Wednesday, August 7, 2013

சிறப்புரிமை

பின்வருவது என் தங்கை சில மாதங்களிற்கு முன் ஒரு public speaking course இல் பேசிய குறும் பேச்சு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் என் தங்கை எழுதியதும் அதன் மொழிபெயர்ப்பும் கீழே.



Privilege 
Lets say, today was the first time you saw me. What is your first impression? Are you likely to give me the job, if this were an interview situation. 

I am asking you this, because this amount of make-up apparently reduces my ‘conventional beauty privilege’ When I say privilege, I am referring to: “a right, immunity, or benefit enjoyed only by a person beyond the advantages of most”. It is a term used in dialogues around social inequality. 

I want you to take a minute to close your eyes and think off the top of your head, negative stereotypes that pop in your mind when I say the next few words: Promiscuous woman… Promiscuous man… Asian… American… Maori… Pregnant Teen…Homosexual man… heterosexual… lesbian…homeless person… 

It may be faster or easier to do for some words than others. It tends to be easier for groups with privilege, to have less negative stereotypes associated with them and hence, continue benefiting from this without worrying about false judgment or discrimination. There are many types of privileges: gender privilege, gender orientation privilege, class privilege, able body privilege and so on… That means that person A for example can have more class privilege than person B, and person B may gender privilege over person A so there is lots of overlap. This means we actually have more in common than what these socially constructed hierarchies imply. 

I have a dream…that my children one day live in a world where they will not be judged by the color of their skin, their religion, gender, sexual orientation, choice of clothing, pay check etc etc etc but by the content of their character. I have a dream…that we stop quoting a speech made 5 decades ago…and just make it happen. Not one day… but today. 

Think of one negative stereotype about a group, may be even one you belong to… and decide right here, to change one behavior of your own that may be not necessarily even contribute, but allow this false stereotype to exist. It may be that you correct a mate the next time they say that something stupid is ‘gay’ or makes a women’s rights “joke” yeah they actually exist. Whatever you choose, start today, start now. 

இப்போது தான் நீங்கள் என்னை முதன் முதலாகப் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னைப் பற்றிய உங்களது முதல் எண்ணம் என்னவாக இருக்கும்? இது ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வாக இருப்பின் நீங்கள் எனக்கு வேலை தருவீர்களா? 

நான் கேட்பதற்குக் காரணம், இந்தளவு மேக் அப் எனது வழக்கமான அழகுக்குக் கிடைக்கும் சலுகையைக் குறைக்குமாம் (இந்தப் பேச்சுக்காகவே மிகக் கூடியளவு மேக் அப் போட்டுக் கொண்டு போனவ. :)). நான் சலுகை என்று சொல்வது, சமூகத்தில் மற்றைவர்களுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட நபரால் அனுபவிக்கப்படும் ஒரு உரிமை, immunity அல்லது நன்மை. இது சமூக சமத்துவமின்னையைப் பற்றிய உரையாடல்களில் வரும் சொல்லாடல். 

ஒரு நிமிடம் எடுத்து, கண்களை மூடி யோசியுங்கள். நான் அடுத்துச் சொல்ல இருக்கும் சில சொற்களைச் சொன்னவுடன் உங்கள் மனதில் முதலில் தோன்றும் எதிர்மறையான stereotypes என்ன? Promiscuous பெண், Promiscuous ஆண், ஆசியக் கண்டத்தவர், அமெரிக்கர், Maori (நியூசிலாந்தின் முதற்/பழங் குடியினர்), கற்பமான பதின்ம வயதினர், ஓரே பால் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்/ஆண் , இருபாலிணை உறவு (hetero sexual), வீடற்றவர்... 

சில சொற்களுக்கு மற்றவற்றை விட எதிர்மறையான stereotypes ஜ யோசிக்க உங்களுக்கு இலகுவாக இருக்கலாம். சிறப்புச் சலுகைகள் இருக்கும் குழுக்களுக்கு, தம்முடன் எதிர்மறையான stereotypes ஜ சமூகம் இணைப்பதை குறைப்பதற்கு இலகுவாக இருப்பதால், சமூகத்துலிருந்து ஒடுக்குமுறையோ பிழையான புரிதலோ இல்லாமல் தொடர்ந்து நன்மைகளை அனுபவிக்கக் கூடியதாக உள்ளது. எத்தனையோ விதமான சிறப்புச் சலுகைகள் உள்ளன. பாலினம் சார்ந்த சலுகை, gender orientation privilege, சமூக வகுப்பு சார்ந்த சலுகை, எந்தவித ஊனமும் அற்ற உடலால் வரும் சலுகை அன்று பலவற்றைச் சொல்லலாம். அதனால் நபர் A நபர் B ஜ விட கூடிய சமூக வகுப்புச் சிறப்புச் சலுகைகளைக் கொண்டிருக்கலாம். அதே நேரம், நபர் B, நபர் A ஜ விட அதிகமாக பாலினம் சார்ந்த சலுகைகளைக் கொண்டிருக்கலாம். இந்த சலுகைகளுக்கிடையில் நிறைய overlaps உண்டு. அதனால் சமூகத்தால் அமைக்கப்பட்ட இந்த மரபுகளுக்கு/எல்லைகளுக்கு அப்பால் மனிதருக்குள் நிறையப் பொதுத் தன்மைகள் உண்டு. 

எனக்கு ஒரு கனவு உண்டு. எனது பிள்ளைகள் ஒரு நாள் தமது தோல் நிறம், மதம், பால், sexual orientation, உடை உடுத்தும் விதம், அவர்களின் சம்பளத்தின் அளவு போன்றவற்றால் மதிக்கப்படாமல் அவர்களின் குணங்களால் மட்டுமே மதிக்கப்படும் ஒரு உலகில் வாழவேண்டும் என்று. எனக்கு ஒரு கனவு உண்டு. நாம் ஒருவர் 50 ஆண்டுகளுக்கு முன் பேசிய பேச்சை மேற்கோள் காட்டுவதை விடுவிட்டு, அதைச் செயற்படுத்த வேண்டும் - எப்போதோ ஒரு நாளல்ல - இன்றே செயற்படுத்த வேண்டும். 

சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்கைளைப் பற்றி இருக்கும் (அது நீங்கள் ஒருக்கும் குழுவாகக் கூட இருக்கலாம்) ஒரு எதிர்மறையான stereotype ஜ யோசியுங்கள். உங்களின் ஒரு பழக்கத்தை மாற்ற இன்றே முடிவு செய்யுங்கள். உங்களின் எண்ணம் சமூகத்தில் அந்தத் தவறான‌ எதிர்மறையான stereotype இருப்பதற்க்குப் பங்களிக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அனுமதிக்கிறது. உங்களின் செயல் அடுத்த தடவை உங்களின் நண்பன் நீங்கள் என்னவாவது முட்டாள்தனமாகச் சொல்லும் போது அது gay என்றோ அல்லது பெண்களைச் சார்ந்து கேலி செய்தாலோ, உங்கள் நண்பனைத் திருத்துவதாகக் கூட இருக்கலாம். நீங்கள் இதை எப்படி உங்கள் செயலால் மாற்ற எண்ணுகிறீர்களோ அதை இன்றே, இப்போதே தொடங்குங்கள்.

0 comments: