Friday, October 12, 2012

மனிதக்குரங்குகளும் மனிதர்களும் ஒரே மூதாதை விலங்கிலிருந்து கூர்ப்படைந்ததை நேரில் பார்த்தீர்களா என்ன?

நேரில் கண்டால் தான் உண்மையெனில் எந்தவொரு குற்றத்திற்கும் எவரையும் தண்டிக்க முடியாது. குற்றம் நடந்து பலமணிநேரம் ஏன் பல நாட்களிற்குப் பின் தான் புலனாய்வாளர்கள் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று அங்கு விடப்பட்டிருக்கும் தடயங்களைக் கவனமாக ஆராய்ந்து குற்றம் எவ்வாறு யாரால் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணித்துக் குற்றவாளியைப் பிடிப்பார்கள். இதில் அநேகமானவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறேன்.நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவீர்களெனில் பல விடயங்கள் எமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
 
அதனால் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என யாராவது சொன்னால், நீ என்ன நேரில் பார்த்தாயா? என்பது ஒரு நல்ல கேள்வியன்று. அதோடு, உங்களுக்கு அநேகமாகத் தெரிந்திருக்கும் அவர்கள் நேரில் கண்டிருக்க சாத்தியமே இல்லை என்று. அதனால் உங்களுக்கு உண்மையில் கூடிய தகவல் தேவையெனில், நீங்கள் கேட்க வேண்டியது, உனக்கு எப்படி அது தெரியும்?

Monday, October 8, 2012

அறிவியலில் theory/கோட்பாடு என்றால் என்னவென்று பார்க்கலாமா?

"அறிவியலாளார்களால் நிரூபிக்கப்படாத தியரிகளை வைத்து, அவர்கள் சொல்வதெல்லாவற்றையும் முட்டாள்தனமாக நேரில் பார்த்தது போல் நம்புகிறீர்கள். நிரூபிக்கப்படாததால் தான் அது தியரி, நிரூபிக்கப்பட்டால் அதை உண்மையென்று சொல்வார்கள் தெரியுமோ" என்றிருந்த ஒரு பதிவு வாசிக்க நேர்ந்ததால் இந்தப் பதிவு. அந்தப் பதிவு எழுதியவர் மட்டுமல்ல சமூகத்தில் பலர் இவ்வாறே கருத்துக் கொண்டிருப்பதால் இந்த‌ அறிவியல் அடிப்படைப் பதிவு அவசியம் என்று நினைக்கிறேன்.

Friday, October 5, 2012

பரிணாமம் - ஆதாரங்களற்ற கொள்கை/சும்மா ஒரு தியரி???

via myconfinedspace

நாத்திகத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த பாகம் இயலுமானளவு விரைவில் போடுகிறேன். அதற்கு முன் வலையில் அண்மையில் , அறிவியலில் theory, facts ஜப் பற்றி எந்தளவிற்கு விளக்கமின்றி, தமது விளக்கமின்மையில் கொஞ்சம் கூட சந்தேகமற்று மிகுந்த நிச்சயத்துடன் அதைப் பறைசாற்றி, விஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்கள் என்ற தொனியில் சில பதிவுகள் படிக்க நேர்ந்ததால் அடுத்த பதிவில் இதைக் கொஞ்சம் விளக்கி விட்டுத் தொடர்கிறேன்.

Friday, September 14, 2012

கிளப்பில மப்பில??????????? WTH?






கீழ்வரும் பாட்டையும் தயவு செய்து பாருங்கள். மேலுள்ள பாட்டிற்கான ஒரு பதில்.


Monday, September 10, 2012

எனது முதல் அடையாளம்

நான் கருவாக இருக்கும் போதே அப்பா அம்மாவிடம், ஆம்பிளைப் பிள்ளையெனில் அப்பப்பாவின் பெயரையும் பொம்பிளைப் பிள்ளையெனில் அப்பம்மாவின் பெயரையும் வைப்போமா எனக் கேட்க அம்மாவும் சரியென்று விட்டார். பிறந்தபின் என்ன நினைத்தாரோ தெரியாது. என் முதல் பெயராக அப்பம்மாவின் அரைவாசிப்பெயரையும் இரண்டாவது பெயராக இன்னொன்றையும் வைத்தார். நிச்சயமாக இந்த இரு பெயர்களையும் ஒன்றாகக் கொண்ட வேறொருவர் இல்லை என்றே நினைக்கிறேன். எனது பெயரை எனக்கு மிகவும் பிடிக்கும். I am very much sentimentally attached to it. அன்னா XX அப்பாவின் பெயர் தான் எனது முதல் அடையாளம். இதை மாற்றினாலோ எனது முதற் பெயர்களின் பின் வேறு பெயர் சேர்த்துப் பார்த்தாலோ நானென எனக்குத் தோன்றியதில்லை. என் பெயரோடு அம்மாவின் பெயரையும் எப்படியாவது சேர்க்க வேண்டுமென நினைத்தேனே தவிர, எனக்கு திருமணத்தின் பின் பெயர் மாற்றுவதென்பது எப்போதுமே பிரச்சனையாகவே தோன்றியது.

Thursday, September 6, 2012

Endometriosis - இடமகல் கருப்பை அகப்படலம்


இப்பதிவில் குறிப்பிட்டிருப்பது போல், கரு ஊடுருவி விருத்தியடைவதற்கேற்றவாறு விருத்தியடைந்திருக்கும் திசுவே கருப்பை அகவுறை (endometrium). கருவை எதிர்பார்த்தே ஒவ்வொரு மாதமும் வளர்ந்து, விருத்தியடைந்து, பின் கருக்கட்டல் நடைபெறாவிடின், உதிர்வதே மாதவிடாயாக ஒவ்வொரு மாதமும் வெளியேறுகின்றது.

நான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த காலங்களில், "நீங்கள் என்னத்தைப்பற்றி ஆய்வு செய்கிறீர்கள்" எனக் கேட்பவர்களிடம் சுருக்கமாக endometrium என்ற திசுவில் என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றி விளக்க முற்பட முன் சில பெண்கள், "ஒ எனக்கு அது என்னவென்று தெரியுமே. எனக்கும் இருக்கு", எனச் சொல்லியுள்ளார்கள். முதலில் எனக்குக் குழப்பமாக, "உங்களுக்குமா? எல்லாப் பெண்களுக்கும் (all cis women, to be exact) endometrium இருக்கே", என்று சொன்ன பின்னே விளங்கியது அவர்கள் endometriosis ஜப்பற்றிச் சொல்கிறார்கள் என்று.

Saturday, August 4, 2012

நாத்திகத்தை நோக்கிய எனது பயணம் - 1

நான் பிறந்தது ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில். அம்மா, அப்பா இருவரும் மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர்கள், இருவரின் குடும்பத்தினரும் பிறவித் தாவரவுண்ணிகள், ஆயினும் they were not overly religious.