கீழ்வருவது அண்மையில் நடந்த Go Red for Women எனும் New Zealand Heart Foundation ஆல் நடத்தப்பட்ட பெண்களிலிடையே இதய நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதற்கான ஆய்விற்கு நிதி திரட்டுவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் நான் பேசியதன் தமிழாக்கம்.
டிஸ்கி: இதில் வரும் சில குறிப்புகள் (உதாரணம் - சொல்லும் தொலைக்காட்டித் தொடர், பிரபல பெண்கள்) மேற் உலகில் வாழ்பவர்களுக்குக் கூட relevance ஆக இருக்கும். ஆனால் பேச்சில் சொல்லப்படும் செய்தி எல்லோருக்கும் பொருந்தும்.
டிஸ்கி: இதில் வரும் சில குறிப்புகள் (உதாரணம் - சொல்லும் தொலைக்காட்டித் தொடர், பிரபல பெண்கள்) மேற் உலகில் வாழ்பவர்களுக்குக் கூட relevance ஆக இருக்கும். ஆனால் பேச்சில் சொல்லப்படும் செய்தி எல்லோருக்கும் பொருந்தும்.
தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் யோசிக்கலாம் - கர்ப்ப காலத்திற்கும் இதய நோய்க்கும் என்ன தொடர்பு என்று. அல்லது பலர் "எப்படித் தாய்மையோடு தொடர்புடைய மன அழுத்தங்களும் ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாள வேண்டிய நிற்பந்தங்களும் பிற்காலத்தில் இதய நோய்க்கு வழிவகுக்குமென நாங்களே இவளுக்குப் கற்பிக்கலாமே? இவள் என்ன புதிதாகச் சொல்லப் போகிறாள்" என்று கூட நினைக்கலாம்.
ஆனால் நான் சொல்ல வருவது இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு விடயம். அது என்ன என்பது இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு விளங்கும்.
இப்படம் Downton Abbey எனும் பிரபலத் தொலஒக்காட்சித் தொடரின் ஒரு பாகத்தில் வரும் காட்சி. இதிலிருக்கும் பெண் கதாபாத்திரம் lady Sybil Crawley. அவரிற்குப் பிரசவ வலி வந்து, குழந்தை பிறக்கப் போகிறதென்று சந்தோசத்தில் அனைவரும் இருக்கும் போது, அவரின் உள்ளூர் மருத்துவர் சொல்வார் " Sybil க்கு முன்ச்சுழ்வலிப்பு/குருதி நஞ்சூட்டுதல் (pre-eclampsia/toxaemia) இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அவளின் கணுக்கால் வீங்கியுள்ளது. அவளின் சிறூ நீரில் அதிகளவிம் புரதம் உள்ளது". ஆனால் அவளின் அப்பாவோ, அதெல்லாம் சாதாரணமாகப் பிள்ளைப் பேறின் போது வரும் அறிகுறிகளே என மருத்துவர் சொன்னதைப் புறக்கணித்துவிட்டார்.
ஆனால் உண்மையில் அவளின் அறிகுறிகள், அவளிற்கு முன்ச்சுழ்வலிப்பு/குருதி நஞ்சூட்டுதல் அனும் ஆபத்தான நிலை இருப்பதையே குறித்தன. Sybil க்குக் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் அவளுக்கு வலிப்பு வந்து, பின் இறந்து போனாள். இந்த நிலையைப் பற்றியே நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
குருதி நஞ்சூட்டுதல் எனும் நிலை கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலத்திலேயே உருவாகி விடுகின்றது. ஆனால் அதன் மருத்ஹ்டுவ அறிகுறிகளான உயர்ந்த இரத்த அழுத்தம், சிறுநீரில் அதிகளவு புரதம், சில சமயங்களில் கால், பாதம் கைகளில் திரவம் சேர்வதால் வரும் வீக்கம் என்பன கிட்டத்தட்ட 20 கிழமைகளில் அல்லது அதற்குப் பிற்பாடே தெரிய வரும்.
கடந்த வருடத்தில் மட்டும் 80,000 இற்கு மேலான கற்பிணிப் பெண்கள் இந்நிலையால் உலகில் இறந்துள்ளனர்.
இந்நிலையிலிருந்து பிழைத்தாலும் அவர்களுக்கு அவர்களின் வாழ்நாட்களில் சில உடல் நலப் பிரச்சனைகள் வருவதற்கு அதிகளவு சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் குருதிநஞ்சூட்டுதல் நிலை உருவானால், அவளின் வாழ்நாளின் பிற்பகுதியில் அவளிற்கும் அவளது குழந்தைக்கும் அதிகளவு இரத்த அழுத்தம், இதய நோய்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் சாதாராண சனத்தொகையை விடக் குறிப்பிட்டளவு அதிகமாகும்.
ஆனாலும் யாருக்கு இந்நிலை வரலாம் என யாராலும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது.
தாம் சொந்தமாக அவதிப்படாவிடில், அநேகமானோருக்கு இந்நிலை பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்நிலை அசாதாரணமானது இல்லை. சராசரியாக ஒவ்வொரு 20 கற்பிணிப் பெண்களில் ஒருவருக்காவது இந்நிலை இருக்கும். இப்படத்தில் இருக்கும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பெண்கள் ஒவ்வொருவரும் இந்நோயிலிருந்து பிழைத்தவர்கள்.
இந்நோயால் உடலிலுள்ள பல அங்கங்கள் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன.
வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிப் போனோமானால் தெரியும். நாம் 100 வருடங்களுக்கு முன் எப்படி இந்நோய் கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கலாம் எனக் கண்டு பிடித்தோமோ அதைய்ர் இப்பொதும் மருத்துவர்கள் செய்கிறார்கள். மருத்துவர் கர்ப்பிணிப் பெண்ணின் வரலாற்றைக் கேட்க, தாதி அவளின் சிறுநீரை எடுத்து அதில் புரதம் இருக்கிறதா எனப் பார்ப்பதே இன்றும் இந்நோயைக் கண்டறியும் வழி. அதுவும் கர்ப்ப காலத்தில் பாதி காலம் கழிந்த பின்னே. இதையும் விட சிறந்த, இன்னும் கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் கண்டறிவதற்கு ஒரு முறையை நாம் இன்னும் கண்டறியவில்லை.
பழைய காலத்தில் இந்நோயை மாற்றுவதற்குக் கையாளப்பட்ட ஒரு முறை - கர்ப்பிணிப் பெண்ணைத் தலை கீழாகக் கட்டித் தொங்க விடுவது. இது ஏன் ஒரு நல்ல முறை என நினைத்தார்களெனத் தெரியாது. இம்முறை இரத்த அழுத்தத்தை வேண்டுமானால் குறைத்திருக்கலாம். ஆனால் வேறு ஒரு தீர்வும் நிச்சயமாகக் கிடைத்திருக்காது.
அட்டைகளைக் கூட ஒரு காலத்தில் தீர்வாகப் பயன்படுத்தினார்கள். இவர்கள் கொஞ்சமாவது சரியாக யோசித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இரத்தத்தில் இருக்கும் எதோ நச்சுகளாலேயே இந்நொய் வருகிறதென்றும் அட்டைகளைக் கடிக்க விட்டு இரத்தத்தை எடுத்தால் அந்நஞ்சுகள் நீக்கப்படலாம் என நம்பினார்கள். இவ்வாறே toxaemia/குருதி நஞ்சூட்டுதல் என்ற பெயர் வந்தது. இந்நோய்க்கு முன்ச்சுழ்வலிப்பு/pre-eclampsia என்ற பெயரை விட toxaemia/குருதி நஞ்சூட்டுதல் என்ற பெயரே மிகப் பொருத்தமானது. எனேனில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட எல்லாக் கர்ப்பிணிப் பெண்களுக்கு வலிப்பு வருவதில்லை. ஆனால் எல்லோரது இரத்த செல்களும் எதோஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எப்படி, ஏன் என்பது எமக்கு இன்னும் தெரியாது.
இன்று எமக்கு இவற்றை விட சிறந்த சிகிச்சை முறைகள் இருக்கிறதென நினைக்கிறீர்களா? இல்லை.இன்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க, வலிப்பு வராமலிருக்க என நோயின் அறிகுறிகளுக்கே மருந்துகள் கொடுக்கிறார்கள். நோயைத் தீர்ப்பதற்கு அல்ல. இப்போது நோயின் உடனடி அபாயத்தைத் தீர்க்க ஒரே வழி குழந்தையையும் சூழ்வித்தகத்தையும் வெளியில் எடுப்பதே.
சூழ்வித்தகம் ஒரு உயிர் காக்கும் இயந்திரமாகக் கருதலாம். எம் ஒவ்வொருவர் வாழ்வினதும் முதல் 40 கிழமைகளுக்கு life line ஆக இருப்பது சூழ்வித்தகமே. ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துகளாஇயும் தேவையான வாயுக்களையும் தாயின் உடலிருந்து பரிமாறுவது. இது ஒரு தற்காலிகமான அங்கமே. ஆனால் மிக மிக முக்கியமானது. குருதி நஞ்சூட்டுதல் நோயின் வளார்ச்சிக்கு இச்சூழ் வித்தகம் மிக முக்கியம். நான் முதலில் சொன்னது போன்று, இந்நோயின் உடனடி ஆபத்தைத் தடுப்பதற்கு ஒரே வழி குழந்தையையும் சூல் வித்தகத்தையும் வெளியில் எடுப்பதே. குழந்தையை மட்டும் எடுத்தால் போதாது. சூல் வித்தகத்தை அகற்றுவது அவசியமானது. சூழ் வித்தகம் அகற்றப்பட்டால் நோயின் உடனவி அபாயம் அகன்று விடும், ஆனால் இந்நோயால் ஏற்படப்போகும் நீண்ட கால விளைவுகள் போகாது, making preeclampsia, an independent long-term risk factor for high blood pressure and heart disease for both the mother and the baby.
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இந்த சூல் வித்தகத்தின் செல்கள் தாயின் கருப்பையை மிக ஆழமாக ஊடுருவித் தாயின் கருப்பை இரத்த நாளங்களின் கட்டமைப்பை முற்றிலும் மாற்றியமைத்து சூல் வித்தகத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. குருதி நஞ்சூட்டுதல் நோயால் கருப்பை இரத்த நாளாங்களின் மாற்றியமைப்பு சரியாக நடைபெறுவதில்லை. சூழ் வித்தகத்திற்கான இரத்த ஓட்டம், சூல் வித்தகத்தினதும் அதன் இரத்த நாளங்களினதும் கட்டமைப்பு என்பன சரியாக அமைவதில்லை. இந்த அம்சம் எப்படியோ தாயினதும் சேயினதும் இரத்த செல்களைத் தாக்கி, பின் அவர்களின் பிற்கால வாழ்வில் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் வரும் சந்தர்ப்பங்களை உயர்த்துகின்றன. எனது ஆய்வின் நோக்கம் எவ்வாறு இந்த சூல் வித்தகத்தில் நடக்கும் மாற்றங்கள் குருதி நஞ்சூட்டுதலைத் தோற்றுவிக்கிறது, இரத்த செல்களில் எவ்வாறான மூலக்கூற்று மாற்றங்கள் இதனால் வருகின்றன, இம்மாற்றங்களைத் தடுப்பதற்கு வழிகள் உள்ளனவா? இம்மாற்றங்களால் எவ்வாறு தாயினதும் சேயினதும் இரத்த செல்கள் பாதிப்படைகின்றன? இவற்றை எப்படியாவது சரியாக்கலாமா? போன்ற கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க முயற்சிப்பதே.
ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமான வாழ்விற்கான தொடக்கம் அத்தியாவசியமானது. குருதி நஞ்சூட்டுதல் நோய் வருவதற்கான அடிப்படையை விளங்கினால் இந்நோய்க்கான மிகச் சிறந்த சிகிச்சையை கண்ட்டறிந்து இந்நோயால் அதிகளவு பாதிப்படையக் கூடிய தாய்மாருக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் எதிர்காலத்தில் இதய நோய் வருவதைத் தடுக்கலாம்.
நன்றி.
4 comments:
நல்ல இடுகை! எல்லா பெண்களையும் இது சென்றடைய வேண்டும்.
இந்த இடுகை எல்லோரயையும் சென்று அடையவேண்டும் என்று கருதி, நான் இதற்கு +1 வோட்டு போட்டுள்ளேன். மீதி ஏழு ஓட்டுக்கள் இருந்தால் தமிழ்மணம் மகுடம் ஏறும்!
உங்கள் கருத்திற்கும் ஊக்குவிப்பிற்கும்மிக்க மிக்க நன்றி நம்பள்கி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
Nice.
+1 vote.
Thanks heaps Alien. :)
Post a Comment