Monday, October 17, 2011

Bring on the learning revolution!

திரு பாஸ்க‌ர் போன‌ ப‌திவில் கூறிய‌ க‌ருத்து,
"உங்கள் நிலைதான் எல்லோருக்கும். அது இன்றும் தொடர்வது கொடுமை. அதுவும் என்ன எனக்கு பிடிக்கும் என்று சிந்திப்பதை விட எது எனக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்பதே மாணவர்கள் தனது துறையை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. அதுவே உணர்ந்து படித்தலில் இருந்து வெகு தூரம் பயணம் செய்ய துவங்கும் புள்ளியாகவும் உள்ளது. இவை எல்லாம் வெறும் போதிக்கும் முறையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்து தீர்க்கும் பிரச்னை அல்ல அது சமூக மாற்றத்தின் பகுதியாக மட்டுமே செய்ய கூடிய ஒன்று. உங்கள் அனுபவங்களோடு நமது சமூகத்தின் பெரும்பாலான மாணவர்களின் நிலையோடு இணைத்து பிரச்சனையை இனம் கண்டு எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்."

உங்க‌ள் க‌ருத்திற்கு மிக்க‌ ந‌ன்றி. போதிக்கும் முறையும் ஆசிரிய‌ர்-மாண‌வ‌ர் relationship உம் நிச்ச‌ய‌மாக‌ மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை. ஆனால், "இவை எல்லாம் வெறும் போதிக்கும் முறையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்து தீர்க்கும் பிரச்னை அல்ல அது சமூக மாற்றத்தின் பகுதியாக மட்டுமே செய்ய கூடிய ஒன்று" என்ற உங்கள் கருத்தை முழுதாக ஆமோதிக்கின்றேன். நிச்சயமாக சமூக மாற்றத்தினூடாகவே மாற்ற முடியும்.

பின்வருவது சமூகத்தில் மாற வேண்டியவை என நான் நினைப்பவை. இன்னும் பல இருக்கும். இப்போதைக்கு எனக்குத் தோன்றியவை இவையே. These are just my thoughts, hence may not be a coherent post.

Societal norms have to be changed completely.

முதலில் எல்லாத் துறைகளையும் வேலைகளையும் சமமாக மதிக்கும் தன்மை வர வேண்டும். சமூகத்தில் எல்லோரும் மருத்துவர்களாகவும் பொறியியளாளர்களாகவும் இருந்தால் மற்றைய வேலைகளை யார் செய்வதாம். இவர்கள் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு எல்லாத் துறைகளும் முக்கியமே. எனது A/L வகுப்பிலேயே சில மாணவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அறிவியல் படிக்க கொஞ்சம் கூட விருப்பமில்லை. சிலருக்கு வர்த்தகம் மிகவும் பிடித்திருந்தது. சிலருக்கு arts பிடித்திருந்தது. பெற்றோரின் கட்டாயத்தால் மட்டுமே அவர்கள் அறிவியல் வகுப்புகளில் இருந்தார்கள். பாடங்களில் விருப்பம் இருந்தாலே கிரகிக்க மிகவும் கடினமான பாடத்திட்ட முறையைக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் எப்படிப் படிப்பது? It's really sad to see many young people completely loose their love for learning because of our societal norms and education systems.

இராண்டாவது எல்லோரும் சமூகம் ஆமோதிக்கும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. பட்டதாரிகளாக இருந்தால் தான் அவர்களுக்குத் திறமை இருக்கிறது என்ற எண்ணம் மாற வேண்டும். எல்லாப் பிள்ளைகளுக்கும் பல்கலைக் கழகத்திற்குச் சென்று பட்டதாரியாகவேண்டும் என்ற விருப்பம் இல்லை. அவர்களுக்கு இயலுமானளவு இருக்கும் தெரிவுகளுக்கான தகவல்களைக் கொடுத்து அவர்களையே தெரிவு செய்ய விட வேண்டும். Everyone doesn't have to be an academic, if they trully do not want to be. என் துணைவர் சொல்வார், எமது சமூகத்தில் பலர் திருமணத் தகைமைத் திரட்டில் போடுவதற்காகவே பட்டம் எடுக்கிறார்கள் என்று.

மூன்றாவது பெற்றோர் தமது வாழ்க்கையைப் பிள்ளைகளினூடாக வாழ்ந்து விட வேண்டுமென்ற எண்ணம் முழுதாக மாற வேண்டும். எனக்கு இன்னாராக வர விருப்பவிருந்தது, அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என் பிள்ளையை எப்படியாவது வர வைத்து விட வேண்டுமென்பது பிழையான சிந்தனை. It puts way too much pressure on the kids. அவர்களுக்கு இயலுமானளவு வேறுபட்ட அனுபவங்களை வழங்கி, பின் அவர்களுக்கு என்ன செய்ய விருப்பம் என்பதை அவர்களின் தெரிவுக்கே விட்டு விட வேண்டும். Parents should guide the kids and let them live their own life and respect the variety of talents of each individual. பிள்ளைகளின் தனித்துவத்தன்மையை மதிக்கப் பழக வேண்டும்.

எமது சமூகத்தில் பேப்பர் தகுதிகளுக்கு மதிப்பு மிக அதிகம். எமது சமூகத்தில் அது பல நேரங்களில் எதுவும் விளங்காமல் மனனம் செய்து கூடப் பெறலாம். அதனால் ஒருவருக்கு எவ்வளவு அறிவு வருகிறதென்பது வாதாடக் கூடியது. அனுபவத்தால் பெறப்படும் அறிவிற்கு மதிப்பளிப்பதில்லை. Well, generally knowledge is not respected anyway. That has to change.

இதில் உருப்படியாக என்னவாவது சொல்லியிருக்கிறேனா எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் கருத்துகளை நிச்சயம் தெரிவியுங்கள். நான் Creativity expert Sir Ken Robinson இன் கருத்துகளுடன் முற்றிலும் உடன்படுகின்றேன். These two videos are well worth watching. இதை தமிழாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும்.



1 comments:

baskar said...

இது விவாதிக்க பேச தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ள தலைப்பு. பல விசயங்கள் இங்கு தெரிந்து கொண்டேன் நன்றி.