Friday, November 11, 2011
ஒரு பெண்ணாக இருப்பதற்கான தண்டனையை எவ்வாறு தவிர்க்கலாம் (சவுதி அரேபியாவில்)? A video by Amnesty International
Labels:
அடிப்படை மனித உரிமைகள்,
சமூகம்,
பெண்கள்
Tuesday, November 8, 2011
DNA, மரபணு, நிறவுருக்கள், மரபியல் விதித்தொகுப்பு - அடிப்படை அறிவியலும் கொஞ்சம் போலி அறிவியலும்
video source: The Copernicus Project
Related Post: எல்லா உயிர்களினதும் பொது மொழி - DNA - ஒரு அறிமுகம்
மூன்றெழுத்து மரபியல் சொற்களைக் codons என்று கூறுவர். விளங்குவதற்கு இலகுவாக இருக்கும் என்பதற்காகவே இவற்றை சொற்கள், இவற்றின் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பைக் கொண்ட மரபணுவை ஒரு வாக்கியம் என்று கூறுகிறோம். அதற்கும் மேல் ஒரு மொழியின் கட்டமைப்பிற்கும் DNA sequences க்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை.
அண்மையில் யாரோ ரஸ்ய விஞ்ஞானிகள், மரபியல் தகவல்கள் மொழிகளின் இலக்கணவிதிகளைப் பின்பற்றுகின்றன. அதனால் மொழிகள் அனைத்தும் மரபணுக்களின் உச்சரிப்புக்களாக இருக்கின்றனவாம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள் என ஒரிரு இடங்களில் வாசித்தேன். அதோடு DNA க்கும் ஆன்மீகத்திற்கும் கூட எதோ தொடர்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தனர். இதற்கு எந்தவித ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆராய்ச்சியகளைச் செய்ததாகக் கூறப்படும் Pjotr Garjajev இன் பெயரிலோ, இவ்வாராய்ச்சியைப் பற்றியோ எந்தவொரு அறிவியல் பிரசுரிப்புகளையும் காண முடியவில்லை. பல ஆன்மீகத் தளங்களிலும் சில போலி மருத்துவர்களின் தளங்களிலுமே காணக்கிடைத்தது. DNA is an amazing molecule by itself. இந்த மாதிரிக் கட்டுக் கதைகள் எதுவும் தேவையில்லாமலே மரபியல் எவ்வளவோ வியக்கத்தகு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஏன் தான் ஆட்கள் இம்மாதிரிக் கற்பனைகளை உண்மை என்று உலவ விடுகிறார்களோ தெரியவில்லை.
அடுத்து மரபணு மாற்றங்களைப் பற்றியும் இம்மாற்றங்களுக்கும் பரிணாமத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் பார்க்கலாம்.
Labels:
அறிவியல்,
பரிணாமம்,
போலி அறிவியல்,
மரபியல்
Friday, November 4, 2011
வெளிர் நீலப் புள்ளி - எமக்குத் தெரிந்த ஒரே வீடு
இது 1990 ஆம் ஆண்டில் voyager 1 எனும் விண்வெளியூர்தியால், பூமியிலிருந்து கிட்டத்தட்ட 6 பில்லியன் கிலோமீற்றர் தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். பரந்த அண்டவெளியில் பூமி ஒரு மிக மிகச் சிறிய புள்ளியாகவே தெரிகிறது. Vayager 1 தன் வேலையை நிறைவேற்றி விட்டு solar sytem இலிருந்து வெளிக்கிடும் போது வானியலாளர் Carl Sagan இன் வேண்டுகோளிற்கேற்ப,இப்படம் எடுக்கப்பட்டது. Carl Sagan ஒரு நல்ல வானியலாளர் மட்டுமல்ல, சிறந்த சிந்தனையாளரும் கூட. அறிவியலை மக்களுக்குக் விளக்க பல முயற்சிகள் செய்தவர். அதற்காகப் பல புத்தகங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் செய்தவர். பரந்த சிந்தனையும் எமது அறிந்தவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் நாம் இன்னும் அறிய எந்தளவு முக்கியமென்பதை நன்கறிந்தவர். இவர் தனது 62 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவரின் பிறந்த நாள் நவம்பர் 9. 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 6ஆம் திகதி Carl Sagan க்கும், அறிவியலுக்கும், அறியும் ஆர்வத்திற்குமாக Carl Sagan Day கொண்டாடப்படுகிறது.
அவரது Pale Blue Dot: A Vision of the Human Future in Space என்ற 1994 புத்தகத்தில் இவ்வாறு எழுதியதே பின்வருவது. It's amazing.இந்த வெளிர் நீலப் புள்ளியைப் பாருங்கள். அது இங்கே. அது தான் வீடு. அது தான் நாம். அதில் தான் நாம் அன்பு செலுத்துபவர்களும், எமக்குத் தெரிந்தவர்களும், நாம் கேள்விப்பட்டவர்களும், இதுவரை வாழ்ந்த/வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லா மனிதர்களும் இருந்த/இருக்கும் இடம்.
எமது ஒட்டுமொத்த மகிழ்ச்சி, துன்பம், ஆயிரக்கணக்கான முனைப்பான மதங்கள்,சித்தாந்தங்கள், வர்த்தகக் கோட்பாடுகள் எல்லாவற்றுக்கும்;
இதுவரைக்கும் வாழ்ந்த/ வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு வேட்டைக்காரனுக்கும் ஒவ்வொரு உணவு தேடுபவனுக்கும்;
ஒவ்வொரு கதாநாயகனுக்கும்; ஒவ்வொரு வில்லனுக்கும்; ஒவ்வொரு பண்பாடு/கலாச்சாரத்தை ஆக்கியோருக்கும் அழித்தோருக்கும், ஒவ்வொரு அரசனுக்கும்; ஒவ்வொரு விவசாயிக்கும்; ஒவ்வொரு சோடி இளம் காதலர்களுக்கும்; ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும்; ஒவ்வொரு நம்பிக்கையளிக்கும் குழந்தைக்கும்; ஒவ்வொரு கண்டுபிடிப்பாளருக்கும்; தேச ஆராய்ச்சியாளருக்கும்; ஒவ்வொரு போதிக்கும் ஆசிரியருக்கும்; ஒவ்வொரு ஊழல் செய்யும் அரசியல்வாதிக்கும்; ஒவ்வொரு சூப்பர் ஸ்டாருக்கும்; ஒவ்வொரு உயர்ந்த தலைவருக்கும்;ஒவ்வொரு மதகுருவுக்கும்; ஒவ்வொரு பாவிக்கும் இதுவே வீடு.
சூரியக் கீற்றால் தொங்கிகொண்டிருக்கும் ஒரு தூசுத் துகளே எம் வீடு. மிகப் பரந்த அண்டத்தில் பூமி ஒரு மிக மிகச் சிறிய மேடையே. இந்தச் சிறு புள்ளியின் ஒரு சிறு கூற்றை கணப்பொழுது ஆழ்வதற்காக பல படைத்தலைவர்களாலும் சக்கரவர்த்திகளாலும் சிந்தப்பட்ட இரத்த ஆறுகளைப் பற்றிச் சிந்தியுங்கள். இப்புள்ளியின் ஒரு மூலையில் வாழும் குடிகளுக்கு அவர்களில் இருந்து பிரித்தரியமுடியாத மற்றொரு மூலையில் உள்ள குடிகளால் நடத்தப்படும் முடிவில்லாத கொடூரங்களை, அவர்களுக்கிடையில் அடிக்கடி ஏற்படும் விளக்கமின்மையை, ஒருவரை ஒருவர் கொல்வதற்கு அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை, அவர்களுக்குள் சுடர் விட்டெரியும் வெறுப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். எமது நிலை, கற்பனையேயான எமது சுய முக்கியத்துவம், இந்தப் பிரபஞ்சத்தில் எமக்கு சிறப்புரிமை இருக்கென்னும் மாயை, இவை அனைத்தையும் இந்த வெளிரிய நீலப் புள்ளி கேள்விக்குள்ளாக்குகிறது. எமது கோள், சூழ்ந்திருக்கும் அபாரமான அண்டவெளி இருட்டில் இருக்கும் ஒரு தனிமையான சிறு துகள். எமது தெளிவற்ற நிலையில், எம்மிடம் இருந்து எம்மைக் காப்பாற்ற, இந்த அண்ட வெளியில் எங்காவதிருந்து எமக்கு உதவி வருமென்பதற்கு எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதுவரைக்கும் எமக்குத் தெரிந்தமட்டில் பூமியில் மட்டுமே உயிர்கள் விருத்தியாகியுள்ளன. அண்மையில் எம்மால் வேறொரு இடத்திலும் சென்று வாழ முடியாது. வேறிடங்களுக்குப் நிச்சயமாகப் போய்வரலாம், ஆனால் நிரந்தரமாக வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இன்னும் இல்லை. விருப்பமோ இல்லையோ பூமியை மட்டுமே எம்மால் இப்போதைக்கு ஆழ முடியும். எம்மில் அடக்கமான பண்பை விருத்தியாக்கும் பயிற்சியாக வானியல் இருக்குமெனச் சொல்லப்படும். மனிதரின் மடைத்தனமான இறுமாப்பைப் பறைசாற்ற தொலைவிலிருந்து தெரியும் எமது உலகத்தின் இந்த உருவத்தைப் போல் வேறெதுவும் இருக்கமுடியாது. இந்த உருவம் எனக்கு, நாம் ஒவ்வொருவரையும் அன்பாக நடத்தவும், எமக்குத் தெரிந்த ஒரே வீடான இந்த வெளிர் நீலப் புள்ளியை பேணிப் பாதுகாக்கவுமான எமது பொறுப்பை வலியுறுத்துகிறது. இதுவே எமக்குத் தெரிந்த ஒரே வீடு.
Labels:
Carl Sagan,
அறிவியல்,
பூமி
Tuesday, November 1, 2011
what’s science up to?
இந்த விடயத்தில் அமெரிக்கர்களுக்கும் (குறிப்பாக republicans) எம்மவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லவே இல்லை. :(
எல்லா உயிர்களினதும் பொது மொழி - DNA - ஒரு அறிமுகம்
பரிணாமத்தில் அடுத்த பகுதியாக மரபணுக்களையும் மரபணு மாற்றங்களையும் பற்றி பார்க்குமுன் அவற்றைப்பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருப்பது முக்கியம். பல தடவை DNA என்றால் என்ன? அதன் கட்டமைப்பு எப்படி இருக்கும்? என்றெல்லாம் எழுதத்தொடங்கி, பின் நான் எழுதியது ஏதோ பள்ளிப் பாடப் புத்தகத்தில் வாசிப்பது போன்று இருந்ததாலும், அது ஒரு சுவாரசியமான வாசிப்பாக வாசிப்பவரின் மனதில் பதியும் போல் எனக்குத் தோன்றாததாலும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இந்த அடிப்படைத் தகவல்களை இலகுவாகவும் அதே நேரம் பாடம் படிப்பது போலல்லாமலும் இருக்க வேண்டுமென நினைத்தேன். அண்மையில் ஒரு you tube video பார்த்துக்கொண்டிருக்கும் போதே, தமிழில் காணொளியாகச் செய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. நானாக images எல்லாம் வடிவமைக்க நேரம் இப்போ நிச்சயமாக இல்லை (might give it a go during my maternity leave :)). பல இடங்களில் நல்ல படியாக மரபியலின் அடிப்படையை விளக்கும், கிட்டத்தட்ட நான் எழுத நினைப்பதைச் சொல்லும் காணொளிகளைத் தேடிக்கொண்டிருந்த்தேன். அந்தத் தேடலில் கிடைத்த University of California, Riverside இலிருந்து செய்யும் திட்டம் பிடித்திருந்தது. அவர்களின் காணொளிகளையே நான் மொழிமாற்றம் செய்து இங்கு போடலாமா என அவர்களிடம் அனுமதி கேட்ட போது, மிகவும் பெருந்தன்மையுடன், தாராளமாகச் செய் என்றுவிட்டார்கள். அவர்களின் கடின உழைப்பால் உருவான காணொளிகளில் சொல்லப்படும் செய்திகளை மட்டுமே தமிழில் மாற்றியுள்ளேன். இந்த முயற்சியில் ஏதாவது பயன் இருக்கிறதா/ இதையும் விட நன்றாகச் செய்யலாமா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
மக்களுக்கு அறிவியலைப் பற்றிய ஒரு அடிப்படையான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அண்மையில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில்சொல்லப்படும் மிகப் பிழையான அறிவியல் விளக்கங்களை மக்கள் உண்மை என எடுத்துக் கொள்வதைப் பார்த்தபின் (முகுந்த் அம்மாவும் தெகாவும் அழகாகச் சொல்லியுள்ளார்கள்), இந்த அடிப்படை அறிவு மிகவும் அவசியம் என நம்புகின்றேன்.
மக்களுக்கு அறிவியலைப் பற்றிய ஒரு அடிப்படையான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அண்மையில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில்சொல்லப்படும் மிகப் பிழையான அறிவியல் விளக்கங்களை மக்கள் உண்மை என எடுத்துக் கொள்வதைப் பார்த்தபின் (முகுந்த் அம்மாவும் தெகாவும் அழகாகச் சொல்லியுள்ளார்கள்), இந்த அடிப்படை அறிவு மிகவும் அவசியம் என நம்புகின்றேன்.
P.S. இப்போ இங்கு இலைதுளிர் காலமாதலால் எனக்கு சரியான hayfever. அதற்கு சாதாரணமாக antihistamine உம் steroid sparay உம் எடுத்தாலே எனக்கு வேலை செய்யும். கர்ப்ப காலத்தில் steroid spray எடுப்பது நல்லதில்லை என்பதால், I pretty much have a blocked noce 24/7. :( அதனால் இதற்கு ஒலிவடிவம் கொடுத்தது என் துணைவன். I know the quality of the recording can be improved a lot and we are working on it. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் ஒரிரு காணொளிகளை ஏற்றுகிறேன்.
Wednesday, October 19, 2011
மேடைப் பயமும் நானும்
ஆய்வு செய்ய மிகப் பிடிக்கும் என்று போன பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஆனால் அதையே தொழிலாக எடுக்க முடிவு செய்தால் ஆய்வுகூடத்திலேயே இருந்துவிட முடியாதென (I would rather do that), முனைவர் பட்டத்திற்கான ஆய்வைத் தொடங்கிய சிறிது காலத்தில் தெரிந்து கொண்டேன். ஆய்வைப் பற்றி அது தொடர்பான கருத்தரங்குகளிலும் வேறு இடங்களிலும் பேசுவதும் ஆய்வு செய்யுமளவு செய்யவேண்டும். அது எனக்கு மிக மிகப் பிரச்சனையான விடயம். எனக்கு மிகத் தீவிரமான மேடைப் பயம் இருந்தது/ இப்பவும் ஓரளவு இருக்கிறது.
இந்தப் பதிவில் மேடைப் பேச்சில் எனது அனுபவங்களை, நான் செய்த/ எனக்கு ஏற்பட்ட embrasing moments ஜப்பற்றி பிறகு எப்பவாவது பார்க்கலாம் என்றிருந்தேன். இப்போ தொழில் தொடர்பான பதிவுகளை எழுதிய பின் அதைப்ற்றியும் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். இதைக் கூட நான் புலம் பெயர்ந்த பலரிடம் சொன்னதுண்டு. சிலருக்கு மிக அழகாகப் பொது இடங்களில் பேச வரும். ஆனால் எல்லோருக்கும் இயற்கையிலேயே அழகிய பேசும் திறன் அமைவதில்லை. சிலருக்கு பேசும் தகவல்கள் தெரியாவிடினும் என்ன கதைக்கிறோமெனத் தெரியாமலே மிகுந்த நம்பிக்கையுடன் கதைப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.
இங்கு வந்த புதிதில் புது இடம், புது மனிதர்கள், புதுக் கலாச்சாரம் போன்றவைகளால் தோன்றும் anxiety உடன் எனது ஆங்கிலப் புலமையில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து கொண்டது. ஒருமுறை எனது கடைசித் தங்கை இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது அவர்கல் வகுப்பிலிருந்து adventure camping சென்றார்கள். அப்போ பெற்றோர் இயலுமானால் guides ஆக வரும் படி கேடிருந்தார்கள். அப்பா guide ஆக என்னைப் போகச்சொன்னார். காலைக் கட்டித் தண்ணியில் விட்ட மாதிரி இருந்தது. போனது 11-12 வயது சிறுவர்களுடன். அவர்களுக்கு golf, அம்பு வில்லு விளையாட உதவுவது என்று பல வேலைகள். பிரச்சனை என்ன என்றால் நான் ஒருநாளும் golf விளையாடினதும் இல்லை/ எப்படி விளையாடுவதென்று தெரியவும் தெரியாது. சிறுவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாரி ஏதோ உதவி செய்து முடித்து கடை நாள் இரவு, சிறுவர்களுக்காக ஆசிரியர்களும் பெற்றோரும் ஒரு show வைப்பதென்று தலைம ஆசிரியர் சொன்னார் (எங்கையிருந்துதான் இந்த மாதிரி idea எல்லாம் எடுத்தார்களோ தெரியாது). என்னை எதற்கும் கூப்பிடக் கூடாது கடவுளே என்று வேண்டாத தெய்வமில்லை. :) அதனால் ஒரு பயனும் வரவில்லை. எனது part மேடையில் ஏறி அதில் வைத்திருந்த ஒரு பாத்திரத்திலிருந்ததை ஒரு கோப்பையில் ஊற்றிக் குடிப்பது மாதிரி நடித்துவிட்டு "This is a nice cup of Milo" என்று சொல்வது மட்டும் தான். அரங்கிலிருந்தோர் 11-12 வயதுச் சிறுவர்கள். அதைச் சொல்லும் போதும் கூடக் குரல் நடுங்கியது. இதெல்லாம் சும்மா எவருடனும் இருந்து கதைக்கும் போதல்ல ஒரு கூட்டத்திற்கு முன்னால் நிற்கும் போதே.
பல்கலைக் கழகத்தில் முதலிரு வருடங்களில் வகுப்புகளில் பெரிதாக பேச்சு assessments இருக்கவில்லை. மூன்றாம் நான்காம் ஆண்டுகளிலேயே ஒரு பிரசுரிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை மீளாய்வு செய்து வகுப்பிற்குச் சொல்வது, அல்லது கற்பித்த ஒரு பாடத்தைப் பற்றிப் பேசுவது என assessments இருந்தது. I hated giving seminars. ஆனால் அது assessment இன் ஒரு பகுதி எனில் செய்து தானே ஆக வேண்டும். பல சமயம் வகுப்பிற்கு முன் நின்று பேசும் போது குரல் மிக நடுங்கும். எனக்கே நான் என்ன கதைக்கின்றேன் என விளங்கவில்லை சில சமயங்களில். என்ன தான் முதலில் பல தடவை பேசிப் பார்ப்பினும், எழுந்து வகுப்பின் முன் நின்றதும் மூளை முழுதும் வெறுமையாகப் போன மாதிரி ஒரு உணர்வு. இந்நாட்டில் உள்ள ஓரு நன்மை, நீ ஒன்றுக்கும் உதவாது, நீ எல்லாம் படிப்பதே waste என்று ஒரு போதும் சொல்ல மாட்டினம். நீ செய்ததில் எது நல்லது என்று சொல்லி அதற்கும் பாராட்டி, எவற்றில் முன்னேற வேண்டும் என்றும் சொல்வதால், நீங்கள் முற்றாகத் தோல்வியடைந்த்ததாக ஒரு போதும் நினைக்க மாட்டீர்கள். :)
பின் முனைவர் பட்டப் படிப்பைத் தொடங்கியதும் ஒரு வருடத்திற்குள்ளேயே, எனது ஆராய்ச்சியின் முடிவுகள் சரிவரத் தெரிய முன்னர், எனது முதலாவது பேச்சு ஒரு மகளிர் நோய் மருத்துவர்களின் (gynaecologists) கூட்டத்தில். I was completely overwhelmed and intimidated. பேச்சின் போது குரல் நடுங்கினும் ஏதோ கதைத்து, அந்தளவு nervous ஆக இருந்ததற்கு, இடையில் மன்னிப்புக் கூடக் கேட்டேன். பேச்சு முடிந்ததும் எனது மேற்பார்வையாளர், "பரவாயில்லாமல் செய்தாய் (that was a lie :)), ஆனால் இவ்வளவு நல்ல முடிவுகளை வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆட்களிடம் மன்னிப்புக் கேட்காதே" என்று சொன்னார். :)
பல தடவை பேச சந்தர்ப்பங்கள் கிடைத்ததால் (not out of choice but out of obligation, really :)) குரல் நடுங்குவது ஓரளவுக்கு நின்று விட்டது. ஆனால் பதற்றம் நின்ற பாடில்லை. இன்னொரு இனப்பெருக்க ஆய்வுக்கான கருத்தரங்கில் எனது ஆய்வைப் பற்றிய பேச்சை முடித்து கேட்ட கேள்விகளுக்கும் விடையளித்தபின் அரங்கிலிருந்தோர் கைதட்ட, எனது கைகளும் தானாகவே தட்டத் தொடங்கின. தட்டும் கைகளைப் பார்த்துக் கொண்டே, அதிர்ச்சியில், மூளையின் ஒரு பகுதி நிப்பாட்டு, நிப்பாட்டெனவும் கைகள் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. Yeap. I was a complete nutcase.
இத்தனைக்கும் இது முடியாதென்பதால் ஆய்வையே விட்டு விடலாமா என ஒரு போதும் யோசித்ததில்லை. ஏனென்று தெரியவில்லை.
அதோடு பயத்தை எதிர்கொள்வதே அதைப் போக்குவதற்கான சிறந்த வழி என்பதற்கிணங்க பலமுறை முயற்சிக்கக் கிடைத்த வாய்ப்புகளால் என்னை அறியாமலே முன்னேறத் தொடங்கினேன் என நினைக்கிறேன். இக்காலகட்டத்தில், ஒரு முறை பகுதி நேர telemarketing வேலை ஒன்றிற்கான நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். அதில் Group interview உம் இருந்தது. நேர்காணலில் ஒரு பகுதியில் வந்தவர்களை சிறு கூட்டங்களாகப் பிரித்து விட்டு, ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கற்பனைப் பொருளைக் கூறி, ஒரு 10 நிமிடத்தில் அதற்கான விளம்பரம் ஒன்றை எல்லோரும் ஒன்றுபட்டு எழுதி, அக்கூட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு பங்கேற்று கதைத்தும் நடித்தும் காட்ட வேண்டும். இதயம் பட படவென்று அந்த நடித்துக் கதைத்தலின் போது அடித்த போதும், செய்தேன். அவ்வேலைக்குத் தெரிவும் செய்யப்பட்டேன். அந்நேரம் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை. எதோ பெரிதாகச் சாதித்து விட்டதாக உணர்ந்தேன். வேலை கிடைத்துவிட்டது என்பதை விட, என்னால் எல்லோர் முன்னிலும் நின்று அந்த விளம்பரத்தை கதைத்து நடிக்க முடிந்ததும் and that they thought it was good enough to hire me made me so happy.
கடைசி இரண்டு ஆண்டுகளும் நடந்த post graduate student symposium களிலும் எனது ஆய்வைப் பற்றிய பேச்சுக்கு பல பரிசுகள் கூடக் கிடைத்துள்ளன. நான் முதலில் இருந்த நிலையிலிருந்து பார்த்தால் it is an amazing improvement. ஆனால் இப்போதும் எங்காவது பேச வெண்டுமெனில் முதல் நாள் நித்திரையே வராது. அத்தோடு பேசி முடிக்கும் வரை சாப்பாடு தண்ணி எதுவும் ஏறாது.
இதை என் வயதில் இங்கு புலம் பெயர்ந்து வந்து படிக்கும் போதும் நேர்காணலின் போதும் பயப்படும் பலரிடம் சொல்லியுள்ளேன். If I can do this, anybody can.
Labels:
சொந்த அனுபவம்,
தொடர்பாடல் திறன்,
தொழில்துறை,
மேடைப் பேச்சு


