"இங்க வாங்கோ பபா ஒண்டு சொல்லோணும்!அம்மான்ட tummy க்குள்ள ஒரு குட்டி T.rex இருக்கு." என்று அகரன் தான் முதலில் எமது குடும்பத்தாரிடம் தெரிவித்தான். :) உறுதிப்படுத்தியபின் அவனிடம் சொன்ன போது அதை பெரிய serious ஆக எடுத்ததாகத் தோன்றவில்லை. ஆனால் இப்ப அநேகமாகக் கதைப்பது இதைப்பற்றித் தான். அடுத்த நாள் Kindy முடியக் கூட்டச் சென்றபோது அவனது ஆசிரியைகள், "So is the rumour we are hearing from Aharan true?" I was like "what did he tell you?" That you have a baby in your tummy!
குட்டி பபா எப்ப வெளியே வரும்?
குட்டி பபா boy ஆ girl ஆ? ஆனால் யாரும் உங்களுக்கு தங்கச்சியா தம்பியா வேணும் எனக் கேட்டால் வரும் பதில், "பபாக்கு நாய்க்குட்டி தான் வேணும்." ?! (தன்னை பபா என்றே சொல்வான்.)
குட்டி பபா ஏன் அம்மாவின் tummy இல் மட்டும் இருக்கு, அப்பாவின் tummy இல் ஏன் இல்லை?
குட்டி பபா என்ன சாப்பிடும்? இதற்கு நான் "குட்டி பபாக்கு இன்னும் சாப்பிடத்தெரியாது. அம்மாவின் tummy இலிருந்து பபாவின் tummy க்கு ஒரு குழாய் இருக்கு. அம்மா சாப்பிடும் சாப்பாடு அந்த குழாயால் பபாவிற்குப் போகும் என்றேன். அதோடு பபா தண்ணியிலே தான் இருந்து வளர்கிறது என்றேன்". அண்மையில் ஒரு சித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தான், "சித்தி, அம்மான்ட tummy இல நிறையத் தண்ணி இருக்கு. குட்டி பபா அதிலதான் swim பண்ணிட்டிருக்கு".:)
எங்காவது நாம் வெளியில் போய் திரும்பியதும் யாருடன் போனனீங்கள் என்று கேட்டால் வரும் பதில், "அம்மாவோட, அப்பாவோட, குட்டி பபாவோட." :)
அதோடு பபா தான் குட்டி பபான்ட அண்ணா அன்றும் எல்லோருக்கும் அறிவித்தாயிற்று.
"நான் இனி சின்னன் இல்லை. வளந்திட்டன். நான் அண்ணா!"
it's quite amazing to see his excitement.
6 comments:
அம்மாவோட, அப்பாவோட, குட்டி பபாவோட." //
cute pa..:)
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் :)
மிக்க நன்றி கயல் :)
வாழ்த்துக்கள் அன்னா...எப்போ ஜூனியர் டியூ?
மிக்க நன்றி முகுந்த் அம்மா. Due date: 7th March
7th March
mm .. m.. ஓ! என் இளைய மகளின் பிறந்த நாளுக்கு அடுத்த நாளா ..
Post a Comment