எல்லாக் குழந்தைகளுக்கும் பல மொழிகளை முழுதாகக் கற்றுக்கொள்வதற்குரிய திறமை உள்ளதெனப் பலருக்குத் தெரியும். அத்திறமை 10-12 வயதிலிருந்து மிக வேகமாகக் குறைந்துவிடும். சிறு வயதிலிருந்து தமிழில் மட்டுமே படித்து விட்டு பின் வெளிநாடு செல்பவர்களுக்குத் தெரியும் அதன் அருமை. மொழியைக் கற்கும் திறன் எல்லா மனிதக்குழந்தைகளுக்கும் இயற்கையிலேயே உண்டெனிலும் மொழியை யாரும் கதைக்காவிடின் அந்த மொழித் திறன் வரவே வராது.
மனிதர்களுக்கு இயற்கையாகவே இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ வரும் 'வல்லமை' உள்ளதா என அறிய, அக்பர் சக்கரவர்த்தி சில குழந்தைகளைப் பிறந்தவுடன் எந்தவொரு மனிதத் தொடர்பும் இல்லாமல் , ஒரு மௌனமான வளர்ப்புத் தாயாரால் மட்டும் அவர்களின் மற்றைய அத்தியாவசியத் தேவைகளைக் கவனிக்க அனுமதியளித்தாராம். அக்பர் சக்கரவர்த்திக்குக் கிடைத்ததெல்லாம் ஊமையான மனிதர்களே.
கீழ் வரும் காணொளியில் Patricia Kuhl எனும் ஆய்வாளர் குழந்தைகளுக்கு இருக்கும் ஆச்சரியமான மொழிகளைக் கற்கும் திறனை அவர்கள் செய்த ஆய்வுகளினூடு விளக்குகின்றார். குழந்தைகள் tv, radio இல் கேட்டு மொழியை அறிவதைவிட மனிதர்களிலிருந்தே மிக அதிகமாக கற்கிறார்களென்றும், பிறந்த முதல் வருடத்திலேயே வெவ்வேறு மொழிகளைப் பிரித்தரியக்கூடிய குழந்தைகளின் வல்லமையையும் காட்டுகின்றார். பிறந்த குழந்தைகளுக்கு எம்முடன் communicate பண்ணத்தெரியாவிடினும் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே உள்ளனர். குழந்தைகளிடம் இயலுமானவரை கதைப்பது மிக மிக அவசியம்.
எம்மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்த்திறனை வளார்க்க, பிறந்ததிலிருந்தே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழில் மட்டுமே எந்தளவு முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.
நியூசிலாந்தின் Garden city என்றழைக்கபடும் அழகான Christchurch இல் 21ம் திகதி நடந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் உறுதிப்படுத்தப் பட்ட எண்ணிக்கை 75. ஆனால் கிட்டத்தட்ட 300 பேரை இன்னும் காணவில்லை. :(
போன புரட்டாதியில் நடந்த 7.1 நிலநடுக்கம் அதிகாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் என்பதால் மனித உயிர்கள் அழியவில்லை. இம்முறை நடந்தது மதியம் 12.50 க்கு.
போன புரட்டாதியிலிருந்து இன்னுமும் 1000 க்கும் மேலான வெவ்வேறு வலிமையான aftershocks உம் நடந்துகொண்டிருக்கின்றன.
எப்பவெல்லாம் இலங்கையில் நான் தனியே வெளியே சென்றேனோ அப்போதெல்லாம் பல வாறான இவ்வன்முறைகளை அனுபவித்துள்ளேன். அவை சொல்லக்கூட முடியாத மிகவும் அருவருப்பான/ஆபாசமான அர்த்தங்களுடன் கூடிய வார்த்தைகள் முதல், மிக அருகில் வந்து புத்தகங்களைப் பறிப்பது/தொடுவது போல் பாசாங்கு செய்தல், உண்மையிலேயே புத்தகங்களைப் பறித்தல், தொடர்ந்து நடந்து கொண்டு ஏதாவது சொல்லிக் கொண்டு வருதல் எனப் பலவகைப் படும். எத்தனையோ தடவைகள் இவ்வாறு ஆண்கள் தெருவில் நிற்கக் கூடுமென நினைத்து வழக்கமாகச் செல்லும் பாதையை விடு வேறு பாதைகளால் போயுள்ளேன். I felt scared, humiliated, dehumanized and objectified beyond words. I just wanted to be invisible.
பெண்களையே குற்றம் சுமத்தும் போது சொல்லும் ஒரு காரணம். பெண்கள் உடுத்தும் உடையால் அவர்களே இவ் வன்முறைகளைத் வரவழைக்கின்றனர் என்பதே. உடைக்கும் இந்த வன்முறைக்கும் எந்தத் தெடர்புமில்லை. புர்கா போட்டுக் கொண்டு போகும் எனது சில நண்பிகளும் கூட இவ்வன்முறைக்கு விதிவிலக்கானவர்களாக இருக்கவில்லை. பெண்கள் என்ன என்ன உடை போட்டிருக்கும் போது இவ்வன்முறைகளுக்கு ஆளானார்களென Blank Noise பக்கத்திற்குச் சென்று பாருங்கள். பெண்களை சக மனிதர்களாகப் பார்க்கும் ஒரு சமுதாயத்தை, பெண்களுகெதிரான எந்தவித வன்முறையையும் பிழையெனப் பார்த்து சரியாகத் தண்டிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிப்பதே இதற்குரிய தீர்வைத்தரும்.
இது பாலியல் வன்முறை. Through and through. Eve-teasing என்று சொல்வது இக்குற்றத்தை குறைப்பது போன்றது. It's a sugar-coated way of saying it. Atlast இரு வாரங்களுக்கு முன்பு Bangladesh இல் அவ்வாறே ஒரு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வாசித்த சிலவற்றை யாருக்காவது பயன்படலாமென்பதால் இங்கு பதிவிடுகின்றேன்.
Homepathy மருந்துகள்
Homeopathy மருந்துகள் எந்தளவிற்கு இலங்கை, இந்தியாவில் பிரபலமெனத் தெரியவில்லை. ஆனாலும் வாசித்துப் பார்த்ததிலும், கீழிருக்கும் காணொளியைப் பார்த்ததிலும் மக்கள் பரவலாகப் பயன்படுதுகிறார்கள் என்றே படுகிறது.
மேலை நாடுகளிலும் எல்லா மருந்து விற்கும் இடங்களிலும் உண்டு. என்ன பிரச்சனையென்றால், இவற்றை எடுப்பதால் எந்தப் பலனும் இல்லை. இம்மருந்துகள் ஒரு நோய்க்கு மருந்தாகச் கூடியதென நிரூபிக்கப்பட்ட மருந்துகளில் உள்ள செயற்படும் ஆக்கக்கூறினை நீரில் பலமடங்குகள் ஜதாக்கி அதையே பின் மருந்தாக்கி விற்பனை செய்கின்றனர். அதனால் இம்மருந்துகளில் உண்மையாக ஒரு நோய்க்கு எதிராகச் செயற்படும் ஆக்கக்கூறு இல்லை. இதுவரைக்கும் எந்த ஆய்வுகளும் இவை எந்த நோய்க்கும் எந்தவிதத்திலும் பயனைத் தருமென கூறவில்லை. ஒரு நோய்க்குறிய உண்மையான மருந்தை எடுக்காமல் இவற்றை உபயோகிப்பதால் நோயும் குணமடையாமல் பின் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கலாம். மக்கள் இந்தப் போலி மருந்துகளுக்கு எவ்வளவோ காசும் செலவழித்து ஒரு பலனுமில்லாதது மட்டுமல்ல, அந்நோய்க்கு உரிய வைத்தியம் பார்க்காததால் நோயாலும் மிகப் பாதிக்கப்படுவர்.
இம்மருந்துகளில் உண்மையாக ஒரு நோய்க்கு எதிராகச் செயற்படும் ஆக்கக்கூறு இல்லை. Homepathy மருந்துப் பெட்டிகளில் எடுக்க வேண்டிய அளவுகளும் அதை விடக் கூட உட்கொண்டால் அது நஞ்சாகுமெனவும் கூறியிருப்பினும் (எந்த வித ஆக்கக்கூறுகளும் இல்லாமல் நீர் எப்படி நஞ்சாகும்?), அது எந்தளவிற்குப்பிழை என்று நிரூபிக்க James Randi from James Randi Educational Foundation (இப்போது இவ்வாறு பலர், பல நாடுகளில் மக்களுக்குச் செய்து காட்டுகின்றனர்) பல இடங்களில் homeopathy மருந்துகளை நிறைய உட்கொண்டு (overdose) அதனால் எந்த விளைவுகளும் வராதெனக் காட்டியுள்ளார்.
மக்கள் இந்தப் போலி மருந்துகளுக்கு எவ்வளவோ காசும் செலவழித்து ஒரு பலனுமில்லாதது மட்டுமல்ல, அந்நோய்க்கு உரிய வைத்தியம் பார்க்காததால் நோயாலும் மிகப் பாதிக்கப்படுவர்.
James Randi இம்மாதம் homeopathy மருந்துகளை உற்பத்தி செய்பவர்களுக்கும், நோயாளிகளுக்குக் கொடுக்கும் போலி மருத்துவர்களுக்கும், இம்மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கும் ஒரு சவால் விட்டுள்ளார். இம்மருந்துகள் உண்மையில் இவர்கள் சொல்வது போல் நோய்களைக் குணப்படுத்துமென நிரூபித்து, இதுவரைக்கும் செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் பொய்யென நிரூபிக்க யாராலும் முடிந்தால், ஒரு கோடி அமெரிக்க டொலர்கள் James Randi Educational Foundation ஆல் நிரூபித்தவர்களுக்குக் கொடுக்கப்படும் என்பதே சவால். யாராவது முன்வருவார்களா?
இரும்புச் சத்து பற்றாக்குறை
இரும்புச் சத்து பற்றாக்குறை நீங்கள் பெண்களாய் இருப்பதால் மட்டும் வருவதில்லை - From A/Prof. Kate Clancy
நீங்கள் ஒரு இனப்பெருக்க வயதான பெண்ணாயிருந்து உங்களுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறை என இரத்தச் சோதனை மூலம் கண்டறியப்பட்டால், அநேகமான வைத்தியர்கள் சொல்வது: பெண்களுக்கு மாத விடாய் ஆரம்பித்ததும், மாதவிடாய்க் காலங்களில் இரத்தம் இழப்பதால் தான் உங்களுக்கு இரும்புச் சத்து பற்றாக்குறை வருகிறது எனக் கூறி வேறெதுவும் பரிசோதிக்காமல் இரும்பு மாத்திரைகளைத் தந்து அனுப்பிவிடுவர். நானே இக்காரணத்தை பல முறை கேட்டுள்ளேன்.
அப்பக்கத்தில் சொன்னவற்றில் முக்கியமானவை.
1. பூப்பெய்தும் போது ஆண்களுக்கு இரும்பைச் சேமித்து வைக்கும் தன்மை கூடுகிறது. ஆனால் பெண்களில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை.
2. ஆண்களுக்கு இரும்பு பற்றாக்குறையாவதற்கு முக்கிய காரணம் மேல் வயிற்றுக் குடற் பகுதியில் ஏற்படும் குருதிப் போக்கு. அதனால் ஆண்களுக்கு இரும்புப் பற்றாக்குறையெனக் கண்டறிந்தால் முதலில் செய்வது endoscopy.ஆனால் பெண்களுக்கு இரும்புப் பற்றாக்குறையெனக் கண்டறிந்தால் ஒன்றும் செய்யாமல் இரும்பு மாத்திரைகளைக் கொடுத்தனுப்புவர். ஆனால் பெண்களுக்கும் endoscopy செய்து பார்க்கும் போது கண்டறிந்தது இரும்புப் பற்றாக்குறை இருக்கும் 86% பெண்களுக்கும் ஆண்களை மாதிரியே மேல் வயிற்றுக் குடற் பகுதியில் குருதிப் போக்குக் காணப்பட்டதே.
அதனால் நீங்கள் பெண்ணாயிருந்து, உங்களுக்கு மாதவிடாய் நேரங்களில் தீவிரமான குருதியிழப்பில்லாமல் (menorrhagic; >120mL),உங்கள் சாப்பாட்டிலும் போதுமானளவு இரும்புச் சத்து இருந்தும் இரும்புப் பற்றாக்குறை இருப்பதாக அறிந்தீர்களானால், உங்கள் வைத்தியரிடம் endoscopy செய்யுமாறு கேளுங்கள்.
விட்டமின்/கனிம மாத்திரைகள்
இப்ப எங்கு பார்த்தாலும் அநேகமானவர்கள், நோயும் இல்லாதவர்கள் கூட பல விட்டமின் மாத்திரைகளை தினமும் உட்கொள்கின்றனர். நிறைய உடலுக்குக் கூடாத fast foods, fried foods என்று உட்கொள்ளுவதாலோ என்னவோ நல்ல சத்துள்ள உணவுகளை, மரக்கறிகள், பழங்களை உட்கொள்ளுவதற்குப் பதிலாக இந்த விட்டமின்களை எடுத்துக்கொண்டால் சரியாகுமெனத் தம்மைத்தாமே திருப்திப் படுத்திக்கொள்ளச் செய்கிறார்களா தெரியவில்லை. மருந்து விற்பனை நிலையங்களில் prescription தேவையில்லாத மருந்துகள்/போலிமருந்துகள்/விட்டமின்கள் வாங்கும் போது உண்மையில் அவை வரும் பெட்டியின் பின்புறம் எழுதியுள்ளது மாதிரியான விளைவுகளை அவற்றால் தரமுடியுமென்பதற்கு எதாவது ஆதாரங்கள் உண்டா என பலர் யோசிப்பதே இல்லை. பல விட்டமின்கள் இந்த மாத்திரை வடிவில் உட்கொள்ளும் போது உடம்பால் இலகுவாக உறிஞ்சப்பட முடிவதில்லை. விட்டமின்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானவை. ஆனால் அவற்றை உடலுக்குக் கொடுப்பதற்குறிய மிகவும் பயனளிக்கக் கூடிய வழி பல வகை மரக்கறி, பழங்களை உண்பதே ஒழிய விட்டமின்களை எடுப்பதல்ல. ஒரு சில விட்டமின்கள், கனிமங்களே மாத்திரை வடிவில் எடுக்கும் போதும் பயன் தரக் கூடியன.
இந்தப் பக்கத்தில் பல விட்டமின்களையும், அதில் எவற்றிற்கு நல்ல ஆதாரங்கள் உண்டெனவும் interactive ஆன மிகவும் எளிய முறையில் கண்டறியக் கூடியவாறு கொடுத்துள்ளனர்.
அடுத்தமுறை விட்டமின்கள் வாங்கச் செல்லுமுன் நீங்கள் கொடுக்கும் காசுக்கு ஒரு கொஞ்சமாவது அதனால் பலன் கிடைக்குமா என யோசித்து வாங்குங்கள்.
அண்மையில் முல்லை gender stereotypes ஜப் பற்றி எழுதிய பதிவில், தனக்கிருக்கும் stereotypes இற்கெதிரான இயல்புகளையும் கூறி, மற்றவர்களையும் எழுத அழைத்திருந்தார். Gender Stereotype இற்கு எதிராக இருக்கும் எனதியல்புகள் சிலதை அப் பதிவிலேயே கூறியிருந்ததால், இப்பதிவில் stereotypes ஜ மேலும் கொஞ்சம் அலசலாமென்று நினைக்கின்றேன். இந்த stereotyping பிள்ளைகள் பிறந்தவிடனேயே ஆரம்பமாகி விடுவதோடு, அவற்றையே பிள்ளைகளுக்கும் திரும்பத் திரும்ப ஊட்டி வளர்ப்பதால் அதே எண்ணங்களுடனேயே பிள்ளைகளும் வளர்கிறார்கள். எமது சமூகமும் பிள்ளைகள் வளர்க்கப்படும் முறையும் அவர்களின் சுதந்திரமாகச் சிந்திக்கும் இயல்பை பிஞ்சிலேயே மிகக் கட்டுப்படுத்துவதாலும், வளர்ந்த பின்னும் மனம் மாற அநேகமாக சந்தர்ப்பங்களோ சூழ்நிலைகளோ உருவாவதில்லை என்பதாலும், இதே மாதிரியே அடுத்தடுத்த தலைமுறையும் வளர்த்தெடுக்கப் படுகின்றனர். கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுப் பொருட்களும், உடைகளும், சிறுவரின் நிகழ்ச்சிகளும், ஏன் சில புத்தகங்களும் கூட முழுதாகத் துணைபோகின்றன.
stereotypes எத்தனையோ தலைமுறைகளாக சமுதாயத்தில் இருப்பதால், அவற்றால் வேற்றுமை உருவாகின்றனவா அல்லது வேற்றுமையால் stereotypes உருவாகின்றனவா என்று கணிப்பது மிகவும் கடினமானது. ஆனால் அநேகமான ஆய்வுகள் மேற்கூறியதில் முதலாவது முடிவையே தருகின்றன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படை வேறுபாடுகள் உண்டு. ஆனால் அநேகமாக stereotype செய்யப்படும் இயல்புகளில் ஆண்களுக்குள்ளும் பெண்களுக்குள்ளும் இருக்கும் வேறுபாடுகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை விட மிகப் பெரியது. The differences in abilities within gender is a lot bigger than the differences between gender. இக்கட்டுரையில் இயற்கையாக இருக்கும் வேறுபாடுகளைப் பற்றியல்ல, சமூகத்தால் திணிக்கப்படும் செயற்கையான வெறுபாடுகளின் விளைவுகளைப் பற்றி அலசுவோமா?
உதாரணத்திற்கு அநேகமாக பெண்களை விட ஆண்கள் கணித, விஞ்ஞானத் துறைகளில் மிக வல்லவர்கள் என்ற கருத்துண்டு. அதனாலேயே பெண்கள் அவ்வாறான பாடங்களைத் தேர்ந்தெடுத்தாலும் "இது ஆம்பிளைகளுக்குத் தான் சரி, உன்னால் முடியாது, வேறை ஏதாவது படிக்கலாமே' என பலர் அறிவுறை சொல்வதை நானே பல முறை பார்த்துள்ளேன், அனுபவித்துமுள்ளேன்.
ஒரு ஆய்வில், ஆண்களையும் பெண்களையும் மூன்று குழுவினர்களாப் பிரித்து ஓரே கணிதப் பரீட்சையை மூன்று குழ்ய்விற்கும் கொடுத்திருந்தனர். ஆனால் முதல் குழுவிற்கு இந்தப் பரிட்சை ஒரு பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலை பரீட்சித்து பொதுவான அறிவாற்றலை அளவிட வைக்கப்படுகின்றதென்றனர். இரண்டாம் குழுவிற்கு, இது ஒரு கணிதப் பரீட்சை. கணித வல்லமையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய இந்தப் பரீட்சை வைக்கப்படுகிறது என்றனர். மூன்றாம் குழுவிற்கு, இந்த stereotype ஜப் பற்றி சுருக்கமாக விளக்கி, பெண்கள் குறைவாகச் செய்வது இந்த மாதிரி எண்ணம் இருப்பதாலேயே ஒழிய, அவர்களின் கணித வல்லமை குறைவாக இருப்பதால் அல்ல என்றும் சொல்லி விட்டு மற்ற இரு குழுக்களுக்கும் கொடுத்த அதே பரீட்சையையே கொடுத்தனர்.
பரீட்சையின் முடிவுகள் என்ன சொல்லியது?
Reference: Johns, M., Schmader, T., & Martens, A. (2005). Knowing is half the battle: Teaching stereotype threat as a means of improving women's math performance. Psychological Science, 16(5), 175-179.
இப்பரீட்சை ஆணுக்கும் பெண்ணுக்கும் கணித வல்லமையில் உள்ள வேறுபாட்டை அறிவதற்காக என்று சொல்லப்பட்ட குழுவிலிருந்த (இரண்டாம் குழு) பெண்கள் ஆண்களைவிட மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தனர். ஆனால் இது ஒரு பொது அறிவுத்திறனை அளவிடும் பரீட்சை எனச் சொல்லப்பட்ட குழுவிலோ, அதையும் விட அதிசயமாக இந்த stereotype ஆல் தான் பெண்கள் குறைவாகச் செய்கிறார்கள் வல்லமை குறைவால் அல்ல என்று சொல்லப்பட்ட குழுவிலும் பரீட்சை செயற்திறனில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு வேறுபாடுகள் இருக்கவில்லை.
இது தனிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் செயற்திறன்களில் சொல்லப்படும் வேறுபாடுகளுக்கு மட்டுமன்றி மற்றைய எந்தக் குழுக்களுக்களோடு சம்பந்தப் படுத்தப்படும் stereotypes க்கும் பொருந்தும். வெள்ளையினத்தவர் கறுப்பினத்தவரை விட அறிவுத்திறனில் கூடியவர்களென ஒருகாலத்தில் பலமான stereotype இருந்தது (இப்பவும் சில இடங்களில் உண்டு). மேற் சொன்ன அதே பரீட்சையை வெள்ளையினத்தவர்களுக்கும் கறுப்பினர்த்தவர்களுக்கும் கொடுத்து, அறிவுத்திறனில் அவர்களுக்கிடையேயான வித்தியாசத்தைக் கணிக்கப் போவதாக ஒரு குழுவிடமும் இனத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இன்னொரு குழுவிற்கும் கொடுத்தாலும் மேற்கண்ட அதே முடிவுகளை அவதானிக்கலாம். அதே மாதிரி திடல்திட விளையாட்டுகளில் மேற்சொன்னதற்கு எதிர்மாறாக, கருப்பினத்தவரே சிறந்தவர் என்ற stereotype உண்டு. Again, நீங்கள் வெள்ளையினத்தவர்களையும் கறுப்பினத்தவர்களையும் கலந்து இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவிற்கு சும்மா பொதுவாக ஆட்களுக்கு இருக்கும் athletic திறனை சோதிக்கப்போவதாக ஒரு குழுவிற்கும், athletic திறனிலுள்ள இன வேற்றுமையை அளவிடப் போவதாக மற்றைய குழுவிற்கும் சொல்லி ஒரே பந்தயத்தை வைத்தீர்களாயின், இனவேற்றுமையை நீங்கள் இரண்டாவது குழுவில் மட்டுமே காண்பீர்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்தக் குழு மறைமுக (negative) stereotype உடன் பார்க்கப் படுகிறதோ அந்த க்குழு அந்த stereotype ஜப்பற்றி உணரும் போது அது அவர்களின் செயற்திறனை stereotype சொல்வது போலவே மிகவும் எதிர்மறையாகப் பாதிக்கின்றது. பெற்றோர் மகளுக்கு படிப்பு பெரிதாகத் தேவையில்லை என்று மகள்மாரின் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாமை, மகளை சுதந்திரமாக சிந்திக்கவோ செயற்படவோ அனுமதிக்காதது, மகள் தனிய வெளியில் போனால் நிச்சயம் எதாவது ஆபத்து நடந்துவிடுமென எப்போதுமே ஒரு ஆணோடு மட்டுமே போக அனுமதிப்பது (எனக்கு எத்தனையோ பேரைத் தெரியும் அவர்கள் வளர்ந்து திருமணமான பின்னும் எதுவுமே தனிய செய்ய முடியாமலிருப்பவரை), திருமணமே பெண்ணின் பிறவிக்கடன், அதனால் எப்படியாவது திருமணம் செய்வதே வாழ்வின் முதன்மைக் குறிக்கோள் என வளர்ப்பது, இன்னும் எத்தனையோ எல்லாம் பிறந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கப்பட்டு பின் அதுவே அவர்களின் இயல்பென்றாகி விடுகின்றது.
இதனால் வரும் வேறு எதிர்பார்க்காத விளைவுகளைப் பற்றி இன்னொரு பதில் பார்க்கலாம்.
அதனால் இதுவும் தொடரும்...
PS: stereotype க்கு என்ன தமிழ்ச் சொல்லென யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.