ஆய்வு செய்ய மிகப் பிடிக்கும் என்று போன பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஆனால் அதையே தொழிலாக எடுக்க முடிவு செய்தால் ஆய்வுகூடத்திலேயே இருந்துவிட முடியாதென (I would rather do that), முனைவர் பட்டத்திற்கான ஆய்வைத் தொடங்கிய சிறிது காலத்தில் தெரிந்து கொண்டேன். ஆய்வைப் பற்றி அது தொடர்பான கருத்தரங்குகளிலும் வேறு இடங்களிலும் பேசுவதும் ஆய்வு செய்யுமளவு செய்யவேண்டும். அது எனக்கு மிக மிகப் பிரச்சனையான விடயம். எனக்கு மிகத் தீவிரமான மேடைப் பயம் இருந்தது/ இப்பவும் ஓரளவு இருக்கிறது.
இந்தப் பதிவில் மேடைப் பேச்சில் எனது அனுபவங்களை, நான் செய்த/ எனக்கு ஏற்பட்ட embrasing moments ஜப்பற்றி பிறகு எப்பவாவது பார்க்கலாம் என்றிருந்தேன். இப்போ தொழில் தொடர்பான பதிவுகளை எழுதிய பின் அதைப்ற்றியும் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். இதைக் கூட நான் புலம் பெயர்ந்த பலரிடம் சொன்னதுண்டு. சிலருக்கு மிக அழகாகப் பொது இடங்களில் பேச வரும். ஆனால் எல்லோருக்கும் இயற்கையிலேயே அழகிய பேசும் திறன் அமைவதில்லை. சிலருக்கு பேசும் தகவல்கள் தெரியாவிடினும் என்ன கதைக்கிறோமெனத் தெரியாமலே மிகுந்த நம்பிக்கையுடன் கதைப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.
இங்கு வந்த புதிதில் புது இடம், புது மனிதர்கள், புதுக் கலாச்சாரம் போன்றவைகளால் தோன்றும் anxiety உடன் எனது ஆங்கிலப் புலமையில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து கொண்டது. ஒருமுறை எனது கடைசித் தங்கை இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது அவர்கல் வகுப்பிலிருந்து adventure camping சென்றார்கள். அப்போ பெற்றோர் இயலுமானால் guides ஆக வரும் படி கேடிருந்தார்கள். அப்பா guide ஆக என்னைப் போகச்சொன்னார். காலைக் கட்டித் தண்ணியில் விட்ட மாதிரி இருந்தது. போனது 11-12 வயது சிறுவர்களுடன். அவர்களுக்கு golf, அம்பு வில்லு விளையாட உதவுவது என்று பல வேலைகள். பிரச்சனை என்ன என்றால் நான் ஒருநாளும் golf விளையாடினதும் இல்லை/ எப்படி விளையாடுவதென்று தெரியவும் தெரியாது. சிறுவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாரி ஏதோ உதவி செய்து முடித்து கடை நாள் இரவு, சிறுவர்களுக்காக ஆசிரியர்களும் பெற்றோரும் ஒரு show வைப்பதென்று தலைம ஆசிரியர் சொன்னார் (எங்கையிருந்துதான் இந்த மாதிரி idea எல்லாம் எடுத்தார்களோ தெரியாது). என்னை எதற்கும் கூப்பிடக் கூடாது கடவுளே என்று வேண்டாத தெய்வமில்லை. :) அதனால் ஒரு பயனும் வரவில்லை. எனது part மேடையில் ஏறி அதில் வைத்திருந்த ஒரு பாத்திரத்திலிருந்ததை ஒரு கோப்பையில் ஊற்றிக் குடிப்பது மாதிரி நடித்துவிட்டு "This is a nice cup of Milo" என்று சொல்வது மட்டும் தான். அரங்கிலிருந்தோர் 11-12 வயதுச் சிறுவர்கள். அதைச் சொல்லும் போதும் கூடக் குரல் நடுங்கியது. இதெல்லாம் சும்மா எவருடனும் இருந்து கதைக்கும் போதல்ல ஒரு கூட்டத்திற்கு முன்னால் நிற்கும் போதே.
பல்கலைக் கழகத்தில் முதலிரு வருடங்களில் வகுப்புகளில் பெரிதாக பேச்சு assessments இருக்கவில்லை. மூன்றாம் நான்காம் ஆண்டுகளிலேயே ஒரு பிரசுரிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை மீளாய்வு செய்து வகுப்பிற்குச் சொல்வது, அல்லது கற்பித்த ஒரு பாடத்தைப் பற்றிப் பேசுவது என assessments இருந்தது. I hated giving seminars. ஆனால் அது assessment இன் ஒரு பகுதி எனில் செய்து தானே ஆக வேண்டும். பல சமயம் வகுப்பிற்கு முன் நின்று பேசும் போது குரல் மிக நடுங்கும். எனக்கே நான் என்ன கதைக்கின்றேன் என விளங்கவில்லை சில சமயங்களில். என்ன தான் முதலில் பல தடவை பேசிப் பார்ப்பினும், எழுந்து வகுப்பின் முன் நின்றதும் மூளை முழுதும் வெறுமையாகப் போன மாதிரி ஒரு உணர்வு. இந்நாட்டில் உள்ள ஓரு நன்மை, நீ ஒன்றுக்கும் உதவாது, நீ எல்லாம் படிப்பதே waste என்று ஒரு போதும் சொல்ல மாட்டினம். நீ செய்ததில் எது நல்லது என்று சொல்லி அதற்கும் பாராட்டி, எவற்றில் முன்னேற வேண்டும் என்றும் சொல்வதால், நீங்கள் முற்றாகத் தோல்வியடைந்த்ததாக ஒரு போதும் நினைக்க மாட்டீர்கள். :)
பின் முனைவர் பட்டப் படிப்பைத் தொடங்கியதும் ஒரு வருடத்திற்குள்ளேயே, எனது ஆராய்ச்சியின் முடிவுகள் சரிவரத் தெரிய முன்னர், எனது முதலாவது பேச்சு ஒரு மகளிர் நோய் மருத்துவர்களின் (gynaecologists) கூட்டத்தில். I was completely overwhelmed and intimidated. பேச்சின் போது குரல் நடுங்கினும் ஏதோ கதைத்து, அந்தளவு nervous ஆக இருந்ததற்கு, இடையில் மன்னிப்புக் கூடக் கேட்டேன். பேச்சு முடிந்ததும் எனது மேற்பார்வையாளர், "பரவாயில்லாமல் செய்தாய் (that was a lie :)), ஆனால் இவ்வளவு நல்ல முடிவுகளை வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆட்களிடம் மன்னிப்புக் கேட்காதே" என்று சொன்னார். :)
பல தடவை பேச சந்தர்ப்பங்கள் கிடைத்ததால் (not out of choice but out of obligation, really :)) குரல் நடுங்குவது ஓரளவுக்கு நின்று விட்டது. ஆனால் பதற்றம் நின்ற பாடில்லை. இன்னொரு இனப்பெருக்க ஆய்வுக்கான கருத்தரங்கில் எனது ஆய்வைப் பற்றிய பேச்சை முடித்து கேட்ட கேள்விகளுக்கும் விடையளித்தபின் அரங்கிலிருந்தோர் கைதட்ட, எனது கைகளும் தானாகவே தட்டத் தொடங்கின. தட்டும் கைகளைப் பார்த்துக் கொண்டே, அதிர்ச்சியில், மூளையின் ஒரு பகுதி நிப்பாட்டு, நிப்பாட்டெனவும் கைகள் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. Yeap. I was a complete nutcase.
இத்தனைக்கும் இது முடியாதென்பதால் ஆய்வையே விட்டு விடலாமா என ஒரு போதும் யோசித்ததில்லை. ஏனென்று தெரியவில்லை.
அதோடு பயத்தை எதிர்கொள்வதே அதைப் போக்குவதற்கான சிறந்த வழி என்பதற்கிணங்க பலமுறை முயற்சிக்கக் கிடைத்த வாய்ப்புகளால் என்னை அறியாமலே முன்னேறத் தொடங்கினேன் என நினைக்கிறேன். இக்காலகட்டத்தில், ஒரு முறை பகுதி நேர telemarketing வேலை ஒன்றிற்கான நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். அதில் Group interview உம் இருந்தது. நேர்காணலில் ஒரு பகுதியில் வந்தவர்களை சிறு கூட்டங்களாகப் பிரித்து விட்டு, ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கற்பனைப் பொருளைக் கூறி, ஒரு 10 நிமிடத்தில் அதற்கான விளம்பரம் ஒன்றை எல்லோரும் ஒன்றுபட்டு எழுதி, அக்கூட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு பங்கேற்று கதைத்தும் நடித்தும் காட்ட வேண்டும். இதயம் பட படவென்று அந்த நடித்துக் கதைத்தலின் போது அடித்த போதும், செய்தேன். அவ்வேலைக்குத் தெரிவும் செய்யப்பட்டேன். அந்நேரம் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை. எதோ பெரிதாகச் சாதித்து விட்டதாக உணர்ந்தேன். வேலை கிடைத்துவிட்டது என்பதை விட, என்னால் எல்லோர் முன்னிலும் நின்று அந்த விளம்பரத்தை கதைத்து நடிக்க முடிந்ததும் and that they thought it was good enough to hire me made me so happy.
கடைசி இரண்டு ஆண்டுகளும் நடந்த post graduate student symposium களிலும் எனது ஆய்வைப் பற்றிய பேச்சுக்கு பல பரிசுகள் கூடக் கிடைத்துள்ளன. நான் முதலில் இருந்த நிலையிலிருந்து பார்த்தால் it is an amazing improvement. ஆனால் இப்போதும் எங்காவது பேச வெண்டுமெனில் முதல் நாள் நித்திரையே வராது. அத்தோடு பேசி முடிக்கும் வரை சாப்பாடு தண்ணி எதுவும் ஏறாது.
இதை என் வயதில் இங்கு புலம் பெயர்ந்து வந்து படிக்கும் போதும் நேர்காணலின் போதும் பயப்படும் பலரிடம் சொல்லியுள்ளேன். If I can do this, anybody can.