந‌ட‌க்காத‌து போல் இருக்க‌, என்னால் முடியாதோ என‌ முதன் முத‌லில் கொஞ்ச‌ம் ப‌ய‌ம் வ‌ந்த‌து. முத‌ல் நாள் காலை 11 ம‌ணியிலிருந்து ஒன்றும் சாப்பிட‌வில்லை‌ ஆத‌லால் மிகுந்த‌ க‌ளைப்பாக‌ இருந்த‌து. இன்றும் ஆகாவிடில் த‌ற்ச‌ம‌ய‌ம் அறுவைச் சிகிச்சை செய்யவேண்டி வ‌ந்தாலுமென‌, த‌ண்ணியைத் த‌விர‌ வேறொன்றும் உட்கொள்ள‌ வேண்டாமென‌ச் சொல்லிவிட்டார்க‌ள்.

midwife, அம்மா, துணைவ‌ன் த‌ந்த‌ ஊக்கத்தில் இன்னும் கொஞ்ச‌ம் த‌ள்ள‌, திடீரென்று midwife தெரியுது, இன்னும் கொஞ்ச‌நேர‌ம் தான் என்றார். ஆனால் நான் த‌ள்ளும் போது தெரிந்த‌ த‌லை, நான் நிற்பாட்ட‌ உள்ளே சென்று கொண்டிருந்த‌து.  இடையில் ஒரிரு முறை நான் தள்ளும் போது well done என்று சொன்ன midwife இன் முகம் வேறொன்று சொல்ல, நான் "you're dissapointed with my performance, aren't you?" என்று கேட்க. இல்லையில்லை, உண்மையில் நன்றாகச் செய்கிறாய் என்றார். :):) த‌லையை இடுப்பெலும்பிற்கூடாக‌ எடுப்ப‌து தான் க‌டின‌ம், எடுத்துவிட்டாயென்றால், பின் எல்லாம் இல‌குவாக‌ முடிந்துவிடும் என்றார். இந்நேர‌த்த்தில் த‌லை வெளியே வ‌ருவ‌த‌ற்கு எம‌து உட‌ல் எவ்வ‌ள‌வு ஈந்து கொடுத்தாலும் சில‌ ச‌ம‌ய‌ம் (அநேக‌மாக‌ முத‌ற் பிர‌ச‌வ‌த்தில்) காணாதெனில், episiotomy செய்வ‌ர். பெண்ணுறுப்பிற்கும் ம‌ல‌வாச‌லுக்கும் இடையிலுள்ள‌ தோலை வெட்டுவ‌த‌ற்குப் பெய‌ரே episiotomy. த‌லை வ‌ர‌ இட‌மில்லாம‌ல் அது தானாக‌க் கிழிவ‌தை விட, நாமே ஒழுங்காக‌ வெட்டி விட்டோமாயின் அது க‌ட்டுப்படுத்தப்பட்ட காயமாகவும் பின் இல‌குவாக‌ ஆறும் வ‌கையிலும் இருக்கும். நாமாக வெட்டும் போது இரத்த இழப்பும் மிகவும் கட்டுப்படுத்தப்படும். என‌து midwife, episiotomy செய்வ‌த‌ற்குத் த‌யாராக‌த் தேவையான‌ கருவிக‌ள் எல்லாம் எடுத்துத் த‌யாராக‌வே வைத்திருந்தார். ஆனால் அவ‌ர் செய்யத் தொட‌ங்க‌ ச‌ற்று முன், ஒரு க‌ருப்பைச்சுருக்கத்தில் நான் த‌ள்ளிக் கொண்டிருக்கையில், திடீரென்று "stop pushing, stop pushing" எனக் க‌த்த‌ நானோ அதிர்ச்சியில் என்ன‌ ந‌ட‌ந்த‌தென‌க் கேட்டேன். த‌லை வ‌ந்துகொண்டிருக்கும் போது, அவ‌ர் வெட்டுவ‌த‌ற்கு முன் அதுவே தானாக‌ப் பெரிதாக‌க் கிழிந்துவிட்ட‌து. :(அப்போ எவ்வ‌ள‌வு இர‌த்த‌ம் இழ‌க்க‌ப்ப‌ட்ட‌தென‌ யாரும் உண‌ர‌வில்லை.

அதன் பின் பிள்ளையை எடுக்க‌ முதல் ஒன்றும் செய்ய‌முடியாது. த‌லை வேளியில் வ‌ந்து விட்ட‌தால் குழ‌ந்தையின் முழு உட‌லும் ஓர‌ள‌வு இல‌குவாக‌ வேளியில் வ‌ந்துவிட்ட‌து. என் துணைவன் தொப்புள் கொடியை வெட்டிய பின், குழந்தையை நிறுத்து, செய்ய‌வேண்டிய‌ ப‌ரிசோத‌னைக‌ளைச் செய்து விட்டு பின் குழ‌ந்தையை என் நெஞ்சில் கொண்டு வ‌ந்து வைத்தார்க‌ள். உட‌ன் பிற‌ந்த‌ குழ‌ந்தைக்கு skin to skin contact எத்தனையோ ந‌ன்மைக‌ளைக் கொடுக்கும் என்பதால் குழந்தைகளைப் பிறந்தவுடன் தாயின் அல்ல‌து த‌ந்தையின் நெஞ்சில் ப‌டுக்க‌ விடுவ‌ர். பின் சிறிது நேரத்தில் என் துணைவ‌னின் நெஞ்சில் வைத்திருக்க‌ச் சொல்லிவிட்டு, என்னை எழுந்து சென்று குளிக்க‌ முடியுமா என‌ mid wife  கேட்டார். நானும் முய‌ற்சி செய்கிறேன் என‌ச் சொல்லி மெதுவாக‌ எழுந்து நின்றேன். ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை. ச‌ரியென‌ ஒரு அடி எடுத்து வைக்க‌, த‌லையெல்லாம் பார‌மாக‌ உண‌ர்ந்து, சுற்ற‌த் தொட‌ங்கிய‌து. அப்போதான் விள‌ங்கிய‌து நிறைய‌ இர‌த்த‌ம் இழ‌ந்துவிட்டேன் என்று. Midwife  உட‌னே என்னைப் ப‌டுக்க‌ வைத்து த‌லைப் ப‌குதியை கீழிற‌க்கி விட்டு இர‌த்தம் என‌க்குக் கொடுக்கத் தேவையானவற்றைச் செய்யவும், எனது காயத்திற்குத் தையல் போட surgeon ஒழுங்கு செய்யவும் செல்ல, நான் கொஞ்சம் மயங்கிப் பின் நினைவிற்கு வந்தேன். தானாகக் கிழிந்ததைத் தைக்க surgeon க்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் பிடித்தது. அதன் பின் இரண்டு சுற்று இரத்தம் ஏற்றப்பட்ட பின்னரே கொஞ்சம் எழுந்து இருக்க முடிந்தது.

இவ்வளவு நீளமாகும் என்று நினைக்கவே இல்லை. மன்னிக்கவும். அடுத்த பகுதியில் முடிக்கிறேன்.

இறுதிப்பகுதி

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ :( கேக்கவே பயம்மா இருக்குங்க..
எனக்கு வலி எப்படி இருக்குமென்றே தெரியாது..இப்படி நீங்க பல முயற்சி எடுத்தப்பின்னும்.. மிட் ஒய்ஃப் கிட்ட வேற கேட்டுக்கிறிங்க..நல்ல பிள்ளை..

Anna said...

:) Thanks கயல்.

Anonymous said...

Placenta = சூல்வித்தகம், Amniotic sac = பனிக்குடப்பை, Amniotic fluid = பனிக்குட நீர், Umbilical Chord = தொப்புள்கொடி

குட்டிபிசாசு said...

நீங்க சொல்வது என்னுடைய மனைவியின் பிரசவத்தை கண்முன் நிறுத்துகிறது. நான் மட்டுமே அவளுடன் இருந்தேன். Episiotomy செய்தார்கள். குழந்தை வெளியே வராமல் operative vaginal delivery செய்தார்கள். 14 மணி நேரம் போராடினாள். குழந்தை பெறும்வரை என்னை திட்டிக்கொண்டிருந்தாள்.