Saturday, January 28, 2012

Women entrepreneurs, example not exception

Thursday, January 26, 2012

முதற் பிரசவக் கதை - 2


வலி கொஞ்சம் கொஞ்சமாகக் கூட ஆரம்பித்தது. இன்னும் சவ்வு உடையவில்லை. இன்னொரு தடவை சோதனை செய்து பார்த்து கருப்பை வாய் கிட்டத்தட்ட 4 cm விரிவடைந்து விட்டதென midwife சொன்னார். அதன் பின் assessment unit இலிருந்து delivery unit க்குச் செல்லம் என்றனர். சரியென நடந்து அங்கு சென்றோம். சிலருக்கு தண்ணீரில் இருந்து பிள்ளை பெறுவது சில வேளைகளில் இலகுவாக இருப்பதால் Delivery unit இல் சில அறைகளில் bath tub இருக்கும். அவ்வாறு bath tub இருக்கும் அறை ஏதாவது யாரும் பயன்படுத்தாமல் இருந்தால் அங்கே விடும் படி முதலே கேட்டிருந்தேன். அதுவும் சுடுநீரில் இருந்தால் கொஞ்சம் வலியின் உணர்வு குறையும் என்பதாலேயே. அப்படி ஒரு அறை இருந்ததால் அங்கேயே என்னை விட்டனர்.

Tuesday, January 24, 2012

முதற் பிரசவக் கதை - 1

தற்போதைய பிரசவத்திற்குத் தரப்பட்ட நாளிற்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு கிழமைகளே இருக்கிறது. இந்நிலையில் முதல் பிரசவம் எப்படி நடந்ததென்பதை எழுதத்தோன்றியது, அதனால் இந்தப்பதிவு.

Monday, January 23, 2012

ஒரு திறந்த கடிதம்

அன்பின் சக சமூகத்தவற்கு,

இவ்விடயங்களை பல தடவைகள் சொல்ல வேண்டுமென நினைத்துள்ளேன். ஆனால் எப்படிச் சொல்வதென்று தெரியாமல் சொல்லவில்லை. நான் ஒரளவு நெருங்கிப் பழகும் சிலரிடம் சொல்லியும் உள்ளேன், ஆனால் அதனால் எதுவும் மாற்றம் வந்ததாகத் தெரியவில்லை. அதனால் எனது எண்ணங்களை/கோபத்தை இங்கு கொட்டித்தீர்க்கலாம் என்ற முடிவால் இந்தக் கடிதம்.

Tuesday, January 17, 2012

சின்னஞ் சிறிய வயதில் பெரிய பெரிய சிந்தனைகள்


Arfa Karim Randhawa, 9 வயதில் உலகின் மிக இளமையான Microsoft Certified Professional ஆனவள். பாக்கிஸ்தானைச் சேர்ந்தவள். அவளின் 16 வயதில் சில தினங்களுக்கு முன் காலமாகிவிட்டாள்.:(

Todd Bishop என்பவர் இவளின் பத்து வயதில், Bill Gates ஜச் சந்தித்ததைப்பற்றி தான் எடுத்த நேர்காணல்களைத் தொகுத்து இங்கு கொடுத்துள்ளார். நான்கே நிமிடங்கள் தான், கேட்டுப்பாருங்கள்.

Sunday, January 15, 2012

போலியோ இல்லாமல் ஓராண்டு - A cautious celebration - ஆனாலும் நிச்சயம் கொண்டாடப்படவேண்டிய விடயமே

முதன் முதலாக இந்தியாவில் இம்மாதம் 13ஆம் திகதி வரை கடந்த ஒரு வருடத்தில் புதிதாகப் போலியோ வைர‌ஸ் எவரையும் தாக்கவில்லை. கடந்த 13ஆம் திகதியிலிருந்து இந்தியாவில் போலியோ ஒரு endemic (திணையின முறைநோய்? இந்தச் சொல் சரியா எனத் தெரியவில்லை) நோய் அல்ல. கடந்த சில காலங்களாக இந்தியா, பாக்கிஸ்தான். ஆவ்கானிஸ்தான், நையீரியா ஆகிய நான்கு நாடுகளிலும் இந்நோய் மிகக் கூடுதலாகப் பரவிக்கொண்டிருந்தது. இவ்வருடத்திலிருந்து இந்தியா இந்த list இல் இல்லை. It's an amazing achievement. இந்நோயை முற்றாக அழிப்பதற்கான பாதையில் பல படிகள் முன்னேறியுள்ளோம்.

Thursday, January 12, 2012

2011 கூகிள் அறிவியல் காட்சி விழாவில் வெற்றி பெற்ற மூன்று பதின்மவயதினரின் பேச்சு



Aren't they amazing?