Thursday, January 10, 2013

அந்த ஆணாக இருக்காதீர்கள்!

பாலியல் வன்முறையைக் குறைப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட அநேகமானவர்கள் கொடுக்கும் அறிவுரை பாதிக்கப்படுவோருக்கே. வெளியில் தனியே போகாதே, இரவில் போகாதே, இப்படி உடை உடு, etc.
இதுவரைக்கும் இந்த அறிவுரைகள் வேலை செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.


அதே நேரம் கனடாவின் Edmonton நகரில் இரு வருடங்களிற்கு முன் Sexual Assault Voices of Edmonton (SAVE) கூட்டணியால் Don't be that guy என்றொரு பிரச்சாரம் தொடங்கினார்கள். அநேகமான பிரச்சாரங்களிர்கும் இதற்கும் இடையேயான மிக முக்கிய வித்தியாசம் என்ன தெரியுமா?

இவர்களின் பிரச்சாரங்கள் குற்றம் இழைக்கக்கூடியவர்களுக்கானது. பாதிக்கப்படக்கூடியவர்களுக்கன்று. அவ‌ர்க‌ளே சொல்கிறார்க‌ள், "Our campaign places responsibility where it belongs — on the perpetrators".
 
அப்போது இலண்டனில் இருந்து வேளிவந்த ஒரு ஆய்வு, ஆய்வில் பங்கு பற்றிய 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடையேயான 48% ஆண்கள், ஒரு பெண் அதிகம் குடித்து, அதனால் அவளால் சம்மதம் தெரிவிக்க முடியாவில், தாம் அவளுடன் உறவு கொண்டால் அது பாலியல் வன்புணர்வு ஆகாது என்று நம்பியது இப்பிரச்சாரங்கள் தொடங்க ஒரு காரணம். இந்த‌ SAVE கூட்ட‌ணியில் எந்த‌ச் சாமியுமோ அல்ல‌து பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளைப் ப‌ற்றிய‌ எந்த‌ அறிவும் அற்ற‌ அர‌சிய‌ல்வாதியோ இல்லை. SAVE கூட்டணியில் இருப்பவர்கள்: the Sexual Assault Centre of Edmonton, the Edmonton Police Service, the University of Alberta Sexual Assault Centre, Saffron Centre of Sherwood Park, Convenant Health Prevention of Alcohol Related Trauma in Youth (PARTY Program), Responsible Hospitality Edmonton, Red Cross, Prostitution Awareness and Action Foundation of Edmonton (PAAFE), University of Alberta Women's Studies, and community advocates.
 
இப்பிர‌ச்சார‌ அட்டைக‌ளில் மிக‌ வேளிப்ப‌டையான‌ மொழியில், ச‌வாலான‌ ப‌ட‌ங்க‌ளுட‌ன் 'அவ‌ளால் இல்லை என்று சொல்ல‌ முடிய‌வில்லை என்ப‌த‌ற்காக‌, அவ‌ள் ஓம் என்று சொல்கிறாள் என்று அர்த்த‌மில்லை' போன்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ளும் அத‌ன் கீழ் ஒவ்வொரு அட்டையிலும் 'முழுதான‌ த‌ன்னிச்சையான‌ ச‌ம்ம‌த‌மின்றிய‌ பாலுற‌வு = பாலிய‌ல் வ‌ன்முறை' என்ற‌ சொற்ற‌ட‌ர்க‌ளும் உண்டு. இவ‌ற்றைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ங்க‌ளில், ர‌யில் நிலைய‌ங்க‌ளில், ம‌ற்றும் ப‌ல‌ பொது இட‌ங்க‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்தின‌ர்.
இத‌னால் க‌ட‌ந்த‌ இரு வ‌ருட‌ங்க‌ளில் பாலிய‌ல் வ‌ன்முறை ச‌ம்ம‌ந்த‌மான‌ முறைப்பாடுகள் எத்தனையோ வருடங்களுக்குப் பின் முத்ன முதலாக‌ 10% த்தால் குறைந்துள்ள‌ன‌. இது ஒரு பெரிய‌ மாற்ற‌ம். இந்த‌ மாற்ற‌த்தைப் பார்த்து க‌ன‌டாவின் ம‌ற்றைய‌ ந‌க‌ர‌ங்க‌ளும் வேறு நாடுக‌ளும் கூட‌ இம்மாதிரிப் பிர‌ச்சார‌ங்கள் செய்ய‌‌ எண்ணுகின்ற‌ன‌வாம்.

 
இந்தியாவில் மது பயன் படுத்த வேண்டாம். சும்மா பெண்ணாய் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை. அடிப்படைப் பாலியல் அறிவே பலரிடம் இல்லை. அதனால் இப் பிர‌ச்சார‌த்தை இச் ச‌மூக‌த்திற்கு ஏற்ற‌ வ‌கையில் மாற்றி, குற்ற‌ம் செய்ய‌க்கூடிய‌வ‌ர்களை நோக்கி இப்பிர‌ச்சார‌த்தைச் செய்தால் ப‌ல‌ன் கிடைக்கலாம்.

1 comments:

வேகநரி said...

குற்ற‌ம் செய்ய‌க்கூடிய‌வ‌ர்களை நோக்கி செய்யபடும் பிரசாரங்களே பயன் அளிக்கும்.
Don't tell me how to dress, Tell them not to rape
பெண்களிடையே ஏற்பட்டுள்ள நல்ல விழிப்புணர்வு.