அநேகமாகக் கிடைக்கும் பதில் - இதற்கெல்லாம் ஆய்வா - தேவையேயில்லை. எனது நண்பனின் நண்பனின் நண்பனுக்கு நடந்திருக்கென்று சொன்னவன். ஒரு பத்திரிகையில் ஒரு சம்பவம் வாசித்தனான். இதுக்கும் மேலால் புள்ளி விபரங்கள் என்ன சொல்ல முடியும்?! Indeed idiot, What other evidence could you possibly want other than these powerful anecdotes? Women are on the loose and men's world is crumbling - you want to talk to me about statistics?????
YES! I DO! Please bear with me!
புள்ளி விபரங்களால் என்ன சொல்ல முடியும் என்று பார்க்கலாமா?
- உலகில் பெண்களின் வாழ்விற்கு மிக மோசமான இடங்களில் இந்தியா நாலாவது இடத்தை வகிக்கிறதாம்.
- இந்தியாவின் மொத்த சனத்தொகையில் எத்தனையோ மில்லியன் பெண்களை காணவில்லையாம். இது அவர்கள் பெரிய படிப்பெல்லாம் படித்து பூமியில் ஆண்களுடன் பெரிய தொல்லையென செவ்வாய்க்குப் போனதால் இல்லையாம். Shocking isn't it. Knowing educated crazy women, that would have been my first guess. பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் கருவைக் கலைப்பதாலும் பிறந்தபின் கொல்வதாலும் தானாம் இந்த விளைவு.
- கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 914 பெண்கள் தான் இருக்கிறார்களாம். இதுவரைக்கும் எடுத்த கணக்கெடுப்புகளில் இந்த வருட விகிதம் தான் மிகவும் மோசமானதாம். இந்த விகிதம் இப்படியே மாறாமல் தொடர்ந்தால், ஆண்டுக்கு 600,000 காணாமற்போகும் பெண்கள், 18 வருடங்களில் 10 மில்லியன் காணாமற் போகப்போகும் மணமகள்மாராம். I know, that puts it into perspective right? who cares about girls, through quality upbringing turning into amazing women if they are not going to be available as brides.
- 2001 கணக்கெடுப்பு படி இந்தியாவில் 19 வயதிற்கு மேற்பட்ட திருமணம் செய்யாத ஆண்கள் 9.3%, பெண்கள் 3.2% ஆம். இதன் படி 34.1 மில்லியன் ஆண்களுக்கு 2001 இல் திருமணம் செய்யப் பெண்கள் இல்லையாம். இது வருங்காலத்தில் மோசமாக சந்தர்ப்பங்கள் உண்டாம். பெண்கள் இல்லாததால் ஆண்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டால், ஒவ்வொரு முறையும் திருமணச்சந்தைக்கு வரும் மில்லியன் கணக்கான ஆண்கள், தமது சக வயதுடைய ஆண்களுடன் மட்டுமன்றி ஏற்கனவே திருமணம் ஆகாமல் இருக்கும் வயது கூடியவர்களுடனும் போட்டி போட வேண்டுமாம்.
இன்னும் சில bonus புள்ளி விபரங்கள்
- ஆறில் ஒரு பெண்கள் தமது 15 ஆவது பிறந்த நாளைப் பார்க்க உயிருடன் இருப்பதில்லை.
- இந்தியாவில் பிறக்கும் 12 மில்லியன் பெண் பிள்ளைகளில் 1 மில்லியன் குழந்தைகள் தமது முதலாம் பிறந்த நாளுக்குக் கூட இருக்கமாட்டார்கள்
- ஆறில் ஒரு பெண் பிள்ளையின் மரணத்திற்குக் காரணம் பாலியல் ஒடுக்குமுறை
- 2009 இல் இந்தியாவில் நடத்தப்பட்ட women's trafficking இல் கிட்டத்தட்ட 90% நாட்டிற்குள்ளேயே நடத்தப்பட்டது. இருக்கும் 3 மில்லியன் பாலியல் தொழிலாளிகளில் 40% மானோர் சிறுமிகள்.
- நான்கு வயதிற்குக் கீழுள்ள சிறுமிகளின் இறப்பு விகிதம் சிறுவர்களை விடக் குறிப்பிட்டளவு கூட. கருக்கலைப்பிலிருந்தும் சிசுக்கொலையிலிருந்தும் தப்பித்தாலும் சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் போடுவது, போதுமானளவு உணவளிப்பது, தேவையான பொழுது மருத்துவச் சிகிச்சை எல்லாம் குறைவென்பதாலேயே இந்த விளைவு.
- 53% ஆன ஜந்து வயதிற்கும் ஒன்பது வயதிற்கும் இடைப்பட்ட சிறுமிகளுக்கு எழுதப் படிக்கவே தெரியாது.
- இந்தியாவில் உயர் கல்விக்கு சேர்பவர்கள் 61.7% ஆண்கள், 38.3% பெண்கள்
- சமமான வேலைக்கு ஆண்கள் கிடைப்பதைவிட 33% குறைவாகவே பெண்களுக்கு சம்பளம் கிடைக்கிறது.
References:
1. Afghanistan worst place in the world for women, but India in top five2. Gendercide in India: Add sugar and spice
3. Sex-selective abortion: Looking out for baby girls
4. UNEQUAL SEX RATIOS, BRIDE SHORTAGE & MARRIAGE MIGRATION
5. Characteristics of Sex-Ratio Imbalance in India, and Future Scenarios
6. Because I am a girl: The State of the Girl Child in India 2009
7. Unnatural Selection: Choosing Boys Over Girls and the Consequences of a World Full of Men
8. Women in the Labour Force in India
9. Higher Education in India