Thursday, May 31, 2012

நன்றி சொல்லும் நேரம்....


இது மிகவும் கால‌ம் க‌ட‌ந்த‌ ப‌திவு. இருந்தாலும் எனக்கு liebster விருத‌ளித்த சக்திப் பிரபாவிற்கும் முகுந்த் அம்மாவிற்கும் க‌ண்டிப்பாக‌ ந‌ன்றி சொல்லியே ஆக‌ வேண்டும்.




இந்த வலைப் பூவை முதலில் ஆரம்பித்த நேரம் எனக்கு interest ஆன பதிவுகளில் பின்னூட்டங்கள் மட்டுமே எழுதி வந்தேன். மற்றவர்களின் கடின உழைப்பால் எழுந்த பதிவுகளுக்கு எனது கருத்துகளைத் தெரிவிப்பது நானாகப் பதிவுகள் எழுதுவதை விட மிகவும் இலகுவாக இருந்தது. வலைப்பூ ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின்பே உருப்படியாகப் பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். எனது மொழித்திறனில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்பதைப் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். எத்தனையோ தடவை கிடைத்த எழுத்துப் பயிற்சியால் அறிவியல் இதழ்களில் எனது ஆய்வைப் பற்றி எழுதுவதற்கு ஓரளவு தேர்ச்சி பெற்று விட்டேன். ஆயினும் அறிவியலை பொது மக்களுக்கு விளங்கும் வகையில் அதுவும் தமிழில் எழுத இந்த வலைப் பூவில் மட்டுமே முயன்று வருகின்றேன்.  ஓரிரு தடவை பலர் முன்னிலும் இன்றும் இயன்றளவு நேரில் ஆட்களுடன் கதைக்கும் போதும் கதைக்கும் விடயங்களுக்கேற்றவாறு (சோதிடம், எண்ணியல், alternative therapies, மூட நம்பிக்கைகள்)  இயன்றளவு அறிவியல் சார்ந்த விளக்கங்கள் சொல்வதை வழக்கமாக்கியுள்ளேன். எல்லோரும் அறிவியலாளர் ஆக வேண்டிய அவசியமில்லை. ஆனால் எல்லோருக்கும் அடிப்படை அறிவியல் அறிவு (scientific literacy) அவசியம். இவ்வறிவு இருந்தால் பல மூட நம்பிக்கைகள் சமூகத்தில் இருக்கச் சாத்தியமே இல்லை. மக்களின் நம்பிக்கையின் ஊடாக, ஒரு பலனுமின்றி அவர்களின் பணம் சுரண்டும் கிட்டத்தட்ட எல்லா so called alternative therapies உம் எப்போதோ மறைந்திருக்கும். அத்தோடு பல விடயங்களுக்கு (from climate change to stem cells, உங்களுக்கு எந்த புற்றுநோய் சிகிச்சை சிறந்ததெனத் தெரிவு செய்வது முதல் பிரசவத்தில் உங்களுக்கு வலி நிவாரணி தேவையெனில் எது எடுக்கலாமென முடிவெடுப்பது வரை) தகவலறிந்து முடிவெடுப்பது (informed decision making)முக்கியம். அதனால் சமூகத்திற்கு அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டுமென்பது எனது விருப்பம். அதன் ஒரு சிறிய கிளையே இந்த வலைப் பூவில் எழுதுவது. அது கூட நான் நினைக்குமளவு எழுத முடிந்ததில்லை. என் எழுத்தின் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லாத போது, எனது அறிவியல் சார்ந்த எழுத்துகள் ஒருவருக்குப் பிடித்திருக்கென விருதால் அங்கீகரிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விடயம். எனது எழுத்துக்கள் பிடிக்கும் என எனக்கு liebster விருதளித்த சக்திப்பிரபாவிற்கு மிக்க நன்றி.

அடுத்து எனக்கு liebster விருதளித்தவர் முகுந்த் அம்மா. என்னை ஆராய்ச்சியையும் குடும்ப‌த்தையும் அற்புதமாக‌ balance செய்ப‌வ‌ள் என்று குறிப்பிட்டிருந்தார். So called struggle with the juggle! இதுவும் நிச்ச‌ய‌மாக‌ என‌க்குப் பொருந்துமா என்ப‌து ச‌ந்தேக‌மே. எதோ என்னால் இய‌ன்ற‌ளவு செய்கின்றேன் என்ப‌தே உண்மை. Throughout the world, at best it's still hard and at worst it's almost impossible. அதைக் கூட‌ என‌க்கிருக்கும் சில‌ சலுகைகள் இல்லாவிடில் செய்ய‌ இன்னும் க‌டின‌மாக‌ இருக்கும் என்ப‌தே உண்மை.

உதார‌ண‌த்திற்கு அண்மையில் ந‌ட‌ந்த‌ ஒரு நிக‌ழ்வு. அண்மையில் நான் விண்ணப்பித்திருந்த ஒரு விருதிற்கான நேர்முக‌த் தேர்விற்கு Wellington ற்கு வ‌ர‌ வேண்டுமென மின்னஞ்சல் வ‌ந்திருந்த‌து. மின்னஞ்சல் வ‌ந்த‌து பங்குனி 22. ஆனால் இப்போது புத்தம் புதுக் குழந்தையுடனும் மூன்று வயது மகனுடனுமேயே நேரம் எங்கு போகிறதென்று தெரிவதில்லை. அத்தோடு போதுமானளவு நித்திரையும் இல்லாததால், மின்னஞ்சலை பல நாட்களுக்கு ஒருமுறையே பார்ப்பதுண்டு. அதனால் அம்மின்னஞ்சலை நான் பார்த்தது சித்திரை 6 ஓ 7ம் திகதி. நேர்முகத்தேர்வு 14ம் திகதி. நேர்முகத்தேர்வில் எனது ஆய்வைப்பற்றி ஒரு 15 நிமிட presentation உம் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். சும்மாவே நேரமே இல்லை, நித்திரை இல்லை, மிகுந்த களைப்பு, இந்த இலட்சணத்தில் எப்படி ஒரு கிழமைக்குள் ஒரு presentation தயார் பண்ணி, நேர்முகத்தேர்வுக்கும் தயாராவது, அத்தோடு கைக்குழந்தையைக் கொண்டு போவது நல்லதா அல்லது விட்டு விட்டுப் போவதா என்று முதலில் பல கேள்விகள்.

முதலே எனது மேடைப்பயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அதனால் presentation ஜப்பற்றியே மிகுந்த கவலையாக இருந்தது. இருக்கும் நிலமையில் மிகுந்த களைப்பால் மூளை வேலையே செய்யாத மாதிரி இருக்கும் போது (the best term would be 'brain dead zombie cow' :))  presentation எப்படித் தயார் செய்வது, இதெல்லாம் முடியும் காரியமா என்று பல சந்தேகங்கள். நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டதே நல்ல சந்தர்ப்பம். அதை விடாமல் எதோ இயன்றளவு முயற்சி செய்யலாமென அடுத்த ஆறோ எழு நாட்களும் கிடைத்த கொஞ்ச நித்திரையையும் விட்டு குறிப்பாக presentation ஜத் தயார் செய்வதிலேயே கவனம் செலுத்தினேன். நேர்முகத்தேர்வு ஒரு சனிக்கிழமை வந்ததால் துணைவனுக்கு வேலை இல்லை. அம்மா முதலே தான் சனிக்கிழமை வேலைக்கு விடுப்பு எடுப்பதாகச் சொல்லி இருந்தார். Wellington இல் நேர்முகதேர்வு காலை 10.45 க்கு. ஒரு மணி நேரம் விமானப்பயணம் செல்வதற்கு. அதனால் மூத்தவனைத் துணைவனுடனும் குழந்தையை அம்மாவுடனும் விட்டு விட்டு விடியச் சென்று தேர்வு முடிந்ததும் மதியம் திரும்புவதாக ஏற்பாடு. ஒரு எட்டு மணித்தியாலங்களாவது நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று தெரிந்ததும் ஒவ்வொரு நாளும் சிறிது, சிறிது பால் express பண்ணி freezer இல் சேமித்து வைத்து, சனிக்கிழமை அம்மாவிடம் கொடுத்து விட்டுச் சென்றேன். நேர்முகத் தேர்வு செய்பவர்களிடம் அவ்விடத்தில் express பண்ண வசதி செய்ய முடியுமா எனக் கேட்டு expressor ஜயும் எடுத்தே சென்றேன்.

பிள்ளைகளிற்குத் தேவையானது செய்தாயிற்று, presentation ஏதோ இயன்றளவு செய்தாயிற்று, நேர்முகத் தேர்விற்கு ஒன்றும் பெரிதாகத் தயார் செய்யவில்லை.ஏதோ இயன்றளவு செய்து பார்க்கலாம் என்றே போனேன். I was completely exhausted. Presentation முடித்தது மட்டும் தான் தெரியும். நேர்முகத்தேர்வில் கதைத்தது ஒன்றும் அநேகமாக நினைவில் இல்லை. I think my mind was completely on auto pilot mode. திரும்ப வந்ததும், எப்படிச் செய்தாய் என்று கேட்டவர்களிடம், தெரியவில்லை, ஏனெனில் எனக்கு என்ன கதைத்தனான் என்று ஞாபகமே வருகுதில்லை. அதனால் அநேகமாக நன்றாகச் செய்யவில்லை என்றே நினைக்கிறேன் என்றேன். அதனால் இரு வாரங்களின் பின் தொலைபேசியில் எனக்கே அவ்விருதைத் தர முடிவுசெய்துள்ளனர் என்றதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களிடமே அதையே சொன்னேன். அவர்களோ நீ மிக நன்றாகச் செய்தாய் என்றார்கள். :)

என்ன தான் எனக்கு நேரமோ ஓய்வோ இல்லாமல் இதைச் செய்தாலும் அந்நாளில் குழந்தைகளைக் கவனிக்க யாரும் இருந்திருக்காவிடில் இன்னும் கடினமாக இருந்திருக்கும். அத்தோடு milk expressor பற்றிய தகவல்களும் முதலே தெரிந்து நான் வாங்கியே வைத்திருந்ததாலும் நான் இல்லாவிடினும் குழந்தைக்கு எனது பால் வைத்து விட்டுச் செல்லக் கூடியதாக இருந்தது. இன்னொரு சலுகை என்னுடன் வேலை செய்யும் சிலரும் மிகுந்த‌ supportive ஆக இருந்து, நான் presentation ஜப் பயிற்சி செய்ய எனக்கு ஏற்ற நேரத்திற்கு வேலைக்கு வரச் சொல்லி, தமது வேலைகளை நான் வரக்கூடிய நேரத்தில் தள்ளி வைத்து, நான் பயிற்சி செய்யும் போது கேட்டு உதவி செய்தது. இந்த மாதிரிச் சின்னச் சின்னச் சலுகைகள் இல்லாவிடில் இதை என்னால் செய்திருக்க முடியாது.

மிக்க நன்றி முகுந்த் அம்மா.


இவ்விருதுகளை எனது சிறு முயற்சியான இவ்வலைப்பூவை வாசித்து ஊக்கமளிக்கும் அனைவருடனும் பகிர்கின்றேன்.

7 comments:

தருமி said...

congrats ....

கையேடு said...

wow..Congrajulations again...

could you also share a little about the award, if u dont mind.
sorry for english..

முகுந்த்; Amma said...

Anna,

First of all Congrats to you and your husband on the arrival of your junior. Hope your junior is doing fine.Sorry for not able to convey this before.

I always admire working family women. Expecially if the person is on science doing research, its still more challenging. As far as work life balance is concerned, I am also in your same shoes. Having a small kid and very challenging research is like walking on a rope. Even if we slide a bit the lose will be big.

As a fellow women researcher and mom, I admire you always for whatever you do.

I wish you success in both fields :)

Anonymous said...

வாழ்த்துக்கள் சகோ.

J.P Josephine Baba said...

வாழ்த்துக்கள் தோழி!

Anna said...

Thanks heaps Dharumi Sir, Kaiyedu and Mukund amma.

Apologies for this delayed response.

Kaiyedu, the award is given to an emerging woman scientist, who contributes to her community,
who helps others in the wider field of science and,
for whom this Award would be a means to further advancement.

Anna said...

மிக்க‌ ந‌ன்றி இக்பால் செல்வ‌ன், Josephine.