Saturday, October 15, 2011

நான் ஒரு விஞ்ஞானி - 2

போன பதிவில் எழுதிய கேள்வி பதில்களோடு இங்கு நான் meet the scientist நிகழ்ச்சியில் பங்கு பற்றும் போது அநேகமான சிறுவர்கள் கேட்கும் இன்னொரு கேள்விக்கும் விரிவான பதில் எழுதலாமோ என்று நினைத்து பின் மிகவும் அலட்டுரனோ தெரியாதென விட்டு விட்டேன். ஆனால் அதில் திரு. பாஸ்கரின் கருத்து எழுதத்தூண்டியதால் எழுதுகிறேன். மிகுந்த அலட்டலே என நினைத்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

"எப்ப/எவ்வாறு உங்களுக்கு ஆய்வுதான் career என்று தெரிந்து கொண்டீர்கள்?/அத‌ற்கு என்ன‌ செய்தீர்க‌ள்?
நான் எனது பள்ளிப் படிப்பை இலங்கையில் முடித்தனான். முற்றிலும் தமிழில். அங்கு பாடத்திட்டம் மிகவும் வேறுபட்டது. 16 ஆறு வயதில் நீங்கள் எந்தத்துறைக்கு செல்லப் போகிறீர்கள் என்று முடிவு செய்ய வேண்டும். யார் இது ஒரு நல்ல திட்டம் என்று முடிவு செய்ததோ தெரியாது. எனக்கு 16 வயதில் நிச்சயமாகத் தெரியாது எனக்கு என்னவாக வர விருப்பம் என்று. அறிவியலில் விருப்பம் இருந்ததால் A/L இல் அறிவியலே எடுத்தேன். அம்மா, அப்பா நான் மருத்துவமே படிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தனர். எனக்கு என்ன விருப்பம் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்ன options இருக்கென்று கூடத் தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் ஆய்வு எனும் துறை இருக்கிறதென யாரும் விளக்கியதில்லை. அங்கு A/L science இல் மிக நல்ல புள்ளிகள் எடுத்தால் மருத்துவம் அல்லது BSc/teaching மட்டுமே செய்யலாமெனவே நான் அறிந்திருந்தேன். வேறு எதுவும் தெரியாது.
A/L எடுத்துவிட்டு நியுசிலாந்திற்குப் புலம் பெயர்ந்தபின் என்ன செய்வதென்று யோசித்து, நான் இரசாயனவியல் செய்யலாமென நினைத்திருந்தேன். ஏனெனில் எனக்கு இரசாயனவியல் நன்றாக ஓடும். ஆனால் அப்பா biomedical science செய் என்றார். அவர் சொன்னது degree முடித்ததும் இங்கு மருத்துவத் துறைக்கு apply பண்ணலாம் என்ற எண்ணத்தில். நான் எந்தவொரு தீர்மானமும் இன்றி சரி என்றேன். அந்த‌ப் ப‌டிப்பின் க‌டைசி ஆண்டில் ஆறு மாதம் ஒரு சிறிய‌ ஆய்வு project செய்ய‌ வேண்டும். அதுவே எனக்குத் தேவையான திருப்பு முனையாக அமைந்தது. அதன் போதே எனக்கு ஆய்வும் ஆய்வுகூடத்தில் வேலை செய்வதும் எந்தளவுக்குப் பிடித்திருந்தது என்று தெரிந்து கொண்டேன். அதுவரை ஓரிடத்தில் 30 நிமிடங்கள் இருந்து பாடம் படிக்கக் கொஞ்சம் கூடப் பொறுமையற்றவள் திடீரென்று நாள் முழுக்க ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் செய்தாலும் அதில் ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் மனம் ஒன்றி, enjoy பண்ணியது எனக்கே வியப்பாக இருந்தது.

அதோடு எனக்கே என்னை பற்றிக் கொஞ்சம் தெளிவும் அப்போ தான் வந்தது. நான் அதுவ‌ரை ஒரு போதும் இருந்து நெடு நேரம் ப‌டித்த‌தில்லை. இருந்து, படித்து, அதைப் பின் திரும்ப‌ப் ப‌டித்து, பாட‌மாக்கி செய்வ‌தெல்லாம் என‌க்கு கிட்ட‌த்த‌ட்ட‌ முடியாத‌ காரிய‌மாக‌வே இருந்த‌து. சமயப் பரீட்சைகளில் எப்பவும் வரும் முதல் கேள்வி, ஒரு ஜந்து தேவாரங்கள் தந்து அதில் இரண்டோ மூன்றோ தேர்ந்தெடுத்து முழுதாக எழுத வேண்டும். அதில் ஒரிரு தேவாரங்கள் எப்பவுமே அநேகமாக வரும். அதனால் அவை மட்டுமே எனக்கு முழுதாகப் பாடமாக இருந்தது. அவற்றை மட்டுமே அந்தக் கேள்விக்கு நம்பிச் சென்றிருக்கின்றேன். That's how bad I was. இந்த லட்சணத்தில் 2 1/2 வருடங்கள் படித்து இடையில் ஒரு assessment உம் இல்லாமல் அதன் கடைசியில் 100 வீத‌த்திற்குப் ப‌ரீட்சை எழுதி எப்ப‌டி ப‌ர‌வாயில்லாம‌ல் செய்தேன் என்று என‌க்குத் தெரியாது.

இங்கு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு semester உம் ஆறு மாதங்களே. அதற்குள் கூட பல assignments, tests என்று assessments இருப்பதால் கடைசிப் பரீட்சை 50-60% க்குத்தான். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் சில பாடங்கள் முழுதாக internal assessments ஆகக் கூட உண்டு. அநேக‌மாக‌ எல்லாப் பாட‌ங்க‌ளிலும் நான் க‌டைசிப் ப‌ரீட்சையில் எடுக்கும் புள்ளிக‌ளை விட‌ internal assignments இல் எடுக்கும் புள்ளிக‌ள் மிக‌க் கூடுத‌லாக‌ இருந்த‌து. ஏனெனில் க‌டைசிப் ப‌ரீட்சைக்குப் போகையில் என‌து மூளையில் ப‌திந்திருப்ப‌து அநேக‌மாக‌ வ‌குப்புக‌ளில் lecturers சொன்ன‌தே த‌விர‌, நானாக‌ப் பாட‌ப் புத்த‌க‌த்தை இருந்து ப‌டித்த‌தால் அல்ல. இங்கு கூட எனக்கு மனதிற்குப் பிடிக்காத பாடங்களை just pass பண்ணுவதற்காக மட்டும் படிப்பது எனக்கு மிகவும் கடினமான விடயம். இங்கு பாட‌சாலைக‌ளிலும் பாட‌த்திட்ட‌ம் இவ்வாறே. They concentrate more on practical aspects than theoritical aspects. Theories ஜ‌க் கூட‌ அநேக‌மாக‌ப் pracaticals இனூட‌க‌ உண‌ர‌ப்ப‌ண்ணுவ‌தால் பாட‌மாக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் மிக‌க் குறைவு. இப்பாட‌த்திட்ட‌ம் என‌து ம‌னோபாவ‌த்திற்கு மிக‌வும் சார்வாக‌ இருந்த‌து.
இதெல்லாம் யோசித்து தெளிந்த போது இன்னொன்றும் விளங்கியது. மருத்துவத்திற்கு எடுபட்டால் எனக்கு எப்படிப் படிக்க இயலாதோ அப்படிக் கட்டாயம் சில வருடங்களாவது படிக்க வேண்டும் என்று. அதே நேரம் எனக்கு உயிரியல், மருத்துவம் இரண்டும் பிடித்திருந்தது. எனக்கு வாசிக்க, யோசிக்க, பரிசோதனைகள் செய்து கேள்விகளுக்கு விடை காண மிகப் பிடித்திருந்தது. I realised that I am a hopeless passive learner but am very good at active learning, which is what research required.

அப்ப தான் எனக்கு மருத்துவத்திற்கு apply பண்ண புள்ளிகள் இருந்த போதும் எனக்கு அது வேண்டாம், நான் அதே மருத்துவ உயிரியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு apply பண்ணுவதென முடிவெடுத்தேன். I wanted to DO what medical practitioners get to read in their textbooks.

2 comments:

baskar said...

உங்கள் நிலைதான் எல்லோருக்கும். அது இன்றும் தொடர்வது கொடுமை. அதுவும் என்ன எனக்கு பிடிக்கும் என்று சிந்திப்பதை விட எது எனக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்பதே மாணவர்கள் தனது துறையை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. அதுவே உணர்ந்து படித்தலில் இருந்து வெகு தூரம் பயணம் செய்ய துவங்கும் புள்ளியாகவும் உள்ளது. இவை எல்லாம் வெறும் போதிக்கும் முறையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்து தீர்க்கும் பிரச்னை அல்ல அது சமூக மாற்றத்தின் பகுதியாக மட்டுமே செய்ய கூடிய ஒன்று. உங்கள் அனுபவங்களோடு நமது சமூகத்தின் பெரும்பாலான மாணவர்களின் நிலையோடு இணைத்து பிரச்சனையை இனம் கண்டு எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

Thekkikattan|தெகா said...

// I wanted to DO what medical practitioners get to read in their textbooks.//

that is the spirit of innovative individual :) ... keep up the flame!