video source: The Copernicus Project
Related Post: எல்லா உயிர்களினதும் பொது மொழி - DNA - ஒரு அறிமுகம்
மூன்றெழுத்து மரபியல் சொற்களைக் codons என்று கூறுவர். விளங்குவதற்கு இலகுவாக இருக்கும் என்பதற்காகவே இவற்றை சொற்கள், இவற்றின் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பைக் கொண்ட மரபணுவை ஒரு வாக்கியம் என்று கூறுகிறோம். அதற்கும் மேல் ஒரு மொழியின் கட்டமைப்பிற்கும் DNA sequences க்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை.
அண்மையில் யாரோ ரஸ்ய விஞ்ஞானிகள், மரபியல் தகவல்கள் மொழிகளின் இலக்கணவிதிகளைப் பின்பற்றுகின்றன. அதனால் மொழிகள் அனைத்தும் மரபணுக்களின் உச்சரிப்புக்களாக இருக்கின்றனவாம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள் என ஒரிரு இடங்களில் வாசித்தேன். அதோடு DNA க்கும் ஆன்மீகத்திற்கும் கூட எதோ தொடர்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தனர். இதற்கு எந்தவித ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆராய்ச்சியகளைச் செய்ததாகக் கூறப்படும் Pjotr Garjajev இன் பெயரிலோ, இவ்வாராய்ச்சியைப் பற்றியோ எந்தவொரு அறிவியல் பிரசுரிப்புகளையும் காண முடியவில்லை. பல ஆன்மீகத் தளங்களிலும் சில போலி மருத்துவர்களின் தளங்களிலுமே காணக்கிடைத்தது. DNA is an amazing molecule by itself. இந்த மாதிரிக் கட்டுக் கதைகள் எதுவும் தேவையில்லாமலே மரபியல் எவ்வளவோ வியக்கத்தகு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஏன் தான் ஆட்கள் இம்மாதிரிக் கற்பனைகளை உண்மை என்று உலவ விடுகிறார்களோ தெரியவில்லை.
அடுத்து மரபணு மாற்றங்களைப் பற்றியும் இம்மாற்றங்களுக்கும் பரிணாமத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment