Friday, July 15, 2011

மணமகள் பற்றாக்குறையா? காரணம் என்ன?

xx% பெண்கள் கட்டுங்கடங்காமல் திரிவதால் தான் நாடு உருப்படாமல் போயிற்று, பெண்களுக்கெல்லாம் சம உரிமை வந்தாயிற்று, இன்னும் சும்மா தொன தொணக்க வேண்டாம், பெண்கள் அதிகம் படிப்பதால் தான் ஆண்களின் வாழ்வு நாசமாயிற்று, வீடு அறம்புறமாயிற்று. இப்படியெல்லாம் சொல்பவர்களிடம் முதலில் கேட்பது - நீங்கள் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எப்படிப் பெண்கள் அதிகம் படித்ததால் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள் என்கிறீர்கள்? எங்கையாவது இதற்கெல்லாம் ஆய்வுகள் செய்தார்களா?

அநேகமாகக் கிடைக்கும் பதில் - இதற்கெல்லாம் ஆய்வா - தேவையேயில்லை. எனது நண்பனின் நண்பனின் நண்பனுக்கு நடந்திருக்கென்று சொன்னவன். ஒரு பத்திரிகையில் ஒரு சம்பவம் வாசித்தனான். இதுக்கும் மேலால் புள்ளி விபரங்கள் என்ன சொல்ல முடியும்?! Indeed idiot, What other evidence could you possibly want other than these powerful anecdotes? Women are on the loose and men's world is crumbling - you want to talk to me about statistics?????

YES! I DO! Please bear with me!

புள்ளி விபரங்களால் என்ன சொல்ல முடியும் என்று பார்க்கலாமா?
  • உலகில் பெண்களின் வாழ்விற்கு மிக மோசமான இடங்களில் இந்தியா நாலாவது இடத்தை வகிக்கிற‌தாம்.
  • இந்தியாவின் மொத்த சனத்தொகையில் எத்தனையோ மில்லியன் பெண்களை காணவில்லையாம். இது அவ‌ர்க‌ள் பெரிய‌ ப‌டிப்பெல்லாம் ப‌டித்து பூமியில் ஆண்க‌ளுட‌ன் பெரிய‌ தொல்லையென‌ செவ்வாய்க்குப் போன‌தால் இல்லையாம். Shocking isn't it. Knowing educated crazy women, that would have been my first guess. பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் கருவைக் கலைப்பதாலும் பிறந்தபின் கொல்வதாலும் தானாம் இந்த விளைவு.
  • க‌டைசியாக‌ எடுத்த‌ க‌ண‌க்கெடுப்பின் ப‌டி ஒவ்வொரு 1000 ஆண்க‌ளுக்கும் 914 பெண்க‌ள் தான் இருக்கிறார்க‌ளாம். இதுவரைக்கும் எடுத்த கணக்கெடுப்புகளில் இந்த வருட விகிதம் தான் மிகவும் மோசமானதாம். இந்த விகித‌ம் இப்ப‌டியே மாறாம‌ல் தொட‌ர்ந்தால், ஆண்டுக்கு 600,000 காணாம‌ற்போகும் பெண்க‌ள், 18 வ‌ருட‌ங்க‌ளில் 10 மில்லிய‌ன் காணாம‌ற் போக‌ப்போகும் ம‌ண‌ம‌க‌ள்மாராம். I know, that puts it into perspective right? who cares about girls, through quality upbringing turning into amazing women if they are not going to be available as brides.
  • 2001 க‌ண‌க்கெடுப்பு ப‌டி இந்தியாவில் 19 வ‌ய‌திற்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ம் செய்யாத‌ ஆண்க‌ள் 9.3%, பெண்க‌ள் 3.2% ஆம். இத‌ன் ப‌டி 34.1 மில்லிய‌ன் ஆண்க‌ளுக்கு 2001 இல் திரும‌ண‌ம் செய்ய‌ப் பெண்க‌ள் இல்லையாம். இது வ‌ருங்கால‌த்தில் மோச‌மாக‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் உண்டாம். பெண்க‌ள் இல்லாத‌தால் ஆண்க‌ள் திரும‌ண‌த்தைத் த‌ள்ளிப்போட்டால், ஒவ்வொரு முறையும் திரும‌ண‌ச்ச‌ந்தைக்கு வ‌ரும் மில்லியன் கணக்கான‌ ஆண்க‌ள், த‌ம‌து ச‌க‌ வ‌ய‌துடைய‌ ஆண்க‌ளுட‌ன் ம‌ட்டும‌ன்றி ஏற்க‌ன‌வே திரும‌ண‌ம் ஆகாம‌ல் இருக்கும் வ‌ய‌து கூடிய‌வ‌ர்க‌ளுட‌னும் போட்டி போட‌ வேண்டுமாம்.


இன்னும் சில‌ bonus புள்ளி விப‌ர‌ங்க‌ள்
  1. ஆறில் ஒரு பெண்கள் தமது 15 ஆவது பிறந்த நாளைப் பார்க்க உயிருடன் இருப்பதில்லை.
  2. இந்தியாவில் பிறக்கும் 12 மில்லியன் பெண் பிள்ளைகளில் 1 மில்லியன் குழந்தைகள் தமது முதலாம் பிறந்த நாளுக்குக் கூட இருக்கமாட்டார்கள்
  3. ஆறில் ஒரு பெண் பிள்ளையின் மரணத்திற்குக் காரணம் பாலியல் ஒடுக்குமுறை
  4. 2009 இல் இந்தியாவில் நடத்தப்பட்ட women's trafficking இல் கிட்டத்தட்ட 90% நாட்டிற்குள்ளேயே நடத்தப்பட்டது. இருக்கும் 3 மில்லியன் பாலியல் தொழிலாளிகளில் 40% மானோர் சிறுமிகள்.
  5. நான்கு வ‌ய‌திற்குக் கீழுள்ள‌ சிறுமிக‌ளின் இற‌ப்பு விகித‌ம் சிறுவ‌ர்க‌ளை விட‌க் குறிப்பிட்ட‌ள‌வு கூட‌. க‌ருக்க‌லைப்பிலிருந்தும் சிசுக்கொலையிலிருந்தும் த‌ப்பித்தாலும் சிறுமிகளுக்கு த‌டுப்பூசிக‌ள் போடுவ‌து, போதுமான‌ள‌வு உண‌வ‌ளிப்ப‌து, தேவையான‌ பொழுது ம‌ருத்துவ‌ச் சிகிச்சை எல்லாம் குறைவென்ப‌தாலேயே இந்த‌ விளைவு.
  6. 53% ஆன‌ ஜ‌ந்து வ‌ய‌திற்கும் ஒன்ப‌து வ‌ய‌திற்கும் இடைப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளுக்கு எழுத‌ப் ப‌டிக்க‌வே தெரியாது.
Extra Bonus points
  1. இந்தியாவில் உய‌ர் க‌ல்விக்கு சேர்ப‌வ‌ர்க‌ள் 61.7% ஆண்க‌ள், 38.3% பெண்க‌ள்
  2. ச‌மமான‌ வேலைக்கு ஆண்க‌ள் கிடைப்ப‌தைவிட‌ 33% குறைவாக‌வே பெண்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கிற‌து.

 References:
1. Afghanistan worst place in the world for women, but India in top five
2. Gendercide in India: Add sugar and spice
3. Sex-selective abortion: Looking out for baby girls
4. UNEQUAL SEX RATIOS, BRIDE SHORTAGE & MARRIAGE MIGRATION
5. Characteristics of Sex-Ratio Imbalance in India, and Future Scenarios
6. Because I am a girl: The State of the Girl Child in India 2009
7. Unnatural Selection: Choosing Boys Over Girls and the Consequences of a World Full of Men
8. Women in the Labour Force in India
9. Higher Education in India

11 comments:

saarvaakan said...

நல்ல பதிவு சகோ,
புள்ளி விவரங்கள் பார்த்தால் நிலைமை ஒன்றும் சரியில்லை.சம‌மற்ற ஆண் பெண் விகிதம் பல சமூக சிக்கல்களை உருவாக்கும்.1000 ஆண்:914 பெண் என்றால் உடனே கவனிக்க வேண்டிய பிரச்சினை.
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெண்கள் கிடைக்கின்ற காலத்துலயே அவர்களுக்கு பாதுகாப்பு இல்லையே.. பெண்கள் கிடைக்கலைன்னு என்ன அலும்பு செய்வாங்களோ தெரியலயே :(

Thekkikattan|தெகா said...

It is so real and happening. The sex ratio is pathetic precursor to where we are heading as a society. :(

அபாயகரமான வளைவில்தான் இருக்கோம், முழித்துக் கொள்வோமா பார்ப்போம்...

பெண் குழந்தைகள் கடத்தலா? எங்க நாட்டில நடக்கிறதே இல்லையேம்பாய்ங்க... தேச பக்தியில ஊறிக் கெடக்கிறவய்ங்க என்னாத்தை பண்ணுறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் நான்காவது இடம் நமக்கு... படிக்கும் போது பளிச் பளிச்சின்னு ஃப்ளாஷ்பேக்ஸ் வந்து போகுது.

நன்றி, புள்ளி விபரத்திற்கு :)

suvanappiriyan said...

சிறந்த பதிவு! சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு என்ன பரிகாரம் என்பதை சிந்திக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்கள் கொடுமைபடுத்தப்படுவது தாலிபான்கள் இஸ்லாத்தை தவறாக விளங்கியதால். ஓரளவு சிறப்பாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி வரும் சவுதி அரேபியாவில் பெண்குழந்தை பிறந்தால் இனிப்பு கொடுத்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.

வரதட்சணை என்று இந்தியாவில் ஒழிகிறதோ அன்றுதான் பெண்களுக்கு மரியாதை கிடைக்கும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.anna the analyst..!

தாங்கள் 'analyst' என்பதால், புள்ளிவிபரங்கள் முதலில் கொடுத்துவிட்டு, இதற்கான தீர்வை பல கோணங்களிலும் அக்குவேராய் ஆணிவேராய் அலசப்போறீகலாக்கும்னு ஆவலாய் தொடர்ந்தால்... தடாலென பதிவு முடிவு பெற்று விட்டதே..!

நீங்கள் analyst-ஆ... இல்லை just a statistician-ஆ..?

சகோ.சுவனப்பிரியன் பின்னூட்டத்தின் உள்ளே சென்று படித்தால்... பதிவில் காணாமல் போன analyst தெரிகிறார்..!

சரி, இனியேனும் இதற்கான தீர்வுகளை அலசி இரண்டாம் பாகம் போடுங்கள். அது நம் நாட்டுக்கு மிக்க அவசியமான பதிவாக இருக்கும் சகோ.அன்னா.

saarvaakan said...

/ சவுதி அரேபியாவில் பெண்குழந்தை பிறந்தால் இனிப்பு கொடுத்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்./
**********
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
*****************
Sex ratio: at birth: 1.05 male(s)/female
under 15 years: 1.04 male(s)/female
15-64 years: 1.27 male(s)/female
65 years and over: 1.03 male(s)/female
total population: 1.17 (854.7009 females for 1000 males)male(s)/female (2011 est.)

Definition: This entry includes the number of males for each female in five age groups - at birth, under 15 years, 15-64 years, 65 years and over, and for the total population. Sex ratio at birth has recently emerged as an indicator of certain kinds of sex discrimination in some countries. For instance, high sex ratios at birth in some Asian countries are now attributed to sex-selective abortion and infanticide due to a strong preference for sons. This will affect future marriage patterns and fertility patterns. Eventually, it could cause unrest among young adult males who are unable to find partners.

Source: CIA World Factbook - Unless otherwise noted, information in this page is accurate as of July 12, 2011
*************
http://www.indexmundi.com/saudi_arabia/sex_ratio.html

Anna said...

எல்லோரினது கருத்துகளுக்கும் நன்றி. வார இறுதி நாட்களில் கணனியில் நிறைய நேரம் செலவிட முடிவதில்லை. அதனால் இந்தத்தாமதம்.

சுவனப்பிரியன்/ஆஷீக்,

இப்பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்ல. சீனா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் உண்டு. அந்நாடுகளில் இந்தியாவில் போன்று வரதட்சணைப் பிரச்சனை இல்லை. சீனாவில் இஸ்லாத்தில் மகர் கொடுப்பது போன்று bride prize கூட உண்டு. வரதட்சணை நிச்சயமாக இப்பிரச்சனையைக் கூட்டுவதற்கு ஒரு காரணம். ஆனால் இப்பிரச்சனையின் மூல காரணம் ஆணாதிக்க சமுதாயமும் அவற்றில் பொதுவாகக் காணப்படும் மகனைக் கூட விரும்புதல்/மகன் அவசியம் என எண்ணும் எண்ணப்பாடுகளுமே. இந்தியாவில் ஆண்/பெண் விகிதாசாரம் மிக மோசமாக இருப்பது பல upper/upper middle class மக்களிடையேயே. அவர்களுக்கு வரதட்சணை கொடுப்பதில் பெரிதாகப் பிரச்சனை இருக்காது. அநேகமான இந்நாடுகளில் ஆண்களே தம் சொந்த வாரிசு/ பெண் திருமணமாகிய பின் வேறொரு குடும்பத்திற்கே சொந்தம் என்ற எண்ணம், தம்மை வயோதிபக் காலத்தில் பார்க்க தமக்கு மகன் வேண்டும், மரணக் கிரிகைகள் செய்ய மகன் வேண்டும், மரபுரிமைக்காக மகன் வேண்டும் என்ற எண்ணங்களும் மிக முக்கிய காரண‌ங்கள் என சமூக விஞ்ஞானிகளும் நிபுணர்களும் கருதுகின்றனர்.

சவுதி அரேபியாவில் இந்தக் குறிப்பிட்ட பிரச்சனை இல்லை. ஆனால் பெண்களுக்கு வேறு நிறையப் பிரச்சனை இருக்கிறது/பெண்கள் மிகக் கொடூரமாக எத்தனையோ வேறு வழிகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.
என்னைப்பொருத்தவரை, இதற்குரிய solution, இந்த எண்ணங்கள் மாற குறிப்பிட்டளவு கலாச்சாரப் புரட்சி வரவேண்டும். மகனோ மகளோ இருவருமே சமம் என நினைக்கும் மனப்பாண்மை வரவேண்டும். மகளை எப்போது வேறு வீட்டின் மருமகள் எனப்பார்க்கும் நிலை மாறித் தமது மகள் என வளர்க்கும் நிலை உருவாக வேண்டும். ம‌க்க‌ளை எப்ப‌டிச் சிந்திக்க‌த் தூண்டுவ‌தென்ப‌தே பிர‌ச்ச‌னை. ஏனெனில் புத்த‌ப்ப‌டிப்பால் ப‌ட்ட‌ங்க‌ள் பெற்றால் கூட இந்த‌க் கலாச்சார‌த்தால் காலங்கால‌மாக‌க் கண்டுண்டிருப்ப‌தால் அத‌ற்கு வெளியே சிந்திக்க‌ முடிவ‌தில்லை.

Unknown said...

நல்ல ஆய்வு சஹோதரி athiest அவர்களே,

உங்களுடைய கட்டுரையின் முடிவு சமுதாயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்பதை ஒப்புகொள்கிறதா?

//சவுதி அரேபியாவில் இந்தக் குறிப்பிட்ட பிரச்சனை இல்லை. ஆனால் பெண்களுக்கு வேறு நிறையப் பிரச்சனை இருக்கிறது/பெண்கள் மிகக் கொடூரமாக எத்தனையோ வேறு வழிகளில் ஒடுக்கப்படுகிறார்கள். //

நிறைய புள்ளி விவரங்கள் கொடுத்த நீங்கள் இதற்கும் புள்ளிவிவரம் தரமுடியுமா? அல்லது காத்துவாக்கில் வந்த செய்தியா?

Anna said...

நல்ல ஆய்வு சஹோதரி athiest அவர்களே,

உங்களுடைய கட்டுரையின் முடிவு சமுதாயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்பதை ஒப்புகொள்கிறதா?


இல்லையே. சாராம்சம் எந்த விதத்திலும் ஒடுக்குமுறை வேண்டாம் என்பது தான்.
பெண்களை சக மனிதர்களாக உங்களால் மதிக்க முடிந்தால் எதுக்கு அவர்களுக்கு அதிக பாதுகாப்புத் தேவை. Treat them as you would like to be treated. As simple as that.

rasicm, casteism இவைகளால் ஒடுக்கப்படுபவர்களுக்கும் பாதிக்கப்படுபவர்களுக்கும் இதே தீர்வு தான். அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க நினைக்காமல் ஒடுக்குபவர்கள் தான் தங்களது அடிப்படைச் சிந்தனைகளை மாற்ற வேண்டும். எல்லா மனிதர்களையும் சமமாக மதித்தால் ஒரு கூட்டத்திற்கு இன்னொரு கூட்டத்தை விடக் கூடிய பாதுகாப்புத் தேவையில்லை.

நிறைய புள்ளி விவரங்கள் கொடுத்த நீங்கள் இதற்கும் புள்ளிவிவரம் தரமுடியுமா? அல்லது காத்துவாக்கில் வந்த செய்தியா?

மேலே குறிப்பிடப்பட்ட சில நாடுகள் ஏதோ பெயருக்கு ஒடுக்குமுறையை தடுக்க சட்டங்கள் வைத்திருக்கின்றன, ஆனால் அமுலாக்குவதில்லை. சவுதியில் சட்டங்களே நியாயப்படுத்துகின்றனவே. Adult women எல்லோரையும் சட்டப்படியே சிறுவர்களாகத் தானே பார்க்கப்படுகிறார்கள்.

தனியே பயணிக்கத் தடை;
மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்யக்கூட ஒரு ஆண் ஆமோதிக்க வேண்டும்.
திருமணத்தில் பெண்ணின் சார்பாக அவரின் காப்பாளரே கையெழுத்திட வேண்டும்;
பிள்ளைக‌ளின் custody த‌க‌ப்ப‌னுக்கு ம‌ட்டுமே/பெண் த‌னியாக‌ ஒரு குழ‌ந்தையின் பிற‌ப்பைப் ப‌திவு செய்ய‌ முடியாது;
She is under the control of her guardian in all aspects of her life;
Global Gender Gap Index report இல் ஆய்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ 134 நாடுக‌ளில் ச‌வுதி 130 ஆவ‌து இட‌த்தைப் பெற்றுள்ள‌து - இம்மாதிரி வேளியில் இருந்து யாராவ‌து வ‌ந்து செய்தால் தான் உண்டு. பிழையே ந‌ட‌க்க‌வில்லை என்று அதிகார‌த்தில் இருப்போர் க‌ருதும் போது எங்கே அதிஅப் ப‌ற்றி விசாரிக்க‌ப் போகிறார்க‌ள்?;
வீடுக‌ளில் வ‌ன்முறை அதிக‌ரித்துக் கொண்டே போகின்றது;
க‌ட்டாயத் திரும‌ண‌ங்க‌ளுக்கும் குறைவில்லை;
Women and Children trafficking கூட‌ ந‌ன்றாக‌ ந‌ட‌க்கிறது;

இன்னும் சொல்ல‌லாம். கீழ் கொடுக்க‌ப்ப‌டுள்ள‌ த‌ள‌ங்க‌ளைப் பார்த்தால் இன்னும் கூடுத‌ல் விப‌ர‌ம் அறிய‌லாம். இதெல்லாம் உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரை ஒடுக்குமுறை இல்லையா?

Sharia Law is a code of despair; a code obsessed with women

Sharia Law In Britain: A threat to one law for all & equal rights

International Women's Day 2011 (Saudi Arabia)

World Gender Gap Worst in Islamic Nations

Trafficking in Persons Report 2009

Saudi Women’s Rights: Stuck at a Red Light

Domestic Violence in Saudi Arabia - On the Increase

What isn't wrong with Sharia law?

Unknown said...

//இல்லையே. சாராம்சம் எந்த விதத்திலும் ஒடுக்குமுறை வேண்டாம் என்பது தான்.
பெண்களை சக மனிதர்களாக உங்களால் மதிக்க முடிந்தால் எதுக்கு அவர்களுக்கு அதிக பாதுகாப்புத் தேவை. Treat them as you would like to be treated. As simple as that.//

கற்பனை உலகத்தில் வாழ்கிறீர்கள், ஆணும் பெண்ணும் ஒரே உடலமைப்பில் வாழ்ந்தால் நீங்கள் கூறுவது ஒருவகையில் நடக்க வாய்ப்புள்ளது, ஒரு ஆணை யாரேனும் கற்பழித்தால் அவன் ஒன்றும் பிரசிவிக்க போவதில்லை, பெண்களுக்கோ கரு உருவாகிவிடும். இவற்றை உருவாக்கிய இயற்கை / கடவுள் முட்டாள் என்கிறீர்களா?, உங்களின் கருத்தை அறியாமை என்றே கூறலாம்,

ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தை முதலில் வைத்ததே இஸ்லாம் மட்டும்தான், இருப்பினும் ஆணும் பெண்ணும் வேருபாடுடையவர்கள் என்ற கருத்தை வைக்கிறது, தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது என்று கூறுகிறது, தந்தையின் காலடியில் இருப்பதாக கூறவில்லை, இதனால் பெண் என்பவள் உயர்ந்தவள் ஆண் தாழ்ந்தவன் என்று கூறுவீர்களா, அதுபோல உங்களின் அறியாமை கருத்துக்களும்.

உண்மையில் நீங்கள் இஸ்லாமிய கருத்தை எதிர்கிரீர்கள், என்று கூருவீர்கலாயின் ஆண் பெண் உடல் அமைப்பில் மாற்றம் இருக்க கூடாது இரு உடல்களும் சமமாக இருக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முதலில் கடைபிடியுங்கள், அதற்கான வழிமுறையையும் கடைபிடியுங்கள், பிறகு பெண்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை இல்லை என்ற கருத்துக்களை நாங்களே செய்கிறோம்.

சமம் என்ற பெயரில் முட்டாள் தனமான கருத்துக்களை உங்களை சேர்ந்தவர்கள் வெளியிடுகின்றனர் என நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

Unknown said...

//தனியே பயணிக்கத் தடை;
மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்யக்கூட ஒரு ஆண் ஆமோதிக்க வேண்டும்.
திருமணத்தில் பெண்ணின் சார்பாக அவரின் காப்பாளரே கையெழுத்திட வேண்டும்;
பிள்ளைக‌ளின் custody த‌க‌ப்ப‌னுக்கு ம‌ட்டுமே/பெண் த‌னியாக‌ ஒரு குழ‌ந்தையின் பிற‌ப்பைப் ப‌திவு செய்ய‌ முடியாது;
She is under the control of her guardian in all aspects of her life;//

சுதந்திரத்தின் அளவுகோலை தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள், தனியாக போவது சுதந்திரம், தவறு செய்வதற்கு சுதந்திரம் என நாட்டின் குற்றங்களை அதிகரிப்பதற்கான வழி வகைகளை உருவாக்க நினைக்கிறீர்கள்,

//Global Gender Gap Index report இல் ஆய்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ 134 நாடுக‌ளில் ச‌வுதி 130 ஆவ‌து இட‌த்தைப் பெற்றுள்ள‌து -//

ஆண் பெண் பாகுபாடு வேண்டும் என்று தானே கூறுகிறோம், சவுதியில் ஆண்களை விட பெண்களே அதிக உரிமை கொண்டுள்ளனர் என்பது தங்கள் அபிமானிகள் தங்களுக்கு சொல்லி கொடுக்காத ஒன்று, கணவன் காபி வாங்கி கொடுக்கவில்லை என்ற காரணத்தில் பெண் விவாகரத்து செய்துவிட்டால் என்ற செய்திகளும் உள்ளன, ஆனால் அப்படி ஆண் சுலபமாக செய்ய முடியாது,

மேலும் குறைவான குற்றங்கள் கொண்ட நாடு என்று பார்க்கும் போது சவூதி முன்னிலையில் உள்ளது.

//இம்மாதிரி வேளியில் இருந்து யாராவ‌து வ‌ந்து செய்தால் தான் உண்டு. பிழையே ந‌ட‌க்க‌வில்லை என்று அதிகார‌த்தில் இருப்போர் க‌ருதும் போது எங்கே அதிஅப் ப‌ற்றி விசாரிக்க‌ப் போகிறார்க‌ள்?;//

அந்நாட்டு மக்களே தங்களின் உரிமை சரிதான் என்று நினைக்கும் பொழுது, உங்களை போன்றவர்கள் கூக்குரலிடுவதால் எந்த பயனும் இல்லை,

//வீடுக‌ளில் வ‌ன்முறை அதிக‌ரித்துக் கொண்டே போகின்றது;
க‌ட்டாயத் திரும‌ண‌ங்க‌ளுக்கும் குறைவில்லை;//

இவையெல்லாம் உங்களை போன்ற நாத்திகர்கள் கட்டிவிடும் பொய் பிரச்சாரங்கள், அதற்க்கு ஆதாரம் இல்லை, ஆதாரம் இருந்தால் காட்டுங்களேன்.

உயிரின் மதிப்பை அறிந்த நாடுகள் என்றால் அது அரபு நாடுகள் மட்டுமே, அதை அங்கு வசிக்கும் இந்தியர்கள் கூட அறிவர், மனிதனின் உயிரை எடுத்து விட்டோ, அல்லது மனிதர்களுக்கு கஷ்டங்கள் கொடுத்துவிட்டோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட முடியாது.

ஆனால் மற்ற நாடுகளில், உங்களுக்கு ஒருவரை புடிக்கவில்லை என்றால் அவரை கொன்றுவிடலாம், அதிகபட்சம் சிறையில் அடிப்பார், அதுவும் வசதி வாய்ப்புடன், என்ன ஒரு மானம்கேட்ட நீதி இது, இதையே உங்களை போன்ற சுயநலம் கொண்டவர்கள் என்று கொள்ளலாம், மனிதாபி மானம் உள்ளவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.