Showing posts with label க‌ர்ப்ப‌ம். Show all posts
Showing posts with label க‌ர்ப்ப‌ம். Show all posts

Monday, November 10, 2014

முதல் ஒன்பது மாதங்களும் ஒருவரின் ஆயுட்காலத்தில் அதன் தாக்கமும் - Developmental Origins of Health and Disease

சில நோய்கள் சிலருக்கு வரும் சாத்தியக் கூறுகள் கூட. இதற்கு அவர்களின் மரபியல், வாழ்க்கைச் சூழல், அவர்களின் சில வாழ்வியல் தேர்வுகள் (புகைப்பிடித்தல் -> நுரையீரல் புற்றுநோய்), குழந்தை, சிறுவர் பருவத்தில் அவர்களின் வளர்ப்பு முறை என்று பல வகைக் காரணங்கள் இருக்கலாம் என்பது பலரும் அறிந்ததே. பலருக்குத் தெரியாத இன்னொரு காரணி முத‌ல் ஒன்ப‌து மாத‌ங்க‌ள் ஒரு கருவிலிருந்து குழந்தையாக அவ‌ர்க‌ள் விருத்தியான‌ க‌ருவ‌றை. அங்கிருக்கும் போது உங்க‌ளுக்குக் கிடைத்த‌ உண‌வு/ஊட்ட‌ச்ச‌த்துக‌ள், தாய்க்கு வ‌ந்த‌ நோய்கள், தாயின் ம‌ன‌நிலை/ம‌ன‌ அழுத்த‌ம், தாய் சுவாசித்த‌ காற்றில் உள்ள‌ மாசுக‌ள், க‌ர்ப்ப‌க் கால‌த்தில் தாய் வாழ்ந்த‌ சூழ‌லின் தாக்க‌ம் என தாயின் பல வாழ்க்கை அனுபவங்கள் குழந்தையை அந்த ஒன்பது மாதங்கள் மட்டுமல்லாது, அக்குழ‌ந்தை வ‌ள‌ர்ந்து பெரிய‌வ‌ரான‌ பின் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ப‌ல‌ நோய்க‌ளுக்கும் அடிப்ப‌டையாக‌ இருக்க‌லாம்.