Friday, June 24, 2011

நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பாதுகாப்பான முறையில் பரிசீலனை செய்வதற்கான‌ இடங்களே அவசியம் - தடைகளல்ல.

நான் கீழ்வரும் பதிவை வாசித்ததிலிருந்து  இந்தப் பதிவு எழுத‌ வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஹிஜாபைப் பற்றியோ niqab ஜப்பற்றியோ தமிழில் அநேகமாக ஆண்களின் கருத்துக்களே வாசித்திருக்கின்றேன். சில பெண்களின் கருத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்துள்ளேன். தமிழில் அல்ல. அவற்றிலும் அநேகமானவை ஒரேமாதிரியான, ஆண்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது, ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற இதுவே ஒரே வழி, என்ற மாதிரிக் கருத்துகளே, which has no basis or evidence. தமது நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் முஸ்லிம் பெண்களின் கருத்துகள் மிகக் குறைவு. அவ்வாறு கருத்துகள் எழுதினால் அதற்கு எதிர்ப்பு பலமாக‌ இருக்கும் என்பதாலோ தெரியவில்லை.
That's why I was pleasantly surprised to read the following post.

கீழ்வரும் பதிவை எழுதியவர் பெயர் நாடியா எல்-அவாடி (Nadia El-Awady). இவர் எகிப்தில் வசிக்கும் ஒரு அறிவியல் நிருபர். உலக அறிவியல் நிருபர்களின் சங்கத்தின் தலைவர். இஸ்லாத்தைப் பின்பற்றுபவர். Inner workings of my mind இவரது சொந்த வலைத்தளம். பின்வருவது அவ்வலைத்தளத்தில் அவர் எழுதிய சிலவற்றின், அவரின் அனுமதியுடனான மொழிபெயர்ப்பு.

ஹிஜாபைப் பற்றி பல வருடங்களாகச் சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். ஏன் ஹிஜாப் பெண்களுக்கு இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்பட்டது? உண்மையில் கட்டாயமாக்கப் பட்டுள்ளதா அல்லது ஒரு சில ஆண்கள் சேர்ந்து அந்தக் காலத்தில் பெண்களைப் பாதுகாக்க ஹிஜாப் அவசியமானதென முடிவு செய்தார்களா? 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே காரணங்கள் இக்காலத்திலும் உண்டா? உண்டெனில் ஏன்? தன்னை ஒரு போதைப் பொருளாக மற்றவர்கள் பார்ப்பதையும் பாலியல் வன்முறையையும் தடுப்பதற்கு ஒரு பெண் தன்னை தலையிலிருந்து கால் விரல் வரை மூடுவது கட்டாயம் அவசியமானதா?

நான் கடந்த 10 வருடங்களாக பல இடங்களுக்குப் பயணித்திருக்கின்றேன். போகுமிடங்களில் பெண்கள் எவ்வாறு உடை உடுத்துகிறார்கள்? அவ்வுடைகளுக்கு ஆண்களின் reactions என்ன? என அவதானித்துள்ளேன். நான் எப்போதும் பெண்கள் என்ன உடை உடுத்திருந்தாலும், குறிப்பிட்ட நபர்களின் சொந்தக் கற்பனையில்/கருத்தில் அந்த உடை என்னத்தைப் பிரதிபலிக்கின்றது என்பதை வைத்தே அவர்களின் reactions இருக்கிறது. குறிப்பாக நான் அவதானித்தது: பெண்கள் என்ன உடுத்திருந்தாலும் சிலர் பெண்களை பொருத்தமற்றவாரே நடத்துவார்கள். சிலர் மிகக் குறைவாக உடுத்திருந்தால் மோசமாக நடத்துவார்கள், சிலர் தலை முதல் கால் வரை மூடியிருந்தாலும் மோசமாக நடத்துவார்கள்.

இந்நாட்களில் என் கண்களைத் திறக்க முயற்சிக்கின்றேன். எனக்கு எது சரி, எது பிழை எனப் படுகின்றது என முடிவு செய்ய முயற்சிக்கின்றேன். எனக்குக் கற்பிக்கப் பட்டதை வைத்தல்லாமல் நானே என்ன உண்மையில் நம்புகின்றேன் என எனக்கு அறிய ஆவல். இதற்காக முதலில் இருந்து தொடங்கி அது என்னை எங்கே கொண்டு போய் விடுமென செய்து பார்க்க ஆசைப்படுகின்றேன். அது எப்போதும் சுலபமல்ல. சிறு வயதிலிருந்து எனக்குப் புகட்டப்பட்டதால், போதிக்கப்பட்டதால், நான் பாடமாக்கியதால் படிந்த படிமங்களைத் தோண்டி அடியில் இருக்கும் மூலமான innocence ஜ அடைந்து அதிலிருந்து தொடங்குவது மிகக் கடினம். அந்த original innocence ஜ நான் இன்னும் அடையவில்லை. ஆனால் இந்தப் படிமங்களைத் தோண்டத் தொடங்கியுள்ளேன். கேள்விகள் கேட்கத் தொடங்க முதல் இருந்த நிலைக்கே நான் திரும்பலாம்/திரும்பாமலும் விடலாம். இத்தேடலால் எந்நிலையை அடைகிறேனோ அது நான் சொந்தமாக எடுத்த முடிவாக இருக்க வேண்டும். இப்படித் தான் நான் இருக்க வேண்டுமென்ற போதனைகளாளோ கட்டாயத்தாலோ இருக்கக் கூடாது.

(...)

நான் ஜ‌ரோப்பாவிற்கு ப‌ய‌ணித்திருந்த‌ போது, பார்சிலொனாவில் ஒரு காலை என‌து ஹொட்ட‌ல் அறையிலிருந்து தலையில் ஒன்றும் இல்லாமல் க‌ட்டைக் கையுடைய‌ ச‌ட்டையுடனும் ஜீன்ஸ் உடனும் வெளியே வர முடிவு செய்தேன்.

நான் காலைச் சாப்பாடு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் இட‌த்திற்குச் சென்ற‌ உட‌னேயே யார் க‌ண்ணுக்கும் தெரியாத‌வ‌ளாக‌ உண‌ர்ந்தேன். குறிப்பாக ஜரோப்பாவில், ஹிஜாப் அணிந்திருப்பதால் ஆட்க‌ள் என்னை அவ‌தானிப்ப‌து கொஞ்சம் எனக்குப் பழக்கப்பட்டிருந்தது. அநேகமாக இந்தமாதிரி ஹொட்டல் காலை உணவுண்ணும் இடங்களில் அது ஓரளவு கூடுதலாகவே இருந்தது. அதனால் முதன் முதலாகப் பயணிக்கும் போது யார் கண்ணுக்கும் படாதவளாக உணர்ந்தேன். உடனேயே இந்த கவனிப்பை இழந்ததாக உணர்ந்தேன். கொஞ்சம் வருந்தக் கூட செய்தேன்.

தெருக்களில் நடந்து பார்த்தேன். சில கடைகளுக்குச் சென்று பார்த்தேன். எதுவுமில்லை. நான் பல ஆயிரம் ஆட்களில் ஒருவராகியிருந்தேன். எப்பவும் இவ்வாறு பல்லாயிரம் ஆட்களில் ஒருவராக இருந்தேனா? எப்பவும் இவ்வாறு மற்றவர்களின் கண்ணிற்குப் படாதவளாக இருந்திருக்கிறேனா?

இது ஒரு ப‌ரிசோத‌னை ம‌ட்டுமே என்ப‌த‌னால் என‌து தொழில் ச‌ந்திப்புக்க‌ளுக்கு நான் ம‌ற்ற‌ப்ப‌டி சாதார‌ண‌மாக‌ச் செல்வ‌து போன்று ஹிஜாப் அணிந்தே சென்றேன். அவ்வாறே என்னை என் ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ள் என்னை எதிர்பார்ப்பார்க‌ள். நான் நிர‌ந்த‌ர‌மாக‌ ஹிஜாப்பை எடுக்க‌ முடிவு செய்ய‌வில்லை என்ப‌தால் அவ‌ர்க‌ளைக் குழ‌ப்ப‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இருக்க‌வில்லை.

இது ப‌ல‌ நாட்க‌ளாக‌த் தொட‌ர்ந்த‌து. என‌து தொழில் தொட‌ர்பான‌ ச‌ந்திப்புக்க‌ளுக்கு ஹிஜாபுட‌னும் நான் த‌னியாக‌ச் செல்லும் இட‌ங்க‌ளுக்கு ஹிஜாப் இல்லாம‌லும் சென்று வ‌ந்தேன்.....

அது ஒரு சுவார‌சிய‌மான‌ அனுப‌வ‌மாக‌ இருந்த‌து. ஹிஜாபோடும் ஹிஜாபில்லாம‌லும் நான் எப்படி மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றேன் என்பதை ஒப்பிட்ட போது எனக்கு வித்தியாசங்கள் எதுவும் புலப்படவில்லை. அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. நான் முதலில் உணர்ந்த மற்றவர்களின் கண்ணில் படாத தன்மையும் குறீப்பிட்ட கவனிப்பின்மையும் தவிர மற்றப்படி நான் வெளியில் செல்லும் போது என்ன உடுத்தியிருந்தாலும் மற்றவர்களின் கண்ணில் படாதவளாகவே இருந்தேன். நான் கட்டை உடையும் குதிக்கால் உயரமான சப்பாத்துகளும் கூட அணிந்து பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை.

நான் என்ன‌ அணிந்தாலும் ப‌ண்பாடில்லாத‌வ‌ர், ந‌ல்ல‌வ‌ர்க‌ள், எதிலும் அக்க‌றைப்ப‌டாத‌வ‌ர்க‌ள் இருந்தார்க‌ள். எந்த‌ வித்தியாச‌முமில்லை. நான் அணியும் உடையால் இவர்களின் விகிதாசாரம் மாறவில்லை.

இதே ப‌ரிசோத‌னையை ல‌ண்ட‌னில் செய்த‌ போதும் மேற்சொன்ன அதே அனுப‌வ‌மே கிடைத்த‌து. என்னைத் தெரியாத‌வர்க‌ள், நான் என்ன‌ உடுத்துகிறேன் என‌ அக்க‌றை காட்ட‌வில்லை...

ஹிஜாப் இல்லாம‌ல் இரு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளில் செல்லும் போது என்னுள் இரு மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்ந்த‌தை உண‌ர்ந்தேன். ஒன்று நான் ப‌ல‌வ‌ருட‌ங்களுக்கு முன்பிருந்த‌ என்னைச் ச‌ந்தித்தேன். ப‌ள்ளிக்கூட‌ம் செல்லும் போதிருந்த‌ என்னை....

எப்போதும் விட‌ மிக‌ அதிக‌மாக‌ என் பெண்மையை உண‌ர்ந்தேன். நான் கூடிய‌ள‌வு பெண்ணாக‌ உண‌ர்ந்தேன். ம‌ற்ற‌வ‌ர்களின் ந‌ட‌த்தைக‌ளால் அல்ல‌. என்னுள்ளேயே நான் உண‌ர்ந்தேன்.


இன்னுமொரு பதிவில் எவ்வாறு தான் எட்டு வருடங்காளாகக் கண்களைத்தவிர உடலனைத்தும் மூடும் niqab அணிந்திருந்தேன் எனவும் அதை அணியச் சொல்லித் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். பல இடங்களில் எத்தனையோ பெண்கள் ஹிஜப், niqab போன்றவற்றைப் போடுமாறு கட்டயப்படுத்தப்படுகின்றனர். அதேபோல் அவ்வாறு கட்டாயப் படுத்தாமல் தமது சொந்த விருப்பால் (அநேகமாக கடவுளுக்குப் பிடிக்கும் என்று எண்ணுவதால்) அணிபவர்களும் உண்டு.

Societies Overpowered by a Headscarf: It’s Time for Change என்று தலைப்பிட்ட பதிவில் நாடியா எழுதுகிறார்:

எல்லோரும் முஸ்லிம் பெண்ணைக் காப்பதற்கு முயற்சிக்கிறார்கள். மேலை நாடுகளுக்கு இஸ்லாத்திலிருந்து அவளைக் காப்பாற்றவேண்டும். இஸ்லாமிய சமூகத்திற்கு மேலைநாட்டுக் கலாச்சாரத் தாக்கத்திலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும்.
யாருமே - யாருமே - ஒரு முஸ்லிம் பெண்ணால் தனக்கு எது நல்லதென சொந்தமாக முடிவெடுக்க முடியுமென எண்ணுவதில்லை.



இதனாலேயே மக்களின் சிந்திக்கும் திறனை கல்வியால் வளர்ப்பதற்குரிய சந்தர்ப்பங்களை மக்களுக்குக் கொடுத்தல், அவர்களுக்கு இதைச் செய், இதைச் செய்யாதே எனக் கட்டளையிடுதலையும் விடச் சிறந்ததென நான் நினைக்கின்றேன். பிரான்ஸ் niqab இற்குத் தடை விதித்த போது அதிக எதிர்ப்பு எழாததற்கு ஒரே காரணம் அநேகமானவர் கள் அது இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என நம்புவதால் மட்டுமே. இத் தடையால் niqab போட்டே வெளியில் செல்லலாமெனக் கட்டாயப் படுத்தப்படும் பெண்களுக்கு வெளியில் செல்ல அனுமதி முற்றாக இல்லாமல் போவதற்கே சந்தர்ப்பம் அதிகம். அநேகமாக ஓரளவிற்கு சுதந்திரமாச் சிந்திக்கும் முஸ்லிம் பெண்களைக் கேட்டோமானால் சொல்வார்கள் தமக்கு எத்தனையோ பிரச்சனைகள், ஒடுக்குமுறைகள் உண்டு, இந்த ஹிஜாப் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று. May be it is time to listen to them and support them in their fight to end oppression.


On a related subject: ஈரானின் பெண்க‌ள் கால்ப‌ந்தாட்ட‌ குழுவை அவ‌ர்க‌ளின் உடைக்காக‌த் த‌டை செய்த‌த‌ற்கும் niqab இல்லாம‌ல் வெளியில் போகாதே என்று கட்டளையிடுவதற்கும் ஒரு வித்தியாச‌மும் இல்லை. Both are equally ridiculous, oppressive and discriminatory.


From here.

somewhat related talk: Radical Women embracing tradition

Monday, June 20, 2011

அப்பா...

இங்கு September முதல் ஞாயிறே தந்தையர் தினம். ஆனாலும் மற்றைய இடங்களில் எல்லாம் நேற்றுப் போலுள்ளது. எனது அப்பாவைப்ப்ற்றி எழுதவேண்டுமென சிறிது காலமாக யோசித்துக் கொண்டிருந்ததால் இந்தப் பதிவு.

He truly is one of a character. என்ன சூழல் எனினும், வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்ற உறுதி கொண்டவர். யாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர். So much so, அப்பம்மா, மாமி, சித்தப்பா, பெரியப்பா வுக்கே அப்பாவுடன் கதைக்கப் பயம்.

நிச்சயமாக எந்தப் பெண்ணும் இவரைத் திருமணம் செய்ய முன்வரப் போவதில்லை/ அப்படியே முதல் ஒத்துக் கொண்டாலும் பின் நிச்சயமாகத் தொடர்ந்து அவளால் ஒன்றாக வாழவே முடியாது என எல்லோரும் நினைத்தார்களாம். அதனால் யாரும் பெரிதாக அப்பாவிற்குத்திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவேயில்லை எனலாம். அப்பாவே அவ்வாறு தான் நினைத்திருந்தார். He was fairly certain that no woman could stay married to him.

அப்போ அப்பாவிற்கு வயது 35. இக்காலகட்டத்தில் அப்பாவின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவி எமது அம்மாவின் தோழி. அம்மாவும் அவரும் வவுனியாவில் ஒரே இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அம்மாவுக்கும் வயது 28 ஆகியிருந்தது. அம்மாவிற்கு பல குடும்பச் சிக்கல்கள், பிரச்சனைகளால் திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் பெரிதாக இருக்கவில்லை. அம்மாவின் தோழியும் அப்பாவின் நண்பரும் தான் இருவரையும் கதைத்துப் பொருத்தம் வருமா என யோசிக்கச் சொன்னவை.

அப்பா அம்மாவிடம் சொன்னது:
"நான் மிகவும் எளிமையானவன். போலிகளை வெறுப்பவன். எனக்கு இந்த முகப் பூச்சு, nail polish, சோடனைகள் எதுவும் துண்டறப் பிடிக்காது. அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வீண்செலவு செய்யக்கூடாது.

நீங்கள் படித்தவர் என்பதற்காக உங்களை இளவரசியாக வைத்திருக்க என்னால் முடியாது. :) எனக்கு ஒரளவிற்குப் பெரிய குடும்பம் அவர்களைப் பார்க்க வேண்டும்.  த‌மிழிழேயே எப்போதும் கையெழுத்திட‌ வேண்டும். ஆடம்பரமான வாழ்வு பிடிக்காது. எப்பவும் சைக்கிள், பஸ், தேவையாயின் Train அவ்வளவுதான் ", என்று பல conditions.

அம்மா சொன்ன‌து த‌ன்னால் சீத‌ன‌ம் த‌ர‌ முடியாதென‌ ம‌ட்டுமே.

For some reason, திருமணம் முடிந்ததும் வேலையை விடலாமா எனவும் அம்மாவிடம் கேட்டுள்ளார். ஏனெனத் தெரியவில்லை. ஏனெனில் பின் அம்மாவை எப்போதும் வேலையை விடச் சொல்லிச் சொன்னதில்லை என்பதோடு வேலையில் மேன் மேலும் உயரவும் அப்பா தூண்டியவர். ஏன் அவ்வாறு சொன்னார் என்பதைக் கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவும் சம்மதித்து விட்டார். அதன் பின் அப்பம்மாவிடம் அம்மா இதைச் சொன்னபோது அப்பம்மா, "இந்த மூஞ்சூறு சொன்னதென்பதற்காக நீ வேலையை எல்லாம் விட்டுடாதை பிள்ளை." :) இது சொன்னது mid 1976 இல். I think appamma is one of the coolest mother-in-laws.

அப்பாவிற்குத் தனது கௌரவமும் முக்கியமாக இருந்தது. அதனால், அம்மாவிடம் "என்னுடன் வாழ்வது மிகக் கடினம். தயவு செய்து கவனமாக யோசித்து முடிவு சொல்லுங்கோ. நீங்கள் என்னைத் திருமண‌ம் செய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை. திருமணப் பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் கூட வேண்டாமென்று சொல்லலாம். ஆனால் கையெழுத்திட்டால் அவ்வளவுதான். அதற்குப் பிறகு விவாகரத்தென்றால்லாம் பேச்சே இருக்கக் கூடாது. இருவருக்கும் ஒத்துவராவிட்டால் ஒரே வீட்டில் நீங்கள் ஒரு அறை, நான் ஒரு அறையில் இருப்பம் ஆனால் வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது." என்றும் சொன்னாராம். :)

இதெல்லாம் இப்போ யாரிடம் சொன்னாலும் அவர்கள் அம்மாவிடம் முதல் கேட்கும் கேள்வி, இவ்வளவும் சொன்னதற்குப் பிறகு எப்பிடி ஓம் என்று சொன்னனியள் என்று. அம்மாவின் புன்னகையுடன் கூடிய ஒரே பதில் "அவர் நல்லவரென எனக்குத் தெரிந்திருந்தது." :)

அப்பாவிற்கு தேவையற்றவையில் நேரம் வீணாக்குவது பிடிக்காத விடயம். சமையலுக்குக் கூட எவ்வளவு குறைய நேரம் எடுக்கேலுமோ அவ்வளவே எடுக்க வேண்டும். சமைத்த சாப்பாடு விருப்பமில்லை என்று நாம் சாப்பிடாவிட்டால் அப்பா எப்போதும் சொல்வது "நீ சாப்பிடவதற்காக வாழ்கிறாயா வாழ்வதற்காக சாப்பிடுகிறாயா, நான் வாழ்வதற்குத் தான் சாப்பிடுகிறேன்", என்பார். எனக்குச் சமைக்க மிகப் பிடிக்கும். நான் தற்சமயம் கொஞ்சம் கூடுதல் நேரம் சமையலறையில் இருந்தால் கூட, "உருப்படியாகச் செய்வதற்கு உங்களுக்கு வேற‌ ஒன்றுமே இல்லையா", என்பார்.

எனக்கு ஒரு நான்கு அல்லது ஜந்து வயதிருக்கும். யாருடையதோ வீட்டிற்கு சென்றபோது அவர்கள் எனக்கு நகச் சாயம் பூசிவிட்டிருந்தனர். வீட்டில் அப்பா அதைப் பார்த்து விட்டு என்னைக் கூப்பிட்டு, " இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா" என்று கேட்டார். ஜந்து வயதுப் பிள்ளை என்ன சொல்லும்? ஓம் என்றேன். அதற்கு அப்பா, " சரி, உலகத்தில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் உங்களுக்கு நகப் பூச்சு வாங்கித் தருகின்றேன். பூசிக்கொள்ளுங்கள், ஆனால் அதற்குப் பின் என்னை அப்பா எனக் கூப்பிடக் கூடாது" என்றார். :) அம்மா, " இந்த வயதில் அவளுக்கு என்ன விளங்குமென இப்பிடிச் சொல்லுறியள்" என்றது மட்டும் நினைவில் உள்ளது. அதன் பின் அடுத்த 15 வருடங்களுக்கு எனக்கு நகச்சாயங்களைத் தொடவே பயம். :) ஒரிரு தடவைகள் மற்றையவர் வீடுகளில் அடித்துப் பார்த்து விட்டு உடனே அழித்திருக்கின்றேன். I sincerely believed appa was going to disown me.
பல சமயம் வெளியில் போகும் போது, அப்பாவிடம் வேறு ஒரு உடை உடுத்துங்கள் என்றாலோ வேறேதாவது மாற்றங்கள் சொன்னாலோ, அவரது ஒரே பதில், "நான் இப்படித் தான் வருவேன். உங்களுக்கு என்னுடன் வர வெட்கமாக இருந்தால் நான் உங்கள் அப்பா என்று யாரிடமும் சொல்லத் தேவையில்லை, வேலைக்காரனென்றே சொல்லலாம்". :) (அம்மாவும் இதே பதில் சொல்லுவா). ஒரு உடை கிழிந்து கடைசியில் போடவே முடியாதெனும் வரையிலும் போடுவார். Reduce, Reuse, Recycle என்றால் என்ன என்று எமக்குத் தெரிய முதலே அப்பாவிடமிருந்து பழகியாச்சு. மாம்பழத்தோல், நாம் சாப்பிட்ட மீதி, மிஞ்சிய பழைய சாப்பாடு என்று எமது அம்மாவும் அப்பாவும் கிட்டத்தட்ட குப்பைத் தொட்டிகளுக்கே ஒப்பிடலாம். தேங்காய்ப் பால் பிழிந்ததும் விடுபடும் தேங்காய்ப் பூவைக் கூட  எறிய வேண்டாம் என்பார்.

He was obsessed with education. கல்விதான் எமது நிரந்தர சொத்து, அதுவே உங்களைக்குக் கடைசி வரையும் உதவும் என்பார். நாம் இருந்த வீடு முற்றுமுழுதாக இந்தியன் ஆமியால் எரிக்கப்பட்ட பின்னர், யாழ் இருக்கப் போனோம். அங்கு இருக்கப் போன‌ காரணம் தன் பிள்ளைகள் நடந்து யாழ் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வசதியாக இருக்கும் என்று சொன்ன போது, அவரின் மூத்த மகளான எனக்கு வயது 10. நாம் நியூசிலாந்திற்கு வந்த பின் அம்மாவிற்கே தெரியாமல் அம்மாவை Auckland University இல் masters செய்ய enrol பண்ணி, அம்மாவிற்கு approve பண்ணி ID card வந்ததும் மிக மிகச் சந்தோசப்பட்டார்.
அவரின் பிறந்து வளர்ந்த ஊரான சாவகச்சேரியை மிக மிகப் பிடிக்கும். இங்கு கூட citizenship எடுக்கவில்லை. ஏனெனக் கேட்டால், "நாம் இவளவை தங்கட காலில் நிற்கும் மட்டும் தான் இங்கே இருப்பன். பிறகு நான் ஊருக்குப் போய் விவசாயம் செய்யப்போறன்" என்பார். அவரின் ஆசை நிறைவேறவேயில்லை. :(

தன் துறையில் மட்டுமல்லாது பல துறைகளைப் பற்றித் தெரிந்தவர். தான் பார்க்கும் எல்லோரிடமும் தன்னிடம் வரும் எல்லோரிடமும் முடிந்தளவு படியுங்கோ, அத‌ற்கு எந்த உதவியும் செய்வேன் என்றே கூறுவார்.

தனக்கு எது சரி என்று பட்டதோ அதையே செய்யும் தைரியமுடையவர். சமூகம் சொல்கிறதென்பதற்காக எதையும் செய்யவில்லை. நாம் பிறந்த நாளிலிருந்து எமக்காகவே வாழ்ந்தவர். அப்பாவிற்கு நன்றிக்கடன் ஒரு நாளும் செலுத்தி முடியாது. I will give anything to have him here with us. சாத்தியமற்றது எனத் தெரிந்த போதும் எனக்கு என்ன பிள்ளை பிறக்கப் போகிறது எனத் தெரிவதற்கு முன்பே பலர் உங்கட அப்பா தானே வரப்போறார் என்ற போதும், அப்பாவின் ஒரு நண்பர் என் மகனை அப்பாவின் பெயர் சொல்லிக் கூப்பிடும் போதும் எனது மச்சாள் அப்பாவைக் கூப்பிடுவது போன்றே என் மகனையும் அத்தை மாமா என்று சொல்லும் போதும் அப்பாவை மாதிரியே அவன் இரு கைகளையும் பின்னுக்குக் கட்டிக் கொண்டு நிற்கும் போதும் இரு கைகளையும் சமமாகப் பாவிக்கும் போதும் (ambidextrous) மகிழ்ச்சியாக‌ இருக்கும்.
 
தந்தையர் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!