பரிணாமம் நடக்கிறது என்பது சந்தேகத்திற்கிடமில்லமல் நிரூபிக்கப்பட்டு விட்ட ஒரு உண்மை. ஆனால் பலருக்கு அதைப் பற்றி சரியான விளக்கமில்லையாதலால் பிழையான புரிதல்களைக் கொண்டுள்ளனர். சிலர் பிழையான புரிதல்களைத் தமது சொந்தக் கருத்துக்களாக ஒருபோதும் வைக்காமல் அதுவே பொதுவாக அறிவியல் வட்டத்திலும் கருத்தென்பது மாதிரி எழுதுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது. பரிணாமத்தைத் தவறெனத் தர்க்கரீதியாக நிரூபிக்கவாவது பரிணாமத்தைப் பற்றி சரியாக விளங்கினால் நன்றாக இருக்கும்.
படம் இங்கே எடுத்தது.
அதனால் என்னால் முடிந்தளவு தமிழில் பரிணாமத்தையும் அதற்குரிய ஆதாரங்களையும் பற்றி விளக்குவதே இத்தொடரின் குறிக்கோள்.
பரிணாமம் என்றால் என்ன?
உயிரினக் கூட்டங்களில் ஏற்படும் படிப்படியான, மரபு வழியாக அடுத்த பரம்பரைக்குக் கடத்தப்படக்கூடிய மாற்றங்கள். குறிப்பாக ஒரு உயிரினக்கூட்டத்தில் காலப் போக்கில் மரபணுக்களின் வெவ்வேறு பதிப்புகளின் (different alleles of genes) விகிதங்கள் மாறுபட்டுக்கொண்டு போகுமாயின், அது பரிணாமம். தனி உயிரிகளில் ஏற்படும் மாற்றங்கள் பரிணாமமல்ல. தனி உயிரிகள் பரிணாமமடைவதில்லை. உயிரினக் கூட்டங்களே பரிணாமமடையும்.
நுண்பரிணாமம் (microevolution), அது எவ்வளவு பெரிய மாற்றமாக இருந்தாலும், ஒரு உயிரினக் கூட்டத்துள் (within a particular species) நடக்கும் மரபியல் மாற்றங்கள். பெரும்பரிணாமம் (macroevolution), அது எவ்வளவு சிறிய மாற்றமாக இருப்பினும், உயிரினக்கூட்ட மட்டத்திலும் அதற்கப்பாலும் (at and above the level of species) நடக்கும் மரபியல் மாற்றங்களைக் குறிக்கும். அதாவது, எவ்வளவு சிறிய மாற்றமாயினும் அது ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்தை (species) உருவாக்குமாயின் அது macroevolution.
இரு உயிரிகள் இணைந்து அவ்வினத்தைப் பெருக்கக் கூடிய வல்லமையுடைய அடுத்த பரம்பரையை உருவாக்க முடியுமாயின் அவை ஒரு இனத்தைச் சேர்ந்தவை, முடியாவிடின் அவை வேவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை.
மேலும் உதாரணங்களுடன் கூடிய விளக்கத்தைற்கு பின்வரும் இரு சுருக்கமான காணொளிகளைப் பாருங்கள்.
ஒரு மூதாதை உயிரியிலிருந்தே உலகில் மற்றைய எல்லா உயிரிங்களும் படிப்படியாகப் பரிணாமமடைந்தன எனவே பரிணாமத்திற்கான ஆதாரங்கள் எல்லாம் கூறுகின்றன.
உயிரிகள் எவ்வாறு படிப்படியாகக் காலப்போக்கில் மாறுகின்றன என்பதே பரிணாமமெயொழிய, பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியதென்பதற்கும் (abiogenesis) பரிணாமத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை.
மேலும் பரிணாமத்திற்குரிய ஆதாரங்களையும் பரிணாமத்தைப் பற்றிய பிழையான புரிதல்களையும் விளக்கமாக அலசுவதற்கு முன் தருமி ஜயாவின் வலைப்பதிவில் கார்பன் கூட்டாளி கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க விரும்புகின்றேன்.
நான் அப் பதிவில் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தேன்.
"பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள் உண்டு. எதிராக எந்த உண்மையான சாட்சிகளும் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு."
அதற்கு கார்பன் கூட்டாளி,
"ஒரே ஒன்று, வேறு எதுவும் வேண்டாம், ஒரே ஒரு நிருபிக்கப் பட்ட சாட்சி தர முடியுமா?" என்று கேட்டிருந்தார்.
A/Prof. PZ Myers சொன்னது போல் பரிணாமத்திற்கு எந்தவித சான்றுகளும் இல்லையென்பது, ஒரு புயல் மழையின் போது வெளியில் நின்று உடல் முழுவதும் நனைந்த பின்னும் தான் நனைந்ததிற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பது போலாகும்.
பரிணாமம் நிரூபிக்கப்பட்டு விட்டதென்று ஆய்வுகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடவில்லை. எத்தனையோ ஆயிரம் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எதனையோ லட்ச ஆய்வுகள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுவிட்டன. இவை எல்லாமே பரிணாமத்திற்கு ஆதாரங்களே. Sequence செய்யப்படும் ஒவ்வொரு புதிய உயிரியின் genome உம் பரிணாமத்திற்கு சாட்சி. பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் அறிய pubmed எனும் தளத்திற்குச் சென்று பார்க்கலாம். Pubmed, life sciences and biomedical sciences இல் பிரசுரிக்கப்படும் ஆய்வுகளை தொகுத்து வழங்கும் ஒரு இலவச தகவல்த்தளம். அநேகமாக எந்தவொரு biomedical துறையிலும் நடக்கும் நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளைப் பற்றி அறிய முதலில் எவரும் செல்லுமிடம் இதுவாகும். அதையும் விட எத்தனையோ பரிணாமத்தில் நேரடியாகப் பரிசோதனை செய்பவர்கள் பதிவுகள் எழுதுகின்றனர். PZ Myers எழுதிய இப்பதிவில் எத்தனையோ பரிணாமத்தைப் பற்றி விளக்கும் தளங்களின் முகவரிகள் உள்ளன.
பல புதிய புதிய ஆய்வுகளைப் பற்றி அறிய இங்கு செல்லலாம்: This week in Evolution
பரிணாமத்திற்கான ஆதாரங்களை தொகுத்து அலசும்/பட்டியலிட்டிருக்கும் வேறு சில தளங்கள்:
Talk origins
phylointelligence
ஒவ்வொரு வகை ஆதாரங்களையும் விரிவாகப் பின் பார்ப்போமாயினும் கார்பன் கூட்டாளி கேட்டதற்காக பரிணாமத்திற்கான மிக வலிமையான ஆதாரங்களாக மூலக்கூற்று உயிரியலில் (molecular biology) இருந்து பல உதாரணங்களைச் சொல்லலாம், அதிலிருந்து ஒரு உதாரணம் இங்கே மற்றையவை அடுத்தடுத்த பதிவுகளில் தருகின்றேன்.
எமது DNA கட்டமைப்பிலுள்ள endogenous retrovirus sequences - வைரஸ் என்பது ஓரு புரதக் கூட்டிற்குள் இருக்கும் nucleic acid மட்டுமே. இந்த nucleic acid ஒரு DNA ஆகவோ RNA ஆகவோ இருக்கலாம். RNA ஜக் கொண்ட virus, retro virus எனப்படும். ஒரு வைரஸ் பெருக, அதற்கு இன்னொரு உயிரியின் உடல் தேவை. ஏனெனில் வைரஸில் தன்னைத் தானே இரட்டிப்பாக்கும் சக்தி இல்லை. ஒரு ரெட்ரோவைரஸ் இன்னொரு உயிரியின் உடலில் தொற்றியதும் தனது RNA ஜ DNA ஆக மாற்றி, அதை தொற்றிய உயிரியின் உயிரணுக்களிலுள்ள (cells) DNA கட்டமைப்பில் (genome) புகுத்தும். தொற்றிய உயிரியின் உயிரணுக்களிலுள்ள DNA பிரதியெடுக்கும் போது, வைரஸ் DNA உம் பிரதியெடுக்கப்படும். இவ்வாறே தம் எண்ணிக்கையைப் பெருக்கும். Infection போன பின்னும் இந்த virus DNA அந்த உயிரியின் கட்டமைப்பிலேயே செயலிழந்திருக்கும் (called and endogenous retrovirus or ERV). இந்த ரெட்ரோவைரஸ் DNA எமது உடல் உயிரணுக்களைத் தொற்றித் தனது DNA ஜ எமது உடல் உயிரணுக்கலின் DNA கட்டமைப்பில் புகுத்தினால், எமது genome இல் ஏற்பட்ட அந்த மாற்றம் எம்முடன் முடிந்துவிடும். ஆனால் அது எமது முட்டையின் அல்லது விந்தின் genome இல் புகுத்தினால் அது அந்த மாற்றம் நிரந்தரமாகிவிடும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படும்.
எமது DNA கட்டமைப்பில் கிட்டத்தட்ட 8% இந்த ERV ஆல் வந்தவை. நாம் பொதுவழித்தோன்றலால் தான் வந்திருக்கின்றோமானால், என்ன எதிர்பார்க்கலாம்? பரிணாமத்தில் ஒரு மூதாதை உயிரினத்திற்கு இவ்வாறு ரெட்ரோவைரஸ் தொற்றப்பட்டிருப்பின் அவையின் DNA கட்டமைப்பில் எந்த இடத்தில் இந்த ERV புகுத்தப்பட்டிருந்ததோ அதே இடத்தில் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மற்றைய உயிரினங்களின் DNA கட்டமைப்பிலும் காணப்பட வேண்டுமென எதிர்பார்க்கலாமா?
GUESS WHAT? மனிதர்களினதும் மனிதக்குரங்குகளினது DNA கட்டமைப்பில் ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 14 ERVs ஒரே இடத்தில் உள்ளன. மனிதனின் DNA கட்டமைப்பு 3 பில்லியன் base pairs நீளமானது. ERVs 500 base pairs மட்டுமே. எப்படி அவ்வளவு நீளமான DNA கட்டமைப்பில் இவ்வளவு சிறிய ERVs மிகச் சரியாக அதே இடத்தில் இருப்பது சாத்தியம்? மனிதர்களும் மனிதக்குரங்குகளும் (chimpanzees) கிட்டத்தட்ட 5-7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரே இன மூதாதையரின் வழித்தோன்றல்கள் எனப் பரிணாமம் கூறுகின்றது. இம்மூதாதையரைத்தொற்றிய வைரஸ்கள் அவர்களின் DNA கட்டமைப்பில் புகுத்திய ERVs உம் அதற்கு முதலே அவர்களின் (அவர்களின் மூதாதையர் மூலம்) கட்டமைப்பில் இருந்த ERVs ம்மே இவை. இவற்றிற்கு வேறு பொருத்தமான விளக்கம் இல்லை. அது மட்டுமல்ல வேறு பரிணாமப் பாதையைக் கொண்ட உயிரிகளில் இதே எண்ணிக்கையான ERVs இதே இடங்களில் அவைகளின் genome இல் இருக்காது. பரிணாமத்தால் மட்டுமே இவற்றை விளக்க முடியும்.
It is in our digital code. 8% of our DNA blueprint is from retroviruses. Both human and chimpanzee genomes have been sequenced. அதனால் பரிணாம ஆய்வாளர்களின் முடிவுகளை உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லையாயின், நீங்களே பகுத்தாயலாம். மனிதர்களினதும் மனிதக்குரங்கினதும் DNA கட்டமைப்பை ஆராய முதற்படியாக genome browser க்குச் செல்லலாம்.
ERVs ஜப் பற்றிக் கூட இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன, செய்துகொண்டும் உள்ளனர். Pubmed இல் endogenous retroviral AND evolution எனத்தேடினீர்களாயின் நிறையத் தகவல்கள் கிடைக்கும்.
தொடரும்........
பிற்குறிப்பு நான் அறிவியல் விடயங்களை பொதுமக்களுக்கு விளக்க அண்மைக் காலங்களிலேயே முயன்றுவருகின்றேன். இன்னும் நிறைய அனுபவமும் பயிற்சியும் தேவை. அதனால் உங்களின் கருத்துகள் (constructive criticisms) எனக்கு மிகவும் பயனுடையதாகவிருக்கும். நன்றி.
பிற்குறிப்பு நான் அறிவியல் விடயங்களை பொதுமக்களுக்கு விளக்க அண்மைக் காலங்களிலேயே முயன்றுவருகின்றேன். இன்னும் நிறைய அனுபவமும் பயிற்சியும் தேவை. அதனால் உங்களின் கருத்துகள் (constructive criticisms) எனக்கு மிகவும் பயனுடையதாகவிருக்கும். நன்றி.