Saturday, March 23, 2013

இன்ப ஆச்சரியங்களைத் தரும் தீவு?- Island of Serendipity?

எனது மேற்பார்வையாளர் ஒரு மருத்துவப் பேராசிரியர். அவர் ஒரு gynaecologist உம் அறிவியலாளாரும் ஆவார். நான் எனது மேற்பார்வையாளரிடம் easter காலத்தில் ஒரு இரண்டு கிழமைகள் இலங்கைக்குப் போகலாமென உள்ளேன் என மின்னஞ்சல் செய்தபோது, அவர், "my favourite island in the world. Can I carry your luggage?" எனப் பதிலளித்திருந்தார். மிகப் பிடித்த தீவா? ஏன்? எனக்குழம்பிய போதும், எதுவும் அதைப்பற்றிச் சொல்லவில்லை.
பின் சில காரணங்களால் என்னால் இப்போது போக முடியாதிருந்ததால் பயணத்தைத் தள்ளிப் போட்டாயிற்று. அவருடனான அடுத்த சந்திப்பின் போது நான் இப்போது போகவில்லை என்று சொன்ன போதும், அவர் தனக்கு மிகவும் பிடித்த இடம் இலங்கை என்று சொன்ன போது, "எப்படி? ஏன்" என்று கேட்டேன். அதற்கு அவர், தான் இப்போ கிட்டத்தட்ட 10-15 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் visiting professor ஆக இலங்கை சென்று வருவதாகவும், அங்கு மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுக்கவும் அத்தோடு பரீட்சிப்பதற்கும் செல்வேன் என்றார். தொடர்ந்து, "I love the place. It trully is an island of serendipity" என்றார். நானோ உடனே கொஞ்சமும் யோசிக்காமல், "I am sure many natives will have a different opinion" என்றேன். ஏன் அப்படிச் சொல்கிறாய் எனக் கேட்டதற்குச் சுருக்கமாக, நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள், போரால் எத்தனையோ ஆயிரம் மக்கள் உயிரிழந்து, சொந்தங்கள் இழந்து, அநாதரவாக‌ உள்ளனர். நாட்டில் அநேகமான மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மிகக் குறைவு, இப்படி எத்தனையோ சொல்லலாம். நீங்கள் அதிகமாகப் பார்த்த கொழும்பில்/மலைப் பிரதேசங்களில் கூட எத்தனையோ பேர் அடிப்படை வசதியே இல்லாமல் உள்ளனர். நடந்த/நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை.   ஆயினும் மேல்த் தர மக்களுக்கு அது island of serendipity ஆக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதோடு நீங்கள் ஒரு வெளிநாட்டு மருத்துவப் பேராசிரியர். உள்நாட்டு மருத்துவர்களையே கடவுளாக மதிக்கும் மக்கள் உங்களை இன்னும் அதிகமாகவே கவனித்திருப்பர், என்றேன். ஃபைவ் ஸ்டார் ஹொட்டல்களிலும் Resorts இலுமோ இருக்க வசதி படைத்தவர்களுக்கு உலகில் கிட்டத்தட்ட எந்த இடமும் சொர்க்கமாக இருக்கலாம். இலங்கையில் போர் நடந்த நாட்களிலும் நாம் மிகச் சந்தோசமாக இருந்தோம் என்று கூட எங்கோ அண்மையில் வாசித்திருந்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. போர் என்ன மகா பாரதம், இராமாயணம் கதைகளில் வருவது மாதிரி போர் புரிபவர்கள் மட்டும் எங்கோ சன சந்தடியற்ற பெரிய இடத்தில் சென்று போர் புரிவதாக எண்ணமோ தெரியவில்லை.

 
 
எனக்குத் தெரிந்த இன்னொரு உதாரணமும் சொன்னேன். எமது ஆய்வுகூடத்தில் சில வருடங்களுக்கு முன் இருந்த ஒரு இந்தியப் பெண் முனைவர் பட்ட மாணவி சிறு வயதிலிருந்து வளர்ந்த இடம் ஆபிரிக்காவில் இருக்கும் zambia  எனும் நாட்டில். அவ‌ரின் குடும்ப‌ம் அங்கு expatriates ஆக வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் ஒன்று. அவர் Zambia  ஆவைப் பற்றிச் சொன்னது: "அந்த வாழ்க்கை மாதிரி வரவே வராது.  It's the best place to live. I loved it there." என‌க்கு முத‌லில் கேட்ட‌போது ந‌ம்ப‌வே முடிய‌வில்லை. ஆபிரிக்காவில் அநேக‌மாக‌ ம‌க்க‌ளின் க‌ஸ்ட‌ங்க‌ளைத் தான் கேட்டிருக்கிறேன், அத‌னால் இப்ப‌டி ஒருவ‌ர் சொன்ன‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து.
 
அத‌ற்குச் சில‌ கால‌ங்க‌ளின் பின் என் த‌ங்கை த‌ன‌து internship இல் மூன்று மாதங்கள் வேறோர் நாட்டில் செய்வதற்காக Zambia விற்குச் சென்றாள். அவ‌ள் திரும்பி வ‌ந்து அந்நாட்டு குடி ம‌க்க‌ளின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன‌து மேற்சொன்ன‌ இந்திய‌ மாண‌வி சொன்ன‌த‌ற்கு முற்றிலும் மாறுப‌ட்ட‌து. அடிப்படை வசதிகள் எதுவுமே அநேகமான மக்களுக்கு இல்லை. Gloves, ஊசிகள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாம் இங்கு எவ்வளவு வீண் விரயம் செய்கிறோம். அங்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஊசி பாவிப்பதற்கே வசதி இல்லை. Wheel chairs வாங்க வசதி இல்லை. அதனால் பிளாஸ்டிக் கதிரைகளின் கால்களை வெட்டி அவ்விடங்களில் சைக்கிள்களின் சில்லுகளை வைத்து நடுவில் கம்பின் துணையுடன் கட்டி, அதையே wheel chairs ஆகப் பாவிப்பாற்கள். நாள்தோரும் பெண்கள் தம் குழந்தைகளைப் பின்னால்/முன்னால் வைத்து துணிகளால் கட்டிக் கொண்டு எத்தனையோ மைல்கள் நடந்து போயே தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவர். போதுமான உணவு மக்களுக்கு/ சிறுவர்களுக்கு இல்லை. பலர் மருத்துவ சாலைக்கு மிகத் தூரத்தில் இருப்பதால், உடன் வர வசதிகள் இல்லாமையால் தேவையான சிகிச்சைகள் உடனுக்குடன் பலருக்கு வழங்க முடியாது. எத்தையோ குழந்தைகளுக்குப் போசாக்குக் குறைபாடு. அது மட்டுமல்ல அனைத்து சுற்றுலா உட்பட அனைத்துப் பெரிய வணிகங்களும் மேலைநாட்டவரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அவற்றின் வருமானம் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதில்லை. இப்படி நிறையச் சொன்னாள்.
 
இதையும் என் மேற்பார்வையாளருக்குச் சொல்லப் புரிந்து கொண்டார்.

Anyway, The moral of this story is: Do not judge the status of a country based on the opinions of the previleged few. THAT'S ALL!.

0 comments: