எல்லாக் குழந்தைகளுக்கும் பல மொழிகளை முழுதாகக் கற்றுக்கொள்வதற்குரிய திறமை உள்ளதெனப் பலருக்குத் தெரியும். அத்திறமை 10-12 வயதிலிருந்து மிக வேகமாகக் குறைந்துவிடும். சிறு வயதிலிருந்து தமிழில் மட்டுமே படித்து விட்டு பின் வெளிநாடு செல்பவர்களுக்குத் தெரியும் அதன் அருமை. மொழியைக் கற்கும் திறன் எல்லா மனிதக்குழந்தைகளுக்கும் இயற்கையிலேயே உண்டெனிலும் மொழியை யாரும் கதைக்காவிடின் அந்த மொழித் திறன் வரவே வராது.
மனிதர்களுக்கு இயற்கையாகவே இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ வரும் 'வல்லமை' உள்ளதா என அறிய, அக்பர் சக்கரவர்த்தி சில குழந்தைகளைப் பிறந்தவுடன் எந்தவொரு மனிதத் தொடர்பும் இல்லாமல் , ஒரு மௌனமான வளர்ப்புத் தாயாரால் மட்டும் அவர்களின் மற்றைய அத்தியாவசியத் தேவைகளைக் கவனிக்க அனுமதியளித்தாராம். அக்பர் சக்கரவர்த்திக்குக் கிடைத்ததெல்லாம் ஊமையான மனிதர்களே.
கீழ் வரும் காணொளியில் Patricia Kuhl எனும் ஆய்வாளர் குழந்தைகளுக்கு இருக்கும் ஆச்சரியமான மொழிகளைக் கற்கும் திறனை அவர்கள் செய்த ஆய்வுகளினூடு விளக்குகின்றார். குழந்தைகள் tv, radio இல் கேட்டு மொழியை அறிவதைவிட மனிதர்களிலிருந்தே மிக அதிகமாக கற்கிறார்களென்றும், பிறந்த முதல் வருடத்திலேயே வெவ்வேறு மொழிகளைப் பிரித்தரியக்கூடிய குழந்தைகளின் வல்லமையையும் காட்டுகின்றார். பிறந்த குழந்தைகளுக்கு எம்முடன் communicate பண்ணத்தெரியாவிடினும் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே உள்ளனர். குழந்தைகளிடம் இயலுமானவரை கதைப்பது மிக மிக அவசியம்.
எம்மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்த்திறனை வளார்க்க, பிறந்ததிலிருந்தே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழில் மட்டுமே எந்தளவு முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.
எம்மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்த்திறனை வளார்க்க, பிறந்ததிலிருந்தே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழில் மட்டுமே எந்தளவு முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.
2 comments:
good post.
நன்றி செல்வநாயகி.
Post a Comment