Friday, December 16, 2011

அப்பாவின் திரட்டுகளிலிருந்து.... சிந்திக்கும் வேளையில்: பெண்கள் - முரண்படும் பெற்றோர்கள்

எங்கட அப்பா சிறந்த வாசிப்பாளர். வீட்டிலிருக்கும் போது அநேகமாக ஏதாவது வாசித்துக் கொண்டே இருப்பார். வாசித்ததெதுவும் எவ்வளவு பழசென்றாலும் எறியவே மாட்டார். அவருக்குப் பிடித்த பல கட்டுரைகளை பத்திரிகைகளிலிருந்தோ புத்தகங்களிலிருந்தோ நகல் எடுத்தும் சேகரித்து வைத்திருந்தார். அவ்வாறான கட்டுரைகளில் அம்மா இன்று கண்டெடுத்து எனக்குக் காட்டிய ஒரு கட்டுரை கீழ்வருவது. இது புரட்டாதி 28, 1993 இல் சென்னையில் வெளியான தினமணிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இதில் சொல்லியிருக்கும் பல‌ கருத்துகள் இக்காலகட்டத்திற்கும் மிகவும் பொருந்தும் என்பதாலும் அப்பாவின் திரட்டுகளில் சிலதையாவது இங்கு சேமிக்கலாம் என்ற நோக்கிலும் இங்கு பகிர்கின்றேன்.

இக்கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் கதைக்கும் ஓரளவு மனமுதிர்ச்சி அடைந்த‌ பெற்றோர்கள் இன்னும் மிகக் குறைந்தளவே எம் சமூகத்தில் உள்ளார்கள். அவ்விதத்தில் இக்காலகட்டத்திலும் ஒரு சிறுபான்மையினரையே இக்கட்டுரை address பண்ணுகிறது. Nevertheless, it's an optimistic view.

Monday, December 12, 2011

அது ஒரு பெண்குழந்தை - உலகின் மூன்று மிக ஆபத்தான சொற்கள் - A documentary



~2.29 நிமிடங்களில் ஒரு தமிழ்ப் பெண் சொல்வது:

"மனசில அத வைச்சிருக்கக் கூடாது. பையனா இருந்த வச்சிருக்கலாம். பெண்ணா இருந்த ஒழிச்சுப் போடலாம். பிறந்த உடனே நானே புதைச்சுப்புடுவேன். அப்புறம் பையனே இல்லையெனு எட்டு குழந்தைகளாட்டம் கொன்னுப்புட்டோம்."
 
It’s a Girl! Documentary Film
A Blog by the 50 million missing campaign

Wednesday, December 7, 2011

மாதவிடாய்ச் சுழற்சி

இப்பதிவில் மாதவிடாய்ச் சுழற்சியில் ஒவ்வொரு மாதமும் என்ன நடக்கிறதெனப் பார்ப்போம். கீழுள்ள படம் பார்க்க மிகச் கூடுதலான, சிக்கலான தகவல்களைக் கொண்டுள்ளதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் விளங்குவதற்கு மிக மிகச் சுலபமானது. As people say, looks can be deceiving. அதனால் தயவு செய்து படத்தைப் பார்த்து விட்டு பதிவை வாசிக்காமல் போகவேண்டாம். :) இயலுமானவரை இலகுவாக்க முயற்சித்துள்ளேன்.Please let me know if I have completely failed at it.

Sunday, December 4, 2011

பெண்ணின் இனப்பெருக்கத்தொகுதி - மாதாமாதம் என்னதான் நடக்குதங்கே என‌ப் பார்க்க‌லாமா?

எம்மவர்களிடையே மாதவிடாய் தொடர்பாக, கருத்தடை மாத்திரைகள் தொடர்பாக நிறையக் கட்டுக்கதைகள் உண்டு. இக்கதைகளில் ஏதாவது உண்மை இருக்கிறதா எனப் பெரிதாக யாரும் யோசிப்பதில்லை. எவனோ சொன்னான் என எல்லோரும் அவற்றையே பின்வற்றுவதே அநேகம் நடந்து வருகிறது. அண்மையில் கருத்தடை மாத்திரைகள் பற்றி கேள்விப்பட்ட கருத்துகளே என்னை பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியைப் பற்றிய இந்த அடிப்படை அறிவியல் தொடரை எழுதத் தூண்டியது. எம்மிளையவர்கள் பலருக்குக் கருத்தடை மாத்திரைகளைப் பற்றிய தகவல்கள் தெரியாது. ஊரிலிருந்து பெரியவர்கள் பலருக்குச் சொல்வது "அந்த மாத்திரைகள் நஞ்சு மாதிரி. கருப்பையை எரிச்சுப் போடும். பிறகு ஒரு பூச்சி, புழுவும் உருவாகாது' என்பதே. இந்த மாதிரிக் கட்டுக்கதைகளுடன், மாதவிடாய் இரத்தத்திற்குக் கூட‌ மாயாஜாலத் தீய சக்திகள் உண்டு என அர்த்தப்படும் கட்டுக்கதைகளுக்கு உதாரணமாக‌ அண்மையில் என் கண்ணில் பட்ட இந்தப் பயங்கரமும் கூட நான் இதை எழுதுவதற்குக் காரணங்கள்.

Although எவர்களின் சிந்தனையைத் தூண்ட வேண்டுமென நினைக்கிறேனோ, அவர்களில் சிலராவது இப்பதிவை வாசிப்பார்களா என்பது சந்தேகமே. எனினும் யாராவது இருசிலருக்காவது உதவலாம் எனும் நம்பிக்கையிலும், எனது சிந்தனைகளை ஒருமைப்படுத்தும் முகமாகவும் இத்தொடரை எழுதுகின்றேன். நேரில் என்னிடம் இதைப்பற்றிக் கதைப்பவர்களிடம் என்னால் இயன்றளவு விளக்கிக்கொண்டு வருகின்றேன்.

சரி. முதலில் பெண்களின் இனப் பெருக்கத் தொகுதியின் உட்கூறுகளின் அமைப்பியலைப் (anatomy) பார்ப்போமா?

Saturday, November 26, 2011

Sometimes Words Do Speak Louder Than Actions



ஆண்களே - be part of the solution - ஒரு போதும் பெண்களுக்கெதிராக வன்முறை செய்யவோ, அவ்வாறான வன்முறையை மன்னிக்கவோ அல்லது பார்த்தும் பார்க்காத மாதிரிப் போகவோ மாட்டேனென உறுதி கூறுங்கள்.  Do swear to never commit, excuse or remain silent about violence against women. உங்களை ஒருவர் எப்படி நடத்தவேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே பெண்கள் உட்பட எல்லோரோடும் பழகுங்கள்.

Friday, November 25, 2011

பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறைகளை ஒழிப்போம் - It's White Ribbon Day to end the Violence Towards Women


பெண்களுக்கெதிரான வன்முறை பல சமூகங்களில் மிகப் பரவலாக நடக்கும் பிரச்சனை. உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண்கள் அவர்கள் பெண்களாக இருப்பதால் மட்டும் வன்முறைக்குட்படுத்தப்படுகிறார்கள். உலகில் 15 க்கும் 44 வயதிற்கும் உட்பட்ட பெண்களில் போர், புற்றுநோய்/மலேரியா போன்ற நோய்கள், விபத்துகள் ஆகிய காரணங்களால் மொத்தமாக இறந்த பெண்களை விட அவர்களுக்கெதிரான வன்முறையால் இறந்தவர்களே மிக அதிகம். மிக அடிப்படையான மனித உரிமை மீறல் இது.
எமது சமூகத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய மூடநம்பிக்கை, பெண்களே தமக்குத் தாமே இவ்வன்முறைகளை வரவழைத்துக் கொள்கிறார்கள் என்பதே. குற்றம் இழைத்தவன விட்டு விட்டு பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாக்குவது எந்தவிதத்திலும் நியாயமானதல்ல. Nobody ever asks or deserves to be abused this way. போர்ச்சூழலில் பெண்களுக்கெதிராக நடத்தப்படும் வன்முறைகளை விட‌, பாலியல் வன்புணர்வு உட்பட அநேகமான வன்முறைகள் பெண்களின் கணவனாலேயோ அல்லது அவளுக்குத் தெரிந்த வேறொரு ஆணாலேயே நடத்தப்படுகிறது.
வீடுகளில் நடக்கும் வன்முறைகள் எமது சமூகத்தில் கலாச்சாரத்தின் பெயரில் இன்னும் கூடுதலாக மூடி மறைக்கப்படுகிறது. எத்தனையோ பேர் இன்னும் இதை சாதாரணமாக வீடுகளில் நடக்கும் விடயமாகவே கருதுகின்றனர். அநேகமாக வன்முறைக்குட்படும் பெண்கள் வெளியில் யாருக்கும் தெரியாமல் மெளனமாகவே அவதிப்படுகின்றனர். பல சமயங்களில் நிலமை படு மோசமாகப் போய் காவல் துறையின் மூலமே women refuge க்கு அனுப்பப்படுகின்றனர். அதன் பின் கூட அவர்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்பாமல் வைத்திருப்பது மிகக் கடினம். பெண்களின் ஒரே இலட்சியம் திருமணம் முடிப்பதும் என்ன நடந்தாலும் சாகும் வரையும் அப்பந்தத்தை விட்டு விலகாமல் இருப்பதுவுமே என்று பிறந்ததிலிருந்து ஓதி வளர்க்கப்படும் சமூகத்தில் இது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. இவ்வன்முறை நடக்கும் வீடுகளில் வாழும் குழந்தைகளும் இதனால் மிகவும் மனநிலை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலும் அவர்களும் இவ்வன்முறைகளுக்குட்படுத்தப்படுகிறார்கள்.
Overwhelmingly இம்மாதிரியான வன்முறைகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. வன்முறை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அதனால் இந்த white ribbon day ஆண்களின் அடிப்படைச் சிந்தனையில் மாற்ற‌த்தைக் கொண்டுவருவதற்காகவே உருவாக்கப்பட்டது. ஒரு சமூகமாக ஒவ்வொருவரும் இவ்வன்முறைக்கு எதிராக எழுந்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்.

Saturday, November 12, 2011

தனிச்சலுகையின் நோயியல் - The Pathology of Privilege

Tim Wise is brilliant here. அவர் இந்த உரையில் குறிப்பிடுவது வெள்ளை இனத்தவராக இருப்பதனால் மட்டும் ஒருவருக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி. இதில் சொல்லப்படும் அநேகமான கருத்துகள் ஆண்களாக இருப்பதால் மட்டும், சமூகத்தால் உயர் சாதிகள் எனக்குறிப்பிடப்படும் கூட்டத்தில் பிறந்ததனால் மட்டும், even சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் கூட்டத்திற்குள் பிறந்ததினால் மட்டும் (male/female) ஒருவருக்குக் கிடைக்கும் தனிச்சலுகைகளுக்கும் மிகச் சரியாகப் பொருந்தும். Think about it.