வேலையில் வருடாந்த annual performace review நடந்தது. எனது performance ஜ review செய்த எனது எதிர்கால மேற்பார்வையாளர் சொன்னது, "உன் performance எல்லாம் நன்றாக உள்ளது. நீ முன்னேற வேண்டிய ஒரு விடயம் - மற்றவர்களின் கருத்துகள் எல்லாவற்றுடனும் ஒத்துப்போகாமால் இருக்கவும் அந்த வேறுபாட்டை வெளிப்படையாகச் சொல்லவும் உனக்கு இன்னும் தன்னம்பிக்கை வர வேண்டும். You have to build enough confidence to disagree with people!
I thought to myself - Phil there are quite a few people in my life who'll beg to differ with you. :)
பின் ஒரு மின்னஞ்சலில் அனுப்பியது.
Keep up the good work.
PS. Its always dangerous (and often wrong) to agree with me.
PS. Its always dangerous (and often wrong) to agree with me.
அவர் எங்கிருந்து வருகிறார் என விளங்கிக் கொள்ள முடிகிறது. நான் பலரிடம் அவர்கள் கருத்துகளில்/செயல்களில் உடன்பாடின்மையை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் நான் எவ்வளவு பலமாக வெளிப்படுத்துகிறேன் என்பது, அந்தக் கருத்துகளின் தன்மையையும், யார் அவற்றை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும், அவை எந்தளவு பிழையானவை என்பதையும் பொறுத்தது. புதிதாக வந்த அதுவும் ஒரு பேராசிரியரிடம் உடனுக்குடன் அவர் கருத்துகளில் உடன் பாடின்மையை வலிமையாக வெளிப்படுத்துவது கொஞ்சம் கடினம். அத்தோடு அக்கருத்துகள் முற்றிலும் பிழையானவை என்றாலும் பரவாயில்லை. ஒரே துறையில் வேலை செய்பவர். என்னையும் விடப் பல வருடங்கள் அனுபவம் மிக்கவர். அதே ஆய்வுத்துறையில் அவர் சொல்லும் கருத்துகள் முற்று முழுதாகப் பிழையாக இருக்க சாத்தியங்கள் குறைவு. அதோடு சில விடயங்கள் கதைக்கும் போது 'செய்தால் நன்றாக இருக்குமே' என்று தோன்றும். ஆனால் பின்பு இருந்து யோசித்தால் முதல் நினைத்ததை விட சிறுது வேறு மாதிரிச் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும்.
தான் சொல்லும் கருத்துகளுக்கு என்னை 'Phil that's a ridiculous idea' என்று என்னை ஒரு வருடத்திற்குள் சொல்லப் பயிற்சி அளிக்கிறாராம். :)
பார்க்கலாம் எப்படிப் போகுதென்று.
1 comments:
மற்றவர்களின் கருத்துகள் எல்லாவற்றுடனும் ஒத்துப்போகாமால் இருக்கவும் அந்த வேறுபாட்டை வெளிப்படையாகச் சொல்லவும் உனக்கு இன்னும் தன்னம்பிக்கை வர வேண்டும். You have to build enough confidence to disagree with people!
it is not easy. But I like it. அருமையான எண்ண பகிர்வுகள்.
Post a Comment