அண்மையில் ஒரு workshop இல் எமக்கு passionate ஆன ஒரு விடயத்தைப் பற்றி 300-350 சொற்கள் எழுதிப் பேசுமாறு கேட்டிருந்தார்கள். எனது அப்பேச்சின் தமிழாக்கம் இது.
உங்களில் அல்லது உங்களுக்குத் தெரிந்தோரில் எத்தனை பேர் விட்டமின்கள் எடுத்திருக்கிறீர்கள்? பலர் விட்டமின் மாத்திரைகள் எடுப்பதால் தமது உடல் நலத்திற்கு நன்மை ஏற்படும் என்றும், தமக்கு ஊக்கமளிக்குமெனவும் நம்புகின்றனர். சிலர் விட்டமின்கள் எடுப்பது தமது உடல் நிறையைக் குறைக்க உதவும் என்று கூட நம்புகின்றனர். இவர்களின் நம்பிக்கைக்கு சார்பாக ஏதாவது ஆதாரங்கள் உண்டா என்பதே கேட்கபட வேண்டிய முக்கிய கேள்வி. பல்வகை விட்டமின்களின் விற்பனை உலகலாவிய ரீதியில் ஒரு பல பில்லியன் டொலர்கள் உருளும் வணிகம். ஆனால் இதையொட்டி இதுவரை செய்யப்பட்ட உருப்படியான அறிவியல் ஆய்வுகள் எதுவும் இவ்விட்டமின்கள் எடுப்பதால் ஏதும் நன்மை இருப்பதாகக் காட்டவில்லை. மேலும் சில விட்டமின்கள் எடுப்பதால் சில தீய விளைவுகள் கூட வரலாம். சில குறிப்பிட்ட சுகவீனங்களுக்கு தனிப்பட்ட நபர்களுக்கு சில விட்டமின்/கனிப்பொருள் மாத்திரை பயன் தரும். உதாரணமாக, உங்களுக்கு இரும்புச்சத்து குறைவாயின் இரும்புச்சத்து மாத்திரை எடுக்க வேண்டும். விட்டமின் D குறைவானோர் விட்டமின் D மாத்திரை எடுத்தால் பயன் தரும்.
சாதாரண மக்கள் இந்த multivitamin மாத்திரைகள் எடுப்பதால் எந்தவித நன்மையும் இல்லை. விட்டமின் மாத்திரைகள் சும்மா எடுப்பதால் எந்தவித நன்மையும் இருப்பதாக ஒரு ஆதாரங்களும் இல்லை. ஆனால் மரக்கறி/பழங்கள் நிறைந்த சாப்பாடு சாப்பிடுவது எந்தளவு எமது உடலுக்கு முக்கியம் என்பதற்குப் பல ஆய்வுகளின் முடிவுகள் ஆதாரங்களாக உள்ளன. பிழை விட வேண்டாம்.விட்டமின்களும் கனிப்பொருட்களும் எமது உடல் நலத்திற்கு மிக அவசியமான நுண்சத்துகள். ஆனால் காய்கறி/பழங்களிலிருந்து எமது உடலால் அவற்றை எடுக்கக்கூடியளவு மாத்திரைகளில் இருந்து எடுப்பதில்லை. அநேகமான மாத்திரகளில் உள்ள விட்டமின்களை எமது உடலால் உறிஞ்சி எடுக்க முடியாது. அநேகமாக நீங்கள் உட்கொண்ட விட்டமின்கள் உங்கள் சிறுநீருடன் கழிக்கப்பட்டுவிடும். ஆனால் உங்களின் விலை உயர்ந்த, விட்டமின்கள் செறிந்த சிறுநீரால் சூழலிற்கு ஏதும் நன்மை இருப்பதாகவும் தெரியவில்லை! அப்ப எதற்கு இந்த பண விரயமான/சில சமயம் உடலுக்குத் தீங்கிளைக்கூடிய பழக்கத்தைத் தொடர்கிறீர்கள்???
One of the issues I am passionate about is public understanding of science. நான் மிக முக்கியமாகக் கருதும்/உழைக்கும் விடயங்களில் ஒன்று பொதுமக்களின் அடிப்படை அறிவியல் விளக்கம். சமூகத்தில் போலிஅறிவியல் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க மக்களுக்கு அடிப்படை அறிவியல் அறிவு (science literacy) இருப்பது மிக அவசியம் என வலுவாக நம்புகின்றேன். நான் சொன்ன விட்டமின் மாத்திரைகளின் கதை இந்த மாதிரி சமூகத்தில் நிலைத்திருக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்று. இவை போல் இன்னும் எத்தனையோ ஆயிரங்கள் உண்டு. அடிப்படை அறிவியல் அறிவு, மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் பல மாற்று 'மருத்துவங்களை' (உதாரணம்: ஹோமியோபதி) என்றோ அழித்திருக்கும். அடிப்படை அறிவியல் அறிவு, embryonic stem cells and genetic modification இலிருந்து உங்களின் அன்றாட உடல் நலப் பிரச்சனைகள் வரை பல விடயங்களுக்கு தகவலறிந்து முடிவெடுக்க உதவும். Knowledge is power. Ignorance is NOT bliss. அறிவு சக்தி வாய்ந்தது.அறியாமை பேரின்பமல்ல. அடுத்த தடவை ஏதேனும் ஒரு பொருளின் விளம்பரம் உங்களின் கவனத்தை ஈர்ப்பின், உடனே நம்பாதீர்கள். Be a skeptic. நிறையக் கேள்விகள் கேளுங்கள். விளம்பரப்படுத்துபவர்கள் தற்சார்பற்ற ஆதாரங்கள் ஏதேனும் தருகிறார்களா எனப்பாருங்கள். நன்கு பரிசீலித்தபின் முடிவெடுங்கள்.
3 comments:
//விட்டமின் மாத்திரைகள் சும்மா எடுப்பதால் எந்தவித நன்மையும் இருப்பதாக ஒரு ஆதாரங்களும் இல்லை.//
எல்லோருக்கும் தேவையான மிக அவசியமான கட்டுரை. வாழ்த்துக்கள்.
மூடநம்பிக்கை ஒன்றல்ல... நிறைய நிறைய... (பணம் அதிகம் இருப்பவர்களுக்கு)
அறியாமை மாற வேண்டும்... மாறும்...
//விட்டமின் மாத்திரைகள் சும்மா எடுப்பதால் எந்தவித நன்மையும் இருப்பதாக ஒரு ஆதாரங்களும் இல்லை. ஆனால் மரக்கறி/பழங்கள் நிறைந்த சாப்பாடு சாப்பிடுவது எந்தளவு எமது உடலுக்கு முக்கியம் என்பதற்குப் பல ஆய்வுகளின் முடிவுகள் ஆதாரங்களாக உள்ளன. //
உண்மை தோழரே இந்த மூட நம்பிக்கை படித்தவர்கள் மத்தியிலும் உலவி வருகின்றது,சரியான நேரத்தில் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment