Monday, October 21, 2013

சீனாவிலிருந்து 'நீஹோ'

 
சீனாவிற்கு NZ Royal Society ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட NZ-China Scientist Exchange Programme இல் பங்குபற்றும் ஒருவராக வந்துள்ளேன்.
இந்த அறிவியல் பரிமாற்றத் திட்டத்தின் இலக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவியல் நிபுணத்துவத்தை இணைத்து இரு நாடுகளுக்கும் முக்கியமாக இருக்கும் துறைகளில் நடக்கும் ஆய்வுகளுக்கு நாடுகளுக்கிடையில் நீண்ட கால ஒத்துழைப்பை உருவாக்குவதாகும்.

முதலில் வந்தது சீனத் தலை நகரம் Beijing க்கு. நாம் வந்திறங்கிய நாள் காலநிலை நன்றாக இருந்தது. எம்மை வரவேற்க Ministry of Science and Technology இல் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். வந்திருந்த அறிவியலாளர்களில் என்னையும் இன்னொருவரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் சீனத்தவர்களே.

எம்மிருவ‌ருக்கும் தொட‌ர்பாட‌ல் மிக‌ மிக‌க் க‌டின‌மாக‌ இருந்த‌து. அவர் caucasian. அன்றிர‌வு நாமிருவ‌ரும் இர‌வுச் சாப்பாட்டிற்குச் சென்று க‌தைத்துக் கொண்டிருந்த‌ போது அவர், ஒரு ஆதிக்க‌மான‌ கலாச்சார‌த்தில் இருந்து வ‌ந்த‌ த‌ன‌க்கு இவ்வாறு முற்றிலும் மாறுப‌ட்ட‌ மொழியும் க‌லாச்சார‌மும் உள்ள‌ நாட்டில் கொஞ்ச‌ம் க‌டின‌மாக‌ இருப்ப‌து ஒரு humbling experience என்றார். அதே நேர‌ம் ஒரு immigrant ஆக‌ என‌து அனுப‌வ‌ம் அவ்வாறிருக்காதென‌வும் ஒத்துக் கொண்டார். நான், " என் வாழ்வின் பெரும்பான்மையான காலத்தில் ஏதோ ஒரு வ‌கையில் சிறுபான்மையினரின் ஒருவராகவே இருந்துள்ளேன். மொழி தெரியாமல் பல தடவைகள் கஸ்டப்படுள்ளேன். என‌க்கு அது ஒரு பிடித்த‌மான‌ அனுப‌வமே அல்ல‌" என்றேன்.

அத‌ன் பின் வ‌ந்திருப்ப‌து Chongqing எனும் ந‌க‌ர‌த்திற்கு. Chongqing தென்மேற்கு சீனாவில் இருக்கும் ஒரு பெரிய நகரம். சனத்தொகை 30 மில்லியனுக்கும் மேல். இங்கிருக்கும் Chongqing Medical University இல் இருக்கும் ஒரு ம‌ருத்துவ‌ ஆய்வாள‌ருட‌னேயே நான் இணைந்து ஆய்வு செய்ய‌ இருக்கிறேன். இங்கு காற்று மிக‌க் கூடுத‌லாக‌ மாசுப‌ட்டுள்ளது. எப்போதுமே புகை ம‌ண்ட‌ல‌மாக‌வே உள்ள‌து. எப்போவாவ‌து ஒரு நாள் தான் சூரிய‌ன் தெரியுமாம்.

மொழியும் தெரியாம‌ல் என‌க்கிருக்கும் மிக‌ப்பெரிய‌ க‌ஸ்ட‌ம். நான் ஒரு தாவ‌ர‌ உண்ணி என்ப‌தே. அத‌னால் பின்வ‌ருமாறு எழுதி வைத்துள்ளேன் க‌டைக‌ளில் காட்டுவ‌த‌ற்கு. :)

我吃菜 - நான் ம‌ர‌க்க‌றிக‌ள் ம‌ட்டுமே சாப்பிடுவேன்
我不吃肉 -     நான் மாமிச‌ம் சாப்பிடுவ‌தில்லை
我不吃海鲜 - நான் நீர்வாழ் உயிரின‌ங்க‌ள் சாப்பிடுவ‌தில்லை
我不吃鱼 - நான் மீன் சாப்பிடுவ‌தில்லை
我不吃鸡蛋- நான் முட்டை சாப்பிடுவ‌தில்லை

இப்போது அநேக‌மான‌ நேர‌ங்க‌ளில் என்னுட‌ன் ஒரு மாண‌வ‌ர்க‌ள் இருப்ப‌தால் ஒர‌ள‌வு ப‌ர‌வாயில்லாம‌ல் போகின்ற‌து. இந்நகரத்தில் இருப்பவர்கள் மிளகாய் அதுவும் காய வைத்த செத்தல் மிளகாய் நன்றாகச் சாப்பிடுவார்கள். நான் இங்கு வந்திறங்கியதும் அவர்கள் முதலில்  கேட்டது. மிகவும் உறைப்புச் சாப்பிடுவாயா என்பது தான். மிக நன்றாகச் சாப்பிடுவேன் என்றேன்.
த‌னிய‌ப் போகும் போது மேலுள்ள‌வ‌ற்றை எழுதிய‌ துண்டை வைத்தே சமாளிக்கின்றேன். என‌து ஒரு ந‌ண்பி, நான் சீனாவிலிருக்கிறேன் என்ற‌தும் அனுப்பிய‌ sms:
Make sure your tofu (bean curd) is actually tofu and not dog meat!!! Seriously!!
:):)

அடுத்த பிரச்சனை எனக்கு chopsticks ஆல் ஒழுங்காகச் சாப்பிடத் தெரியாது. ஒருநாளும் serious ஆகப் பயிற்சி எடுத்ததில்லை. Technique தெரியும். அவ்வளவு தான். :)

வேலைக‌ளுக்கிடையில் நேற்று Bao Lun கோயிலுக்கும் Yangtze ஆற்றிற்கும் போக‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்த‌து. இக்கோயில் Wei Dynasty (535-556) இல் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தாம். போகும் வ‌ழியில் ப‌ல‌ க‌டைக‌ள். அதிச‌யமாக‌ ஒரு த‌மிழ‌ரின் ரொட்டிக் கடையும் இருந்த‌து. அத்த‌னையாயிர‌ம் ம‌க்க‌ளிடையே ஒரு த‌மிழ‌ரைப் பார்த்த‌து மிக‌ச் ச‌ந்தோச‌மாக‌ இருந்த‌து. அவ‌ரின் ப‌ட‌ம் கீழே.

அப்ப‌ய‌ணத்தில் எடுத்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்

 
ரயிலால் இறங்கி நடந்து வரும் போது அந்தக் கோயிலிக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் இருப்பது.



 
சனத்தினூடே நடந்து வரும் போது முதலில் தெரிந்தது நயந்தாராவின் படம். இங்கு எப்படி நயந்தாரா? என்று யோசித்துக் கொண்டு ஆவலுடன் பார்க்கும் போது தென்பட்டது கடையின் பெயர். பின் முதலாளி. அவர் பெயர் பாண்டி கண்ணன். இரு மகன்களும் மனைவுயும் இந்தியாவில். சீன மோழி கூட நன்றாகக் கதைக்கிறார். 15 வருடங்களாகுதாம் இங்கு வந்து. கடையில் சீனர்கள் இருவரை வேலைக்கும் வைத்திருக்கிறார்.

 
பார்த்தீர்களா எந்தளவு மிளகாய்ப்பிரியமானவர்களென.


 
The Goddess of Mercy. கருணைக் கடவுள். பெரிய புத்தரும் இருந்தார். படம் எடுக்க அனுமதி இருக்கவில்லை.
.
 
ஊரில் இருக்கும் கோயில்கள் மாதிரி இங்கும் நேர்ந்து துண்டு கட்டும் வழக்கம் உள்ளது.
 
கீழிருந்து கோயிலின் கோபுரம்
 

 
Yangtze ஆறு. மிகவும் அழகாக இருக்கலாம். சுற்றுச் சூழலின் அசுத்தமும் காற்றின் மாசுபடுத்தலும் அழகை மிகக் குறைக்கின்றன. இப்படங்களில் air pollution ஆல் இருக்கும் புகை மண்டலம் நன்றாகத் தெரிகிறது.

4 comments:

சந்தனமுல்லை said...

வாவ்!! வாழ்த்துகள் அன்னா!! நல்ல வாய்ப்புதான் இல்லையா? :‍)

பயணக்குறிப்புகள் சுவாரசியம்.

முதலில் அவற்றை பார்த்து பட்டாசு தோரணங்கள் என்றே நினைத்தேன்... மிளகாய் என்று உங்கள் குறிப்பை பார்க்கும் வரை!! :‍))

Anna said...

மிக்க நன்றி முல்லை. நீங்கள் சொன்னதும் சின்னதாகப் பார்க்கப் பட்டாசு மாதிரித் தான் இருக்குது. ஆனால் செத்தல் மிளகாய்கள். :)

Anonymous said...

Interesting Journey.
Photos were nice.
Have a pleasant stay in China.

Anna said...

Thanks heaps Alien.