தற்போதைய பிரசவத்திற்குத் தரப்பட்ட நாளிற்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு கிழமைகளே இருக்கிறது. இந்நிலையில் முதல் பிரசவம் எப்படி நடந்ததென்பதை எழுதத்தோன்றியது, அதனால் இந்தப்பதிவு.
2008 ஆம் ஆண்டு ஆவணி 7ம் திகதி எனக்குத் தந்த திகதி. 6 ஆம் திகதியிலிருந்தே வேலையிலிருந்து மட்டுமே பெற்றோருக்கான விடுப்பு எடுத்திருந்தேன். கருக்காலத்தில் பெரிதாக ஒரு பிரச்சனைகளும் வரவில்லை ஆதலால் முதலில் விடுப்பு எடுக்கவேண்டும் என நினைக்கவில்லை. அத்தோடு எவ்வளவு தாமதமாக எடுக்கிறேனோ அவ்வளவு காலம் பின்னால் குழந்தையுடனும் இருக்கலாமென்பதால், எதற்கு முதலே எடுத்து வீணாக்குவானெனவும் நினைத்ததால், இயலுமானவரை தாமதமாகத்தான் விடுப்பு எடுக்க விண்ணப்பித்திருந்தேன்.
தரப்பட்ட திகதியில் பிரசவம் மிகச் சிலருக்கே நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், அன்று நடக்குமா இல்லையா மனத்தில் கொஞ்சம் படபடப்பு இருக்கவே செய்தது. ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. வீட்டில் இருக்க அலுப்புத் தான் தட்டியது.பேசாமல் வேலைக்கே போவோமென்று முடிவு செய்து வேலைக்குச் சென்று விட்டேன்.எனது வேலைக்குப் பக்கத்திலேயே மருத்துவமனை. "Are you crazy? இங்கு என்ன செய்கிறாய்? வீட்டில் போய் கொஞ்சம் ஓய்வெடு" என்றவர்களிடம், என்னவாவது நடந்தால் மருத்துவமனைக்குப் போக இங்க இருந்தால் வசதி தானே, வீட்டை போய் என்ன செய்வது என்றேன். ஆனால் அன்று ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் "Looks like he is way too comfortable inside and doesn't want to come out" என்று பகிடி வேறு.
சாதாரணமாக கர்ப்பகாலம் 40 கிழமைகள். பிரசவத்திகதி முதலில் செய்யும் ultrasound scan இலிருந்தே முடிவுசெய்வர். அம்முறையின் நுட்பத்தின் error rate இரண்டு கிழமைகள். அதனால் 40 கிழமைகள் கொடுக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு கிழமைகள் முன்னோ/பின்னோ வரலாம்.
வழமையாக தாய்க்கு கருக்காலத்திற்கு முன்போ, கருக்காலத்தின் போதோ ஏதும் பிரச்சனைகள் இல்லாதிருந்தால், 40 கிழமைகளின் பின் கிழமையில் ஒரிரு தடவை செய்யும் scan இன் மூலம் குழந்தை சுகமாக இருக்கிறதா? குழந்தை இருக்கும் amniotic திரவம் போதுமானதாக இருக்கிறதா? வேறேதும் பிரச்சனை தெரிகிறதா எனப் பரிசோதித்து, எல்லாம் சரியாக இருக்கிறதாயின் இரு கிழமைகள் மட்டும், இயற்கையாகப் பிரசவம் தொடங்குகிறதா எனப் பார்ப்பினம். அதன் பின் பிள்ளையை வைத்திருப்பது நல்லதன்று. ஏனெனில் பனிக்குடத்தின் காலாவதிக் காலம் கிட்டத்தட்ட 40-42 கிழமைகளே. அதன் பின் அதனால் சிறப்பாகக் குழந்தைக்குத் தேவையானதை வழங்க முடியாது. அதோடு amniotic திரவமும் குறையத் தொடங்கலாம்.
எனக்கும் அவ்வாறே செய்தனர். 40 கிழமைகளும் முடிந்து அடுத்த ஒன்றரைக்கிழமைகள் ஒன்றும் நடக்கவில்லை. Scan இலும் ஒரு பிரச்சனையும் தெரியவில்லை. இரு கிழமைகளில் இயற்கையாக ஒன்றும் நடக்காவிடில், செயற்கையாகக் கருப்பையைச் சுருங்கத் தூண்டுவதைத் (induction) தவிர வேறு வழியில்லை என்று எமது மகப்பேற்றுத் தாதி (midwife) சொன்னார். இதன் பின் 18ஆம் திகதி ஒரு scan செய்து, அதில் எல்லாம் சரியெனில் 20/21 ஆம் திகதியில் induce பண்ணுவோம் என முடிவு செய்யப்பட்டது. பின் 18 ஆம் திகதி காலையில் செய்த scan இல் பெரும்பாலும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் amniotic திரவம் கொஞ்சம் குறைந்து விட்டது. அதனால் இரண்டு நாள் கழித்து செய்யப்போகும் கருப்பைத்தூண்டலை அன்றே செய்தால் நன்று எனச் சொல்லி women assessment unit இல் ஒரு அறையை எமக்கென ஒதுக்கி விட்டனர்.
பின்பகல் மூன்று மணியளவில் induce பண்ணலாம் என்றதால், நானும் துணைவனும் சும்மா கொஞ்ச நேரம் நடந்துவிட்டு, வேலையாட்களுடன் சிலசமயம் செல்லும் எனக்குப் பிடித்தமான ஒரு தாய்லாந்து நாட்டுக் கடையில் மிக உறைப்பாக vege Nasi Goreng செய்து தரச்சொல்லிச் சாப்பிட்டேன். மிக உறைப்பாகச் சாப்பிடில் அதனால் வயிற்றை மிகவும் தூண்டுவதால், அதன் அசைவில் பக்கத்தில் இருக்கும் கருப்பையும் சுருங்கத் தொடங்கலாம் என்பதொரு நம்பிக்கை. அது உறைப்பு பெரிதாகச் சாப்பிடாத மேலை நாட்டவர்க்கு சில சமயம் பொருந்தலாம். சாதாரணமாகவே உறைப்பு நன்றாகச் சாப்பிடும் எனக்கு அது பெரும்பாலும் வேலை செய்யாதெனத் தெரிந்தும், எதுக்கும் ஒரு கடைசி முயற்சி செய்து பார்க்கலாமென்ற அற்ப ஆசை தான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. :)
பிரசவத் திகதிக்கு இரு மாதங்களுக்கு முன்பே எனது birth plan இல் என்னுடன் அறைக்குள் என் துணைவனும் என் அம்மாவும் நிற்பார்கள் எனச் சொல்லியிருந்தேன். அம்மா வேலையிலிருந்ததால், தொலைபேசி, "ஒன்றும் அவசரமில்லை, வேலை முடித்து, கொஞ்சம் ஆறி அமர்ந்து வாருங்கள்" என்று சொல்லி விட்டு induce பண்ணுவதற்காக எனக்கொதுக்கப்பட்ட அறையில் துணைவனுடன் சென்றமர்ந்தேன். பின் கருப்பையைச் சுருங்கத் தூண்டுவதற்காக முதலில் prostaglandin எனும் lipid ஜ gel வடிவில் வைப்பர். பிரசவ நேரம், பிரசவத்தைத் தூண்ட இயற்கையாகவே கருப்பையில் இதன் உற்பத்தி தூண்டப்படும். ஆனால் என் பிள்ளைக்கு வேளியே வரும் idea வே இருக்கவில்லை ஆதலால், my uterus couldn't be bothered to produce it. :)
அதன் பின் சில நேரம் என்னவாவது மாற்றம் நடக்கிறதா என விட்டுப் பார்த்து, பின் சில சமயம் இரண்டாம் தடவையும் வைக்க வேண்டி வரலாம் என்று சொன்னார்கள். எனக்கு gel வைத்த சிறுது நேரத்திலேயே வலி எடுக்க ஆரம்பித்தது, கொஞ்சம் 'அப்பாடா' என்றிருந்தது. அதன் பின் எந்தளவிற்கு இது முன்னேறுகிறதெனப் பார்ப்பதற்கு பொறுமையாகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆரம்ப கால பிரசவத்தின் போது நடப்பது மிக நன்று. அதனால் வலியின் உணர்வு கொஞ்சம் குறைவதோடு அது பிரசவ வேகத்தையும் கூட்டும் என கருக்கால வகுப்புகளிலிருந்தும் midwife இருந்தும் தெரிந்து வைத்திருந்தேன். மருத்துவமனையில் women's assessment unit/delivery unit 9 ஆம் மாடியில் உண்டு. ஒரு தண்ணிப் போத்தலையும் எடுத்துக் கொண்டு துணைவனையும் கூட்டிக் கொண்டு படியில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தேன். நேரம் செல்லச் செல்ல வலி கூடிக் கொண்டு சென்றது. துணைவன் சிறிது நேரத்தின் பின், நடந்தது காணும் என, அம்மாவும் வந்து சேர, துணைவனை ஓய்வெடுக்கச் சொல்லி அம்மாவுடன் சிறிது நேரம் படி ஏறி, இறங்கி விட்டு அறைக்கு வந்து சேர, midwife கர்ப்பவாய் எந்தளவு விரிவடைந்துள்ளதென சோதனை செய்து, 2 cm தான் என்றார். Sigh, அவ்வளவுதானா என்றிருந்தது. 10 cm விரிவடைந்தால் தான் குழந்தையின் தலை கொஞ்சமாவது வெளியே வரலாம்.
8 comments:
All the very best Anna, our prayers are with you, hope your junior will arrive safely. Take care of your health
உங்கள் இடுகை நினைவுகளை தூண்டிவிட்டது. எனக்கும், இயற்கையாக வலியெல்லாம் வரவில்லை. ஐவி-யில் ஊசியொன்று போட்டார்கள். விரிவடைகிறதாவென்று ஒவ்வொரு முறை சோதனை செய்யும்போதும்.....நிஜமாகவே நரக வேதனைதான். நான் சும்மாவே கொஞ்சம் ஃபஸ்ஸி...”இதுக்கே கத்தினா எப்படி, இவ்ளோ பெரிய பேபி அது வழியாதான் வரணும்” என்று மருத்துவர் சொன்ன போது கிட்டதட்ட மயக்கமடையாத குறை....செத்துவிடுவேன் என்றே தோன்றியது.ஸ்..ப்பா! பிறகு, நல்லபடியாக(!) சி-செக்ஷனில் முடிந்தது. :-))
Thanks heaps Mukund Amma! :)
ஐவி-யில் ஊசியொன்று போட்டார்கள்.
Oxytocin ஆக இருக்குமோ? எனக்குப் பின் அதுவும் போட்டார்கள். அடுத்த பதிவில் வருகுது. :)
"விரிவடைகிறதாவென்று ஒவ்வொரு முறை சோதனை செய்யும்போதும்.....நிஜமாகவே நரக வேதனைதான்."
நிச்சயமாக. Couldn't agree with you more. Birthing educator கூட uncomfortable ஆகத் தான் இருக்கும் என்றார்கள். ஆனால் எனக்கும் நிச்சயமாக நரக வேதனையாகத் தான் இருந்தது.
நான் சும்மாவே கொஞ்சம் ஃபஸ்ஸி...”இதுக்கே கத்தினா எப்படி, இவ்ளோ பெரிய பேபி அது வழியாதான் வரணும்” என்று மருத்துவர் சொன்ன போது கிட்டதட்ட மயக்கமடையாத குறை....செத்துவிடுவேன் என்றே தோன்றியது.ஸ்..ப்பா! பிறகு, நல்லபடியாக(!) சி-செக்ஷனில் முடிந்தது. :-))
:):) கருத்துகளுக்கு மிக்க நன்றி முல்லை.
நல்லபடியாக நடக்க பிரார்த்தனைகள் அனலிஸ்ட்...loads of goodluck .
வாழ்த்துக்கும் நன்றி சக்திபிரபா.
சுப ப்ரசவம் அமைய வாழ்த்துக்கள், அன்னா :). அந்த படம் வெரி யூஸ்ஃபுல்.
மிக்க நன்றி தெகா!:)
Post a Comment