நான் மரண தண்டனைக்கு எதிரானவள். ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல. வீட்டில் கஸ்டம் என்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து எத்தனையோ பெண்கள், சிறுமிகள் உட்பட, அவர்களின் குடும்பங்களால் வேலைக்கு அனுப்பப் படுகிறார்கள்.
ரிசானாவும் சவுதிக்குப் போகும் போது ஒரு சிறுமியே. வெறும் 17 வயது மட்டுமே. 17 வயதில் அவள் வேலை பார்க்கும் வீட்டில், அவளின் கவனத்தில் இருந்த குழந்தை இறந்து விட்டது. குழந்தையின் அம்மா, ரிசானா தான் நெரித்துக் (stragulation) கொலை செய்துவிட்டாள் என முறையிட, ரிசானாவோ குழந்தை பால் குடிக்கும் போது திணரியதாலேயே (choking) குழந்தை இறந்தது என்று சொன்னாள். 17 வயது, குழந்தைகளைக் கவனிக்கும் அனுபவமற்ற, முதலுதவி எதுவும் தெரியாத சிறுமிக்கு குழந்தை திணரும் போது என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தார்களா தெரியவில்லை.
ஏன் அதிகாரிகள் குழந்தையின் அம்மாவை நம்பி, ரிசானா சொன்னதை நம்பவில்லை?
ஏன் இறந்த குழந்தையில் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை?
முதலில் தான் கொலை செய்தேன் என அரபியில் எழுதப்பட்ட தாளில் கையொப்பமிட்ட ரிசானா, பின் தன்னைக் கட்டாயப்படுத்தி அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினர் என்று சொல்வதை ஏன் யாரும் விசாரிக்கவில்லை?
ஏன் அவளை முதலில் கேள்வி கேட்கும் போது அவளுக்கு ஒரு வழக்கறிஞரைக் கொடுக்கவில்லை? பின் அவளுக்காகக் கொடுக்கப்பட்ட வழக்கறிஞரை அவள் ஒரு போதும் பார்க்கவும் இல்லை, அந்த வழக்கறிஞருடன், தான் செய்ததைப் பற்றிக் கதைக்கவும் இல்லை. பின் எப்படி இவளுக்காக அவரால் வாதாட முடியும்? என்ன நியாயம் இது?
இன்னொன்று தெரியுமா? சவுதியில் மரண தண்டனைகளுக்கு தடயவியற் சான்றுகள் ஒன்றும் செல்லுபடியாகாதாம். சாட்சிகளையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களையும் மட்டுமே வைத்தே முடிவு செய்வார்களாம்.
குற்றம் நடந்த போது அவள் ஒரு சிறுமி, Convention on the Rights of the Child இன் படி குற்றம் செய்யும் போது 18 வயதிற்குக் கீழ் இருக்கும் ஒருவருக்கு மரணதண்டணை வழங்க முடியாது. அப்படியே வயதில் சந்தேகம் இருந்தால், வயதை நிரூபிக்குமட்டும் குற்றம் செய்தவரை 18 வயதிற்குக் கீழானவர் என்றே கருத வேண்டும்.
இனி எதுவும் செய்ய முடியாது. தனது குடும்பத்திற்காக சிறுமியாக, மொழி தெரியா, அறிந்திராத நாட்டிற்கு வந்ததன் வினை.
எத்தனை கொடூரமாக சவுதியில் இதை நிறைவேற்றுகிறார்கள் என்று தற்போது தமிழ்நாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் மருத்துவ மாணவரான ஒரு பிரித்தானிய இந்தியத் தமிழன் இங்கு சொல்கிறார். தயவு செய்து போய் வாசியுங்கள்.
A few hundred metres away is a plaza between the mosque and the fort. It’s ringed by a few benches and has palm trees. Sometimes there is a souk (Market) there. But to the more trained eye there is one thing you should notice.
There is a single drain in the middle. You will be advised to visit during the week (Saturday to Thursday) and avoid it on Friday. It’s not the rush really. You see this place goes by many names. Al Safa Square or Al Dirah Square. The Square of The Grand Mosque. The Chop Chop Square.
You are now standing on the execution ground for the Kingdom of Saudi Arabia, where around 2 people a week meet their gruesome and public end. It is one of the last places you can witness an execution or public punishment. It is also where judicial amputation takes place. If you were to go on Friday you can expect front row seats to such a spectacle, in the same vein as the women who used to take their knitting to the guillotine. And it’s also where Rizana Nafeek, a Sri Lankan maid; was beheaded on Wednesday. At the time of her alleged crime she was a minor who shouldn’t even be HIRED let alone executed.
சவுதியில் கஜ்ஜுக்குச் சென்று வந்த பலரின் மெய் சிலிர்த்த அனுபவங்களைப் படித்திருக்கிறேன். அந்த அனுபவங்களில், பெரிய பள்ளிவாசலிற்கும் கடைத் தொகுதிக்கும் இடையிலுள்ள ஒரு பொதுசனம் நடமாடும் இடத்தில் இருக்கும், Chop Chop Square ஜப் பற்றி யாரும் சொன்னதாக நினைவில்லை. I wonder why?
Shame on you Kingdom of Saudi Arabia!
Another Related Post:
றிசானா நபீக் : மனிதாபிமானம் கொன்ற மதவாதத்தின் பலிகடா
Another Related Post:
றிசானா நபீக் : மனிதாபிமானம் கொன்ற மதவாதத்தின் பலிகடா
1 comments:
நியாயமான நிறைந்த கேள்விகளை கேட்டுள்ளீர்கள் காட்டுமிராண்டி சட்டங்களை வைத்து பேய்கள் ஆட்சி செய்யும் சவூதி அரேபியாவில் உங்கள் கேள்விகளுக்கு இடமில்லை.
//சவுதியில் கஜ்ஜுக்குச் சென்று வந்த பலரின் மெய் சிலிர்த்த அனுபவங்களைப் படித்திருக்கிறேன்//
சவூதி ஹஜ் பயண சிறந்த நகைசுவை கட்டுரைகள் தமிழில் இருக்கிறது. அங்கே பிற மதத்தவர்களின் நானும் ஹஜ் போகணும் என்ற ஆசை வந்திடுச்சு, நானும் ஹஜ் யாத்திரை போனாப்போல் இருந்திருச்சு என்று நிறைய நகைசுவை பின்னோட்டங்களையும் இரசிக்கலாம்.
Post a Comment