ஜுராசிக் பார்க் படம் வந்த நேரம் தான் A/L படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்ப தொடங்கிய இந்த dinosaurs மேலுள்ள fasciniation என்னும் விட்டுப் போகவில்லை.
நாம் வெறும் 200,000 ஆண்டுகளாகவே இங்கு இருக்கிறோம். இவை 200 மில்லியன் ஆண்டுகளாக பூமியை ஆட்சி செய்த இனங்கள். இவைகளின் காலத்தில் எமது மூததையர் மிகச் சிறிய lemurs மாதிரி இருந்ததால் பிழைத்தது. அதோடு அந்த விண்கல் மட்டும் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வந்து பூமியைத் தாக்கியிராவிட்டால் எமது மூதாதையரின் பரிணாமப்பாதையில் நாம் இருந்திருப்போமா என்பது சந்தேகமே.
இவ்வருடம் எனது பிறந்த நாளிற்குக் கிடைத்த ஒரு பரிசு Walking with Dinosaurs காட்சிக்கான tickets. இப்போ ஒரு ஒரிரு மாதங்களாக இங்கு காட்டுகிறார்கள் என நினைக்கிறேன். முதலில் மகனையும் கூட்டிக் கொண்டு போகலாமென எண்ணிப் பின், இதுவரை படங்களில் மட்டுமே பார்த்தவன் பயப்படுவானோ எனத் தயங்கினேன். பின் போகும் வழி பார்க்க அதன் இணையத்தளத்திற்குச் சென்ற போது இரண்டு வயதும் அதற்குக் கீழான குழந்தைகளை எங்கள் மடியில் வைத்திருக்க முடியுமென்றால் இலவசமாகக் கூட்டிச் செல்லலாம் என இருந்தது. அவர்களுக்குப் பொருத்தமில்லையெனில் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார்களென முடிவு செய்து, Dinosaurs வாரீங்களா என மகனிடம் கேட்க, அவனும் மிகுந்த ஆர்வத்துடன் ஓம் என்றான். சரியென போன சனிக்கிழமை சென்றோம்.
Huxley எனும் ஒரு தொல்லுயிரியலாளர் (paleontologist) ஒரு dinosaur எலும்பைக் கண்டுபிடித்து பின் காலத்தில் பின்னோக்கிச் செல்வது போன்று காட்சி தொடங்கியது.காட்சியின் பல அம்சங்கள் மிகவும் நன்றாக இருந்தது. பல சிறந்த வடிவமைப்பாளர்கள் சேர்ந்து பல தொல்லுயிரியலாளர்கலினது உதவியுடன் 20 dinosaurs ஜ இயலுமானளவு சரியாக அமைத்திருந்தார்கள்.
இக்காட்சிகள் சிறுவர்கள் முதல் பெரியோர்வரை, எல்லாவகையான மக்களுக்கும் என்றாலும், பல ஆராய்ச்சிகளால் கண்டறியப்பட்ட அடிப்படையான விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். தனிய பிரமாண்டமான dinosaurs ஜக் காட்டுவது மட்டுமன்றி, கண்டங்களின் இயக்கங்கள் (continental drift), காலம், பரிணாமம், அக்காலகட்டத்தில் இருந்ததாகக் கருதப்படும் இயற்கை அமைப்புகள், தாவரங்களின் இயல்புகள் எனப் பல அடிப்படைச் செய்திகளைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தது நன்றாக இருந்தது. காட்டப்பட்ட dinosaurs எல்லாமே பிரமாண்டமாக, வியக்கத்தக்கதாக இருந்தது. ஒவ்வொரு ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப அரங்கைச் சுற்றி தாவரங்களை மேலே வரச் செய்திருந்தனர். Dinosaurs இன் ஆரம்பக் கால கட்டங்களில் (TRIASSIC PERIOD, 245 to 208 million years ago) புற்களோ பூக்களோ இருக்கவில்லை. அக்காலத்தில் ferns, horsetails போன்ற தாவரங்களே இருந்தன. முதன் முதலில் பூக்கும் தாவரங்கள் கிட்டத்தட்ட 144 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் Cretaceous காலத்தில் தோன்றின. இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் காட்சியில் இணைத்திருந்தார்கள்.
என் மகனிற்கு மிக மிகப் பிடித்திருந்தது. பலமாகச் சத்தமிட்டு, host ஒவ்வொரு dinosaur பெயரையும் சொல்லும் போதும் தானும் சொல்லி, சிரித்து, மிக ரசித்துப் பார்த்தான். இதுவரையிலும் T.Rex உம் ஒரு Diego episode ஆல் Mayasaurus உம் தெரிந்திருந்தவன், இப்போ இன்னும் சில dinosaurs இன் பெயர்களையும் அவை எவ்வாறு இருந்திருக்குமெனவும் தெரிந்துள்ளான். Which is pretty cool. அதனால் விலங்குகளில் சாதாரணமாக interest உடைய குழந்தைகளை இக்காட்சிகளுக்கு கூட்டிச்செல்லலாம்.
இக்காட்சிகளைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு அவர்களின் இணையத் தளத்திற்குச் செல்லலாம்.
படங்கள் வடிவாக எடுக்க முடியவில்லை. இப்படத்தில் இருப்பது ஒரு தாய் Brachiosaurus உம் ஒரு சேய் Brachiosaurus உம். இவை தாவரவுண்ணிகள். எம்மிடம் முழு எலும்புக்கூட்டோடும் இருக்கும் பெரிய dinosaurs இல் ஒன்று.
2 comments:
அருமை சகோ!!!!!!!!
நன்றி
அந்த தளத்தில் சென்று சில வீடியோக்களைப்பார்த்தேன்..ரொம்ப நல்லா இருந்திருக்கும் ஷோ ந்னு தெரியுது..
Post a Comment