சீனாவிற்கு NZ Royal Society ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட NZ-China Scientist Exchange Programme இல் பங்குபற்றும் ஒருவராக வந்துள்ளேன்.
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts
Monday, October 21, 2013
Tuesday, September 10, 2013
இனப்பெருக்கத்திற்கும் இதய நோய்க்குமான தொடர்பு
கீழ்வருவது அண்மையில் நடந்த Go Red for Women எனும் New Zealand Heart Foundation ஆல் நடத்தப்பட்ட பெண்களிலிடையே இதய நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதற்கான ஆய்விற்கு நிதி திரட்டுவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் நான் பேசியதன் தமிழாக்கம்.
டிஸ்கி: இதில் வரும் சில குறிப்புகள் (உதாரணம் - சொல்லும் தொலைக்காட்டித் தொடர், பிரபல பெண்கள்) மேற் உலகில் வாழ்பவர்களுக்குக் கூட relevance ஆக இருக்கும். ஆனால் பேச்சில் சொல்லப்படும் செய்தி எல்லோருக்கும் பொருந்தும்.
டிஸ்கி: இதில் வரும் சில குறிப்புகள் (உதாரணம் - சொல்லும் தொலைக்காட்டித் தொடர், பிரபல பெண்கள்) மேற் உலகில் வாழ்பவர்களுக்குக் கூட relevance ஆக இருக்கும். ஆனால் பேச்சில் சொல்லப்படும் செய்தி எல்லோருக்கும் பொருந்தும்.
Labels:
அறிவியல்,
கர்ப்ப கால நோய்கள்,
குருதி நஞ்சூட்டுதல்,
பெண்கள்
Tuesday, March 5, 2013
அடிப்படை அறிவியல் கல்வி
அண்மையில் ஒரு workshop இல் எமக்கு passionate ஆன ஒரு விடயத்தைப் பற்றி 300-350 சொற்கள் எழுதிப் பேசுமாறு கேட்டிருந்தார்கள். எனது அப்பேச்சின் தமிழாக்கம் இது.
Labels:
அடிப்படை அறிவியல்,
அறிவியல்,
சமூகம்,
மூடநம்பிக்கை,
விட்டமின்கள்
Wednesday, December 19, 2012
புது வருட தீர்மானம் 1 - Build confidence to disagree with people
வேலையில் வருடாந்த annual performace review நடந்தது. எனது performance ஜ review செய்த எனது எதிர்கால மேற்பார்வையாளர் சொன்னது, "உன் performance எல்லாம் நன்றாக உள்ளது. நீ முன்னேற வேண்டிய ஒரு விடயம் - மற்றவர்களின் கருத்துகள் எல்லாவற்றுடனும் ஒத்துப்போகாமால் இருக்கவும் அந்த வேறுபாட்டை வெளிப்படையாகச் சொல்லவும் உனக்கு இன்னும் தன்னம்பிக்கை வர வேண்டும். You have to build enough confidence to disagree with people!
Labels:
trials of a junior scientist,
அறிவியல்
Saturday, December 15, 2012
அண்மையில் நடந்த சில நிகழ்வுகளும் என் எண்ணங்களும்
எத்தனையோ விடயங்களைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தும் நேரமே இல்லாத காரணத்தினால் எதுவும் எழுத முடியவில்லை. தொடங்கிய பரிணாமத்தொடரை முடிக்க வேண்டும். அதற்கு முதல் நான் எழுத நினைத்த வேறு சில விடயங்களை சுருக்கமாக இப்பதிவில் சொல்லலாம் என நினைக்கிறேன்.
Labels:
அறிவியல்,
குழந்தை வளர்ப்பு,
சமூகம்,
சொந்த அனுபவம்,
பெண்கள்
Friday, October 5, 2012
பரிணாமம் - ஆதாரங்களற்ற கொள்கை/சும்மா ஒரு தியரி???
via myconfinedspace
நாத்திகத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த பாகம் இயலுமானளவு விரைவில் போடுகிறேன். அதற்கு முன் வலையில் அண்மையில் , அறிவியலில் theory, facts ஜப் பற்றி எந்தளவிற்கு விளக்கமின்றி, தமது விளக்கமின்மையில் கொஞ்சம் கூட சந்தேகமற்று மிகுந்த நிச்சயத்துடன் அதைப் பறைசாற்றி, விஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்கள் என்ற தொனியில் சில பதிவுகள் படிக்க நேர்ந்ததால் அடுத்த பதிவில் இதைக் கொஞ்சம் விளக்கி விட்டுத் தொடர்கிறேன்.
நாத்திகத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த பாகம் இயலுமானளவு விரைவில் போடுகிறேன். அதற்கு முன் வலையில் அண்மையில் , அறிவியலில் theory, facts ஜப் பற்றி எந்தளவிற்கு விளக்கமின்றி, தமது விளக்கமின்மையில் கொஞ்சம் கூட சந்தேகமற்று மிகுந்த நிச்சயத்துடன் அதைப் பறைசாற்றி, விஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்கள் என்ற தொனியில் சில பதிவுகள் படிக்க நேர்ந்ததால் அடுத்த பதிவில் இதைக் கொஞ்சம் விளக்கி விட்டுத் தொடர்கிறேன்.
Labels:
அறிவியல்,
சமூகம்,
பரிணாமம்,
மூடநம்பிக்கை
Thursday, September 6, 2012
Endometriosis - இடமகல் கருப்பை அகப்படலம்
இப்பதிவில் குறிப்பிட்டிருப்பது போல், கரு ஊடுருவி விருத்தியடைவதற்கேற்றவாறு விருத்தியடைந்திருக்கும் திசுவே கருப்பை அகவுறை (endometrium). கருவை எதிர்பார்த்தே ஒவ்வொரு மாதமும் வளர்ந்து, விருத்தியடைந்து, பின் கருக்கட்டல் நடைபெறாவிடின், உதிர்வதே மாதவிடாயாக ஒவ்வொரு மாதமும் வெளியேறுகின்றது.
நான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த காலங்களில், "நீங்கள் என்னத்தைப்பற்றி ஆய்வு செய்கிறீர்கள்" எனக் கேட்பவர்களிடம் சுருக்கமாக endometrium என்ற திசுவில் என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றி விளக்க முற்பட முன் சில பெண்கள், "ஒ எனக்கு அது என்னவென்று தெரியுமே. எனக்கும் இருக்கு", எனச் சொல்லியுள்ளார்கள். முதலில் எனக்குக் குழப்பமாக, "உங்களுக்குமா? எல்லாப் பெண்களுக்கும் (all cis women, to be exact) endometrium இருக்கே", என்று சொன்ன பின்னே விளங்கியது அவர்கள் endometriosis ஜப்பற்றிச் சொல்கிறார்கள் என்று.
Labels:
அறிவியல்,
நோய்கள்,
பெண்ணின் இனப்பெருக்கத்தொகுதி,
மருத்துவம்
Thursday, May 31, 2012
நன்றி சொல்லும் நேரம்....
இது மிகவும் காலம் கடந்த பதிவு. இருந்தாலும் எனக்கு liebster விருதளித்த சக்திப் பிரபாவிற்கும் முகுந்த் அம்மாவிற்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
Labels:
work life balance,
அறிவியல்,
விருதுகள்
Tuesday, February 21, 2012
பக்கசார்புடைய உறுதிப்படுத்தல் (Confirmation bias) - மூளையின் வரம்புகளில் ஒன்று
எமது மூளை எத்தனையோ தந்திரங்களைச் செய்யக்கூடியது. அதில் ஒன்றே இந்த பக்கசார்புடைய உறுதிப்படுத்தல். நாம் ஏற்கனவே நம்பும் ஒரு விடயத்திற்கு ஆதரவளிக்கும் விடயங்களை அல்லது தகவல்களை அது எந்தளவு சிறியதாக இருந்தாலும் மிகைப்படுத்தி, அவ்விடயத்திற்கு எதிராக இருக்கும் ஆதாரங்கள் அவை எந்தளவு பலமானவை ஆனாலும் ஒதுக்கி/மறுத்து/புறக்கணிக்கும் போது இந்த உறுதிப்படுத்தல் பாகுபாடு ஏற்படுகிறது. வலுவான ஆதாரங்களற்ற பாரம்பரிய, பாரபட்சமுடைய நம்பிக்கைகளை சரியானவையே என நிரூபிக்கும் முயற்சிகளில் இந்த ஒருதலைப் பட்சமான உறுதிப்படுத்தல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
Labels:
அறிவியல்,
பக்கசார்புடைய உறுதிப்படுத்தல்,
மூளை
Tuesday, February 14, 2012
மூலக்கூற்று உயிரியலின் மையக் கோட்பாடு
எச்சரிக்கை:
பள்ளியில் பரீட்சையில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை எழுதக் கேட்டிருப்பின், அந்தத் தலைப்பிற்கு பொருத்தமில்லாத வகையில் பதில் சிலர் எழுதுவார்கள். இதற்கு உதாரணமாக ஆசிரியர்கள் சொன்ன, மனதில் பதிந்த ஒரு கதை: தென்னையைப்பற்றி கட்டுரை எழுதவும் என்ற கேள்விக்கு ஒரு மாணவன், கட்டுரையை " ஒரு பண்ணையாள் தன் பசுவை மேய்வதற்காக காணியிலுள்ள தென்னை மரமொன்றில் கட்டினான்" என்று தொடங்கிப் பின் பசு புல் மேய்தலைப் பற்றித் தொடர்ந்து கட்டுரை எழுதியிருந்தானாம்.
அதே மாதிரி இப்பதிவு "மூலக்கூற்று உயிரியலின் மையக் கோட்பாடு" என தலைப்பிடப்பட்டிருப்பினும், அதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லிவிட்டு பின் மரபணு மாற்றங்கள், பரிணாமம், வைரஸ் தொற்றுநோய்கள், மரபியல் விதித் தொகுப்பிற்கும் கணனி மொழிக்குமான வித்தியாசம், stem cells என பல்வேறு விடயங்களைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறது. மொத்தத்தில் வாசிக்கவில்லை என முகுந்தம்மாவிடம் சொல்லிவிட்டு, அப்படி என்னதான் இருக்கிறது இந்தக் கட்டுரையில் எனப் பார்க்கப் போன வினையின் விளைவே இப்பதிவு.
Monday, February 13, 2012
Sunday, February 12, 2012
மூலக்கூற்று உயிரியலின் மையக் கோட்பாடு
எச்சரிக்கை:
பள்ளியில் பரீட்சையில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை எழுதக் கேட்டிருப்பின், அந்தத் தலைப்பிற்கு பொருத்தமில்லாத வகையில் பதில் சிலர் எழுதுவார்கள். இதற்கு உதாரணமாக ஆசிரியர்கள் சொன்ன, மனதில் பதிந்த ஒரு கதை: தென்னையைப்பற்றி கட்டுரை எழுதவும் என்ற கேள்விக்கு ஒரு மாணவன், கட்டுரையை " ஒரு பண்ணையாள் தன் பசுவை மேய்வதற்காக காணியிலுள்ள தென்னை மரமொன்றில் கட்டினான்" என்று தொடங்கிப் பின் பசு புல் மேய்தலைப் பற்றித் தொடர்ந்து கட்டுரை எழுதியிருந்தானாம்.
அதே மாதிரி இப்பதிவு "மூலக்கூற்று உயிரியலின் மையக் கோட்பாடு" என தலைப்பிடப்பட்டிருப்பினும், அதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லிவிட்டு பின் மரபணு மாற்றங்கள், பரிணாமம், வைரஸ் தொற்றுநோய்கள், மரபியல் விதித் தொகுப்பிற்கும் கணனி மொழிக்குமான வித்தியாசம், stem cells என பல்வேறு விடயங்களைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறது. மொத்தத்தில் வாசிக்கவில்லை என முகுந்தம்மாவிடம் சொல்லிவிட்டு, அப்படி என்னதான் இருக்கிறது இந்தக் கட்டுரையில் எனப் பார்க்கப் போன வினையின் விளைவே இப்பதிவு.
Thursday, January 12, 2012
2011 கூகிள் அறிவியல் காட்சி விழாவில் வெற்றி பெற்ற மூன்று பதின்மவயதினரின் பேச்சு
Aren't they amazing?
Tuesday, November 8, 2011
DNA, மரபணு, நிறவுருக்கள், மரபியல் விதித்தொகுப்பு - அடிப்படை அறிவியலும் கொஞ்சம் போலி அறிவியலும்
video source: The Copernicus Project
Related Post: எல்லா உயிர்களினதும் பொது மொழி - DNA - ஒரு அறிமுகம்
மூன்றெழுத்து மரபியல் சொற்களைக் codons என்று கூறுவர். விளங்குவதற்கு இலகுவாக இருக்கும் என்பதற்காகவே இவற்றை சொற்கள், இவற்றின் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பைக் கொண்ட மரபணுவை ஒரு வாக்கியம் என்று கூறுகிறோம். அதற்கும் மேல் ஒரு மொழியின் கட்டமைப்பிற்கும் DNA sequences க்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை.
அண்மையில் யாரோ ரஸ்ய விஞ்ஞானிகள், மரபியல் தகவல்கள் மொழிகளின் இலக்கணவிதிகளைப் பின்பற்றுகின்றன. அதனால் மொழிகள் அனைத்தும் மரபணுக்களின் உச்சரிப்புக்களாக இருக்கின்றனவாம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள் என ஒரிரு இடங்களில் வாசித்தேன். அதோடு DNA க்கும் ஆன்மீகத்திற்கும் கூட எதோ தொடர்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தனர். இதற்கு எந்தவித ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆராய்ச்சியகளைச் செய்ததாகக் கூறப்படும் Pjotr Garjajev இன் பெயரிலோ, இவ்வாராய்ச்சியைப் பற்றியோ எந்தவொரு அறிவியல் பிரசுரிப்புகளையும் காண முடியவில்லை. பல ஆன்மீகத் தளங்களிலும் சில போலி மருத்துவர்களின் தளங்களிலுமே காணக்கிடைத்தது. DNA is an amazing molecule by itself. இந்த மாதிரிக் கட்டுக் கதைகள் எதுவும் தேவையில்லாமலே மரபியல் எவ்வளவோ வியக்கத்தகு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஏன் தான் ஆட்கள் இம்மாதிரிக் கற்பனைகளை உண்மை என்று உலவ விடுகிறார்களோ தெரியவில்லை.
அடுத்து மரபணு மாற்றங்களைப் பற்றியும் இம்மாற்றங்களுக்கும் பரிணாமத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் பார்க்கலாம்.
Labels:
அறிவியல்,
பரிணாமம்,
போலி அறிவியல்,
மரபியல்
Friday, November 4, 2011
வெளிர் நீலப் புள்ளி - எமக்குத் தெரிந்த ஒரே வீடு
இது 1990 ஆம் ஆண்டில் voyager 1 எனும் விண்வெளியூர்தியால், பூமியிலிருந்து கிட்டத்தட்ட 6 பில்லியன் கிலோமீற்றர் தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். பரந்த அண்டவெளியில் பூமி ஒரு மிக மிகச் சிறிய புள்ளியாகவே தெரிகிறது. Vayager 1 தன் வேலையை நிறைவேற்றி விட்டு solar sytem இலிருந்து வெளிக்கிடும் போது வானியலாளர் Carl Sagan இன் வேண்டுகோளிற்கேற்ப,இப்படம் எடுக்கப்பட்டது. Carl Sagan ஒரு நல்ல வானியலாளர் மட்டுமல்ல, சிறந்த சிந்தனையாளரும் கூட. அறிவியலை மக்களுக்குக் விளக்க பல முயற்சிகள் செய்தவர். அதற்காகப் பல புத்தகங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் செய்தவர். பரந்த சிந்தனையும் எமது அறிந்தவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் நாம் இன்னும் அறிய எந்தளவு முக்கியமென்பதை நன்கறிந்தவர். இவர் தனது 62 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவரின் பிறந்த நாள் நவம்பர் 9. 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 6ஆம் திகதி Carl Sagan க்கும், அறிவியலுக்கும், அறியும் ஆர்வத்திற்குமாக Carl Sagan Day கொண்டாடப்படுகிறது.
அவரது Pale Blue Dot: A Vision of the Human Future in Space என்ற 1994 புத்தகத்தில் இவ்வாறு எழுதியதே பின்வருவது. It's amazing.இந்த வெளிர் நீலப் புள்ளியைப் பாருங்கள். அது இங்கே. அது தான் வீடு. அது தான் நாம். அதில் தான் நாம் அன்பு செலுத்துபவர்களும், எமக்குத் தெரிந்தவர்களும், நாம் கேள்விப்பட்டவர்களும், இதுவரை வாழ்ந்த/வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லா மனிதர்களும் இருந்த/இருக்கும் இடம்.
எமது ஒட்டுமொத்த மகிழ்ச்சி, துன்பம், ஆயிரக்கணக்கான முனைப்பான மதங்கள்,சித்தாந்தங்கள், வர்த்தகக் கோட்பாடுகள் எல்லாவற்றுக்கும்;
இதுவரைக்கும் வாழ்ந்த/ வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு வேட்டைக்காரனுக்கும் ஒவ்வொரு உணவு தேடுபவனுக்கும்;
ஒவ்வொரு கதாநாயகனுக்கும்; ஒவ்வொரு வில்லனுக்கும்; ஒவ்வொரு பண்பாடு/கலாச்சாரத்தை ஆக்கியோருக்கும் அழித்தோருக்கும், ஒவ்வொரு அரசனுக்கும்; ஒவ்வொரு விவசாயிக்கும்; ஒவ்வொரு சோடி இளம் காதலர்களுக்கும்; ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும்; ஒவ்வொரு நம்பிக்கையளிக்கும் குழந்தைக்கும்; ஒவ்வொரு கண்டுபிடிப்பாளருக்கும்; தேச ஆராய்ச்சியாளருக்கும்; ஒவ்வொரு போதிக்கும் ஆசிரியருக்கும்; ஒவ்வொரு ஊழல் செய்யும் அரசியல்வாதிக்கும்; ஒவ்வொரு சூப்பர் ஸ்டாருக்கும்; ஒவ்வொரு உயர்ந்த தலைவருக்கும்;ஒவ்வொரு மதகுருவுக்கும்; ஒவ்வொரு பாவிக்கும் இதுவே வீடு.
சூரியக் கீற்றால் தொங்கிகொண்டிருக்கும் ஒரு தூசுத் துகளே எம் வீடு. மிகப் பரந்த அண்டத்தில் பூமி ஒரு மிக மிகச் சிறிய மேடையே. இந்தச் சிறு புள்ளியின் ஒரு சிறு கூற்றை கணப்பொழுது ஆழ்வதற்காக பல படைத்தலைவர்களாலும் சக்கரவர்த்திகளாலும் சிந்தப்பட்ட இரத்த ஆறுகளைப் பற்றிச் சிந்தியுங்கள். இப்புள்ளியின் ஒரு மூலையில் வாழும் குடிகளுக்கு அவர்களில் இருந்து பிரித்தரியமுடியாத மற்றொரு மூலையில் உள்ள குடிகளால் நடத்தப்படும் முடிவில்லாத கொடூரங்களை, அவர்களுக்கிடையில் அடிக்கடி ஏற்படும் விளக்கமின்மையை, ஒருவரை ஒருவர் கொல்வதற்கு அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை, அவர்களுக்குள் சுடர் விட்டெரியும் வெறுப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். எமது நிலை, கற்பனையேயான எமது சுய முக்கியத்துவம், இந்தப் பிரபஞ்சத்தில் எமக்கு சிறப்புரிமை இருக்கென்னும் மாயை, இவை அனைத்தையும் இந்த வெளிரிய நீலப் புள்ளி கேள்விக்குள்ளாக்குகிறது. எமது கோள், சூழ்ந்திருக்கும் அபாரமான அண்டவெளி இருட்டில் இருக்கும் ஒரு தனிமையான சிறு துகள். எமது தெளிவற்ற நிலையில், எம்மிடம் இருந்து எம்மைக் காப்பாற்ற, இந்த அண்ட வெளியில் எங்காவதிருந்து எமக்கு உதவி வருமென்பதற்கு எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதுவரைக்கும் எமக்குத் தெரிந்தமட்டில் பூமியில் மட்டுமே உயிர்கள் விருத்தியாகியுள்ளன. அண்மையில் எம்மால் வேறொரு இடத்திலும் சென்று வாழ முடியாது. வேறிடங்களுக்குப் நிச்சயமாகப் போய்வரலாம், ஆனால் நிரந்தரமாக வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இன்னும் இல்லை. விருப்பமோ இல்லையோ பூமியை மட்டுமே எம்மால் இப்போதைக்கு ஆழ முடியும். எம்மில் அடக்கமான பண்பை விருத்தியாக்கும் பயிற்சியாக வானியல் இருக்குமெனச் சொல்லப்படும். மனிதரின் மடைத்தனமான இறுமாப்பைப் பறைசாற்ற தொலைவிலிருந்து தெரியும் எமது உலகத்தின் இந்த உருவத்தைப் போல் வேறெதுவும் இருக்கமுடியாது. இந்த உருவம் எனக்கு, நாம் ஒவ்வொருவரையும் அன்பாக நடத்தவும், எமக்குத் தெரிந்த ஒரே வீடான இந்த வெளிர் நீலப் புள்ளியை பேணிப் பாதுகாக்கவுமான எமது பொறுப்பை வலியுறுத்துகிறது. இதுவே எமக்குத் தெரிந்த ஒரே வீடு.
Labels:
Carl Sagan,
அறிவியல்,
பூமி
Tuesday, November 1, 2011
what’s science up to?
இந்த விடயத்தில் அமெரிக்கர்களுக்கும் (குறிப்பாக republicans) எம்மவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லவே இல்லை. :(
எல்லா உயிர்களினதும் பொது மொழி - DNA - ஒரு அறிமுகம்
பரிணாமத்தில் அடுத்த பகுதியாக மரபணுக்களையும் மரபணு மாற்றங்களையும் பற்றி பார்க்குமுன் அவற்றைப்பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருப்பது முக்கியம். பல தடவை DNA என்றால் என்ன? அதன் கட்டமைப்பு எப்படி இருக்கும்? என்றெல்லாம் எழுதத்தொடங்கி, பின் நான் எழுதியது ஏதோ பள்ளிப் பாடப் புத்தகத்தில் வாசிப்பது போன்று இருந்ததாலும், அது ஒரு சுவாரசியமான வாசிப்பாக வாசிப்பவரின் மனதில் பதியும் போல் எனக்குத் தோன்றாததாலும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இந்த அடிப்படைத் தகவல்களை இலகுவாகவும் அதே நேரம் பாடம் படிப்பது போலல்லாமலும் இருக்க வேண்டுமென நினைத்தேன். அண்மையில் ஒரு you tube video பார்த்துக்கொண்டிருக்கும் போதே, தமிழில் காணொளியாகச் செய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. நானாக images எல்லாம் வடிவமைக்க நேரம் இப்போ நிச்சயமாக இல்லை (might give it a go during my maternity leave :)). பல இடங்களில் நல்ல படியாக மரபியலின் அடிப்படையை விளக்கும், கிட்டத்தட்ட நான் எழுத நினைப்பதைச் சொல்லும் காணொளிகளைத் தேடிக்கொண்டிருந்த்தேன். அந்தத் தேடலில் கிடைத்த University of California, Riverside இலிருந்து செய்யும் திட்டம் பிடித்திருந்தது. அவர்களின் காணொளிகளையே நான் மொழிமாற்றம் செய்து இங்கு போடலாமா என அவர்களிடம் அனுமதி கேட்ட போது, மிகவும் பெருந்தன்மையுடன், தாராளமாகச் செய் என்றுவிட்டார்கள். அவர்களின் கடின உழைப்பால் உருவான காணொளிகளில் சொல்லப்படும் செய்திகளை மட்டுமே தமிழில் மாற்றியுள்ளேன். இந்த முயற்சியில் ஏதாவது பயன் இருக்கிறதா/ இதையும் விட நன்றாகச் செய்யலாமா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
மக்களுக்கு அறிவியலைப் பற்றிய ஒரு அடிப்படையான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அண்மையில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில்சொல்லப்படும் மிகப் பிழையான அறிவியல் விளக்கங்களை மக்கள் உண்மை என எடுத்துக் கொள்வதைப் பார்த்தபின் (முகுந்த் அம்மாவும் தெகாவும் அழகாகச் சொல்லியுள்ளார்கள்), இந்த அடிப்படை அறிவு மிகவும் அவசியம் என நம்புகின்றேன்.
மக்களுக்கு அறிவியலைப் பற்றிய ஒரு அடிப்படையான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அண்மையில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில்சொல்லப்படும் மிகப் பிழையான அறிவியல் விளக்கங்களை மக்கள் உண்மை என எடுத்துக் கொள்வதைப் பார்த்தபின் (முகுந்த் அம்மாவும் தெகாவும் அழகாகச் சொல்லியுள்ளார்கள்), இந்த அடிப்படை அறிவு மிகவும் அவசியம் என நம்புகின்றேன்.
P.S. இப்போ இங்கு இலைதுளிர் காலமாதலால் எனக்கு சரியான hayfever. அதற்கு சாதாரணமாக antihistamine உம் steroid sparay உம் எடுத்தாலே எனக்கு வேலை செய்யும். கர்ப்ப காலத்தில் steroid spray எடுப்பது நல்லதில்லை என்பதால், I pretty much have a blocked noce 24/7. :( அதனால் இதற்கு ஒலிவடிவம் கொடுத்தது என் துணைவன். I know the quality of the recording can be improved a lot and we are working on it. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் ஒரிரு காணொளிகளை ஏற்றுகிறேன்.
Saturday, October 15, 2011
நான் ஒரு விஞ்ஞானி - 2
போன பதிவில் எழுதிய கேள்வி பதில்களோடு இங்கு நான் meet the scientist நிகழ்ச்சியில் பங்கு பற்றும் போது அநேகமான சிறுவர்கள் கேட்கும் இன்னொரு கேள்விக்கும் விரிவான பதில் எழுதலாமோ என்று நினைத்து பின் மிகவும் அலட்டுரனோ தெரியாதென விட்டு விட்டேன். ஆனால் அதில் திரு. பாஸ்கரின் கருத்து எழுதத்தூண்டியதால் எழுதுகிறேன். மிகுந்த அலட்டலே என நினைத்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
"எப்ப/எவ்வாறு உங்களுக்கு ஆய்வுதான் career என்று தெரிந்து கொண்டீர்கள்?/அதற்கு என்ன செய்தீர்கள்?
நான் எனது பள்ளிப் படிப்பை இலங்கையில் முடித்தனான். முற்றிலும் தமிழில். அங்கு பாடத்திட்டம் மிகவும் வேறுபட்டது. 16 ஆறு வயதில் நீங்கள் எந்தத்துறைக்கு செல்லப் போகிறீர்கள் என்று முடிவு செய்ய வேண்டும். யார் இது ஒரு நல்ல திட்டம் என்று முடிவு செய்ததோ தெரியாது. எனக்கு 16 வயதில் நிச்சயமாகத் தெரியாது எனக்கு என்னவாக வர விருப்பம் என்று. அறிவியலில் விருப்பம் இருந்ததால் A/L இல் அறிவியலே எடுத்தேன். அம்மா, அப்பா நான் மருத்துவமே படிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தனர். எனக்கு என்ன விருப்பம் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்ன options இருக்கென்று கூடத் தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் ஆய்வு எனும் துறை இருக்கிறதென யாரும் விளக்கியதில்லை. அங்கு A/L science இல் மிக நல்ல புள்ளிகள் எடுத்தால் மருத்துவம் அல்லது BSc/teaching மட்டுமே செய்யலாமெனவே நான் அறிந்திருந்தேன். வேறு எதுவும் தெரியாது. A/L எடுத்துவிட்டு நியுசிலாந்திற்குப் புலம் பெயர்ந்தபின் என்ன செய்வதென்று யோசித்து, நான் இரசாயனவியல் செய்யலாமென நினைத்திருந்தேன். ஏனெனில் எனக்கு இரசாயனவியல் நன்றாக ஓடும். ஆனால் அப்பா biomedical science செய் என்றார். அவர் சொன்னது degree முடித்ததும் இங்கு மருத்துவத் துறைக்கு apply பண்ணலாம் என்ற எண்ணத்தில். நான் எந்தவொரு தீர்மானமும் இன்றி சரி என்றேன். அந்தப் படிப்பின் கடைசி ஆண்டில் ஆறு மாதம் ஒரு சிறிய ஆய்வு project செய்ய வேண்டும். அதுவே எனக்குத் தேவையான திருப்பு முனையாக அமைந்தது. அதன் போதே எனக்கு ஆய்வும் ஆய்வுகூடத்தில் வேலை செய்வதும் எந்தளவுக்குப் பிடித்திருந்தது என்று தெரிந்து கொண்டேன். அதுவரை ஓரிடத்தில் 30 நிமிடங்கள் இருந்து பாடம் படிக்கக் கொஞ்சம் கூடப் பொறுமையற்றவள் திடீரென்று நாள் முழுக்க ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் செய்தாலும் அதில் ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் மனம் ஒன்றி, enjoy பண்ணியது எனக்கே வியப்பாக இருந்தது.
அதோடு எனக்கே என்னை பற்றிக் கொஞ்சம் தெளிவும் அப்போ தான் வந்தது. நான் அதுவரை ஒரு போதும் இருந்து நெடு நேரம் படித்ததில்லை. இருந்து, படித்து, அதைப் பின் திரும்பப் படித்து, பாடமாக்கி செய்வதெல்லாம் எனக்கு கிட்டத்தட்ட முடியாத காரியமாகவே இருந்தது. சமயப் பரீட்சைகளில் எப்பவும் வரும் முதல் கேள்வி, ஒரு ஜந்து தேவாரங்கள் தந்து அதில் இரண்டோ மூன்றோ தேர்ந்தெடுத்து முழுதாக எழுத வேண்டும். அதில் ஒரிரு தேவாரங்கள் எப்பவுமே அநேகமாக வரும். அதனால் அவை மட்டுமே எனக்கு முழுதாகப் பாடமாக இருந்தது. அவற்றை மட்டுமே அந்தக் கேள்விக்கு நம்பிச் சென்றிருக்கின்றேன். That's how bad I was. இந்த லட்சணத்தில் 2 1/2 வருடங்கள் படித்து இடையில் ஒரு assessment உம் இல்லாமல் அதன் கடைசியில் 100 வீதத்திற்குப் பரீட்சை எழுதி எப்படி பரவாயில்லாமல் செய்தேன் என்று எனக்குத் தெரியாது.
இங்கு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு semester உம் ஆறு மாதங்களே. அதற்குள் கூட பல assignments, tests என்று assessments இருப்பதால் கடைசிப் பரீட்சை 50-60% க்குத்தான். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் சில பாடங்கள் முழுதாக internal assessments ஆகக் கூட உண்டு. அநேகமாக எல்லாப் பாடங்களிலும் நான் கடைசிப் பரீட்சையில் எடுக்கும் புள்ளிகளை விட internal assignments இல் எடுக்கும் புள்ளிகள் மிகக் கூடுதலாக இருந்தது. ஏனெனில் கடைசிப் பரீட்சைக்குப் போகையில் எனது மூளையில் பதிந்திருப்பது அநேகமாக வகுப்புகளில் lecturers சொன்னதே தவிர, நானாகப் பாடப் புத்தகத்தை இருந்து படித்ததால் அல்ல. இங்கு கூட எனக்கு மனதிற்குப் பிடிக்காத பாடங்களை just pass பண்ணுவதற்காக மட்டும் படிப்பது எனக்கு மிகவும் கடினமான விடயம். இங்கு பாடசாலைகளிலும் பாடத்திட்டம் இவ்வாறே. They concentrate more on practical aspects than theoritical aspects. Theories ஜக் கூட அநேகமாகப் pracaticals இனூடக உணரப்பண்ணுவதால் பாடமாக்க வேண்டிய அவசியம் மிகக் குறைவு. இப்பாடத்திட்டம் எனது மனோபாவத்திற்கு மிகவும் சார்வாக இருந்தது.
இங்கு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு semester உம் ஆறு மாதங்களே. அதற்குள் கூட பல assignments, tests என்று assessments இருப்பதால் கடைசிப் பரீட்சை 50-60% க்குத்தான். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் சில பாடங்கள் முழுதாக internal assessments ஆகக் கூட உண்டு. அநேகமாக எல்லாப் பாடங்களிலும் நான் கடைசிப் பரீட்சையில் எடுக்கும் புள்ளிகளை விட internal assignments இல் எடுக்கும் புள்ளிகள் மிகக் கூடுதலாக இருந்தது. ஏனெனில் கடைசிப் பரீட்சைக்குப் போகையில் எனது மூளையில் பதிந்திருப்பது அநேகமாக வகுப்புகளில் lecturers சொன்னதே தவிர, நானாகப் பாடப் புத்தகத்தை இருந்து படித்ததால் அல்ல. இங்கு கூட எனக்கு மனதிற்குப் பிடிக்காத பாடங்களை just pass பண்ணுவதற்காக மட்டும் படிப்பது எனக்கு மிகவும் கடினமான விடயம். இங்கு பாடசாலைகளிலும் பாடத்திட்டம் இவ்வாறே. They concentrate more on practical aspects than theoritical aspects. Theories ஜக் கூட அநேகமாகப் pracaticals இனூடக உணரப்பண்ணுவதால் பாடமாக்க வேண்டிய அவசியம் மிகக் குறைவு. இப்பாடத்திட்டம் எனது மனோபாவத்திற்கு மிகவும் சார்வாக இருந்தது.
இதெல்லாம் யோசித்து தெளிந்த போது இன்னொன்றும் விளங்கியது. மருத்துவத்திற்கு எடுபட்டால் எனக்கு எப்படிப் படிக்க இயலாதோ அப்படிக் கட்டாயம் சில வருடங்களாவது படிக்க வேண்டும் என்று. அதே நேரம் எனக்கு உயிரியல், மருத்துவம் இரண்டும் பிடித்திருந்தது. எனக்கு வாசிக்க, யோசிக்க, பரிசோதனைகள் செய்து கேள்விகளுக்கு விடை காண மிகப் பிடித்திருந்தது. I realised that I am a hopeless passive learner but am very good at active learning, which is what research required.
அப்ப தான் எனக்கு மருத்துவத்திற்கு apply பண்ண புள்ளிகள் இருந்த போதும் எனக்கு அது வேண்டாம், நான் அதே மருத்துவ உயிரியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு apply பண்ணுவதென முடிவெடுத்தேன். I wanted to DO what medical practitioners get to read in their textbooks.
Labels:
அறிவியல்,
சொந்த அனுபவம்,
தொழில்துறை,
பாடத்திட்டம்
Wednesday, October 12, 2011
நான் ஒரு விஞ்ஞானி
விஞ்ஞானிகள்/அறிவியளாளர்கள் என நீங்கள் நினைக்கும் போதும் உங்கள் மனிதில் தோன்றும் உருவம் என்ன? உங்களுக்கு பல பிரபலமான/மிகுந்த புத்திசாலித்தனமான விஞ்ஞானிகளான நியூட்டன், ஃபரடே, டார்வின் மாதிரியான ஆட்கள் நினைவில் வருவார்களா அல்லது ஒரு வெள்ளை மேற்சட்டை போட்டு ஆய்வுகூடத்தில் மர்மமான வேலைகள் செய்யும் ஒருவரின் உருவம் வருமா? இம்மாதிரி உருவங்களை அடிக்கடி தொலைக்காட்சிகளிலோ வேறு தொடர்பு சாதனங்களின் மூலமோ பார்க்கும் போது இவர்கள் சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டவர்களாகத் தோன்றலாம்.வெள்ளை மேற்சட்டையை எடுத்து விட்டு அவர்களுடன் கதைத்துப் பார்த்தால் அவர்கள் எல்லோரையும் போல் சாதாரணமானவர்களே என்ற முடிவுக்கு வருவீர்கள், என இப்படத்தை எடுத்த பெளதீகவியலாளர் Stephen Curry கூறுகிறார். இந்தக் குறுகிய படத்தில் அவர் ஆறு வித்தியாசமான விஞ்ஞானிகளுடன் கதைத்து, அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என அறிய முயற்சித்துள்ளார். இந்த ஆறு விஞ்ஞானிகளும் மேலை நாட்டவர்கள். எனவே சிறு வயதில் அவர்களை ஆர்வப் படுத்திய, ஊக்கமளித்த காரணங்கள் எல்லாம் எம்மவர்களின் அனுபவங்களிலிருந்து குறிப்பிட்டளவு மாறுபட்டது என நினைக்கிறேன்.அதனால் Stephen Curry அந்த ஆறு விஞ்ஞானிகளைக் கேட்ட கேள்விகளுக்கு எனது பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன். இதே மாதிரி அறிவியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் அவர்களை ஊக்குவித்தது என்ன, எவ்வாறு அறிவியலை உங்கள் தொழில்துறையாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என எழுதினீர்களெனில் நன்றாக இருக்கும். அநேகமானவர்களிடம் அவர்கள் இப்போ இருக்கும் நிலைக்கு எவ்வாறு வந்தார்கள் என இது பள்ளிச் சிறுவர்களை மனிதில் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இது UK இல் உருவாக்கப்பட்ட I’m a Scientist, Get me out of here என்ற திட்டத்தில் இருந்து உதித்தது. இத்திட்டம் பல்வேறுபட்ட விஞ்ஞானிகளிடம் பள்ளி மாணவ மாணவிகள் இணையத்தில் உரையாடி அவர்களைப் பர்றி அறிந்து கொள்ள ஏற்படுத்தப்பட்டது. இங்கு எனது வேலைத் தளத்திலும் இது மாதிரி 'meet the scientist' என்றொரு திட்டம் உண்டு. பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தற்கால அறிவியல் முன்னேற்றங்களை விளக்குவதற்காகவும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படையில் அறிவியல் என்ன என்பதை விளக்குவதற்கும் உருவாக்கப்பட்டது. இதிலிருக்கும் 'meet the scientist' திட்டத்தில் மாணவர்கள் விஞ்ஞானிகளை ஒரு 15 நிமிடம் சந்தித்து அவர்களிடம் உரையாடுவார்கள். இதேமாதிரி ஒரு திட்டம் எம்மூர்களில் இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்று கருதுகின்றேன். நான் எப்போதும் சொல்றனான் எமது கலாச்சாரத்தில் பிள்ளைகளின் இயற்கையான ஆர்வம், கற்பனை, சிந்திக்கும் தன்மைகளை முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது என்று. Phil Pait என்ற வானியலாளர் சொன்ன மாதிரி if you teach a man (or woman) to reason, he (or she) will think for a lifetime. மாணவ மாணவிகளுக்கு அறிவியலினூடக சிந்திக்கும் திறமைப் புகட்டினால் அது அவர்களுக்கு மட்டுமல்ல முழுச் சமூகத்திற்கும் மிக்க பயனளிக்கும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு திட்டம் ஊரில் நிறுவ விருப்பம். பார்க்கலாம்.
பின்வருவது Stephen Curry கேட்ட கேள்விகளுக்கு எனது பதில்கள்.
நீங்கள் அறிவியல் தொடர்பான வேலைகளிளோ ஆய்வுகளிலோ ஈடுபட்டிருக்காத வேளைகளில் என்ன செய்வீர்கள்?
- எனக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும். ஆனால் இப்ப எனக்கு புத்தகங்கள் வாசிக்க நேரம் பெரிதாகக் கிடைப்பதில்லை. வாசிக்க வேண்டுமென வாங்கி வைத்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை தான் கூடிக்கொண்டே போகுது. ஆனால் இணையத்தில் இயலுமானளவு வாசிக்கிறேன்.
- இயலுமானளவு பிறருக்கு உதவுவது.
- எனக்கு சமைக்கவும் மிகப் பிடிக்கும். வித விதமான சாப்பாடுகள் சமைத்துக் கொடுக்கப் பிடிக்கும். ஏழு பேர் இருக்கும் வீட்டில் வளர்ந்ததால் கொஞ்சமாக சமைக்க இப்பவும் கஸ்டப்படுவேன். அம்மா சொல்லுவா "ஏதோ கலியாண வீட்டிற்கு சமைக்கிற மாதிரி சமைப்பாள்" என்று.
- நீண்ட கார்ப் பயணம் நியூசிலாந்தில் செய்யப் பிடிக்கும். ஓக்லாந்த்தைத் தாண்டியவுடன் ஆட்கள் பெரிதும் இல்லாத, பச்சைப் பசேலென புல்வெளிகளும் மலைகளும் மட்டுமே எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்க கார் கண்ணாடியைத் திறந்து விட்டு தமிழ் பாட்டும் கேட்டுக் கொண்டு கார் ஓட மிக மிகப் பிடிக்கும்.
- காடுகளுக்குள்/ rain forests க்குள் சென்று ஒரு பாதையும் இல்லாமல், எங்கு செல்கிறோமெனத் தெரியாமல் கால் போன போக்கில் நெடுந்தூரம் நடக்கப் பிடிக்கும். Love Bush walking.
நீங்கள் எப்போது முதன் முதலில் அறிவியலில் நாட்டம் கொண்டீர்கள்?
நான் நினைக்கிறேன் முதன் முதலில் எப்போது அறிவியல் பள்ளியில் படிக்கத் தொடங்கினேனோ அப்போதிருந்தே என்று. ஆனால் அப்ப அநேகமாக இரசாயனவியல் தொடர்பான சிறு சிறு பரிசோதனைகளையே பள்ளியில் செய்தோம் என ஞாபகம். ஒரு ஒன்பது வயதிருக்குமென நினைக்கிறேன், நான் வீட்டிலிருந்த ஒரு அலுமாரியின் கீழ்த்தட்டை எனது ஆய்வுகூடமாக மாற்றியிருந்தேன். :) ஆய்வுகூடமென்றால் பெரிசா ஒன்றும் நினைக்காதைங்கோ. ஒரு மெழுகுதிரி, சோடா போத்தல் மூடியைத் தட்டையாக்கி (அதில் தான் எனக்கு விரும்பிய சாமான்களைப் போட்டு சூடாக்குவது) ஒரு கத்திரிக்கோல் (this was my bunsen burner :)), ஒரு பெரிதாக்கும் கண்ணாடி (magnifying glass) இந்த மாதிரி வீட்டில் கிடைத்ததுகளைக் கொண்டு எனது கற்பனைக் கெட்டியவரை செய்தது. யாருக்கும் பெரிதாகக் காட்டவில்லை. But I was absolutely proud of my lab. அப்ப அதற்கு ஆய்வுகூடம் தான் பெயரென்று கூட எனக்குத் தெரியாது. நல்ல காலம் வீடு எரிந்து சாம்பலாகவில்லை.:) நீல CuSO4 ஜ வெப்பமாக்கும் போது நீரெல்ல்லாம் ஆவியாக வேள்ளையாக மாறுவது பார்க்க மிகவும் பிடிக்கும். பொருட்களை வெப்பமாக்கினால் என்னவாகும் (உருகுமா, ஆவியாகுமா, நிறம் மாறுமா) என செய்து பார்க்கப் பிடிக்கும். அப்ப எம்மிடம் தொலைக்காட்சியெல்லாம் இருக்கவில்லை. அதனால் புத்தகத்தில் படிப்பதில் எனக்குப் பிடித்ததை/ செய்யேலுமானதை வீட்டில் செய்யப் பிடித்திருந்தது.இரசாயனவியல் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் விஞ்ஞானி என்றெல்லாம் ஒரு வேலை இருக்கென்றே தெரியாது.
உங்களுக்கு nobel prize கிடைத்திருக்கிறதா?
:) :) இல்லை.
அறிவியல் செய்வதற்கு ஒருவர் மிகுந்த புத்திசாலியாக இருக்க வேண்டுமல்லவா?
நான் மிகுந்த புத்திசாலியென ஒருநாளும் நினைத்ததில்லை. உணர்ந்ததும் இல்லை. அநேகமான வேளைகளில் என்னை முட்டாளாகவே நினைத்துள்ளேன். எனக்கு Albert Einstein சொன்ன இரு quotes மிகவும் பிடிக்கும்.
"I have no special talent. I am only passionately curious."
எனக்கு விசேடமான திறமைகள் எதுவும் இல்லை. ஆனால் நான் அறிய மிகுந்த ஆர்வமுடையவன்.
"It's not that I'm so smart, it's just that I stay with problems longer."
நான் புத்திசாலியல்ல, ஆனால் நான் பிரச்சனைகளுடன் நிறைய நேரம் செலவழிப்பேன். அதாவது ஒரு கேள்விக்கான விடையை அறியுமட்டும் (அது எவ்வளவு நேரமானாலும் சரி) விடமாட்டேன்.
இதற்கு ஒரு உதாரணம்.நான் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தது அவுஸ்ரேலியாவில். எனது முதல் பரிசோதனைக்குத் தேவையான tissues எல்லாம் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்ததால். அங்கு போன முதல் ஆறு மாதத்திலேயே முதல் பரிசோதனை முழுதாகச் செய்து நிறைய முடிவுகள் எடுத்திருந்தேன். நான் பாவித்தது அப்போது ஓரளவிற்கு புதிய தொழில் நுட்பம். அந்த முடிவுகளை எப்படி ஆராய்வது/அதன் பொருள் என்ன என எனது ஆய்வுகூடத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.முதல் ஆறு மாதத்தில் எடுத்த முடிவுகளை ஆராய்ந்து விளக்க எனக்கு அடுத்த ஒன்றரை வருடங்கள் பிடித்தன. முதலில் கவலைப்பட்டு, என்னால் செய்ய முடியாது, என்ன இது எதுவுமே தெரியவில்லை எனப் பல தடவை புலம்பியதும் உண்டு. நான் அங்கு தனியவே இருந்தேன். எனது மேற்பார்வையாளர் ஒரு முறை என்னைப் பார்த்து கவலைப்பட்டு இருத்தி வைத்து, எப்படி அறிவியல் ஒரு roller coster ride எனவும், அநேகமானவற்றைப் புரிய பல காலம் எடுக்கும் எனவும், எப்படி நாம் யாரும் ஒருபோதும் கேட்டிராத கேள்விகளைக் கேட்கும் போது அதன் விடை யாருக்கும் தெரியாது ஆனால் அதில் நேரடியாக எவரொருவர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறாரோ அவருக்கே மற்றவர்களைவிட கூடுதல் அறிவு அதில் இருக்கும் எனவும் விளக்கினார். அதன் பின் பலதடவை யோசித்தேன். அந்த முடிவுகளை ஆராயத் தேவையான மென்பொருள் எமது departmental laptop இல் மட்டுமே இருந்தது. அதனால் பலமுறை பின்னேரங்களில் வீடு செல்லும் போது lap top ஜயும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து பல இரவுகள் யோசித்து, ஆராய்ந்து இறுதியில் ஒரு நாள் அதிகாலை 2 மணியளவில் எனது ஆராய்ச்சிக்குப் பதில் (எனது மூளையில் light bulb எறிந்தது :)) கிடைத்தது. அது தான் எனது முதல் Eureka moment. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. அறைக்குள் தனிய, யாருடமாவது சொல்லவேண்டுமென்று உடனே அம்மாவிற்கு தொலைபேசி அடித்தேன். அம்மா நித்திரைத் தூக்கத்தில் ஊரிலிருந்து யாராவது அவசரமாக எடுக்கினமோ என எண்ணி வந்து தொலை பேசியை எடுக்க நான் "அம்மா இப்ப தான் முதன் முதலா ஒரு விஞ்ஞானியாக உணர்கின்றேன்" என்று கத்தினேன். அது வரைக்கும் ஆட்கள் "ஒரு தமிழ் பெண்பிள்ளைக்கு ஆராய்ச்சி எல்லாம் சரிவராது. அதுகள் இதுலேயே ஊறி விசராகிடுங்கள், பிறகு குடும்பம் எல்லாம் பார்க்கேலாது" என்ற போது கொஞ்சம் யோசித்த அம்மா, அந்நேரத்தில் அது சரியாகிவிடுமோ என ஒரளவுக்குப் பயம் வருகுதென்றார். :) It trully was an amazing feeling to have figured out something that nobody has before.
"Research is to see what everybody else has seen, and to think what nobody else has thought"
ஆய்வு என்பது எல்லோரும் பார்க்கும் ஒன்றைப் பார்த்து யாரும் சிந்திக்காத ஒன்றை சிந்திப்பது.
Albert Szent-Gyorgyi, Hungarian Biochemist
ஒரு நல்ல விஞ்ஞானிக்கு என்ன இருக்க வேண்டும்?
அறிய மிகுந்த ஆர்வம் வேண்டும்.
கேள்விகள் கேட்க வேண்டும்.
பரந்த சிந்திக்கும் தன்மை வேண்டும்.
உங்கள் ஆய்வின் முடிவுகளையே பலமுறை உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுத் தெளிய வெண்டும்.
விடா முயற்சி வேண்டும். அநேகமாக ஒவ்வொரு ஆய்வும் தெரியாத ஒரு பாதையில் கால் வைப்பது போலவே தொடங்கும். அதனால் அநேகமாக முதலில் எத்தனையோ தோல்விகளைச் சந்திக்க வேண்டிவரும். அதனால் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் கற்கக் கூடியதைக் கற்று, விடாமல் முன்னேற வேண்டும். It is a roller coster ride.
கடின உழைப்பு வேண்டும்.
Was your PhD fun/Did you enjoy it? உங்களின் ஆய்வு எதைப் பற்றியது?
ஓம். I can honestly say that they were few of my best years in my life. அறிவியலில் நான் கற்ற திறமைகள் என்னிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. நான் சாதாரணமாகப் பார்த்த பல விடயங்களைப் புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. அறிவியல் செய்யும் போது விருத்தியாகும் திறமைகளை பல் வேறு துறைகளில் பயன் படுத்தமுடியும்.
எனது ஆய்வு endometrium என்றோரு tissue பற்றியது. கருப்பையின் outer most layer தான் endometrium. இதுவே மாதவிடாயின் போது உதிர்ந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து/ஒவ்வொரு மாதமும் ஒரு கருவிற்கு வீடாகுவதற்கு தன்னைத் தயார் செய்து, அவ்வாறு கரு தங்காமல் போகுமிடத்து ஒரு சிறு basal layer ஜத் தவிர மற்றெல்லாவற்றையும் முற்றிலும் உதிர்த்து திரும்பவும் அடுத்த cycle இல் தன்னை ஒரு கருவிற்காக தயார் செய்ய வளரும் tissue. உடலில் வேறெந்தவொரு tissue ஆலும் இவ்வாறு செய்ய முடியாது. இந்த tissues இன் வளர்ச்சியை estrogen, progesterone எனும் ஒரு ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. எனது ஆய்வு ஒவ்வொரு மாதமும் endometrium இன் வளர்ச்சியில் பங்குபற்றும் மரபணுக்களைப் பற்றியது. அவை எவ்வாறு மாறுகின்றன. Steroid hormones அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன. இவற்றின் செய்கைகளில் பிழைகள் ஏற்படின் அதனால் வரும் விளைவுகள் என்ன? இதுவரை அறியப்படாத புதிய முக்கியமான மரபணுக்கள் ஏதாவது இந்த tissue இன் வளர்ச்சிக்கு அவசியமா? கருத்தரிக்க முடியாத பெண்களில் இம்மரபணுக்கள் எவ்வாறு மாறுபடுகின்றன?
அறிவியல் உலகில் கண்டறியப்பட வேண்டிய எல்லாவற்றையும் கண்டறிந்து விட்டதா?
கொஞ்சமும் இல்லை. இன்னும் நிச்சயமாகக் 'கற்றது கை மண் அளவு கல்லாதது பிரபஞ்சமளவே'. நாம் செய்யும் ஒவ்வொன்றாலும் ஒரு மிகப் பெரிய புதிரில் மிகச் சிறிய பகுதிகளையே கண்டறிகின்றோம். இன்னும் எவ்வளவோ செய்ய இருக்கிறது.
Labels:
அறிவியல்,
சமூகம்,
பாடத்திட்டம்




