புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு வருபவர்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று மொழி, இன்னொன்று வேறுபட்ட கலாச்சாரம். சிறுவர்களுக்குப் பிரச்சனைகள் அநேகமாக இருக்காது. ஒரு சில காலம் கஸ்டப்படுவர், ஆனால் அவர்களுக்கே உரிய மொழியாற்றலால் தம்மையறியாமலே மொழியைப் பிடித்து விடுவர். பின்பு எப்படி இவர்கள் தமிழை மறக்காமல் இருக்கப் பண்ணுவதென்பது தான் பிரச்சனை. :(
தாய்நாடுகளிலேயே ஆங்கிலம் அதிகம் கதைக்கும் சூழலில் வேலை செய்தவர்களுக்கும் ஆங்கிலத்திலேயே படித்தவர்களுக்கும் கூட பெரிதாகச் சிரமமிருக்காது. ஆனால் தமிழில் படித்தவர்களுக்கும் தமிழ்ச் சூழலில் மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் மிகக் கடினமாக இருக்கும். என்னதான் ஆங்கிலம் இராண்டாம் மொழியாகப் பள்ளியில் கொஞ்சம் படித்திருந்தாலும், படித்ததற்கும் அன்றாடம் கதைப்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. அத்தோடு ஒரு மொழியைப் புத்தகங்கள் மட்டும் படித்து கதைக்கப் பழக முடியாது என அநேகமானவர்களுக்குத் தெரியும்.
ஆனால் வெளிநாட்டில் ஆங்கிலம் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். நல்ல வேலை தேட, இந்நாட்டவர்களுடன் கதைக்க, வாழ்வை முன்னேற்ற, பாடசாலையில் பிள்ளைகளின் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ள, அன்றாடத் தேவைகளுக்கு என்று எல்லாத்திற்கும் வெளிநாடுகளில் ஆங்கிலம் தேவை. ஒரு மொழியைப் புதிதாகக் கற்பது கடினம் ஆனால் முடியாத செயல் அல்ல.
அத்தோடு வெளிநாடுகளில் நன்றாக ஆட்களுடன் கதைக்கும் திறன் மிக முக்கியம். என்ன தான் பட்டம் பெற்றிருந்தாலும் ஆட்களுடன் எம்மால் கதைக்க முடியாவிடில் அல்லது எமது திறன்களைச் சொல்ல முடியாவிடில் அத்திறன்களை நிரூபிக்க வேலைச் சந்தர்ப்பங்கள் கிடைப்பது கடினம். மொழியைப் பேசும் திறனையும் தொடர்பாடல் திறன்களையும் அதிகரிக்கக் கூடிய மிகச் சிறந்த வழி ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர்களுடன் கதைத்தலும் அவ்வாறான சூழலில் பழகுதலுமே. அவ்வாறான சூழல் பலருக்குக் கிடைப்பதில்லை அல்லது பலர் பயம், தம்மீதே நம்பிக்கை இல்லை என்பவற்றால் முயல்வதில்லை.
எனக்குத் தெரிந்த பல புலம் பெயர்ந்த இளம் வயதினர், பட்டப் படிப்பு முடித்து பின் அத்துறையில் வேலை எடுக்க இயலாமல் வேறு வேறு கீழ் மட்ட வேலைகள் செய்கிறார்கள். இவர்களில் அநேகமானவர்களின் பிரச்சனை தொடர்பாடல் திறனே. இங்கு தனிய எமது paper qualifications ஜ வைத்து வேலை தர மாட்டினம். நிச்சயம் நன்றாகக் கதைக்க வேண்டும். சரளமான பேச்சை விடக் கூடுதலாகத் தொடர்பாடல் திறன் தேவை.
இங்கு புலன் பெயர்ந்து வந்திருப்பவர்காளில் ஆங்கிலம் சிறிதும் தெரியாதவர்களுக்கு பல பள்ளிகளில் ஆங்கிலம் இரண்டாம் மொழியாக இருப்பவர்களுக்காக நடத்தப்படும் ஆங்கில வகுப்புகளை பரிந்துரைக்கின்றனான்.
ஆங்கிலம் ஓரளவிற்கு கதைக்கக் கூடியவர்களை, ஏதாவது toast masters club இல் சேரச்சொல்றனான். என்னால் இயலுமானவரை கட்டாயப் படுத்திறனான் கூட. என் துணைவர் "இவளுக்கு அவங்கள் commission கொடுக்கினம் அது தான் சொல்றாள்" என்று பகிடி பண்ணுறவர்.
Toast masters ஒரு சர்வதேச நிறுவனம். எல்லா நாடுகளிலும் உண்டு. அதில் சேர்பவர்களின் ஒரே இலட்சியம் தொடர்பாடல் திறனைக் கூட்டுவதே.
அநேகமாக எல்லா இடங்களிலும் சிறு சிறு குழுக்களாக (clubs) ஆட்கள் கூடி இருவாரங்களுக்கு ஒரு முறை இரண்டு மணித்தியாலங்களுக்குக் கூடுவர். இவ்வொரு கூட்டத்திலும் வரும் உறுப்பினர்கள் முன்னேற்பாடு செய்த/ஒரு முன்னேற்பாடும் செய்யப்படாத பேச்சுகள் பேசுவர். ஓவ்வொரு கூட்டத்திற்கு ஒரு நேரத்தைக் கணிப்பவரும் பேச்சுகளின் தரத்தைக் கணிப்பவரும் அனுமதிக்கப்படெவர். ஒவ்வொருவரினதும் கதைத்தவைகளையும் கணித்து அவர்கள் நன்றாகச் செய்தவை என்ன, இன்னும் முன்னேறக்கூடியவை என்ன என்று அவ்விடத்திலேயே சொல்வர். உறுப்பினர்களாகச் சேர்ந்தால் உங்களின் தொடர்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன், மற்றவர் முன்னால் கதைக்கும் போது தன்னம்பிக்கையுடன் கதைத்தல் என்று பல வகையான ஆற்றல்களை வளப்படுத்தலாம். இக்கூட்டத்திற்குப் போவதற்கோ உறுப்பினர்களாகச் சேர்வதற்கோ எந்தவிதக் குறிப்பிட்ட தகுதியும் தேவையில்லை. நீங்கள் ஒரு கம்பனியின் CEO ஆக இருக்கலாம் அல்லது இப்ப தான் பள்ளி முடித்தவராய்க் கூட இருக்கலாம். உங்களின் ஒரு குறிக்கோள் தொடர்பாடல் திறனை வளர்ப்பதெனில், இது நல்லதொரு ஊடகம்.
முதலில் கடினமாக இருப்பினும் சிறுது காலத்தில் உங்களை அறியாமலே உங்களில் முன்னேற்றம் தெரியும். நான் இதெல்லாம் சொல்வதற்குக் காரணம், நான் இவ்வாறு கட்டாயப்படுத்தி போகச்சொன்னவர்களில் இருவர் வித்யா அக்காவும் அவரது துணைவர் நந்தன் அண்ணாவும். போன வைகாசியிலிருந்து போகத்தொடங்கினவை. வித்யா அக்கா தனது திருமணத்திற்குப் பின் புலம்பெயர்ந்தவர். இரு குழந்தைகள். தொடங்கும் போது மிகவும் பயமாக இருந்தது, இரு மாதங்களுக்கு விருந்தாளியாக மட்டுமே போய் பின் உறுப்பினராகச் சேர்ந்தனான் என்றவர். ஆட்களின் முன்னால் கதைக்க கை, கால் எல்லாம் சும்மாவே நடுங்கும் என்றவர். பயத்தைப் போக்குவதற்கு ஒரே வழி, அதை எதிர் கொள்வது தான் என்பதற்கிணங்க, போன வாரம் தான் போகும் club இல் நடந்த international speaking competition இல் முதல் பரிசு வாங்கினார். கேட்ட போது மிக, மிக சந்தோசமாக இருந்தது. I am very proud of you acca. நான் சொன்னதை மதித்துப் போகத் தொடங்கியதற்கு மிக்க நன்றி. நந்தன் அண்ணா வேறொரு club இற்குப்போறவர். அவர் நிச்சயமாக அடுத்த போட்டியில் கலந்து கொள்வதாகச் சொல்லியுள்ளார்.
Toastmasters கூட்டங்கள் எங்கெங்கு, எப்போ நடக்கிறதென இங்கு சென்றால் அறியலாம். இலங்கை, இந்தியா உட்பட அநேகமான நாடுகளில் உண்டு. போன முதல் நாளே உறுப்பினராகச் சேர வேண்டிய அவசியமேயில்லை. முதலில் குழுச்செயலாளரிடம் தொடர்பு கொண்டு விருந்தாளியாக உங்கள் கூட்டத்திற்கு வந்து பார்க்கலாமா என்று கேட்டுவிட்டு, ஒரிரு கூட்டங்களுக்கு விருந்தாளியாகவே சென்று பின் இணையலாம். உங்கள் வேலைக்கோ வீட்டிற்கோ அருகில் நடக்கும் வெவ்வேறு இடங்களில் நடக்கும் சில கூட்டங்களிற்குச் சென்று பின் உங்களுக்குப் பிடித்த இடத்தைக் கூட தெரிவு செய்யலாம்.
எனக்குக் கூட இந்த மேடைப்பயம் (stage fright) நிறையவே உண்டு. அதனால் நான் செய்த/ எனக்கு ஏற்பட்ட embrasing moments ஜப்பற்றி பிறகு எப்பவாவது பார்க்கலாம்.
2 comments:
நல்ல விசயம் சொன்னீங்க.. இந்த க்ளப்களின் முகவரிக்கும் நன்றி.
very informative, anna! எனக்கு இன்னமும் அந்த மேடை உதறல் உண்டு. என்னதான் சிந்தனை அபிவிருத்தி நன்றாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தி தன்னை தக்க வைத்துக் கொள்வது ஒரு கலைதான். நன்றி!
Post a Comment