Friday, June 24, 2011

நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பாதுகாப்பான முறையில் பரிசீலனை செய்வதற்கான‌ இடங்களே அவசியம் - தடைகளல்ல.

நான் கீழ்வரும் பதிவை வாசித்ததிலிருந்து  இந்தப் பதிவு எழுத‌ வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஹிஜாபைப் பற்றியோ niqab ஜப்பற்றியோ தமிழில் அநேகமாக ஆண்களின் கருத்துக்களே வாசித்திருக்கின்றேன். சில பெண்களின் கருத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்துள்ளேன். தமிழில் அல்ல. அவற்றிலும் அநேகமானவை ஒரேமாதிரியான, ஆண்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது, ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற இதுவே ஒரே வழி, என்ற மாதிரிக் கருத்துகளே, which has no basis or evidence. தமது நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் முஸ்லிம் பெண்களின் கருத்துகள் மிகக் குறைவு. அவ்வாறு கருத்துகள் எழுதினால் அதற்கு எதிர்ப்பு பலமாக‌ இருக்கும் என்பதாலோ தெரியவில்லை.
That's why I was pleasantly surprised to read the following post.

கீழ்வரும் பதிவை எழுதியவர் பெயர் நாடியா எல்-அவாடி (Nadia El-Awady). இவர் எகிப்தில் வசிக்கும் ஒரு அறிவியல் நிருபர். உலக அறிவியல் நிருபர்களின் சங்கத்தின் தலைவர். இஸ்லாத்தைப் பின்பற்றுபவர். Inner workings of my mind இவரது சொந்த வலைத்தளம். பின்வருவது அவ்வலைத்தளத்தில் அவர் எழுதிய சிலவற்றின், அவரின் அனுமதியுடனான மொழிபெயர்ப்பு.

ஹிஜாபைப் பற்றி பல வருடங்களாகச் சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். ஏன் ஹிஜாப் பெண்களுக்கு இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்பட்டது? உண்மையில் கட்டாயமாக்கப் பட்டுள்ளதா அல்லது ஒரு சில ஆண்கள் சேர்ந்து அந்தக் காலத்தில் பெண்களைப் பாதுகாக்க ஹிஜாப் அவசியமானதென முடிவு செய்தார்களா? 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே காரணங்கள் இக்காலத்திலும் உண்டா? உண்டெனில் ஏன்? தன்னை ஒரு போதைப் பொருளாக மற்றவர்கள் பார்ப்பதையும் பாலியல் வன்முறையையும் தடுப்பதற்கு ஒரு பெண் தன்னை தலையிலிருந்து கால் விரல் வரை மூடுவது கட்டாயம் அவசியமானதா?

நான் கடந்த 10 வருடங்களாக பல இடங்களுக்குப் பயணித்திருக்கின்றேன். போகுமிடங்களில் பெண்கள் எவ்வாறு உடை உடுத்துகிறார்கள்? அவ்வுடைகளுக்கு ஆண்களின் reactions என்ன? என அவதானித்துள்ளேன். நான் எப்போதும் பெண்கள் என்ன உடை உடுத்திருந்தாலும், குறிப்பிட்ட நபர்களின் சொந்தக் கற்பனையில்/கருத்தில் அந்த உடை என்னத்தைப் பிரதிபலிக்கின்றது என்பதை வைத்தே அவர்களின் reactions இருக்கிறது. குறிப்பாக நான் அவதானித்தது: பெண்கள் என்ன உடுத்திருந்தாலும் சிலர் பெண்களை பொருத்தமற்றவாரே நடத்துவார்கள். சிலர் மிகக் குறைவாக உடுத்திருந்தால் மோசமாக நடத்துவார்கள், சிலர் தலை முதல் கால் வரை மூடியிருந்தாலும் மோசமாக நடத்துவார்கள்.

இந்நாட்களில் என் கண்களைத் திறக்க முயற்சிக்கின்றேன். எனக்கு எது சரி, எது பிழை எனப் படுகின்றது என முடிவு செய்ய முயற்சிக்கின்றேன். எனக்குக் கற்பிக்கப் பட்டதை வைத்தல்லாமல் நானே என்ன உண்மையில் நம்புகின்றேன் என எனக்கு அறிய ஆவல். இதற்காக முதலில் இருந்து தொடங்கி அது என்னை எங்கே கொண்டு போய் விடுமென செய்து பார்க்க ஆசைப்படுகின்றேன். அது எப்போதும் சுலபமல்ல. சிறு வயதிலிருந்து எனக்குப் புகட்டப்பட்டதால், போதிக்கப்பட்டதால், நான் பாடமாக்கியதால் படிந்த படிமங்களைத் தோண்டி அடியில் இருக்கும் மூலமான innocence ஜ அடைந்து அதிலிருந்து தொடங்குவது மிகக் கடினம். அந்த original innocence ஜ நான் இன்னும் அடையவில்லை. ஆனால் இந்தப் படிமங்களைத் தோண்டத் தொடங்கியுள்ளேன். கேள்விகள் கேட்கத் தொடங்க முதல் இருந்த நிலைக்கே நான் திரும்பலாம்/திரும்பாமலும் விடலாம். இத்தேடலால் எந்நிலையை அடைகிறேனோ அது நான் சொந்தமாக எடுத்த முடிவாக இருக்க வேண்டும். இப்படித் தான் நான் இருக்க வேண்டுமென்ற போதனைகளாளோ கட்டாயத்தாலோ இருக்கக் கூடாது.

(...)

நான் ஜ‌ரோப்பாவிற்கு ப‌ய‌ணித்திருந்த‌ போது, பார்சிலொனாவில் ஒரு காலை என‌து ஹொட்ட‌ல் அறையிலிருந்து தலையில் ஒன்றும் இல்லாமல் க‌ட்டைக் கையுடைய‌ ச‌ட்டையுடனும் ஜீன்ஸ் உடனும் வெளியே வர முடிவு செய்தேன்.

நான் காலைச் சாப்பாடு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் இட‌த்திற்குச் சென்ற‌ உட‌னேயே யார் க‌ண்ணுக்கும் தெரியாத‌வ‌ளாக‌ உண‌ர்ந்தேன். குறிப்பாக ஜரோப்பாவில், ஹிஜாப் அணிந்திருப்பதால் ஆட்க‌ள் என்னை அவ‌தானிப்ப‌து கொஞ்சம் எனக்குப் பழக்கப்பட்டிருந்தது. அநேகமாக இந்தமாதிரி ஹொட்டல் காலை உணவுண்ணும் இடங்களில் அது ஓரளவு கூடுதலாகவே இருந்தது. அதனால் முதன் முதலாகப் பயணிக்கும் போது யார் கண்ணுக்கும் படாதவளாக உணர்ந்தேன். உடனேயே இந்த கவனிப்பை இழந்ததாக உணர்ந்தேன். கொஞ்சம் வருந்தக் கூட செய்தேன்.

தெருக்களில் நடந்து பார்த்தேன். சில கடைகளுக்குச் சென்று பார்த்தேன். எதுவுமில்லை. நான் பல ஆயிரம் ஆட்களில் ஒருவராகியிருந்தேன். எப்பவும் இவ்வாறு பல்லாயிரம் ஆட்களில் ஒருவராக இருந்தேனா? எப்பவும் இவ்வாறு மற்றவர்களின் கண்ணிற்குப் படாதவளாக இருந்திருக்கிறேனா?

இது ஒரு ப‌ரிசோத‌னை ம‌ட்டுமே என்ப‌த‌னால் என‌து தொழில் ச‌ந்திப்புக்க‌ளுக்கு நான் ம‌ற்ற‌ப்ப‌டி சாதார‌ண‌மாக‌ச் செல்வ‌து போன்று ஹிஜாப் அணிந்தே சென்றேன். அவ்வாறே என்னை என் ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ள் என்னை எதிர்பார்ப்பார்க‌ள். நான் நிர‌ந்த‌ர‌மாக‌ ஹிஜாப்பை எடுக்க‌ முடிவு செய்ய‌வில்லை என்ப‌தால் அவ‌ர்க‌ளைக் குழ‌ப்ப‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இருக்க‌வில்லை.

இது ப‌ல‌ நாட்க‌ளாக‌த் தொட‌ர்ந்த‌து. என‌து தொழில் தொட‌ர்பான‌ ச‌ந்திப்புக்க‌ளுக்கு ஹிஜாபுட‌னும் நான் த‌னியாக‌ச் செல்லும் இட‌ங்க‌ளுக்கு ஹிஜாப் இல்லாம‌லும் சென்று வ‌ந்தேன்.....

அது ஒரு சுவார‌சிய‌மான‌ அனுப‌வ‌மாக‌ இருந்த‌து. ஹிஜாபோடும் ஹிஜாபில்லாம‌லும் நான் எப்படி மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றேன் என்பதை ஒப்பிட்ட போது எனக்கு வித்தியாசங்கள் எதுவும் புலப்படவில்லை. அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. நான் முதலில் உணர்ந்த மற்றவர்களின் கண்ணில் படாத தன்மையும் குறீப்பிட்ட கவனிப்பின்மையும் தவிர மற்றப்படி நான் வெளியில் செல்லும் போது என்ன உடுத்தியிருந்தாலும் மற்றவர்களின் கண்ணில் படாதவளாகவே இருந்தேன். நான் கட்டை உடையும் குதிக்கால் உயரமான சப்பாத்துகளும் கூட அணிந்து பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை.

நான் என்ன‌ அணிந்தாலும் ப‌ண்பாடில்லாத‌வ‌ர், ந‌ல்ல‌வ‌ர்க‌ள், எதிலும் அக்க‌றைப்ப‌டாத‌வ‌ர்க‌ள் இருந்தார்க‌ள். எந்த‌ வித்தியாச‌முமில்லை. நான் அணியும் உடையால் இவர்களின் விகிதாசாரம் மாறவில்லை.

இதே ப‌ரிசோத‌னையை ல‌ண்ட‌னில் செய்த‌ போதும் மேற்சொன்ன அதே அனுப‌வ‌மே கிடைத்த‌து. என்னைத் தெரியாத‌வர்க‌ள், நான் என்ன‌ உடுத்துகிறேன் என‌ அக்க‌றை காட்ட‌வில்லை...

ஹிஜாப் இல்லாம‌ல் இரு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளில் செல்லும் போது என்னுள் இரு மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்ந்த‌தை உண‌ர்ந்தேன். ஒன்று நான் ப‌ல‌வ‌ருட‌ங்களுக்கு முன்பிருந்த‌ என்னைச் ச‌ந்தித்தேன். ப‌ள்ளிக்கூட‌ம் செல்லும் போதிருந்த‌ என்னை....

எப்போதும் விட‌ மிக‌ அதிக‌மாக‌ என் பெண்மையை உண‌ர்ந்தேன். நான் கூடிய‌ள‌வு பெண்ணாக‌ உண‌ர்ந்தேன். ம‌ற்ற‌வ‌ர்களின் ந‌ட‌த்தைக‌ளால் அல்ல‌. என்னுள்ளேயே நான் உண‌ர்ந்தேன்.


இன்னுமொரு பதிவில் எவ்வாறு தான் எட்டு வருடங்காளாகக் கண்களைத்தவிர உடலனைத்தும் மூடும் niqab அணிந்திருந்தேன் எனவும் அதை அணியச் சொல்லித் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். பல இடங்களில் எத்தனையோ பெண்கள் ஹிஜப், niqab போன்றவற்றைப் போடுமாறு கட்டயப்படுத்தப்படுகின்றனர். அதேபோல் அவ்வாறு கட்டாயப் படுத்தாமல் தமது சொந்த விருப்பால் (அநேகமாக கடவுளுக்குப் பிடிக்கும் என்று எண்ணுவதால்) அணிபவர்களும் உண்டு.

Societies Overpowered by a Headscarf: It’s Time for Change என்று தலைப்பிட்ட பதிவில் நாடியா எழுதுகிறார்:

எல்லோரும் முஸ்லிம் பெண்ணைக் காப்பதற்கு முயற்சிக்கிறார்கள். மேலை நாடுகளுக்கு இஸ்லாத்திலிருந்து அவளைக் காப்பாற்றவேண்டும். இஸ்லாமிய சமூகத்திற்கு மேலைநாட்டுக் கலாச்சாரத் தாக்கத்திலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும்.
யாருமே - யாருமே - ஒரு முஸ்லிம் பெண்ணால் தனக்கு எது நல்லதென சொந்தமாக முடிவெடுக்க முடியுமென எண்ணுவதில்லை.இதனாலேயே மக்களின் சிந்திக்கும் திறனை கல்வியால் வளர்ப்பதற்குரிய சந்தர்ப்பங்களை மக்களுக்குக் கொடுத்தல், அவர்களுக்கு இதைச் செய், இதைச் செய்யாதே எனக் கட்டளையிடுதலையும் விடச் சிறந்ததென நான் நினைக்கின்றேன். பிரான்ஸ் niqab இற்குத் தடை விதித்த போது அதிக எதிர்ப்பு எழாததற்கு ஒரே காரணம் அநேகமானவர் கள் அது இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என நம்புவதால் மட்டுமே. இத் தடையால் niqab போட்டே வெளியில் செல்லலாமெனக் கட்டாயப் படுத்தப்படும் பெண்களுக்கு வெளியில் செல்ல அனுமதி முற்றாக இல்லாமல் போவதற்கே சந்தர்ப்பம் அதிகம். அநேகமாக ஓரளவிற்கு சுதந்திரமாச் சிந்திக்கும் முஸ்லிம் பெண்களைக் கேட்டோமானால் சொல்வார்கள் தமக்கு எத்தனையோ பிரச்சனைகள், ஒடுக்குமுறைகள் உண்டு, இந்த ஹிஜாப் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று. May be it is time to listen to them and support them in their fight to end oppression.


On a related subject: ஈரானின் பெண்க‌ள் கால்ப‌ந்தாட்ட‌ குழுவை அவ‌ர்க‌ளின் உடைக்காக‌த் த‌டை செய்த‌த‌ற்கும் niqab இல்லாம‌ல் வெளியில் போகாதே என்று கட்டளையிடுவதற்கும் ஒரு வித்தியாச‌மும் இல்லை. Both are equally ridiculous, oppressive and discriminatory.


From here.

somewhat related talk: Radical Women embracing tradition

0 comments: