Thursday, December 20, 2012

Margaret Heffernan: Dare to disagree

Wednesday, December 19, 2012

புது வருட தீர்மானம் 1 - Build confidence to disagree with people

வேலையில் வருடாந்த annual performace review நடந்தது. எனது performance ஜ review செய்த எனது எதிர்கால மேற்பார்வையாளர் சொன்னது, "உன் performance எல்லாம் நன்றாக உள்ளது. நீ முன்னேற வேண்டிய ஒரு விடயம் - மற்றவர்களின் கருத்துகள் எல்லாவற்றுடனும் ஒத்துப்போகாமால் இருக்கவும் அந்த வேறுபாட்டை வெளிப்படையாகச் சொல்லவும் உனக்கு இன்னும் தன்னம்பிக்கை வர வேண்டும். You have to build enough confidence to disagree with people!

Saturday, December 15, 2012

அண்மையில் நடந்த சில நிகழ்வுகளும் என் எண்ணங்களும்

எத்தனையோ விடயங்களைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தும் நேரமே இல்லாத காரணத்தினால் எதுவும் எழுத முடியவில்லை. தொடங்கிய பரிணாமத்தொடரை முடிக்க வேண்டும். அதற்கு முதல் நான் எழுத நினைத்த வேறு சில விடயங்களை சுருக்கமாக இப்பதிவில் சொல்லலாம் என நினைக்கிறேன்.

Friday, November 16, 2012

கருத்துச் சுதந்திரத்திற்க்காகக் குரல் கொடுப்போம்



I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

from: Dharumi

Friday, October 12, 2012

மனிதக்குரங்குகளும் மனிதர்களும் ஒரே மூதாதை விலங்கிலிருந்து கூர்ப்படைந்ததை நேரில் பார்த்தீர்களா என்ன?

நேரில் கண்டால் தான் உண்மையெனில் எந்தவொரு குற்றத்திற்கும் எவரையும் தண்டிக்க முடியாது. குற்றம் நடந்து பலமணிநேரம் ஏன் பல நாட்களிற்குப் பின் தான் புலனாய்வாளர்கள் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று அங்கு விடப்பட்டிருக்கும் தடயங்களைக் கவனமாக ஆராய்ந்து குற்றம் எவ்வாறு யாரால் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணித்துக் குற்றவாளியைப் பிடிப்பார்கள். இதில் அநேகமானவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறேன்.நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவீர்களெனில் பல விடயங்கள் எமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
 
அதனால் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என யாராவது சொன்னால், நீ என்ன நேரில் பார்த்தாயா? என்பது ஒரு நல்ல கேள்வியன்று. அதோடு, உங்களுக்கு அநேகமாகத் தெரிந்திருக்கும் அவர்கள் நேரில் கண்டிருக்க சாத்தியமே இல்லை என்று. அதனால் உங்களுக்கு உண்மையில் கூடிய தகவல் தேவையெனில், நீங்கள் கேட்க வேண்டியது, உனக்கு எப்படி அது தெரியும்?

Monday, October 8, 2012

அறிவியலில் theory/கோட்பாடு என்றால் என்னவென்று பார்க்கலாமா?

"அறிவியலாளார்களால் நிரூபிக்கப்படாத தியரிகளை வைத்து, அவர்கள் சொல்வதெல்லாவற்றையும் முட்டாள்தனமாக நேரில் பார்த்தது போல் நம்புகிறீர்கள். நிரூபிக்கப்படாததால் தான் அது தியரி, நிரூபிக்கப்பட்டால் அதை உண்மையென்று சொல்வார்கள் தெரியுமோ" என்றிருந்த ஒரு பதிவு வாசிக்க நேர்ந்ததால் இந்தப் பதிவு. அந்தப் பதிவு எழுதியவர் மட்டுமல்ல சமூகத்தில் பலர் இவ்வாறே கருத்துக் கொண்டிருப்பதால் இந்த‌ அறிவியல் அடிப்படைப் பதிவு அவசியம் என்று நினைக்கிறேன்.

Friday, October 5, 2012

பரிணாமம் - ஆதாரங்களற்ற கொள்கை/சும்மா ஒரு தியரி???

via myconfinedspace

நாத்திகத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த பாகம் இயலுமானளவு விரைவில் போடுகிறேன். அதற்கு முன் வலையில் அண்மையில் , அறிவியலில் theory, facts ஜப் பற்றி எந்தளவிற்கு விளக்கமின்றி, தமது விளக்கமின்மையில் கொஞ்சம் கூட சந்தேகமற்று மிகுந்த நிச்சயத்துடன் அதைப் பறைசாற்றி, விஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்கள் என்ற தொனியில் சில பதிவுகள் படிக்க நேர்ந்ததால் அடுத்த பதிவில் இதைக் கொஞ்சம் விளக்கி விட்டுத் தொடர்கிறேன்.