Saturday, November 26, 2011

Sometimes Words Do Speak Louder Than Actions



ஆண்களே - be part of the solution - ஒரு போதும் பெண்களுக்கெதிராக வன்முறை செய்யவோ, அவ்வாறான வன்முறையை மன்னிக்கவோ அல்லது பார்த்தும் பார்க்காத மாதிரிப் போகவோ மாட்டேனென உறுதி கூறுங்கள்.  Do swear to never commit, excuse or remain silent about violence against women. உங்களை ஒருவர் எப்படி நடத்தவேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே பெண்கள் உட்பட எல்லோரோடும் பழகுங்கள்.

Friday, November 25, 2011

பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறைகளை ஒழிப்போம் - It's White Ribbon Day to end the Violence Towards Women


பெண்களுக்கெதிரான வன்முறை பல சமூகங்களில் மிகப் பரவலாக நடக்கும் பிரச்சனை. உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண்கள் அவர்கள் பெண்களாக இருப்பதால் மட்டும் வன்முறைக்குட்படுத்தப்படுகிறார்கள். உலகில் 15 க்கும் 44 வயதிற்கும் உட்பட்ட பெண்களில் போர், புற்றுநோய்/மலேரியா போன்ற நோய்கள், விபத்துகள் ஆகிய காரணங்களால் மொத்தமாக இறந்த பெண்களை விட அவர்களுக்கெதிரான வன்முறையால் இறந்தவர்களே மிக அதிகம். மிக அடிப்படையான மனித உரிமை மீறல் இது.
எமது சமூகத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய மூடநம்பிக்கை, பெண்களே தமக்குத் தாமே இவ்வன்முறைகளை வரவழைத்துக் கொள்கிறார்கள் என்பதே. குற்றம் இழைத்தவன விட்டு விட்டு பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாக்குவது எந்தவிதத்திலும் நியாயமானதல்ல. Nobody ever asks or deserves to be abused this way. போர்ச்சூழலில் பெண்களுக்கெதிராக நடத்தப்படும் வன்முறைகளை விட‌, பாலியல் வன்புணர்வு உட்பட அநேகமான வன்முறைகள் பெண்களின் கணவனாலேயோ அல்லது அவளுக்குத் தெரிந்த வேறொரு ஆணாலேயே நடத்தப்படுகிறது.
வீடுகளில் நடக்கும் வன்முறைகள் எமது சமூகத்தில் கலாச்சாரத்தின் பெயரில் இன்னும் கூடுதலாக மூடி மறைக்கப்படுகிறது. எத்தனையோ பேர் இன்னும் இதை சாதாரணமாக வீடுகளில் நடக்கும் விடயமாகவே கருதுகின்றனர். அநேகமாக வன்முறைக்குட்படும் பெண்கள் வெளியில் யாருக்கும் தெரியாமல் மெளனமாகவே அவதிப்படுகின்றனர். பல சமயங்களில் நிலமை படு மோசமாகப் போய் காவல் துறையின் மூலமே women refuge க்கு அனுப்பப்படுகின்றனர். அதன் பின் கூட அவர்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்பாமல் வைத்திருப்பது மிகக் கடினம். பெண்களின் ஒரே இலட்சியம் திருமணம் முடிப்பதும் என்ன நடந்தாலும் சாகும் வரையும் அப்பந்தத்தை விட்டு விலகாமல் இருப்பதுவுமே என்று பிறந்ததிலிருந்து ஓதி வளர்க்கப்படும் சமூகத்தில் இது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. இவ்வன்முறை நடக்கும் வீடுகளில் வாழும் குழந்தைகளும் இதனால் மிகவும் மனநிலை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலும் அவர்களும் இவ்வன்முறைகளுக்குட்படுத்தப்படுகிறார்கள்.
Overwhelmingly இம்மாதிரியான வன்முறைகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. வன்முறை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அதனால் இந்த white ribbon day ஆண்களின் அடிப்படைச் சிந்தனையில் மாற்ற‌த்தைக் கொண்டுவருவதற்காகவே உருவாக்கப்பட்டது. ஒரு சமூகமாக ஒவ்வொருவரும் இவ்வன்முறைக்கு எதிராக எழுந்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்.

Saturday, November 12, 2011

தனிச்சலுகையின் நோயியல் - The Pathology of Privilege

Tim Wise is brilliant here. அவர் இந்த உரையில் குறிப்பிடுவது வெள்ளை இனத்தவராக இருப்பதனால் மட்டும் ஒருவருக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி. இதில் சொல்லப்படும் அநேகமான கருத்துகள் ஆண்களாக இருப்பதால் மட்டும், சமூகத்தால் உயர் சாதிகள் எனக்குறிப்பிடப்படும் கூட்டத்தில் பிறந்ததனால் மட்டும், even சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் கூட்டத்திற்குள் பிறந்ததினால் மட்டும் (male/female) ஒருவருக்குக் கிடைக்கும் தனிச்சலுகைகளுக்கும் மிகச் சரியாகப் பொருந்தும். Think about it.

Friday, November 11, 2011

ஒரு பெண்ணாக இருப்பதற்கான‌ தண்டனையை எவ்வாறு தவிர்க்கலாம் (சவுதி அரேபியாவில்)? A video by Amnesty International

Tuesday, November 8, 2011

DNA, மரபணு, நிறவுருக்கள், மரபியல் விதித்தொகுப்பு - அடிப்படை அறிவியலும் கொஞ்சம் போலி அறிவியலும்






மூன்றெழுத்து மரபியல் சொற்களைக் codons என்று கூறுவர். விளங்குவதற்கு இலகுவாக இருக்கும் என்பதற்காகவே இவற்றை சொற்கள், இவற்றின் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பைக் கொண்ட மரபணுவை ஒரு வாக்கியம் என்று கூறுகிறோம். அதற்கும் மேல் ஒரு மொழியின் கட்டமைப்பிற்கும் DNA sequences க்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை.

அண்மையில் யாரோ ரஸ்ய விஞ்ஞானிகள், மரபியல் தகவல்கள் மொழிகளின் இலக்கணவிதிகளைப் பின்பற்றுகின்றன. அதனால் மொழிகள் அனைத்தும் மரபணுக்களின் உச்சரிப்புக்களாக இருக்கின்றனவாம்  எனக் கண்டுபிடித்துள்ளார்கள் என‌ ஒரிரு இடங்களில் வாசித்தேன். அதோடு DNA க்கும் ஆன்மீகத்திற்கும் கூட எதோ தொடர்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தனர். இதற்கு எந்தவித ஆதாரங்களும் இருப்பதாக‌த் தெரியவில்லை. இந்த ஆராய்ச்சியகளைச் செய்ததாகக் கூறப்படும் Pjotr Garjajev இன் பெயரிலோ, இவ்வாராய்ச்சியைப் பற்றியோ எந்தவொரு அறிவியல் பிரசுரிப்புகளையும் காண முடியவில்லை. பல ஆன்மீகத் தளங்களிலும் சில போலி மருத்துவர்களின் தளங்களிலுமே காணக்கிடைத்தது. DNA is an amazing molecule by itself. இந்த மாதிரிக் கட்டுக் கதைகள் எதுவும் தேவையில்லாமலே மரபியல் எவ்வளவோ வியக்கத்தகு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஏன் தான் ஆட்கள் இம்மாதிரிக் கற்பனைகளை உண்மை என்று உலவ விடுகிறார்களோ தெரியவில்லை.



அடுத்து மரபணு மாற்றங்களைப் பற்றியும் இம்மாற்றங்களுக்கும் பரிணாமத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் பார்க்கலாம்.

Friday, November 4, 2011

வெளிர் நீலப் புள்ளி - எமக்குத் தெரிந்த ஒரே வீடு



இது 1990 ஆம் ஆண்டில் voyager 1 எனும் விண்வெளியூர்தியால், பூமியிலிருந்து கிட்டத்தட்ட 6 பில்லியன் கிலோமீற்றர் தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். பரந்த அண்டவெளியில் பூமி ஒரு மிக மிகச் சிறிய புள்ளியாகவே தெரிகிறது. Vayager 1 தன் வேலையை நிறைவேற்றி விட்டு solar sytem இலிருந்து வெளிக்கிடும் போது வானியலாளர் Carl Sagan இன் வேண்டுகோளிற்கேற்ப,இப்படம் எடுக்கப்பட்டது. Carl Sagan ஒரு நல்ல வானியலாளர் மட்டுமல்ல, சிறந்த சிந்தனையாளரும் கூட. அறிவியலை மக்களுக்குக் விளக்க பல முயற்சிகள் செய்தவர். அதற்காகப் பல புத்தகங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் செய்தவர். பரந்த சிந்தனையும் எமது அறிந்தவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் நாம் இன்னும் அறிய எந்தளவு முக்கியமென்பதை நன்கறிந்தவர். இவர் தனது 62 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவரின் பிறந்த நாள் நவம்பர் 9. 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 6ஆம் திகதி Carl Sagan க்கும், அறிவியலுக்கும், அறியும் ஆர்வத்திற்குமாக Carl Sagan Day கொண்டாடப்படுகிறது.
அவரது Pale Blue Dot: A Vision of the Human Future in Space என்ற 1994 புத்தகத்தில் இவ்வாறு எழுதியதே பின்வருவது.  It's amazing.




இந்த வெளிர் நீலப் புள்ளியைப் பாருங்கள். அது இங்கே. அது தான் வீடு. அது தான் நாம். அதில் தான் நாம் அன்பு செலுத்துபவர்களும், எமக்குத் தெரிந்தவர்களும், நாம் கேள்விப்பட்டவர்களும், இதுவரை வாழ்ந்த/வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லா மனிதர்களும் இருந்த/இருக்கும் இடம்.
 
எமது ஒட்டுமொத்த மகிழ்ச்சி, துன்பம், ஆயிரக்கணக்கான முனைப்பான மதங்கள்,சித்தாந்தங்கள், வர்த்தகக் கோட்பாடுகள் எல்லாவற்றுக்கும்;
இதுவரைக்கும் வாழ்ந்த/ வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு வேட்டைக்காரனுக்கும் ஒவ்வொரு உணவு தேடுபவனுக்கும்;
ஒவ்வொரு கதாநாயகனுக்கும்; ஒவ்வொரு வில்லனுக்கும்; ஒவ்வொரு பண்பாடு/கலாச்சாரத்தை ஆக்கியோருக்கும் அழித்தோருக்கும், ஒவ்வொரு அரசனுக்கும்; ஒவ்வொரு விவசாயிக்கும்; ஒவ்வொரு சோடி இளம் காதலர்களுக்கும்; ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும்; ஒவ்வொரு நம்பிக்கையளிக்கும் குழந்தைக்கும்; ஒவ்வொரு கண்டுபிடிப்பாளருக்கும்; தேச ஆராய்ச்சியாளருக்கும்; ஒவ்வொரு போதிக்கும் ஆசிரியருக்கும்; ஒவ்வொரு ஊழல் செய்யும் அரசியல்வாதிக்கும்; ஒவ்வொரு சூப்பர் ஸ்டாருக்கும்; ஒவ்வொரு உயர்ந்த தலைவருக்கும்;ஒவ்வொரு மதகுருவுக்கும்; ஒவ்வொரு பாவிக்கும்  இதுவே வீடு.

சூரியக் கீற்றால் தொங்கிகொண்டிருக்கும் ஒரு தூசுத் துகளே எம் வீடு. மிகப் பரந்த அண்டத்தில் பூமி ஒரு மிக மிக‌ச் சிறிய மேடையே. இந்தச் சிறு புள்ளியின் ஒரு சிறு கூற்றை கணப்பொழுது ஆழ்வதற்காக பல படைத்தலைவர்களாலும் சக்கரவர்த்திகளாலும் சிந்தப்பட்ட இரத்த ஆறுகளைப் பற்றிச் சிந்தியுங்கள். இப்புள்ளியின் ஒரு மூலையில் வாழும் குடிகளுக்கு அவர்களில் இருந்து பிரித்தரியமுடியாத மற்றொரு மூலையில் உள்ள குடிகளால் நடத்தப்படும் முடிவில்லாத கொடூரங்களை, அவர்களுக்கிடையில் அடிக்கடி ஏற்படும் விளக்கமின்மையை, ஒருவரை ஒருவர் கொல்வதற்கு அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை, அவர்களுக்குள் சுடர் விட்டெரியும் வெறுப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். எமது நிலை, கற்பனையேயான எமது சுய முக்கியத்துவம், இந்தப் பிரபஞ்சத்தில் எமக்கு சிறப்புரிமை இருக்கென்னும் மாயை, இவை அனைத்தையும் இந்த வெளிரிய நீலப் புள்ளி கேள்விக்குள்ளாக்குகிறது. எமது கோள், சூழ்ந்திருக்கும் அபாரமான அண்டவெளி இருட்டில் இருக்கும் ஒரு தனிமையான சிறு துகள். எமது தெளிவற்ற நிலையில், எம்மிடம் இருந்து எம்மைக் காப்பாற்ற, இந்த அண்ட வெளியில் எங்காவதிருந்து எமக்கு உதவி வருமென்பதற்கு எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதுவரைக்கும் எமக்குத் தெரிந்தமட்டில் பூமியில் மட்டுமே உயிர்கள் விருத்தியாகியுள்ளன. அண்மையில் எம்மால் வேறொரு இடத்திலும் சென்று வாழ முடியாது. வேறிடங்களுக்குப் நிச்சயமாகப் போய்வரலாம், ஆனால் நிரந்தரமாக வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இன்னும் இல்லை. விருப்பமோ இல்லையோ பூமியை மட்டுமே எம்மால் இப்போதைக்கு ஆழ முடியும்.  எம்மில் அடக்கமான பண்பை விருத்தியாக்கும் பயிற்சியாக‌ வானியல் இருக்குமெனச் சொல்லப்படும்.  மனிதரின் மடைத்தனமான இறுமாப்பைப் பறைசாற்ற தொலைவிலிருந்து தெரியும் எமது உலகத்தின் இந்த உருவத்தைப் போல் வேறெதுவும் இருக்கமுடியாது. இந்த உருவம் எனக்கு, நாம் ஒவ்வொருவரையும் அன்பாக நடத்தவும், எமக்குத் தெரிந்த ஒரே வீடான இந்த வெளிர் நீலப் புள்ளியை பேணிப் பாதுகாக்கவுமான எமது பொறுப்பை வலியுறுத்துகிறது. இதுவே எமக்குத் தெரிந்த ஒரே வீடு.

Tuesday, November 1, 2011

what’s science up to?

இந்த விடயத்தில் அமெரிக்கர்களுக்கும் (குறிப்பாக republicans) எம்மவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லவே இல்லை. :(


எல்லா உயிர்களினதும் பொது மொழி - DNA - ஒரு அறிமுகம்

பரிணாமத்தில் அடுத்த பகுதியாக‌ மரபணுக்களையும் மரபணு மாற்றங்களையும் பற்றி பார்க்குமுன் அவற்றைப்பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருப்பது முக்கியம். பல தடவை DNA என்றால் என்ன? அதன் கட்டமைப்பு எப்படி இருக்கும்? என்றெல்லாம் எழுதத்தொடங்கி, பின் நான் எழுதியது ஏதோ பள்ளிப் பாடப் புத்தகத்தில் வாசிப்பது போன்று இருந்ததாலும், அது ஒரு சுவாரசியமான வாசிப்பாக வாசிப்பவரின் மனதில் பதியும் போல் எனக்குத் தோன்றாததாலும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இந்த அடிப்படைத் தகவல்களை இலகுவாகவும் அதே நேரம் பாடம் படிப்பது போலல்லாமலும் இருக்க வேண்டுமென நினைத்தேன். அண்மையில் ஒரு you tube video பார்த்துக்கொண்டிருக்கும் போதே, தமிழில் காணொளியாகச் செய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. நானாக images எல்லாம் வடிவமைக்க நேரம் இப்போ நிச்சயமாக இல்லை (might give it a go during my maternity leave :)). பல இடங்களில் நல்ல படியாக மரபியலின் அடிப்படையை விளக்கும், கிட்டத்தட்ட நான் எழுத நினைப்பதைச் சொல்லும் காணொளிகளைத் தேடிக்கொண்டிருந்த்தேன். அந்தத் தேடலில் கிடைத்த‌ University of California, Riverside இலிருந்து செய்யும் திட்டம் பிடித்திருந்தது. அவர்களின் காணொளிகளையே நான் மொழிமாற்றம் செய்து இங்கு போடலாமா என அவர்களிடம் அனுமதி கேட்ட போது, மிகவும் பெருந்தன்மையுடன், தாராளமாகச் செய் என்றுவிட்டார்கள். அவர்களின் கடின உழைப்பால் உருவான காணொளிகளில் சொல்லப்படும் செய்திகளை மட்டுமே தமிழில் மாற்றியுள்ளேன். இந்த முயற்சியில் ஏதாவது பயன் இருக்கிறதா/ இதையும் விட நன்றாகச் செய்யலாமா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

மக்களுக்கு அறிவியலைப் பற்றிய ஒரு அடிப்படையான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அண்மையில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில்சொல்லப்படும் மிகப் பிழையான அறிவியல் விளக்கங்களை மக்கள் உண்மை என எடுத்துக் கொள்வதைப் பார்த்தபின் (முகுந்த் அம்மாவும் தெகாவும் அழகாகச் சொல்லியுள்ளார்கள்), இந்த அடிப்படை அறிவு மிகவும் அவசியம் என நம்புகின்றேன்.


P.S. இப்போ இங்கு இலைதுளிர் காலமாதலால் எனக்கு சரியான hayfever. அதற்கு சாதாரணமாக antihistamine உம் steroid sparay உம் எடுத்தாலே எனக்கு வேலை செய்யும். கர்ப்ப காலத்தில் steroid spray எடுப்பது நல்லதில்லை என்பதால், I pretty much have a blocked noce 24/7. :( அதனால் இதற்கு ஒலிவடிவம் கொடுத்தது என் துணைவன். I know the quality of the recording can be improved a lot and we are working on it. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் ஒரிரு காணொளிகளை ஏற்றுகிறேன்.