நேரில் கண்டால் தான் உண்மையெனில் எந்தவொரு குற்றத்திற்கும் எவரையும் தண்டிக்க முடியாது. குற்றம் நடந்து பலமணிநேரம் ஏன் பல நாட்களிற்குப் பின் தான் புலனாய்வாளர்கள் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று அங்கு விடப்பட்டிருக்கும் தடயங்களைக் கவனமாக ஆராய்ந்து குற்றம் எவ்வாறு யாரால் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கணித்துக் குற்றவாளியைப் பிடிப்பார்கள். இதில் அநேகமானவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறேன்.நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவீர்களெனில் பல விடயங்கள் எமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
அதனால் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என யாராவது சொன்னால், நீ என்ன நேரில் பார்த்தாயா? என்பது ஒரு நல்ல கேள்வியன்று. அதோடு, உங்களுக்கு அநேகமாகத் தெரிந்திருக்கும் அவர்கள் நேரில் கண்டிருக்க சாத்தியமே இல்லை என்று. அதனால் உங்களுக்கு உண்மையில் கூடிய தகவல் தேவையெனில், நீங்கள் கேட்க வேண்டியது, உனக்கு எப்படி அது தெரியும்?