Tuesday, November 1, 2011

எல்லா உயிர்களினதும் பொது மொழி - DNA - ஒரு அறிமுகம்

பரிணாமத்தில் அடுத்த பகுதியாக‌ மரபணுக்களையும் மரபணு மாற்றங்களையும் பற்றி பார்க்குமுன் அவற்றைப்பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருப்பது முக்கியம். பல தடவை DNA என்றால் என்ன? அதன் கட்டமைப்பு எப்படி இருக்கும்? என்றெல்லாம் எழுதத்தொடங்கி, பின் நான் எழுதியது ஏதோ பள்ளிப் பாடப் புத்தகத்தில் வாசிப்பது போன்று இருந்ததாலும், அது ஒரு சுவாரசியமான வாசிப்பாக வாசிப்பவரின் மனதில் பதியும் போல் எனக்குத் தோன்றாததாலும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இந்த அடிப்படைத் தகவல்களை இலகுவாகவும் அதே நேரம் பாடம் படிப்பது போலல்லாமலும் இருக்க வேண்டுமென நினைத்தேன். அண்மையில் ஒரு you tube video பார்த்துக்கொண்டிருக்கும் போதே, தமிழில் காணொளியாகச் செய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. நானாக images எல்லாம் வடிவமைக்க நேரம் இப்போ நிச்சயமாக இல்லை (might give it a go during my maternity leave :)). பல இடங்களில் நல்ல படியாக மரபியலின் அடிப்படையை விளக்கும், கிட்டத்தட்ட நான் எழுத நினைப்பதைச் சொல்லும் காணொளிகளைத் தேடிக்கொண்டிருந்த்தேன். அந்தத் தேடலில் கிடைத்த‌ University of California, Riverside இலிருந்து செய்யும் திட்டம் பிடித்திருந்தது. அவர்களின் காணொளிகளையே நான் மொழிமாற்றம் செய்து இங்கு போடலாமா என அவர்களிடம் அனுமதி கேட்ட போது, மிகவும் பெருந்தன்மையுடன், தாராளமாகச் செய் என்றுவிட்டார்கள். அவர்களின் கடின உழைப்பால் உருவான காணொளிகளில் சொல்லப்படும் செய்திகளை மட்டுமே தமிழில் மாற்றியுள்ளேன். இந்த முயற்சியில் ஏதாவது பயன் இருக்கிறதா/ இதையும் விட நன்றாகச் செய்யலாமா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

மக்களுக்கு அறிவியலைப் பற்றிய ஒரு அடிப்படையான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அண்மையில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில்சொல்லப்படும் மிகப் பிழையான அறிவியல் விளக்கங்களை மக்கள் உண்மை என எடுத்துக் கொள்வதைப் பார்த்தபின் (முகுந்த் அம்மாவும் தெகாவும் அழகாகச் சொல்லியுள்ளார்கள்), இந்த அடிப்படை அறிவு மிகவும் அவசியம் என நம்புகின்றேன்.


P.S. இப்போ இங்கு இலைதுளிர் காலமாதலால் எனக்கு சரியான hayfever. அதற்கு சாதாரணமாக antihistamine உம் steroid sparay உம் எடுத்தாலே எனக்கு வேலை செய்யும். கர்ப்ப காலத்தில் steroid spray எடுப்பது நல்லதில்லை என்பதால், I pretty much have a blocked noce 24/7. :( அதனால் இதற்கு ஒலிவடிவம் கொடுத்தது என் துணைவன். I know the quality of the recording can be improved a lot and we are working on it. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் ஒரிரு காணொளிகளை ஏற்றுகிறேன்.

5 comments:

Thekkikattan|தெகா said...

அன்னா, அருமையான முயற்சி நல்ல தொடக்கமாக படுகிறது எனக்கு. நன்கு இந்த வரிசையில் கற்றறிந்தவர்களுக்கே இந்த மரபணுக்கள் பொறுத்த சந்தேகங்கள் குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவதுண்டு.

உங்கள் முயற்சி நம் எல்லாருக்கும் பயன் படும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. எல்லாவற்றையும் இதே போன்ற ஒலி வடிவமாக மாற்றி விடுங்கள்.

துணைவரின் குரல் வளம் அருமை. ரேடியோ நிகழ்சியில் கேட்பது போல உள்ளது. அவருக்கு ஒரு ஹை அண்ட் நன்றி :) ... சீக்கிரம் மூக்கடைப்பிலிருந்து வெளியில வந்து நீங்களும் உங்கள் குரல் வழி பதிவையும் செய்யுங்க :)

ஜோதிஜி said...

அற்பதமான முயற்சி. தேவையானதும் கூட.

சார்வாகன் said...

நல்ல முயற்சி.வாழ்த்துகள் சகோ
நன்றி

Anna said...

எல்லோருடைய கருத்துக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

அருமையான முயற்சி. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இப்பதிவை என் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன். மிக்க நன்றி. :)
மேலும் இது போல் பல தமிழாக்கத்தை வழங்க எமது வாழ்த்துக்கள்

கீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் பதிவை நான் பகிர்ந்த இடுகை.


http://blogintamil.blogspot.com/2011/12/gigo-theory.html