Wednesday, August 3, 2011
Friday, July 15, 2011
மணமகள் பற்றாக்குறையா? காரணம் என்ன?
xx% பெண்கள் கட்டுங்கடங்காமல் திரிவதால் தான் நாடு உருப்படாமல் போயிற்று, பெண்களுக்கெல்லாம் சம உரிமை வந்தாயிற்று, இன்னும் சும்மா தொன தொணக்க வேண்டாம், பெண்கள் அதிகம் படிப்பதால் தான் ஆண்களின் வாழ்வு நாசமாயிற்று, வீடு அறம்புறமாயிற்று. இப்படியெல்லாம் சொல்பவர்களிடம் முதலில் கேட்பது - நீங்கள் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எப்படிப் பெண்கள் அதிகம் படித்ததால் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள் என்கிறீர்கள்? எங்கையாவது இதற்கெல்லாம் ஆய்வுகள் செய்தார்களா?
அநேகமாகக் கிடைக்கும் பதில் - இதற்கெல்லாம் ஆய்வா - தேவையேயில்லை. எனது நண்பனின் நண்பனின் நண்பனுக்கு நடந்திருக்கென்று சொன்னவன். ஒரு பத்திரிகையில் ஒரு சம்பவம் வாசித்தனான். இதுக்கும் மேலால் புள்ளி விபரங்கள் என்ன சொல்ல முடியும்?! Indeed idiot, What other evidence could you possibly want other than these powerful anecdotes? Women are on the loose and men's world is crumbling - you want to talk to me about statistics?????
YES! I DO! Please bear with me!
புள்ளி விபரங்களால் என்ன சொல்ல முடியும் என்று பார்க்கலாமா?
இன்னும் சில bonus புள்ளி விபரங்கள்
2. Gendercide in India: Add sugar and spice
3. Sex-selective abortion: Looking out for baby girls
4. UNEQUAL SEX RATIOS, BRIDE SHORTAGE & MARRIAGE MIGRATION
5. Characteristics of Sex-Ratio Imbalance in India, and Future Scenarios
6. Because I am a girl: The State of the Girl Child in India 2009
7. Unnatural Selection: Choosing Boys Over Girls and the Consequences of a World Full of Men
8. Women in the Labour Force in India
9. Higher Education in India
அநேகமாகக் கிடைக்கும் பதில் - இதற்கெல்லாம் ஆய்வா - தேவையேயில்லை. எனது நண்பனின் நண்பனின் நண்பனுக்கு நடந்திருக்கென்று சொன்னவன். ஒரு பத்திரிகையில் ஒரு சம்பவம் வாசித்தனான். இதுக்கும் மேலால் புள்ளி விபரங்கள் என்ன சொல்ல முடியும்?! Indeed idiot, What other evidence could you possibly want other than these powerful anecdotes? Women are on the loose and men's world is crumbling - you want to talk to me about statistics?????
YES! I DO! Please bear with me!
புள்ளி விபரங்களால் என்ன சொல்ல முடியும் என்று பார்க்கலாமா?
- உலகில் பெண்களின் வாழ்விற்கு மிக மோசமான இடங்களில் இந்தியா நாலாவது இடத்தை வகிக்கிறதாம்.
- இந்தியாவின் மொத்த சனத்தொகையில் எத்தனையோ மில்லியன் பெண்களை காணவில்லையாம். இது அவர்கள் பெரிய படிப்பெல்லாம் படித்து பூமியில் ஆண்களுடன் பெரிய தொல்லையென செவ்வாய்க்குப் போனதால் இல்லையாம். Shocking isn't it. Knowing educated crazy women, that would have been my first guess. பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் கருவைக் கலைப்பதாலும் பிறந்தபின் கொல்வதாலும் தானாம் இந்த விளைவு.
- கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 914 பெண்கள் தான் இருக்கிறார்களாம். இதுவரைக்கும் எடுத்த கணக்கெடுப்புகளில் இந்த வருட விகிதம் தான் மிகவும் மோசமானதாம். இந்த விகிதம் இப்படியே மாறாமல் தொடர்ந்தால், ஆண்டுக்கு 600,000 காணாமற்போகும் பெண்கள், 18 வருடங்களில் 10 மில்லியன் காணாமற் போகப்போகும் மணமகள்மாராம். I know, that puts it into perspective right? who cares about girls, through quality upbringing turning into amazing women if they are not going to be available as brides.
- 2001 கணக்கெடுப்பு படி இந்தியாவில் 19 வயதிற்கு மேற்பட்ட திருமணம் செய்யாத ஆண்கள் 9.3%, பெண்கள் 3.2% ஆம். இதன் படி 34.1 மில்லியன் ஆண்களுக்கு 2001 இல் திருமணம் செய்யப் பெண்கள் இல்லையாம். இது வருங்காலத்தில் மோசமாக சந்தர்ப்பங்கள் உண்டாம். பெண்கள் இல்லாததால் ஆண்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டால், ஒவ்வொரு முறையும் திருமணச்சந்தைக்கு வரும் மில்லியன் கணக்கான ஆண்கள், தமது சக வயதுடைய ஆண்களுடன் மட்டுமன்றி ஏற்கனவே திருமணம் ஆகாமல் இருக்கும் வயது கூடியவர்களுடனும் போட்டி போட வேண்டுமாம்.
இன்னும் சில bonus புள்ளி விபரங்கள்
- ஆறில் ஒரு பெண்கள் தமது 15 ஆவது பிறந்த நாளைப் பார்க்க உயிருடன் இருப்பதில்லை.
- இந்தியாவில் பிறக்கும் 12 மில்லியன் பெண் பிள்ளைகளில் 1 மில்லியன் குழந்தைகள் தமது முதலாம் பிறந்த நாளுக்குக் கூட இருக்கமாட்டார்கள்
- ஆறில் ஒரு பெண் பிள்ளையின் மரணத்திற்குக் காரணம் பாலியல் ஒடுக்குமுறை
- 2009 இல் இந்தியாவில் நடத்தப்பட்ட women's trafficking இல் கிட்டத்தட்ட 90% நாட்டிற்குள்ளேயே நடத்தப்பட்டது. இருக்கும் 3 மில்லியன் பாலியல் தொழிலாளிகளில் 40% மானோர் சிறுமிகள்.
- நான்கு வயதிற்குக் கீழுள்ள சிறுமிகளின் இறப்பு விகிதம் சிறுவர்களை விடக் குறிப்பிட்டளவு கூட. கருக்கலைப்பிலிருந்தும் சிசுக்கொலையிலிருந்தும் தப்பித்தாலும் சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் போடுவது, போதுமானளவு உணவளிப்பது, தேவையான பொழுது மருத்துவச் சிகிச்சை எல்லாம் குறைவென்பதாலேயே இந்த விளைவு.
- 53% ஆன ஜந்து வயதிற்கும் ஒன்பது வயதிற்கும் இடைப்பட்ட சிறுமிகளுக்கு எழுதப் படிக்கவே தெரியாது.
- இந்தியாவில் உயர் கல்விக்கு சேர்பவர்கள் 61.7% ஆண்கள், 38.3% பெண்கள்
- சமமான வேலைக்கு ஆண்கள் கிடைப்பதைவிட 33% குறைவாகவே பெண்களுக்கு சம்பளம் கிடைக்கிறது.
References:
1. Afghanistan worst place in the world for women, but India in top five2. Gendercide in India: Add sugar and spice
3. Sex-selective abortion: Looking out for baby girls
4. UNEQUAL SEX RATIOS, BRIDE SHORTAGE & MARRIAGE MIGRATION
5. Characteristics of Sex-Ratio Imbalance in India, and Future Scenarios
6. Because I am a girl: The State of the Girl Child in India 2009
7. Unnatural Selection: Choosing Boys Over Girls and the Consequences of a World Full of Men
8. Women in the Labour Force in India
9. Higher Education in India
Tuesday, July 12, 2011
Walking with Dinosaurs
ஜுராசிக் பார்க் படம் வந்த நேரம் தான் A/L படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்ப தொடங்கிய இந்த dinosaurs மேலுள்ள fasciniation என்னும் விட்டுப் போகவில்லை.
நாம் வெறும் 200,000 ஆண்டுகளாகவே இங்கு இருக்கிறோம். இவை 200 மில்லியன் ஆண்டுகளாக பூமியை ஆட்சி செய்த இனங்கள். இவைகளின் காலத்தில் எமது மூததையர் மிகச் சிறிய lemurs மாதிரி இருந்ததால் பிழைத்தது. அதோடு அந்த விண்கல் மட்டும் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வந்து பூமியைத் தாக்கியிராவிட்டால் எமது மூதாதையரின் பரிணாமப்பாதையில் நாம் இருந்திருப்போமா என்பது சந்தேகமே.
இவ்வருடம் எனது பிறந்த நாளிற்குக் கிடைத்த ஒரு பரிசு Walking with Dinosaurs காட்சிக்கான tickets. இப்போ ஒரு ஒரிரு மாதங்களாக இங்கு காட்டுகிறார்கள் என நினைக்கிறேன். முதலில் மகனையும் கூட்டிக் கொண்டு போகலாமென எண்ணிப் பின், இதுவரை படங்களில் மட்டுமே பார்த்தவன் பயப்படுவானோ எனத் தயங்கினேன். பின் போகும் வழி பார்க்க அதன் இணையத்தளத்திற்குச் சென்ற போது இரண்டு வயதும் அதற்குக் கீழான குழந்தைகளை எங்கள் மடியில் வைத்திருக்க முடியுமென்றால் இலவசமாகக் கூட்டிச் செல்லலாம் என இருந்தது. அவர்களுக்குப் பொருத்தமில்லையெனில் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார்களென முடிவு செய்து, Dinosaurs வாரீங்களா என மகனிடம் கேட்க, அவனும் மிகுந்த ஆர்வத்துடன் ஓம் என்றான். சரியென போன சனிக்கிழமை சென்றோம்.
Huxley எனும் ஒரு தொல்லுயிரியலாளர் (paleontologist) ஒரு dinosaur எலும்பைக் கண்டுபிடித்து பின் காலத்தில் பின்னோக்கிச் செல்வது போன்று காட்சி தொடங்கியது.காட்சியின் பல அம்சங்கள் மிகவும் நன்றாக இருந்தது. பல சிறந்த வடிவமைப்பாளர்கள் சேர்ந்து பல தொல்லுயிரியலாளர்கலினது உதவியுடன் 20 dinosaurs ஜ இயலுமானளவு சரியாக அமைத்திருந்தார்கள்.
இக்காட்சிகள் சிறுவர்கள் முதல் பெரியோர்வரை, எல்லாவகையான மக்களுக்கும் என்றாலும், பல ஆராய்ச்சிகளால் கண்டறியப்பட்ட அடிப்படையான விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். தனிய பிரமாண்டமான dinosaurs ஜக் காட்டுவது மட்டுமன்றி, கண்டங்களின் இயக்கங்கள் (continental drift), காலம், பரிணாமம், அக்காலகட்டத்தில் இருந்ததாகக் கருதப்படும் இயற்கை அமைப்புகள், தாவரங்களின் இயல்புகள் எனப் பல அடிப்படைச் செய்திகளைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தது நன்றாக இருந்தது. காட்டப்பட்ட dinosaurs எல்லாமே பிரமாண்டமாக, வியக்கத்தக்கதாக இருந்தது. ஒவ்வொரு ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப அரங்கைச் சுற்றி தாவரங்களை மேலே வரச் செய்திருந்தனர். Dinosaurs இன் ஆரம்பக் கால கட்டங்களில் (TRIASSIC PERIOD, 245 to 208 million years ago) புற்களோ பூக்களோ இருக்கவில்லை. அக்காலத்தில் ferns, horsetails போன்ற தாவரங்களே இருந்தன. முதன் முதலில் பூக்கும் தாவரங்கள் கிட்டத்தட்ட 144 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் Cretaceous காலத்தில் தோன்றின. இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் காட்சியில் இணைத்திருந்தார்கள்.
என் மகனிற்கு மிக மிகப் பிடித்திருந்தது. பலமாகச் சத்தமிட்டு, host ஒவ்வொரு dinosaur பெயரையும் சொல்லும் போதும் தானும் சொல்லி, சிரித்து, மிக ரசித்துப் பார்த்தான். இதுவரையிலும் T.Rex உம் ஒரு Diego episode ஆல் Mayasaurus உம் தெரிந்திருந்தவன், இப்போ இன்னும் சில dinosaurs இன் பெயர்களையும் அவை எவ்வாறு இருந்திருக்குமெனவும் தெரிந்துள்ளான். Which is pretty cool. அதனால் விலங்குகளில் சாதாரணமாக interest உடைய குழந்தைகளை இக்காட்சிகளுக்கு கூட்டிச்செல்லலாம்.
இக்காட்சிகளைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு அவர்களின் இணையத் தளத்திற்குச் செல்லலாம்.
படங்கள் வடிவாக எடுக்க முடியவில்லை. இப்படத்தில் இருப்பது ஒரு தாய் Brachiosaurus உம் ஒரு சேய் Brachiosaurus உம். இவை தாவரவுண்ணிகள். எம்மிடம் முழு எலும்புக்கூட்டோடும் இருக்கும் பெரிய dinosaurs இல் ஒன்று.
Monday, July 11, 2011
44 நிறவுருக்களைக் கொண்ட மனிதன்
அநேகமான மனிதருக்கு தாயிடமிருந்து 23, தந்தையுடமிருந்து 23 ஆக 23 சோடி = 46 நிறவுருக்கள் உண்டு. இதில் அநேகமாக எதாவது நிறவுருக்கள் இல்லாமலோ அல்லது ஒரன்று கூடுதலாகவோ இருந்த்தால் அநேகமாக அந்தக் கரு கலைந்து விடும் அல்லது கரு நிலைத்து பின் குழந்தை பிறப்பின் அதன் உடலில் பல சிக்கல்கள் இருக்கும். உதாரணம்: நிறவிரு 21 மூன்று இருந்தால் அக்குழந்தைக்கு down syndrome நிச்சயம்.
இப்போது முதன் முதலாக சீனாவில் 44 நிறவுருக்களைக் கொண்ட ஒரு மனிதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவரின் 15 ஆவது நிறவுரு 14 ஆவது நிறவுருவோடு இணைந்து விட்டது. அதனால் இவருக்கு நிறவுரு 15 இல்லை. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மரபணுக்களுக்கும் சேதமேதும் ஏற்படவில்லையாதலால் இவருக்கு குறிப்பிட்டளவு மருத்துவச் சிக்கல்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. That's amazing!
இவருக்கு எப்படி 44 நிறவுருக்கள் வந்தது?
இவரின் குடும்பத்தில் பலர் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்திருக்கின்றனர். எங்கேயோ ஒரிடத்தில் balanced translocation என்ற
நிறவுரு மறுசீரமைப்பு நடந்துள்ளது. இதன் படி இரு நிறவுருக்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இதனால் மரபணுக்கள் எதுவும் இழக்கப்படாததால், இப்படி இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது மிகக் கடினம்.
அநேகமாக தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு இந்த மாதிரி நிறவுரு மறுசீரமைப்பு நடந்திருந்தால், கருக்கட்டப்படும் இரண்டில் மூன்று கருக்கள் சிதைவடையும். முட்டையும் விந்தும் உற்பத்தி செய்யப்படும் போது நிறவுருக்களை பிரிவடையும் போதே பிரச்சனை வரும்.
சாதாரணமாக எமது உடலில் உள்ள செல்களில் ஒரு சோடி நிறவுருக்கள் இருக்கும். ஆனால் முட்டையிலும் விந்திலும் நிறவுருக்களின் ஒவ்வொரு நகல்களே இருக்கும். முட்டையில் 23 நிறவுருக்களும் விந்தில் 23 நிறவுருக்களும் இருந்து, பின் இராண்டும் இணையும் போது 23 சோடியுடைய உயிர் உருவாகும். இதனாலேயே மேற்சொன்ன நிறவுரு மறுசீரமைப்பு நடந்துள்ளவர்களுக்குப் பிரச்சனை வரும். அவர்களின் முட்டைகளுலும் விந்துகளிலும் சிலவற்றில் ஒரு சோடியற்ற நிறவுருவும் சிலவற்றில் மூன்று நகல்களைக் கொண்ட நிறவுரும் இருக்கும்.
முதல் வரிசை சாத்தியமான பெற்றோரைக் குறிக்கிறது. வலப்பக்கத்தில் உள்ளவருக்கு இந்த நிறவுரு மறுசீரமைப்பு உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நிறவுரு மறுசீரமைப்புடையோரது முட்டையோ, விந்தோ காட்டப்பட்டவாறு ஆறு வித்தியாசமான முறையில் இருக்கலாம். இரண்டாவது வரிசை, அவர்களில் இருக்கும் முட்டையிலோ, விந்திலோ உள்ள மறுசீரமைக்கப்பட்ட நிறவுருக்களின் அமைப்பைக் காட்டுகிறது. இந்த இணைப்பால் ஆறு விதமான நிறவுரு அமைப்புக்களுடன் கருக்கள் உருவாக சாத்தியமுள்ளது. அதில் இரு குறிப்பிட்ட அமைப்புக்களால் மாத்திரமே கருக்கட்டியதும் கலையாமல் இருக்க சாத்தியம்.
இந்தக் குறிப்பிட்ட மனிதரின் குடும்பத்தில் எத்தனையோ கருச்சிதைவுகளும் தன்னிச்சையான கருக்கலைப்புகளும் நடந்துள்ளன. இவரின் தாய் தந்தை இருவரும் first cousins. இருவரும் ஒரே நிறவுரு மறுசீரமைப்பைக் கொண்ட நிறவுருவின் ஒரு நகலைக் கொண்டுள்ளனர். அதனால் இவர்களுக்கு ஒரே ஒரு நிறவுரு 14, ஒரே ஒரு நிறவுரு 15, ஒரே ஒரு மறுசீரமைக்கப்பட்ட நிறவுரு 14 உள்ளது. அதனால் இவர்கள் பிள்ளை பெற நினைக்கையில் அவர்களுக்கு பிரச்சனைகள் இரட்டிப்பாகியிருக்கும்.
இவர்களால் 36 வேறு வேறு நிறவுரு அமைப்பைக்கொண்ட கருக்கள் உருவாக்கப்படலாம். அவற்றில் 8 குறிப்பிட்ட நிறவுரு அமைப்புகளைக் கொண்ட குழந்தைகளையே உயிருடன் பார்க்கலாம். அதில் இம்மனிதரை மாதிரி அதே நிறவுரு மறுசீரமைப்பு இரு நகல்களாக/ஒரு சோடியாக வர ஒரே ஒரு சந்தர்ப்பமே உண்டு.
இவருக்கு பிள்ளைகள் பெறுவதில் இவரது பெற்றொர் அளவிற்குப் பிரச்சனை இருக்காது. ஏனெனில் இவரிடம் சோடியற்ற நிறவுருக்கள் ஏதும் இல்லை. அதனால் சாதாரணமாக 46 நிறவுருக்களைக் கொண்ட பெண்ணுடன் குழந்தைகள் பெறலாம். ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் இந்த மறுசீறமைக்கப்பட்ட நிறவிரு ஒன்றே இருக்குமாதலால், அவர்களுக்கு இப்பிரச்சனை நிச்சயம் இருக்கும்.
என்னுடைய பரிணாமம் என்றால் என்ன என்ற பதிவில் எப்படி எமது நெருங்கிய உறவான மனிதக் குரங்குகளுக்கு 48 நிறவுருக்களும் எமக்கு 46 நிறவுருக்களும் இருக்கின்றன என விளக்கியிருந்தேன். எமது மூதாதையருக்கும் கிட்டத்தட்ட ஓரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 48 சோடி நிறவுருக்களே இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன.
Labels:
அறிவியல்,
கருக்கட்டல்,
நிறவுருக்கள்,
மரபணுக்கள்,
மரபியல்


