Showing posts with label பாலியல் வன்முறை. Show all posts
Showing posts with label பாலியல் வன்முறை. Show all posts

Saturday, February 16, 2013

One Billion Rising

மூன்றில் ஒரு பெண்கள் தம் வாழ்நாளில் பாலியல் வன்புணர்வுக்கோ வன்முறைக்கோ ஆளாவார்.

ஒரு பில்லியன் பெண்கள் வன்முறைகுட்படுத்தப்படுதல் ஒரு அக்கிரமம்.

ஒரு பில்லியன் பெண்கள் ஆடுதல் ஒரு புரட்சி.

Source: One Billion Rising

Monday, February 14, 2011

Eve-teasing - பகிடியில்லை, ‍ பாலியல் வன்முறை - Finally someone tells it like it is!

படம் இங்கேயிருந்து.
எப்பவெல்லாம் இலங்கையில் நான் தனியே வெளியே சென்றேனோ அப்போதெல்லாம் பல வாறான இவ்வன்முறைகளை அனுபவித்துள்ளேன். அவை சொல்லக்கூட முடியாத மிகவும் அருவருப்பான/ஆபாசமான அர்த்தங்களுடன் கூடிய வார்த்தைகள் முதல், மிக அருகில் வந்து புத்தகங்களைப் பறிப்பது/தொடுவது போல் பாசாங்கு செய்தல், உண்மையிலேயே புத்தகங்களைப் பறித்தல், தொடர்ந்து நடந்து கொண்டு ஏதாவது சொல்லிக் கொண்டு வருதல் எனப் பலவகைப் படும். எத்தனையோ தடவைகள் இவ்வாறு ஆண்கள் தெருவில் நிற்கக் கூடுமென நினைத்து வழக்கமாகச் செல்லும் பாதையை விடு வேறு பாதைகளால் போயுள்ளேன். I felt scared, humiliated, dehumanized and objectified beyond words. I just wanted to be invisible.

இத்தனைக்கும் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரே தீர்வு: ஆண்கள் அப்படித் தான் இருப்பினம், இவற்றை எல்லாம் புறக்கணி, ஒன்றும் நடவாதது போல் போ. Did these solutions ever make sense to me? NO! How could any sane person think that this is an acceptable behaviour? இவையெல்லாம் எவ்வாறு தீர்வாகுமென‌ ஒருபோதும் விளங்கியதில்லை. ஆனால் இதைத்தவிர‌ வேறெதுவும் செய்யத் தெரியவில்லை.It was accepted as the norm by the whole society. இச்சமூகத்தில் பெண்ணாகப் பிறந்ததற்குக் கொடுக்கும் விலை இது. ஆனாலும் பல பெண்களின் மிகக் கொடூரமான அனுபவங்களோடு ஒப்பிடுகையில் எனது அனுபவம் ஒன்றுமேயில்லை. இன்னும் பல இடங்களில் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குவதே நிகழ்கிறது. ஏதோ பெண்க‌ளே தான் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள் என்ற ரீதியிலேயே நிறையப் பேர் கதைக்கக் கேட்டுள்ளேன். Never really understood the logic behind that theory. கடந்த வாரம் பிரசுரிக்கப் பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் வேலைத்தளத்தில் கூட போகப் பொருளாக பெண்களை ஆண்கள் பார்க்கும் போது, பெண்களின் செயற்திறன் பாதிக்கப்படுகிறதெனக் கூறியது. That's not surprising. இணையத்தில் ஒரிரு இடங்களில் நான் பங்கெடுத்த விவாதங்களில் கூட ஏதோ பெண்களாலேயே இது நடக்கின்றது அல்லது வீட்டுக்கு வேளியில் போகாமல் இருப்பதே பெண்களுக்கு மேல் எனும் ரீதியிலேயே இன்னும் சிலர் எண்ணுகின்றனர்.

பெண்களையே குற்றம் சுமத்தும் போது சொல்லும் ஒரு காரணம். பெண்கள் உடுத்தும் உடையால் அவர்களே இவ் வன்முறைகளைத் வரவழைக்கின்றனர் என்பதே. உடைக்கும் இந்த வன்முறைக்கும் எந்தத் தெடர்புமில்லை. புர்கா போட்டுக் கொண்டு போகும் எனது சில நண்பிக‌ளும் கூட இவ்வன்முறைக்கு விதிவிலக்கானவர்களாக இருக்கவில்லை. பெண்கள் என்ன என்ன உடை போட்டிருக்கும் போது இவ்வன்முறைகளுக்கு ஆளானார்களென Blank Noise பக்கத்திற்குச் சென்று பாருங்கள். பெண்களை சக மனிதர்களாகப் பார்க்கும் ஒரு சமுதாயத்தை, பெண்களுகெதிரான எந்தவித வன்முறையையும் பிழையெனப் பார்த்து சரியாகத் தண்டிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிப்பதே இதற்குரிய தீர்வைத்தரும்.

இது பாலியல் வன்முறை. Through and through. Eve-teasing என்று சொல்வது இக்குற்றத்தை குறைப்பது போன்றது. It's a sugar-coated way of saying it. Atlast இரு வாரங்களுக்கு முன்பு Bangladesh இல் அவ்வாறே ஒரு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

The High Court of Bangladesh declared on 26 January, 2011 stalking of girls and women illegal, and directed the government to consider the offence as sexual harassment instead of the term Eve Teasing. The court's ruling came amid growing incidences of stalking that led many victims to commit suicide.

For starters let's hope they put that law into practice.