Thursday, October 13, 2011

நோபல் சமாதானப் பரிசு 2011

இம்முறை நோபல் சமாதானப் பரிசு அற்புதமான, துணிவான, திறமையான இரு ஆபிரிக்கப் பெண் புரட்சியாளர்களுக்கும் ஒரு மத்திய கிழக்கு நாடான Yemen பெண்ணுக்கும் கிடைத்துள்ளது.

Ellen Johnson Sirleaf - Liberia வின் முதல் பெண் ஜனாதிபதி


Leymah Gbowee - மேற்கு ஆபிரிக்காவில் பெண்களின் அரசியல் சக்தியைக் கூட்டுவதற்காகப் பாடுபடுவர்.



Tawakul Karman - Yemen பெண் விடுதலைப் புரட்சியாளர்


சமூகத்தின் எல்லா நிலைகளையும் விருத்தி செய்ய, ஆண்க‌ளுக்கு ச‌மமாக‌ப் பெண்க‌ளுக்கும் வாய்ப்புகளும் செல்வாக்கும் இல்லையெனில் உலகில் மக்களாட்சியையும் நிலையான சமாதானத்தையும் உருவாக்க முடியாது.

Ellen Johnson Sirleaf ஆபிரிக்காவின் முத‌லாவ‌து ம‌க்க‌ளால் வாக்க‌ளித்து வ‌ந்த‌ பெண் ஜ‌னாதிப‌தி. ப‌த‌விக்கு வ‌ந்த‌து முத‌ல் Liberia வின் ச‌மாதான‌த்திற்கும் பொருளாதார‌, ச‌மூக‌ முன்னேற்ற‌த்திற்கும், பெண்க‌ளின் நிலையைப் ப‌ல‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கும் மிகுந்த‌ ப‌ங்க‌ளிப்பு செய்துள்ளார்.Leymah Gbowee இன‌, ம‌த‌ பாகுபாடுக‌ளையும் தாண்டி ப‌ல‌ பெண்க‌ளைத் திர‌ட்டி போரை முடிவுக்குக் கொண்டுவ‌ர‌வும் பெண்க‌ளை வாக்க‌ளிக்க‌ச் செய்ய‌வும் பாடுப‌ட்டார். பின் பெண்க‌ளின் நிலையை உய‌ர்த்த‌ப் போரின் போதும் அத‌ன் பின்னும் வேலை செய்தார்.

அரபியப் புரட்சியின் முன்னும் புரட்சியின் போதும் மிக‌க் க‌டின‌மான‌ சூழ்நிலைக‌ளிலும் பெண்க‌ளின் உரிமைக‌ளுக்காக‌வும் ம‌க்க‌ளாட்சிக்காக‌வும் சமாதான‌த்திற்காக‌வும் நடந்த புரட்சிகளிக்கு Tawakul Karman முன்னின்று தலைமை தாங்கினார். இப்பெண்கள் உலகின் பல நாடுகளில் உள்ள பெண்களின் ஒடுக்குமுறியை முடிவிற்குக் கொண்டுவரவும் மக்களாட்சியையும் சமாதானத்தையும் நிறுவப் பெண்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்த்தவும் உதவுவார்கள் என நோபல் பரிசு செயற்குழு நம்புகின்றது.

0 comments: