எப்பவெல்லாம் இலங்கையில் நான் தனியே வெளியே சென்றேனோ அப்போதெல்லாம் பல வாறான இவ்வன்முறைகளை அனுபவித்துள்ளேன். அவை சொல்லக்கூட முடியாத மிகவும் அருவருப்பான/ஆபாசமான அர்த்தங்களுடன் கூடிய வார்த்தைகள் முதல், மிக அருகில் வந்து புத்தகங்களைப் பறிப்பது/தொடுவது போல் பாசாங்கு செய்தல், உண்மையிலேயே புத்தகங்களைப் பறித்தல், தொடர்ந்து நடந்து கொண்டு ஏதாவது சொல்லிக் கொண்டு வருதல் எனப் பலவகைப் படும். எத்தனையோ தடவைகள் இவ்வாறு ஆண்கள் தெருவில் நிற்கக் கூடுமென நினைத்து வழக்கமாகச் செல்லும் பாதையை விடு வேறு பாதைகளால் போயுள்ளேன். I felt scared, humiliated, dehumanized and objectified beyond words. I just wanted to be invisible.
இத்தனைக்கும் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரே தீர்வு: ஆண்கள் அப்படித் தான் இருப்பினம், இவற்றை எல்லாம் புறக்கணி, ஒன்றும் நடவாதது போல் போ. Did these solutions ever make sense to me? NO! How could any sane person think that this is an acceptable behaviour? இவையெல்லாம் எவ்வாறு தீர்வாகுமென ஒருபோதும் விளங்கியதில்லை. ஆனால் இதைத்தவிர வேறெதுவும் செய்யத் தெரியவில்லை.It was accepted as the norm by the whole society. இச்சமூகத்தில் பெண்ணாகப் பிறந்ததற்குக் கொடுக்கும் விலை இது. ஆனாலும் பல பெண்களின் மிகக் கொடூரமான அனுபவங்களோடு ஒப்பிடுகையில் எனது அனுபவம் ஒன்றுமேயில்லை. இன்னும் பல இடங்களில் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குவதே நிகழ்கிறது. ஏதோ பெண்களே தான் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள் என்ற ரீதியிலேயே நிறையப் பேர் கதைக்கக் கேட்டுள்ளேன். Never really understood the logic behind that theory. கடந்த வாரம் பிரசுரிக்கப் பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் வேலைத்தளத்தில் கூட போகப் பொருளாக பெண்களை ஆண்கள் பார்க்கும் போது, பெண்களின் செயற்திறன் பாதிக்கப்படுகிறதெனக் கூறியது. That's not surprising. இணையத்தில் ஒரிரு இடங்களில் நான் பங்கெடுத்த விவாதங்களில் கூட ஏதோ பெண்களாலேயே இது நடக்கின்றது அல்லது வீட்டுக்கு வேளியில் போகாமல் இருப்பதே பெண்களுக்கு மேல் எனும் ரீதியிலேயே இன்னும் சிலர் எண்ணுகின்றனர்.
பெண்களையே குற்றம் சுமத்தும் போது சொல்லும் ஒரு காரணம். பெண்கள் உடுத்தும் உடையால் அவர்களே இவ் வன்முறைகளைத் வரவழைக்கின்றனர் என்பதே. உடைக்கும் இந்த வன்முறைக்கும் எந்தத் தெடர்புமில்லை. புர்கா போட்டுக் கொண்டு போகும் எனது சில நண்பிகளும் கூட இவ்வன்முறைக்கு விதிவிலக்கானவர்களாக இருக்கவில்லை. பெண்கள் என்ன என்ன உடை போட்டிருக்கும் போது இவ்வன்முறைகளுக்கு ஆளானார்களென Blank Noise பக்கத்திற்குச் சென்று பாருங்கள். பெண்களை சக மனிதர்களாகப் பார்க்கும் ஒரு சமுதாயத்தை, பெண்களுகெதிரான எந்தவித வன்முறையையும் பிழையெனப் பார்த்து சரியாகத் தண்டிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிப்பதே இதற்குரிய தீர்வைத்தரும்.
இது பாலியல் வன்முறை. Through and through. Eve-teasing என்று சொல்வது இக்குற்றத்தை குறைப்பது போன்றது. It's a sugar-coated way of saying it. Atlast இரு வாரங்களுக்கு முன்பு Bangladesh இல் அவ்வாறே ஒரு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
The High Court of Bangladesh declared on 26 January, 2011 stalking of girls and women illegal, and directed the government to consider the offence as sexual harassment instead of the term Eve Teasing. The court's ruling came amid growing incidences of stalking that led many victims to commit suicide.
For starters let's hope they put that law into practice.
22 comments:
\\எத்தனையோ தடவைகள் இவ்வாறு ஆண்கள் தெருவில் நிற்கக் கூடுமென நினைத்து வழக்கமாகச் செல்லும் பாதையை விடு வேறு பாதைகளால் போயுள்ளேன். //
அது ஒரு ஹாரர் ஸ்டோரி தான்.:(
You are correct. I too heard nasty words from human animals. In that younger age, I didn't know how to react. Almost every woman cross events like this. Particularly, those who use public transports are affected more.
நானும் அதே பின்னணியில் வளர்த்தெடுக்கப்பட்டு அந்த நதியில் கலந்து விடப்பட்டவன், அதுவும் ஒரு ஆண் பையன் என்பதால் இதற்கு பின்னான என்னளவில் நான் செய்த, கலந்து கொண்ட பால்ய காலத்து திருவிழாக்களில் இப்பொழுது எது என்னை இயக்கியது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு பின்னான முறையான படி அடுத்தவர்களின் வலிகளை புரிந்து கொள்ளும் புரிவு ஊட்டல் கிடையாது. ஒரு சமூகமாக ‘பாலியல்’ சார்ந்த புரிதலிருந்து நம்மை நாமே ‘அடக்கி’ ஒடுக்கி வைத்திருக்கிறோம். அதுவே, ஒரு சமூக வியாதியாக இப்படி முறையற்ற முறையில் இலை மறை காயாக அது போன்ற தனங்கள் வெடித்து வெளிப்படவும், தாங்கிச் செல்லவும் ஊக்குவிக்கிறது எனலாமா??
இது பற்றி இன்னும் கூடுதலா நீங்க எழுதுங்க பேசுவோம்...
/*I felt scared, humiliated, dehumanized and objectified beyond words. I just wanted to be invisible*/
உண்மை. இப்பொழுது இக்கொடுமைகள் இன்னும் கூடுதலாக...
/*பெண்களுகெதிரான எந்தவித வன்முறையையும் பிழையெனப் பார்த்து சரியாகத் தண்டிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிப்பதே இதற்குரிய தீர்வைத்தரும்*/
மிகச்சரி. வீடு, பள்ளி, சமூகம் என்று எல்லா பக்கமும் சேர்ந்து இக்கலாச்சாரத்தை உருவாக்க துணைபுரிதல் வேண்டும்.
"அது ஒரு ஹாரர் ஸ்டோரி தான்.:("
கிட்டத்தட்ட அப்படித்தான் முத்துலெட்சுமி.
கலை,
நிச்சயமாக. அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் 11-12 வயதிலிருந்தே இந்த அனுபவம் இருக்கும். Almost noone bothers about the psycological effects on kids. பெற்றோர் யாரும் இதைப்பற்றிப் பிள்ளைகளுடன் கதைப்பது கூட இல்லை.
தெகா,
"இதற்கு பின்னான முறையான படி அடுத்தவர்களின் வலிகளை புரிந்து கொள்ளும் புரிவு ஊட்டல் கிடையாது. அதுவே, ஒரு சமூக வியாதியாக இப்படி முறையற்ற முறையில் இலை மறை காயாக அது போன்ற தனங்கள் வெடித்து வெளிப்படவும், தாங்கிச் செல்லவும் ஊக்குவிக்கிறது எனலாமா??"
நிச்சயமாக. இவையெல்லாம் எப்போ மாறுமென/ எப்படி மாற்றலாமெனத் தான் தெரியவில்லை. I would love to know how you grew out of this misogynistic thinking? What made you change?
அமுதா,
"வீடு, பள்ளி, சமூகம் என்று எல்லா பக்கமும் சேர்ந்து இக்கலாச்சாரத்தை உருவாக்க துணைபுரிதல் வேண்டும்."
Yes. Change should come from with in. ஆனால் பெண்கள் jeans அணிவதைத் தடுத்தால் இவ்வன்முறையைத் தடுக்கலாமெனச் சொல்லும் பள்ளிக்கூடங்கள் இருக்கும் சமூகத்தை, இவ்வன்முறையை கேலுக்குள்ளாக்கி பெண்களே குற்றவாளிகளெனச் சித்தரிக்கும் சினிமாக்கள் எடுக்கும் உள்ள சமூகத்தை சிந்திக்க எப்படித் தூண்டுவது?
மிகவும் அழுத்தமான கட்டுரை. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு என் மகளுக்கு நிச்சயம் அறிமுகப்படுத்தவேண்டிய கட்டுரை.
//இதற்கு பின்னான முறையான படி அடுத்தவர்களின் வலிகளை புரிந்து கொள்ளும் புரிவு ஊட்டல் கிடையாது//
மற்றவரை காயப்படுத்தும் செயல்கள் நான் செய்ததில்லை. அது ஒருவேளை சிறுவயதிலிருந்து நான் வாசித்த புத்தகங்கள் காரணமா அல்லது பருவ வயதில் ஆண்களின் ஏக்கமாக இருக்கும் பெண் நட்புகள், எனக்கு இயல்பாக அமைந்ததனாலா என்று தெரியவில்லை. நல்ல சிந்தனையை கொடுக்கக்கூடிய படைப்புகள் அத்தகைய வயதில் ஆண்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டால், பிறருக்கு வலி ஏற்படுத்தும் செயல்களை செய்ய மாட்டார்கள் என்று எண்ணுகின்றேன்.
//would love to know how you grew out of this misogynistic thinking?//
பெண்களின் மீதான வெறுப்பின் காரணமாகவா இந்த பழக்கம் தொடர்கிறது என்று நினைக்கிறீர்கள்? எனக்கு வேறு மாதிரியான கருதுகோல் இருக்கிறது. ஆண்களுக்கு இயற்கையாகவே (visual arousal) புற வய தூண்டலின் அடிப்படையிலேயே அவர்களின் பாலின ஈர்ப்பு இயங்குகிறது. எதிர்மாறாக பெண்களுக்கு emotional based என்பதனை சரிவர ஒரு சமூகமாக அறிவுருத்திக் கொள்ளாப்படாமல், விடலை பருவத்தில் தான் தோன்றித் தனமாக எதிர்பாலினம் தனிமை படுத்தப்பட்டு அவர்களின் புரிதலோடு இயங்க தலைப்படும் பொழுது இது போன்ற பாலியல் வல்லுறவு ஒரு சமூகமாக வெளிப்படுத்திக் கொள்கிறது எனலாம்.
இதனை யார் புரியவைப்பது? பெண்களுக்கென்று மனசு, உணர்வு, விருப்பத் தெரிவு என்றெல்லாம் ஒன்று உண்டு அதன் அடிப்படையிலேயே அவர்கள் வீட்டிற்குள்ளும்/வெளியிலும் இயங்குறார்கள் என்ற புரிய வைக்க வேண்டும். அந்த உரையாடல் வீட்டிற்குள்ளிருந்தான் ஆரம்பிக்க வேண்டும் - அம்மா, சகோதரிகள் பேசி புரியவைக்கலாம். வெளிப்புற சிகை/உடல் கட்டு/உடை, நடை பாவனைகளை ஓட்டியதல்ல அவர்களின் எதிர்பார்ப்பு என்பதனைக் கூறி தெளிவு படுத்தப்பட வேண்டும்.
அங்கிருந்து தொடங்கினாலே ஒழிய தனி மனித உணர்வுகள் மதிக்கப்படாமலேயே இது போன்ற தொந்தரவுகள் நீட்டித்து செல்லக் கூடும். எனவே, முறையான புரிதல் ஆண்/பெண் சார்ந்த கல்வியூட்டுத் தேவை. நான் இப்பொழுது புரிந்து கொண்டது என்னவென்றால் என் புற அழகை கொண்டு எதிர்பாலினம் என் மீது கிறக்கம் உருவாக்கிக் கொள்வதில்லை. அவர்களின் விருப்பைத் தாண்டி எதுவுமே நடந்து விடுவதுமில்லை என்ற புரிதல்கிட்டியதால் இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு விட்டேன் என்பதே அது!
These are the terrible things that we women have to live with, yet.
:( :(
ஆண்கள் தனித்தனியே அமைதியாக இருந்தாலும், ஒரு கும்பலாகக் கூடும் போது அத்துமீறல்களை எளிதாக மேற்கொள்ளுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு போதையைத் தந்து ஒரு பொழுது போக்காகவே மாறிப் போய்விடுகிறது.
தெருவில் போவது வருவதை எல்லாம் விடுங்கள். கல்லூரி மாணவர்கள் நடத்தும் அக்கிரமத்தை என்னவென்று சொல்ல? நான் ஒரு முறை ஒரு கல்சுரல் நிகழ்ச்சியில் கண்டது - மேடையேறிய பெண்கள் மீது லேசர் லைட் அடித்தார்கள் - அனைவரின் முன்பும். எங்கு அடித்திருப்பார்கள் என்று சொல்லவே தேவையில்லை. எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை யாரென்று (கூட்டம் நிறைய). அதிர்ச்சியுடன் மீதி நிகழ்ச்சியையும் உட்கார்ந்து காண நேர்ந்தது தான் மிச்சம். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் மொத்த நிகழ்ச்சியையே கான்சல் செய்து விட்டு, எல்லாரையும் வெளியே அனுப்பி, சோதனை செய்த பின் உள்ளே விட்டிருக்க வேண்டும்.
இப்போது தான் செல்போன்லேயே வீடியோவும் வந்து விட்டதே. பிறகென்ன கேட்கணும்? ஏதாவது ஒரு வகையில் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
இதற்கு என்ன காரணம், எப்படித் தடுப்பது என்று என்னால் ஆராய்ந்து தீர்வாகச் சொல்ல முடியவில்லை. பிள்ளைகளுக்கு நல்ல புத்தி சொல்லி, எதிர் பாலினத்தவரை மதித்தல் வேண்டும், கேலி செய்தல் தவறு என்று சொல்லி வளர்க்க வேண்டும். சட்டம் மிகக் கடுமையாக தவறு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் - தண்டனை இல்லாமல் தடுக்க முடியாது.
ஆண்கள் பொதுவாக இள வயதில் - அதாவது பருவத்துக்கு வந்து, இன்னும் திருமணம் ஆகாமல் அல்லது நட்பு-காதல் என்ற ரீதியில் ஒரு பெண்ணுடன் பழகாமல் இருக்கும் பொழுதில் தான் இவ்வாறு அதிகம் செய்கிறார்கள்.
தவறான நட்புகளும், பழக்கங்களும் முக்கிய காரணம். இது போன்ற காட்சிகளைக் காட்டும் திரைப்படங்களையும் பாடல்களையும் கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.
வயதான ஆண்கள் வேறு மாதிரி அத்து மீறினாலும், இது போன்ற கேலி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
இன்னும் ஒன்று - அருவருக்க வைக்காத விளையாட்டுத்தனமான கேலிகளை மாணவர்களிடையே நாங்களும் பதின்ம வயதில் ரசித்தே வந்திருக்கிறோம், நாங்களும் அவர்களை நோக்கிச் செய்திருக்கிறோம் - விளையாட்டாகவே. ஈர்ப்பு ஏற்படுவதும் அதன் காரணமாக ஈர்க்க வைக்கும் நோக்கிலும் செய்யப்படும் இது போன்ற விளையாட்டுத்தனங்களை பருவ வயதில் இயல்பென்றே எடுத்துக் கொள்கிறேன். வயதும் மனமும் மெச்சூர் ஆக ஆக இதெல்லாம் குறைந்துவிடும்.
ஆபாசம் கலந்த கேலிகள், பெண்ணை ஈர்க்கும் நோக்கில் செய்யப்படுகின்றன என்று என்னால் நினைக்க முடியவில்லை. தட்டிக் கேட்க யாரும் இல்லை, என்ன வேணும்னாலும் செய்வோம் என்ற க்ரூப் ஆதிக்கத் திமிர் ஆகத் தான் தெரிகிறது எனக்கு.
ஆணும் பெண்ணும் மனிதர்களின் வெவ்வேறு உருவே என்று குழந்தைப் பருவத்திலேயே பதிய வைக்க வேண்டும் - குறைப்பதற்கு. தடுப்பதற்கு கடுமையான சட்டத்தை விட்டால் வேறு வழியில்லை.
எங்கெல்லாம் கலாச்சார இறுக்கங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் பலியல் வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். புராணங்களில் ஆயிரமாயிரம் பாலியல் கதைகள் காமக்கதைகள் புழக்கத்தில் இருந்தது. பிரசங்கம் என்ற பெயரில் இவைகளே முன்நாளைய சினிமா. தேவதாசிகளிடம் பசியை தீர்த்துக்கொண்டார்கள். இன்றய சினிமாவும் காட்சிகளும் பாடல்களும் உடல் இச்சையை தூண்டுகின்றது அதே நேரம் கற்பை வலியுறுத்துகின்றது. மிகப்பெரிய முரணாண பாலியல் கண்ணோட்டம் இருக்கின்றது. தூண்டுதலும் தடுத்தலும்.
பாலியல் இறுக்கம் சாதீயக் கலப்பைத் தடுக்க உருவான மிகைப்படுத்தப்பட்ட ஆயுதம்.
இயற்கையான உணர்ச்சிளின் இயல்பை சிதைத்து வன்முறைக்குள் தள்ளிவிடும் பயித்தியக்காரத்தனம் நிறைந்த சமூகத்தில் என்னும் என்னும் வன்முறைகள் நடக்கும். சட்டங்களால் இதை தடுக்கமுடியாது.
பருவ வயதினர் பாதுகாப்பான வகையில் பாலியலில் ஈடுபடுவது தவறில்லை என்ற நிலை வரவேண்டும். பாலியல்த் தொழில் அங்கீகரிக்கப்படவேண்டும். பாலியல் கல்வி பாடசாலைகளிலும் வரவேண்டும். வயதுவந்தோர்களுக்கான கட்டுப்பாடுகளுடன் நீலப்படங்களின் தாராள புளக்கம் இருக்கவேண்டும். அழகென்றால் வெள்ளைத்தோல்தான் என்ற வியாபார தந்திரங்களில் இருந்து விடுபடவேண்டும். இவைகளே வன்முறைகளை தடுக்கும் வழி. மேற்சொன்ன அனைத்தும் இந்தச் சமூகத்தில் நடக்கின்றது. ஆனால் சமூக இறுக்கமும் சட்டங்களும் மேற்சொன்னவற்றை கள்ளத்தனமாகச் செய்யுங்கள் என்று வரையறை செய்கின்றது. இதுவே வன்முறைகளுக்கான அடிப்படை. பாலியல் நோய்களின் மித மிஞ்சிய தாக்கத்தின் அடிப்படை. இறுக்கத்தில் இருந்து விடுபடுவோம் வன்முறை என்ற நிலையை இயல்பு நிலையாக மாற்றுவோம்.
குழந்தையை நல்ல படியாக வளர்ப்பது தாயின் கடமை. சமுதாயத்தில் அவனை நல்லதொரு குடிமகனாய் அன்பும் கருணையும் உடையவனாய் வளர்த்தால் எந்த பெண்ணிடமும் முறை தவறி நடக்க மாட்டான்.
பெண் போற்றபடும் நாடு உயரும்.
இழிவு படுத்தும் நாடு தாழும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
Thank you very much for all your detailed and thoughtful comments Theka, Kummi, Kuttipaiya, L board, Eerampu iyaa and Komathy. Really appreciate it and will reply ASAP.
தெகா,
உங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி.
"பெண்களின் மீதான வெறுப்பின் காரணமாகவா இந்த பழக்கம் தொடர்கிறது என்று நினைக்கிறீர்கள்?"
Our culture is based on very patriachial and misogynistic values though. We are all somewhat the products of our time/surrounding (Just like racist views of Darwin or many other philosophers of those times). So even if individual boys (and girls) don't consciously think about why they are doing certain things, one of the roots of the problem is that. Don't you think?
எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆண்கள் பெண்களை மனிதராக மதிக்க வேண்டுமெனச் சொல்வதெற்குப் பதிலாக பெண்கள் எப்படி ஆண்களில் இச்செய்கைகளைத் தூண்டினார்கள், இவற்றைத் தவிர்க்கப் பெண்கள் என்ன செய்யலாமெனவே விவாதிக்கப்படுகிறது. ஆண்கள் எப்படி வேண்டுமென்றாலும் நடப்பது அவர்களின் அடிப்படை உரிமையாகவே பார்க்கப்படுகின்றது.அதோடு ஆண்கள் பெண்களளவிற்கு dicipline பண்ணப்படுவதில்லை.
பிறந்ததிலிருந்தே ஆணையும் பெண்ணையும் பிரித்து பிரித்து, வேறு வேறு விதிமுறைகளுடன் வளர்ப்பதால் (gender segregation from chilhood) ஒரு பெண்ணுடன் நட்பாகப் பழகும் வாய்ப்பு ஒருபோதும் ஆணுக்குக் கிடைப்பதில்லை (and vice versa). Culture adds fuel and there are normally no circumstance given to even know and understand each others personality, which leads probably inevitably to these incidences, I think.
Apparently ஓரு ஆய்வின் படி, 32% of the eve teasers are students, 35% are anti-socials while 33% are middle-aged men. Psychologists and social scientists suggest eve teasing to be a result of the frustration suffered by a majority of youth. Disappointed by the unbecoming attitude of teachers and indifferent parents, they yearn for an outlet to vent their aggression and depression.
இது எந்தளவிற்கு சரி என்று தெரியவில்லை.
"ஆண்களுக்கு இயற்கையாகவே (visual arousal) புற வய தூண்டலின் அடிப்படையிலேயே அவர்களின் பாலின ஈர்ப்பு இயங்குகிறது."
ஆனால் இந்த மாதிரியான வன்முறைகள் visual arousal ஜயும் விட பெண் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் நடைபெறுகின்றன என நீங்கள் நினைக்கவில்லையா? If it is due to men's character of being visualy aroused, then wouldn't there be a link between the way a girl dresses and these kinds of harassments?
உங்கள் கருத்திற்கு நன்றி கும்மி.
"நல்ல சிந்தனையை கொடுக்கக்கூடிய படைப்புகள் அத்தகைய வயதில் ஆண்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டால், பிறருக்கு வலி ஏற்படுத்தும் செயல்களை செய்ய மாட்டார்கள் என்று எண்ணுகின்றேன்."
நிச்சயமாக. அதோடு வீட்டில் இருக்கும் ஆண்களும் peers உம் நல்ல role models ஆக இருந்தாலும் உதவுமென நினைக்கின்றேன்.
Let's hope your daughter do not have to put up with this behaviour.
மிக விரிவான அலசலுக்கு மிக்க நன்றி எல் போர்ட்.
"ஆண்கள் பொதுவாக இள வயதில் - அதாவது பருவத்துக்கு வந்து, இன்னும் திருமணம் ஆகாமல் அல்லது நட்பு-காதல் என்ற ரீதியில் ஒரு பெண்ணுடன் பழகாமல் இருக்கும் பொழுதில் தான் இவ்வாறு அதிகம் செய்கிறார்கள்.
தவறான நட்புகளும், பழக்கங்களும் முக்கிய காரணம். இது போன்ற காட்சிகளைக் காட்டும் திரைப்படங்களையும் பாடல்களையும் கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்."
I think so too.
"ஆபாசம் கலந்த கேலிகள், பெண்ணை ஈர்க்கும் நோக்கில் செய்யப்படுகின்றன என்று என்னால் நினைக்க முடியவில்லை. தட்டிக் கேட்க யாரும் இல்லை, என்ன வேணும்னாலும் செய்வோம் என்ற க்ரூப் ஆதிக்கத் திமிர் ஆகத் தான் தெரிகிறது எனக்கு.
ஆணும் பெண்ணும் மனிதர்களின் வெவ்வேறு உருவே என்று குழந்தைப் பருவத்திலேயே பதிய வைக்க வேண்டும் - குறைப்பதற்கு. தடுப்பதற்கு கடுமையான சட்டத்தை விட்டால் வேறு வழியில்லை."
Again. Completely agree with you.
உங்கள் கருத்திற்கு நன்றி ஏரம்பு சாமிநாதன்.
"எங்கெல்லாம் கலாச்சார இறுக்கங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் பலியல் வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். புராணங்களில் ஆயிரமாயிரம் பாலியல் கதைகள் காமக்கதைகள் புழக்கத்தில் இருந்தது. பிரசங்கம் என்ற பெயரில் இவைகளே முன்நாளைய சினிமா. தேவதாசிகளிடம் பசியை தீர்த்துக்கொண்டார்கள். இன்றய சினிமாவும் காட்சிகளும் பாடல்களும் உடல் இச்சையை தூண்டுகின்றது அதே நேரம் கற்பை வலியுறுத்துகின்றது. மிகப்பெரிய முரணாண பாலியல் கண்ணோட்டம் இருக்கின்றது. தூண்டுதலும் தடுத்தலும்."
நிச்சயமாக.
"பாலியல் கல்வி பாடசாலைகளிலும் வரவேண்டும்."
இதுவும் நடைமுறைக்கு கட்டாயம் வரவேண்டும்.
"பாலியல்த் தொழில் அங்கீகரிக்கப்படவேண்டும். வயதுவந்தோர்களுக்கான கட்டுப்பாடுகளுடன் நீலப்படங்களின் தாராள புளக்கம் இருக்கவேண்டும்."
I don't agree with prostitution and pornography being the answer. ஏன் அப்படி நினைக்கின்றீர்கள்? Most Women are still forced into prostitution in so many countries, with trafficking of women and children being a significant problem.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோமதி அரசு.
"குழந்தையை நல்ல படியாக வளர்ப்பது தாயின் கடமை."
பெற்றோர் இருவரினதும் கடமை இது இல்லையா.
Post a Comment