எங்கட அப்பா சிறந்த வாசிப்பாளர். வீட்டிலிருக்கும் போது அநேகமாக ஏதாவது வாசித்துக் கொண்டே இருப்பார். வாசித்ததெதுவும் எவ்வளவு பழசென்றாலும் எறியவே மாட்டார். அவருக்குப் பிடித்த பல கட்டுரைகளை பத்திரிகைகளிலிருந்தோ புத்தகங்களிலிருந்தோ நகல் எடுத்தும் சேகரித்து வைத்திருந்தார். அவ்வாறான கட்டுரைகளில் அம்மா இன்று கண்டெடுத்து எனக்குக் காட்டிய ஒரு கட்டுரை கீழ்வருவது. இது புரட்டாதி 28, 1993 இல் சென்னையில் வெளியான தினமணிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இதில் சொல்லியிருக்கும் பல கருத்துகள் இக்காலகட்டத்திற்கும் மிகவும் பொருந்தும் என்பதாலும் அப்பாவின் திரட்டுகளில் சிலதையாவது இங்கு சேமிக்கலாம் என்ற நோக்கிலும் இங்கு பகிர்கின்றேன்.
இக்கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் கதைக்கும் ஓரளவு மனமுதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இன்னும் மிகக் குறைந்தளவே எம் சமூகத்தில் உள்ளார்கள். அவ்விதத்தில் இக்காலகட்டத்திலும் ஒரு சிறுபான்மையினரையே இக்கட்டுரை address பண்ணுகிறது. Nevertheless, it's an optimistic view.