Friday, November 25, 2011

பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறைகளை ஒழிப்போம் - It's White Ribbon Day to end the Violence Towards Women


பெண்களுக்கெதிரான வன்முறை பல சமூகங்களில் மிகப் பரவலாக நடக்கும் பிரச்சனை. உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண்கள் அவர்கள் பெண்களாக இருப்பதால் மட்டும் வன்முறைக்குட்படுத்தப்படுகிறார்கள். உலகில் 15 க்கும் 44 வயதிற்கும் உட்பட்ட பெண்களில் போர், புற்றுநோய்/மலேரியா போன்ற நோய்கள், விபத்துகள் ஆகிய காரணங்களால் மொத்தமாக இறந்த பெண்களை விட அவர்களுக்கெதிரான வன்முறையால் இறந்தவர்களே மிக அதிகம். மிக அடிப்படையான மனித உரிமை மீறல் இது.
எமது சமூகத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய மூடநம்பிக்கை, பெண்களே தமக்குத் தாமே இவ்வன்முறைகளை வரவழைத்துக் கொள்கிறார்கள் என்பதே. குற்றம் இழைத்தவன விட்டு விட்டு பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாக்குவது எந்தவிதத்திலும் நியாயமானதல்ல. Nobody ever asks or deserves to be abused this way. போர்ச்சூழலில் பெண்களுக்கெதிராக நடத்தப்படும் வன்முறைகளை விட‌, பாலியல் வன்புணர்வு உட்பட அநேகமான வன்முறைகள் பெண்களின் கணவனாலேயோ அல்லது அவளுக்குத் தெரிந்த வேறொரு ஆணாலேயே நடத்தப்படுகிறது.
வீடுகளில் நடக்கும் வன்முறைகள் எமது சமூகத்தில் கலாச்சாரத்தின் பெயரில் இன்னும் கூடுதலாக மூடி மறைக்கப்படுகிறது. எத்தனையோ பேர் இன்னும் இதை சாதாரணமாக வீடுகளில் நடக்கும் விடயமாகவே கருதுகின்றனர். அநேகமாக வன்முறைக்குட்படும் பெண்கள் வெளியில் யாருக்கும் தெரியாமல் மெளனமாகவே அவதிப்படுகின்றனர். பல சமயங்களில் நிலமை படு மோசமாகப் போய் காவல் துறையின் மூலமே women refuge க்கு அனுப்பப்படுகின்றனர். அதன் பின் கூட அவர்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்பாமல் வைத்திருப்பது மிகக் கடினம். பெண்களின் ஒரே இலட்சியம் திருமணம் முடிப்பதும் என்ன நடந்தாலும் சாகும் வரையும் அப்பந்தத்தை விட்டு விலகாமல் இருப்பதுவுமே என்று பிறந்ததிலிருந்து ஓதி வளர்க்கப்படும் சமூகத்தில் இது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. இவ்வன்முறை நடக்கும் வீடுகளில் வாழும் குழந்தைகளும் இதனால் மிகவும் மனநிலை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலும் அவர்களும் இவ்வன்முறைகளுக்குட்படுத்தப்படுகிறார்கள்.
Overwhelmingly இம்மாதிரியான வன்முறைகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. வன்முறை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அதனால் இந்த white ribbon day ஆண்களின் அடிப்படைச் சிந்தனையில் மாற்ற‌த்தைக் கொண்டுவருவதற்காகவே உருவாக்கப்பட்டது. ஒரு சமூகமாக ஒவ்வொருவரும் இவ்வன்முறைக்கு எதிராக எழுந்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்.

2 comments:

tamilan said...

click the link and read.


>>>>
பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே?
<<<<


.

தருமி said...

white ribbon குத்துறதுக்கு தங்ஸிடம் பெர்மிஷன் கேட்டிருக்கிறேன்!!!

(வேறென்ன எழுதுவது என்று தெரியாததால் ‘லாட்’டாக எழுதியமைக்கு மன்னிக்கவும். ஏனெனில் எழுதிய பிரச்சனை பெரிய பிரச்சனையே!)